You've been selected என வரும் லாட்டரி மெயில்களும் All in one improvement எனச் சொல்லி வரும் லேகிய மெயில்களும் எல்லாம் சுத்த ஸ்பேம்கள் (Spam). இந்த குப்பை மெயில்கள் நம் மின்னஞ்சல் முகவரிகளை பிறதளங்களின் வழி தெரிந்து கொண்டு நமக்கு மெயில் அனுப்பி நம்மை அவர்கள் வலையினில் வீழ்த்த முயற்சிப்பார்கள். இதனால் தான் நம் மின்னஞ்சல் முகவரிகளை அப்பட்டமாக பொது இணைய ஃபாரம்களில் அல்லது பிளாகுகளில் வெளியிடுவது நல்லதல்ல என்பார்கள். சிலர் புத்திசாலித்தனமாக தங்கள் மின்னஞ்சலை போடும் போது @-க்கு பதில் at என இட்டு அப்படியாவது ஸ்பேம் ரோபோக்களை ஏமாற்றப் பார்ப்பார்கள். அதாவது pkpblog@gmail.com என இடாமல் pkpblog(at)gmail(dot)com என இடுவார்கள். ஆனால் நல்ல முறையும் நீற்றான முறையுமாக எனக்குப் படுவது நம் மின்னஞ்சல் முகவரியை ஒரு படமாக்கி அதை img src-ஆக வெளியிடுவது தான். உதாரணத்துக்கு மேற்கண்ட என மின்னஞ்சல் முகவரியை என இப்படி படமாகப் போடப்படுவதால் ஸ்பேம் ரோபோக்களால் எளிதில் என் மின்னஞ்சல் முகவரியை படிக்கமுடியாது. ஸ்பேம்களுக்கு விலகியிருக்கலாம். அதனால் இன்பாக்சும் நீற்றாக இருக்கும். கூடவே மெயில்முகவரியும் லோகோ கலரில் அழகாக இருக்கும். இதுபோன்ற அழகிய வண்ணமயமான ஈ-மெயில் ஐக்கான்களை உருவாக்க கீழ்கண்ட தளம் உதவுகின்றது
E-Mail Icon Generator
http://services.nexodyne.com/email/index.php
மெயில்களைப் பற்றி பேசும் போது மேலும் இரு கீழ்கண்ட தளங்களையும் என் புக்மார்க்கில் கவனித்தேன்.
என ஒரு தளம். இது yourname@ChennaiRocks.in, yourname@ClubKamal.com, yourname@ClubRajni.com, yourname@heybaby.in போன்ற பல்வேறு வித்தியாச பெயர்களில் மின்னஞ்சல் முகவரிகளை நீங்கள் பெற உதவுகின்றது.
http://www.coolhotmail.com
அப்படியே -ஐயும் ஒரு பார்வை பாருங்கள். கையால் டைப்புவது போன்ற உயிரோட்டமான மின்னஞ்சல்களை எழுதலாமாம். ஒரு சாம்பிள் இங்கே.http://www.fuzzmail.org/Top10_my_love.html
http://www.fuzzmail.org
கையால் டைப்புவதை அப்படியே அதே சீரில் animated gif கோப்பாக்க இதோ ஒரு தளம்.
http://livetyping.com/
வெற்றிபெற காது கொடுத்து கேளுங்கள்; குறைவாக பேசுங்கள்; நிறைய நேரம் செயல்படுங்கள். -ஏ.வான்பர்ன் |
எழில்வரதன் சிறுகதைகள் தொகுப்பு மென்புத்தகம்.Ezhil Varathan Tamil Short Stories pdf ebook Download. Just click and Save.
Download
Download this post as PDF
2 comments:
சுட்டிக்கு நன்றி
//நம் மின்னஞ்சல் முகவரியை ஒரு படமாக்கி அதை img src-ஆக வெளியிடுவது தான். //
எனக்கு ஒரு சந்தேகம்..
மின்னஞ்சல் என்ற இடத்தில் நம் மின்னஞ்சலை தட்டச்சு தான் செய்ய முடியும் அங்கே இந்த படத்தை எப்படி போட முடியும்!
They suggested site may be use our E-mail ID for some other purpose right?
Post a Comment