நமது கடந்த மூன்றுண்டு என்ற பதிவை படித்த நண்பரொருவர் இந்த நான்குமுண்டு என்ற வரிசையை நமக்கு அனுப்பித் தந்திருந்தார். விவிலியத்திலிருந்து எடுக்கப்பட்டதாம்.அந்த நண்பருக்கு என் நன்றிகள்.
நம் புத்திக்கு எட்டாத வழிகள் நான்குண்டு.
1.வானத்திலே கழுகினுடைய வழி,
2.பாறைகளின் மேலே பாம்பினுடைய வழி,
3.நடுக்கடலிலே கப்பலினுடைய வழி,
4.ஒரு பெண்ணை காதலித்த மனுஷனுடைய வழி.
போதும் என்று சொல்லாத நான்குமுண்டு.
1.நீத்தார் உலகம்,
2.மலட்டுக் கர்ப்பம்,
3.தண்ணீரால் திருப்தியடையாத நிலம்,
4.போதுமென்று சொல்லாத நெருப்பு.
பூமி தாங்கமாட்டாத நான்குண்டு.
1.அரசனாக மாறிய அடிமையினிமித்தமும்,
2.விரும்பின பதார்த்தங்களெல்லாம் கிடைத்த முட்டாளினிமித்தமும்,
3.பகைக்கப்படத்தக்கவளாயிருந்தும், புருஷனுக்கு வாழ்க்கைப்பட்ட பெண்ணினிமித்தமும்,
4.தன் எஜமானிக்குப் பதிலாக இல்லாளாகும் அடிமைப்பெண்ணினிமித்தமுமே.
பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு.
1.அற்பமான ஜெந்துவாயிருந்தும், கோடைகாலத்திலே தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பு,
2.சக்தியற்ற ஜெந்துவாயிருந்தும், தங்கள் கூடுகளை மலையினிலே தோண்டிவைக்கும் குழிமுயல்கள்,
3.ராஜா இல்லாதிருந்தும், சாரை சாரையாய்ப் புறப்படுகிற வெட்டுக்கிளிகள்,
4.தன் கைகளினால் வலையைப் பின்னி, அரசர்கள் அரமனைகளிலிருக்கிற சிலந்திப் பூச்சி.
விநோத நடையுள்ளவைகள் நாலுமுண்டு.
1.மிருகங்களில் சக்திவாய்ந்ததும் ஒன்றுக்கும் பின்னிடையாததுமாகிய சிங்கம்,
2.போர்க்குதிரை,
3.வெள்ளாட்டுக்கடா,
4.ஒருவரும் எதிர்க்கக் கூடாத ராஜா.
பாஷிய இருதயம் மென்புத்தகம்.Bashiya Iruthayam in Tamil pdf ebook Download. Click and Save.
Download
Download this post as PDF
4 comments:
3.நடுக்கடலிலே கப்பலினுடைய வழி,...
அப்ப ஜீபிஎஸ் உபயோகப்படுத்தவேண்டியது தான்.
அருமை!
அன்புள்ள அண்ணன் பி.கே.பி
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உங்கள் பதிவுகளை விரும்பி வாசித்து வருகிறேன். பதிவுலகில் எனக்கு விருப்பமானவர்களில் நீங்களே முதன்மையானவர். உங்கள் எழுத்து நடை வசீகரமானது. இப்போது நானும் பதிவெழுதத் தொடங்கியிருக்கிறேன். பதிவராகும் முன்னரே பின்னூட்டங்களில் வந்திருக்கிறேன். குறிப்பாக நீங்கள் ஒரு மாதம் முழுவதும் பதிவெழுதாமல் ஓய்வில் இருந்தபோது திரும்பி வருமாறு தொடர்ந்து வற்புறுத்திக்கொண்டிருந்தேன். சவுதி வந்தபின் வாசிப்பதற்கு நூல்கள் ஏதுமின்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தபோது உங்களின் மின்நூல் இணைப்புகள் உங்கள் மீதான நெருக்கத்தை அதிகரித்தன. அப்போது 'பி.கே.பி ஐயா நீங்க நல்லா இருக்கணும் ராசா' என்று பின்னூட்டமிட்டிருந்தேன். தொடர்ந்து உங்கள் எழுத்துக்களையும் நட்பையும் விரும்புகிறேன்.
செ.சரவணக்குமார்
சவுதி அரேபியா
Nice lines. Unable to open the file(book). Damaged!?Can u re upload or share us the source link.
Thanks.
Post a Comment