தமிழகம் முழுவதுமாக மொத்தம் 312 தொழில் நுட்பக்கல்லூரிகள் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பில் வாசித்தேன். பன்னிரண்டு முடித்து வெளிவந்த காலங்களில் நான் வளர்ந்த மாவட்டத்தில் ஒரே ஒரு இஞ்சினியரிங் கல்லூரி மட்டுமே இருந்தது. இன்றைக்கு அங்கு ஏறத்தாழ 15 இருக்கின்றதாம். புதுசாக இன்னும் 3 இந்த வருடம் வருவதாக கேள்வி. ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம் என்ற பாரதியின் முழக்கத்தின் கடைசி தெரிவுதான் மிக இலாபகரமானது போலிருக்கின்றது.
நான்காம் ஆண்டு இறுதியில் மாணவர்களும் சோர்ந்துபோய் எப்போதுடா கரையேறலாம் என அரைத்த மாவையே அரைக்கும் புராஜெக்ட்களில் ஒன்றை செய்து காட்டி வெளியேறும் மனதோடிருக்கின்றார்கள். புதுசாக எதாவது செய்ய உற்சாகம் உண்டு. ஆனால் பேராசிரியர்கள் அதை ஊக்குவிப்பது இல்லை. வானம் ஏறி நீ வைகுந்தம் காட்டுவது இருக்கட்டும், முதலில் கூரையேறி குருவிபிடித்து காட்டு என்பார்கள்.நம் 312 கல்லூரிகளிலுமிருந்து கல்லூரிக்கு ஒன்றென வருடம் ஒரு தரமான புராஜெக்ட் வந்தாலே போதும் ஏகப்பட்ட Startup களுக்கும் Founder களுக்கும் entrepreneurs களுக்கும் நம் ஊர் தாயகமாகிவிடும். உங்களுக்கு ஒன்று தெரியுமா? கடந்த பத்து வருடங்களில் அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோர்களால் தொடக்கப்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிகம் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தோர்களால் தொடக்கப்பட்டதுதானாம்.
Indians have founded more engineering and technology companies in the US in the past decade than immigrants from the U.K., China, Taiwan and Japan combined. Of all immigrant-founded companies, 26% have Indian founders.
-From America’s New Immigrant Entrepreneurs study
என்னமோ தனது புராஜெக்ட்காக thesis ஒன்று எழுத வேண்டுமாம். இணையத்திலிருந்து இறக்கம் செய்த ஒரு Pdf கோப்பிலிருந்து காப்பி/பேஸ்ட் செய்ய முடியவில்லை, அச்சும் எடுக்க முடியாத படி lock செய்திருக்கின்றார்கள். உதவி செய்யேன் என மனோஜ் கேட்டிருந்தான்.உங்களுக்கும் உதவட்டுமே என இங்கே சில PDF கோப்புகளை அன்லாக் செய்யும் சுட்டிகளை கொடுத்திருக்கின்றேன்.
Free PDF Unlock Online Utility (5MB max)
http://www.ensode.net/pdf-crack.jsf
Remove restrictions from PDF files online - it's easy and free.(10MB max)
http://www.pdfunlock.com
Free, online and no limits pdf restrictions remover.(Unlimited MB)
http://pdfpirate.net
வள்ளலுக்கு பொன் துரும்பு. சூரனுக்கு சேர்ந்த மரணம் துரும்பு. அறிவோர்க்கு பெண் துரும்பு. துறவோர்க்கு வேந்தன் துரும்பு. |
இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் புதினம் ”பனி பெய்யும் இரவுகள்” மென்புத்தகம்.Rajeeswari Balasubramaniyam "Pani Peyyum Iravugal" novel in Tamil pdf ebook Download. Just click and Save.
Download
Download this post as PDF
10 comments:
I think you may be correct....
But most of the colleges don't have experienced staffs in their college...This is really true
ஒவ்வொரு படைப்பும் என்னுடைய மின் அஞ்சலில் வந்து விழும் போது அத்தனை பெருமையாய் சந்தோஷமாய் இருக்கிறது. எழுத்து என்பது தவம். உங்களின் ஒவ்வொரு அக்கறையும் என்னைப் போன்றவர்களை உயிர்பித்துக்கொண்டு இருக்கிறது. நீங்கள் தொடக்கூடிய எந்த விஷயமும் என்னைப் போன்றவர்களுக்கு மிகப் புதிது. காரணம் கற்றுக்கொள்பவன் என்ன விமர்சனம் தந்து விட முடியும். வாழ்க. தேவியர் இல்ல பூங்கொத்து.
ஜோதி கணேசன்
தேவியர் இல்லம். திருப்பூர்
http://texlords.wordpress.com
http://deviyar-illam.blogspot.com
Dear PKP,
Excellent Article, our govt and college management should take action and engorge the students.
PDF links are very useful.
//அரைத்த மாவையே அரைக்கும் புராஜெக்ட்களில் ஒன்றை செய்து காட்டி வெளியேறும் மனதோடிருக்கின்றார்கள்...
thesis ஒன்று எழுத வேண்டுமாம். இணையத்திலிருந்து இறக்கம் செய்த ஒரு Pdf கோப்பிலிருந்து காப்பி/பேஸ்ட் செய்ய முடியவில்லை, அச்சும் எடுக்க முடியாத படி lock செய்திருக்கின்றார்கள். உதவி செய்யேன் என மனோஜ் கேட்டிருந்தான்.உங்களுக்கும் உதவட்டுமே என இங்கே சில PDF கோப்புகளை அன்லாக் செய்யும் சுட்டிகளை கொடுத்திருக்கின்றேன்.//
OXYMORON?
Solla vandha thagavalai suvarasiyamaa soli irukeenga :-)
மதிப்பிற்குரிய pkp சார் உங்களது தளத்தை கடந்த 2 வருடங்களுக்கு மேலாக நான் படித்து வருகிறேன். ஆனால் இது வரை பதில் இடுகை எழுதியதில்லை. இப்பொழுதுதான் முதல் முறையாக எழுதுகிறேன். உங்கள் தளத்திற்கு எனது வாழ்த்துக்கள்.
உபயோகமான தகவல் ....
நன்றி pkp
(me first)
THANKS MR.PKP EXALLENT JOB.
Hi,
I have checked the website that you have specified to unlock the pdf. The fact is i am not able to open the pdf when it is protected with the user passord.
Can you tell the free tool or website to open the pdf file when it is protected with User Password?
Thanks,
:)
மதிப்பிற்குரிய pkp சார் உங்களது தளத்தை கடந்த 2 வருடங்களுக்கு மேலாக நான் படித்து வருகிறேன். ஆனால் இது வரை பதில் இடுகை எழுதியதில்லை. இப்பொழுதுதான் முதல் முறையாக எழுதுகிறேன். உங்கள் தளத்திற்கு எனது வாழ்த்துக்கள்.
Post a Comment