உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, September 30, 2009

ஜிமெயில்காரி

கூகிளின் ஜிமெயில் சேவையானது நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே வருகின்றது. திடீரென அங்கே காலும் இங்கே கைகளும் என உருவாகி அது நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது. இப்படி அது நாளும் பரிணமிப்பதால் அவ்வளவு சீக்கிரமாக எந்த ஜிமெயில் பயனரும் இன்னொரு மெயில் சேவைக்கு எளிதில் மாறிவிடமாட்டார் என்றே தெரிகின்றது. கண்கவர் கலர்களில்லை. ஒரு கவர்ச்சியுமில்லை. ஆனால் எளிமையாகவே நம்மை கவர்ந்துவிட்டவள் அவள். உன்னைத்தானே காதலிப்போம் கரங்குவிப்போமென அந்த 146 மில்லியன் பயனர்களும் சொல்ல தினமும் ஆயிரக்கணக்கான காரணங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. இங்கே மூன்று காரணங்கள் உங்களுக்காக.

ஹாட் மெயில்,யாகூ மெயில் போன்ற பிற மெயில் சேவைகளில் இருக்கும் உங்கள் பழைய மெயில்களையெல்லாம் இங்கே ஜிமெயிலுக்கு கொண்டுவர அவளே import வசதி செய்து கொடுத்திருக்கின்றாள். எனவே பல மின்னஞ்சல் கணக்குகளை இனிமேலும் நீங்கள் மெயிண்டெயின் செய்யாமல் அவற்றிலிருப்பதையெல்லாம் உங்கள் ஜிமெயிலில் இறக்குமதிசெய்து விட்டு மற்றவைகளை கமுக்கமாய் ஒழித்துவிடலாம். Settings---> Accounts and Import-ல் இதற்கான வசதிகளை நமக்கு கொடுத்திருக்கின்றார்கள். Esaya Inc-ன் TrueSwitch நுட்பம் இங்கு பயன்படுத்தப்படுகின்றது.


அவசர அவசரமாக அந்த HR-க்கு மெயில் அனுப்பிய பிறகுதான் சட்டென உங்களுக்கு நினைவுக்கு வரும் அய்யே நாம Resume-ஐ அட்டாச் செய்யவில்லையே என்று. உடனே பட்டென அந்த மெயிலை ரிவர்சில் வாங்க இப்போது ஜிமெயிலில் வசதிசெய்து கொடுத்திருக்கின்றார்கள். இதை undo என்பர்.அதிக பட்சம் 10 நொடிகள் தான். அப்புறம் நோ..வே. அது HR பொட்டியில் போய் சேர்ந்திருக்கும்.Settings--->Labs-ல் சுட்டெலியை சுருளிச் சுருளி ரொம்ப கீழே போனால் Undo Send என ஒரு புது வசதியை பார்ப்பீர்கள். அதை enable செய்து கொள்ளவும். ஒவ்வொரு முறை நீங்கள் மெயில் அனுப்பும் போதும் அது undo செய்ய நமக்கு 10 நொடி வாய்ப்பைக் கொடுக்கும். என்றைக்காவது உயிர் காக்கலாம்.


முன்பெல்லாம் மெயில் செக்அப் செய்ய எனது ஐபோனில் ஒவ்வொரு முறையும் அந்த மின்னஞ்சல் பயன்பாட்டை திறக்க வேண்டும். அப்போதுதான் அது போய் ஜிமெயில் செர்வரோடு தொடர்புகொண்டு என் மெயில்களை இறக்கி காண்பிக்கும். இப்போது Push என ஒரு நுட்பம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதால் அந்த மாதிரி செய்யவேண்டியதில்லை. அப்பப்போ அதுவே என் மெயில்களை உடன் உடன் இறக்கம் செய்து SMS வந்தால் கத்துவது போல அவ்வப்போது கத்துகின்றது. யாராவது மெயில் அனுப்பியிருப்பார்கள்.இந்த வசதியை பிளாக்பெர்ரி,நோக்கியாS60 மற்றும் விண்டோஸ் மொபைல் செல்போன்களிலும் enable செய்து கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட சுட்டி உங்களுக்கு உதவும். http://www.google.com/mobile/products/sync.html#p=default

இப்படி இலவசமாய் தொடரும் இந்த ஜிமெயில்காரியின் சேவை இன்னும் நீடூழி வாழவேண்டும் என்றேன் நான். ஆனால் அந்த monopoly விஷயத்தில் எனத் தொடங்கிய கோபாலின் வார்த்தைகளையும் மீறி ஓடிச்சென்றது அந்த Amtrak தொடர்வண்டி.


ஏதாவது செய் ஏதாவது செய்
சக்தியற்று செய்ய தவறினால்
உன் மனம் உன்னைச் சும்மா விடாது.
சரித்திரம் இலக்கணம் இரண்டும் உன்னை
பேடி என்றும்
வீரியமிழந்தவன் என்றும்
குத்திக்காட்டும்.
ஏதாவது செய்.














கபீரின் கனிமொழிகள் மென்புத்தகம்.Kabir Kanimozhikal in Tamil pdf ebook Download. Click and Save.
Download


Email PostDownload this post as PDF

Monday, September 28, 2009

நான்குமுண்டு

நமது கடந்த மூன்றுண்டு என்ற பதிவை படித்த நண்பரொருவர் இந்த நான்குமுண்டு என்ற வரிசையை நமக்கு அனுப்பித் தந்திருந்தார். விவிலியத்திலிருந்து எடுக்கப்பட்டதாம்.அந்த நண்பருக்கு என் நன்றிகள்.

நம் புத்திக்கு எட்டாத வழிகள் நான்குண்டு.
1.வானத்திலே கழுகினுடைய வழி,
2.பாறைகளின் மேலே பாம்பினுடைய வழி,
3.நடுக்கடலிலே கப்பலினுடைய வழி,
4.ஒரு பெண்ணை காதலித்த மனுஷனுடைய வழி.

போதும் என்று சொல்லாத நான்குமுண்டு.
1.நீத்தார் உலகம்,
2.மலட்டுக் கர்ப்பம்,
3.தண்ணீரால் திருப்தியடையாத நிலம்,
4.போதுமென்று சொல்லாத நெருப்பு.

பூமி தாங்கமாட்டாத நான்குண்டு.
1.அரசனாக மாறிய அடிமையினிமித்தமும்,
2.விரும்பின பதார்த்தங்களெல்லாம் கிடைத்த முட்டாளினிமித்தமும்,
3.பகைக்கப்படத்தக்கவளாயிருந்தும், புருஷனுக்கு வாழ்க்கைப்பட்ட பெண்ணினிமித்தமும்,
4.தன் எஜமானிக்குப் பதிலாக இல்லாளாகும் அடிமைப்பெண்ணினிமித்தமுமே.

பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு.
1.அற்பமான ஜெந்துவாயிருந்தும், கோடைகாலத்திலே தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பு,
2.சக்தியற்ற ஜெந்துவாயிருந்தும், தங்கள் கூடுகளை மலையினிலே தோண்டிவைக்கும் குழிமுயல்கள்,
3.ராஜா இல்லாதிருந்தும், சாரை சாரையாய்ப் புறப்படுகிற வெட்டுக்கிளிகள்,
4.தன் கைகளினால் வலையைப் பின்னி, அரசர்கள் அரமனைகளிலிருக்கிற சிலந்திப் பூச்சி.

விநோத நடையுள்ளவைகள் நாலுமுண்டு.
1.மிருகங்களில் சக்திவாய்ந்ததும் ஒன்றுக்கும் பின்னிடையாததுமாகிய சிங்கம்,
2.போர்க்குதிரை,
3.வெள்ளாட்டுக்கடா,
4.ஒருவரும் எதிர்க்கக் கூடாத ராஜா.

பாஷிய இருதயம் மென்புத்தகம்.Bashiya Iruthayam in Tamil pdf ebook Download. Click and Save.
Download


Email PostDownload this post as PDF

Friday, September 25, 2009

10 டிவிட் துளிகள்


ரம்மியமான பூங்கா ஒன்றில் எங்கிருந்தோ அவ்வப்போது ஒலிக்கும் பறவைகளின் கீச்சுக் குரலைத்தான் உண்மையில் ஆங்கிலத்தில் twitter என்பார்கள். இப்போது அந்த பறவை படத்தின் காரணம் புரிகின்றதா?

உலகின் முதல் tweet-டான "just setting up my twttr"-ஐ அனுப்பியவரின் பெயர் ஜேக் டார்சே. டிவிட்டரை உருவாக்கியவரும் அவர் தான்.அந்த நாள் 2006 மார்ச் 21. அந்த முதல் டிவீட்டை கீழ்கண்ட சுட்டியில் நீங்கள் பார்க்கலாம். http://twitter.com/jack/status/20

அதற்காக அவர் நிறைய காகிதங்களில் கிறுக்கியிருக்கிறார் போல.
ஆரம்பகால அவர் இட்ட ஸ்கெட்களை இங்கே பார்க்கலாம்.Jack dorsey on flickr


செல்போன் SMS-ல் 140 எழுத்துக்கள் மட்டுமே கொள்ளும் என்பதால் அதே கட்டுப்பாடு டிவிட்டரிலும் வைக்கப்பட்டுள்ளது.போட்டோக்களை ட்வீட் செய்ய http://twitpic.com -ஐயும் URLகளை சுருக்கி ட்வீட் செய்ய http://tr.im -ஐயும் பயன்படுத்தலாம்.

ஆரம்பகாலங்களில் டிவிட்டர் Ruby on Rails-ல் தான் ஓடியதாம். இப்போது Scala. தங்கள் dns தேவைக்கு dyndns.com-ஐ தான் பயன்படுத்துகின்றார்கள்.

IE என அபூர்வமான இரண்டெழுத்து பெயர் கொண்ட ட்விட்டர் கணக்கு மைக்ரோசாப்டின் Internet Explore-க்கு சொந்தமானது http://twitter.com/ie

twitter-ல் அதிக followers கொண்டது ashton kutcher http://twitter.com/aplusk
followers 3,679,355

twitter-ல் அதிக Following கொண்டது Barack Obama http://twitter.com/BarackObama
Following 756709

twitter-ல் அதிகம் updates கொண்டது illstreet http://twitter.com/illstreet
updates 805702

twitter-ல் அதிகம் பேரால் favourite ஆக்கபட்டது yamifuu http://twitter.com/yamifuu
favourites 127709

நம் இந்தியாவிலிருந்து முதல் டிவிட்டர் Pajama Pockets http://twitter.com/pajama
first message on 28/07/2006

கீழே கலிபோர்னியா டிவிட்டர் அலுவகத்திலிருந்து சில படங்கள்






















எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.
ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.






எஸ்.ராமகிருஷ்ணன் ”வாசகர் பர்வம்” மென்புத்தகம்.
S.Ramakrishnan "Vasagar parvam" in Tamil pdf ebook. Download. Click and Save.
Download


Email PostDownload this post as PDF

Wednesday, September 23, 2009

திறந்திடு Pdf

தமிழகம் முழுவதுமாக மொத்தம் 312 தொழில் நுட்பக்கல்லூரிகள் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பில் வாசித்தேன். பன்னிரண்டு முடித்து வெளிவந்த காலங்களில் நான் வளர்ந்த மாவட்டத்தில் ஒரே ஒரு இஞ்சினியரிங் கல்லூரி மட்டுமே இருந்தது. இன்றைக்கு அங்கு ஏறத்தாழ 15 இருக்கின்றதாம். புதுசாக இன்னும் 3 இந்த வருடம் வருவதாக கேள்வி. ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம் என்ற பாரதியின் முழக்கத்தின் கடைசி தெரிவுதான் மிக இலாபகரமானது போலிருக்கின்றது.

நான்காம் ஆண்டு இறுதியில் மாணவர்களும் சோர்ந்துபோய் எப்போதுடா கரையேறலாம் என அரைத்த மாவையே அரைக்கும் புராஜெக்ட்களில் ஒன்றை செய்து காட்டி வெளியேறும் மனதோடிருக்கின்றார்கள். புதுசாக எதாவது செய்ய உற்சாகம் உண்டு. ஆனால் பேராசிரியர்கள் அதை ஊக்குவிப்பது இல்லை. வானம் ஏறி நீ வைகுந்தம் காட்டுவது இருக்கட்டும், முதலில் கூரையேறி குருவிபிடித்து காட்டு என்பார்கள்.நம் 312 கல்லூரிகளிலுமிருந்து கல்லூரிக்கு ஒன்றென வருடம் ஒரு தரமான புராஜெக்ட் வந்தாலே போதும் ஏகப்பட்ட Startup களுக்கும் Founder களுக்கும் entrepreneurs களுக்கும் நம் ஊர் தாயகமாகிவிடும். உங்களுக்கு ஒன்று தெரியுமா? கடந்த பத்து வருடங்களில் அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோர்களால் தொடக்கப்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிகம் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தோர்களால் தொடக்கப்பட்டதுதானாம்.

Indians have founded more engineering and technology companies in the US in the past decade than immigrants from the U.K., China, Taiwan and Japan combined. Of all immigrant-founded companies, 26% have Indian founders.
-From America’s New Immigrant Entrepreneurs study

என்னமோ தனது புராஜெக்ட்காக thesis ஒன்று எழுத வேண்டுமாம். இணையத்திலிருந்து இறக்கம் செய்த ஒரு Pdf கோப்பிலிருந்து காப்பி/பேஸ்ட் செய்ய முடியவில்லை, அச்சும் எடுக்க முடியாத படி lock செய்திருக்கின்றார்கள். உதவி செய்யேன் என மனோஜ் கேட்டிருந்தான்.உங்களுக்கும் உதவட்டுமே என இங்கே சில PDF கோப்புகளை அன்லாக் செய்யும் சுட்டிகளை கொடுத்திருக்கின்றேன்.

Free PDF Unlock Online Utility (5MB max)
http://www.ensode.net/pdf-crack.jsf

Remove restrictions from PDF files online - it's easy and free.(10MB max)
http://www.pdfunlock.com

Free, online and no limits pdf restrictions remover.(Unlimited MB)
http://pdfpirate.net



வள்ளலுக்கு பொன் துரும்பு.
சூரனுக்கு சேர்ந்த மரணம் துரும்பு.
அறிவோர்க்கு பெண் துரும்பு.
துறவோர்க்கு வேந்தன் துரும்பு.











இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் புதினம் ”பனி பெய்யும் இரவுகள்” மென்புத்தகம்.Rajeeswari Balasubramaniyam "Pani Peyyum Iravugal" novel in Tamil pdf ebook Download. Just click and Save.
Download


Email PostDownload this post as PDF

Friday, September 18, 2009

திரும்பி ஒருப்பார்வை - பேசிகள்

இன்றைய குழந்தைகளைப் பார்த்து கொடுத்துவைத்தவர்கள் என்று சொல்வதா அல்லது அதிர்ஷ்டம் கெட்டவர்கள் என்று சொல்வதா என புரியவில்லை. ஆனால் அவர்களால் இன்றைக்கு நினைத்த மறு கணமே கண்டம் விட்டு கண்டம் பேசமுடிகின்றது. கி.மு காலங்களில் என்னமாய் கஷ்டப்பட்டிருக்கின்றார்கள். பெர்சியர்களோடு நடைபெற்ற மாரத்தான் போர்க்களச் சண்டையில் கிரீஸ் நாடு வெற்றி பெற்றுவிட்டதாம். இந்த வெற்றிக்களிப்பை 25மைல் தொலைவிலுள்ள ஏதென்ஸ் நகரம் போய் சொல்ல வேண்டும். பெடிபிடெஸ் என்ற ஒரு இளைஞன் ஓடுகின்றான். ஓடுகின்றான். ஓடிக்கொண்டே இருக்கின்றான்.ஏதென்ஸ் நகர மக்களிடம் போய் அந்த வெற்றிச்செய்தியைச் சொன்னதும் தான் தாமதம் அப்படியே களைத்து சுருண்டுவிழுந்து செத்துப்போகின்றான்.இப்படியாக ஒரு சோகச் சம்பவத்தில் தொடங்கியது தான் நம் இன்றைய தகவல் தொடர்பு தொழில் நுட்பம்.Signal was really bad back then.

Interference-ஆக கோபால் இடையில் நுழைந்தான்.”ஆனால் நம்மூரில் அதற்கும் முன்பேயே அன்னப்பறவையை தலைவனுக்கும் புறாவை மன்னனுக்குமாக தூதுவிட்டு தெளிவான சிக்னல்களோடு இருந்திருக்கின்றார்களே” என்றான். எனக்கும் அவன் வாதம் நியாயமாகப் பட்டது.

இப்போ ஒரு quick F-A-S-T F-a-r-w-a-r-d

1876-ல் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த அலெக்சாண்டர் கிரகாம் பெல் "மிஸ்டர். வாட்சன், இங்கே வாருங்கள், நான் உங்களைப் பார்க்க வேண்டும்" எனத் தெள்ளத் தெளிவாக உலகின் முதல் தொலைப்பேசியில் பேச அது மறுமுனையிலிருந்த வாட்சனுக்கும் மிகத் தெளிவாகக் கேட்டது. ஒரு புதிய யுகம் மலர்ந்திருந்தது.

ஆனால் இன்றைக்கு அதன் பின் 125 ஆண்டுகள் மேல் தாண்டி ஹலோ ஹலோ வென கத்தியும் கைப்பேசியில் ஒன்றும் கேட்காமல் சிக்னல் கிடைக்கலவெனச் சொல்லி நொந்துகொள்வது நம் காலத்தின் கோலம்.

இப்படி தொலை,கை என பேசிகள் பலவும் கடந்து வந்த பாதை இங்கே அழகாக படமாக காலகிரமப்படி. சேமித்துவைத்துக்கொண்டேன்.படத்தை சொடுக்கி நீங்கள் பெரிதாக்கியும் பார்க்கலாம்.

Cellphone history timeline


ஒரே குறிக்கோள்
எல்லையற்ற ஊக்கம்
தளர்வில்லாத நெஞ்சுறுதி
சளைக்காத உழைப்பு
நேர்மையான பாதை -வெற்றி
கிடைக்காமலா போய்விடும்?














சத்குரு ஜக்கி வாசுதேவ் “உனக்காகவே ஒரு இரகசியம்” மென்புத்தகம். Unakkagave Oru Ragasiyam by Sadhguru Jaggi Vasudev in Tamil pdf ebook Download. Click and Save. Download


Email PostDownload this post as PDF

Wednesday, September 16, 2009

மிஸ்ஸாகும் மூக்கு

இந்த இருபதாம் நூற்றாண்டில் நம் உள்ளங்கைகளில் தவழ்ந்து விளையாடும் கியூட் லிட்டில் செல்ல டாய்கள் தான் ஐபோன், பிளாக்பெர்ரி, நோக்கியா N95 முதலான ஸ்மார்ட் போன்கள்.

இந்த ஸ்மார்ட்போன்களின் உள்ளே நுழைந்து பார்த்தால் தெரியும் நாம் நினைத்துக்கூட பார்க்க இயலா அளவு இத்துணூண்டு சதுர அங்குலத்துக்குள் எத்தனை கோடி சமாசாரங்களை வைத்து வைத்திருக்கிறான் மனிதன் என்று. அதெப்படிடா நம்ம போன் சும்மா அதிருது...கால் வந்தா சும்மா வைப்ரேட் ஆகுதே அதெப்படிடானு கேட்டுத் தொலைத்தான் கோபால். கப்பாசிட்டர், ரெசிஸ்டர், டயோடு, டிரான்சிஸ்டர் மாதிரி இதற்கும் எதாவது வைப்ரேட்டர் சிப் கண்டுபிடித்து விட்டார்களோவென்பது அவன் யூகம். கொஞ்சம் குறைய அவன் சொன்னது சரிதான். சிப் எதுவுமில்லை. மைக்ரோசைசில் ஒரு எந்திர மோட்டார் உங்கள் போனில் இருக்குமாம். வாசிங்மெசின் வேகமாக சுத்தும்போது அது ”ஒரு மாதிரியா” அதிரும் பாருங்கள் அதே நுட்பம்தான் இங்கேயும். வேறே சிப்பெல்லாம் ஒன்றும் இல்லை.

போனை நீங்கள் குறுக்காக பிடித்தால் திரையை உங்களுக்கு குறுக்காகக் காட்டவும் நெடுக்காக போனை பிடித்தால் திரையை உங்களுக்கு நெடுக்காகக் காட்டவும் Accelerometer என்ற ஒரு சிலிக்கான் சில்லுவை பயன்படுத்துகின்றார்கள். சத்தியமா அது புவியீர்ப்புவிசையை வைத்து பொசிசனை கண்டுபிடிப்பதில்லையாம். பின்னே எப்படி கண்டுபிடிக்குதாம்?
தலைசுற்றுகின்றது.

எல்லா ஸ்மார்ட் போன்களிலும் நம் குரல்கள் அனலாக் தொழில்நுட்பத்தில் கடத்தப்படுவதால் ஒரு Baseband Processor-ம் பிற டிஜிட்டல் மென்பொருள் பயன்பாடுகளை ஓட்ட ஒரு Application Processor-ம் என இரு புராசசர்கள் இருக்கும். நோக்கியா போன்களில் பொதுவாக Texas Instruments புராசசர்களையும், பிளாக்பெர்ரிகளில் Qualcomm புராசசர்களையும், ஐபோன்களில் Samsung மற்றும் Infineon புராசசர்களை காணலாம்.

நமது கோப்புகளை சேமித்துவைக்க ஸ்மார்ட்போன்களின் உள்ளே ஹார்ட் டிஸ்கெல்லாம் கிடையாது. எல்லாம் Gig கணக்கில் NAND Flash DRAM-கள் தான். ஐபோனுக்கு Toshiba-வும்,பிளாக்பெர்ரிக்கும் நோக்கியாவுக்கும் Samsung-கும் இந்த DRAM-களை வழங்குகின்றார்கள். எல்லாம் சிலிக்கான் சில்லுகள் தாம்.

இது தவிர
புவியில் நாம் இருக்கும் இடம் தெரிய GPS,
திசைமாறிப்போனவனுக்கு திசை காட்ட Compus,
வீட்டு அல்லது அலுவலக இணையத்தோடு இணைய Wi-Fi,
பக்கத்து போனோடு இணைந்து MP3க்களை கடத்த Bluetooth மற்றும் Infrared
வேகமாய் திரையில் படம் ஓட, வீடியோ கேம் விளையாட Graphics Processor,
நம்மை நாமே படம் பிடித்துக்கொள்ள Camera ,
எக்ஸ்ரா ஸ்டோரேஜ்க்கு MicroSD Interface,
எப்.எம் பாட்டு கேட்க FM Radio Tuner,
நாம பேசுவதை Dual-band அல்லது Quad-band ஆக கடத்த RF Transceiver.

இப்படி இந்த ஐம்புலண்களில் மெய்(Touch Screen), வாய்(Speaker), கண்(Camera), செவி(Microphone) எல்லாம் சிலிக்கான் சிப் வடிவில் உள்ளே அந்த சிறிய பொட்டிக்குள்.
சிலிக்கான் என்றால் மண் என்று உங்களுக்கேத் தெரியும். எல்லாம் மண். ஆனால் உள்ளே தான் எத்தனை இண்டலிஜென்ஸ் நடக்கின்றது.
மனிதனும் மண் தான். அதே இண்டலிஜென்ஸ்.
இந்த வரிசையில் ஒரே வித்தியாசம் ஸ்மார்ட்போனில் மிஸ்ஸாகுவது மூக்கு.



ஒரு நாளைக்கு ஒரு வேளை உண்பவன் யோகி
ஒரு நாளைக்கு இரு வேளை உண்பவன் போகி (போஜன பிரியன்)
ஒரு நாளைக்கு மூவேளை உண்பவன் ரோகி (நோயாளி)
ஒரு நாளைக்கு நாவேளை உண்பவன் துரோகி










சித்ரா சிவகுமார் "மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் மிருகம் சீன விலங்கு ஜோதிடம்" மென்புத்தகம்.Chitra Sivakumar Chinese Animal Astrology in Tamil ebook Download. Just click and Save.
Download


Email PostDownload this post as PDF

Monday, September 14, 2009

ரோபோக்கு ஃபிலிம்

You've been selected என வரும் லாட்டரி மெயில்களும் All in one improvement எனச் சொல்லி வரும் லேகிய மெயில்களும் எல்லாம் சுத்த ஸ்பேம்கள் (Spam). இந்த குப்பை மெயில்கள் நம் மின்னஞ்சல் முகவரிகளை பிறதளங்களின் வழி தெரிந்து கொண்டு நமக்கு மெயில் அனுப்பி நம்மை அவர்கள் வலையினில் வீழ்த்த முயற்சிப்பார்கள். இதனால் தான் நம் மின்னஞ்சல் முகவரிகளை அப்பட்டமாக பொது இணைய ஃபாரம்களில் அல்லது பிளாகுகளில் வெளியிடுவது நல்லதல்ல என்பார்கள். சிலர் புத்திசாலித்தனமாக தங்கள் மின்னஞ்சலை போடும் போது @-க்கு பதில் at என இட்டு அப்படியாவது ஸ்பேம் ரோபோக்களை ஏமாற்றப் பார்ப்பார்கள். அதாவது pkpblog@gmail.com என இடாமல் pkpblog(at)gmail(dot)com என இடுவார்கள். ஆனால் நல்ல முறையும் நீற்றான முறையுமாக எனக்குப் படுவது நம் மின்னஞ்சல் முகவரியை ஒரு படமாக்கி அதை img src-ஆக வெளியிடுவது தான். உதாரணத்துக்கு மேற்கண்ட என மின்னஞ்சல் முகவரியை என இப்படி படமாகப் போடப்படுவதால் ஸ்பேம் ரோபோக்களால் எளிதில் என் மின்னஞ்சல் முகவரியை படிக்கமுடியாது. ஸ்பேம்களுக்கு விலகியிருக்கலாம். அதனால் இன்பாக்சும் நீற்றாக இருக்கும். கூடவே மெயில்முகவரியும் லோகோ கலரில் அழகாக இருக்கும். இதுபோன்ற அழகிய வண்ணமயமான ஈ-மெயில் ஐக்கான்களை உருவாக்க கீழ்கண்ட தளம் உதவுகின்றது
E-Mail Icon Generator
http://services.nexodyne.com/email/index.php

மெயில்களைப் பற்றி பேசும் போது மேலும் இரு கீழ்கண்ட தளங்களையும் என் புக்மார்க்கில் கவனித்தேன்.
என ஒரு தளம். இது yourname@ChennaiRocks.in, yourname@ClubKamal.com, yourname@ClubRajni.com, yourname@heybaby.in போன்ற பல்வேறு வித்தியாச பெயர்களில் மின்னஞ்சல் முகவரிகளை நீங்கள் பெற உதவுகின்றது.
http://www.coolhotmail.com

அப்படியே -ஐயும் ஒரு பார்வை பாருங்கள். கையால் டைப்புவது போன்ற உயிரோட்டமான மின்னஞ்சல்களை எழுதலாமாம். ஒரு சாம்பிள் இங்கே.http://www.fuzzmail.org/Top10_my_love.html
http://www.fuzzmail.org

கையால் டைப்புவதை அப்படியே அதே சீரில் animated gif கோப்பாக்க இதோ ஒரு தளம்.
http://livetyping.com/


வெற்றிபெற காது கொடுத்து கேளுங்கள்;
குறைவாக பேசுங்கள்;
நிறைய நேரம் செயல்படுங்கள்.
-ஏ.வான்பர்ன்









எழில்வரதன் சிறுகதைகள் தொகுப்பு மென்புத்தகம்.Ezhil Varathan Tamil Short Stories pdf ebook Download. Just click and Save.
Download


Email PostDownload this post as PDF
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்