உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, June 09, 2010

கேட்காத சப்தங்கள்

பூ பூக்கும் அந்த நொடியில் பலமான ஓசை எழுவதுண்டாம். எங்கோ படித்த நியாபகம். ஆனால் நம்மால் தான் அதை கேட்க முடிவதில்லை. காரணம் நம் காதுகளால் அந்த அலைவரிசை கூடின ஒலி அலைகளை கிரகிக்க முடிவதில்லை. பொதுவாக 20 Hz முதல் 20 kHz வரையேயான ஒலிகளையே நம் சாதாரண காதுகளால் கேட்க முடியும். அதனால் பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை என எதுகை மோனையோடு பாடி விட்டு அமைதியாகி விடவேண்டியது தான்.

சிறுசுகளுக்கும் பொடிசுகளுக்கும் கேட்கும் சத்தங்கள் கூட நம்மைப் போன்ற முப்பது அல்லது நாற்பது வயதான பெரியவர்களுக்கு கேட்பதில்லை. உதாரணத்துக்கு 15kHzக்கும் மேல் வரும் சத்தத்தை 25 வயதுக்கு மேற்பட்டவர்களால் கேட்க முடியாதாம். கீழ்கண்ட MP3-யை ஓட்டிப் பாருங்கள் (எச்சரிக்கை:மிக அதிக ஓசை எழுப்பும் கிளிப் இது)

Teenager Tone Mp3 Clip

உங்கள் காதுகளில் எதாவது கேட்டால் நீங்கள் 25வயதுக்கும் கீழ்பட்டவர் என அர்த்தம். எதுவும் கேட்காவிட்டால் உங்களுக்கு வயதாகிவிட்டது என அர்த்தம். வகுப்பறையில் ஆசிரியர் காதுகளில் கேட்காமல் ஆனால் தங்களுக்கு மட்டும் கேட்கும் படியான ரிங்டோன் வைக்க தங்கள் கைப்பேசிகளில் பதின்மர்கள் நாடும் MP3 இது. இதையே எதிர்மாறாக பதின்மர்கள் உங்கள் அறையில் நுழைந்து தொல்லை செய்யாதிருக்க இக்கிளிப்பை தொடர்ந்து ஓடவிட்டுக் கொண்டிருக்கலாம். எரிச்சலூட்டும் இந்த ஒலியை கேட்டு சிறுவர்கள் உங்களை நெருங்கவே மாட்டார்கள். நீங்களோ நிம்மதியாக உக்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருப்பீர்கள்.

கீழே வெவ்வேறு அலைவரிசைகளில், வெவ்வேறு கிளிப்கள். எந்த அலைவரிசை வரை உங்களால் கேட்கின்றதுவென பாருங்கள்.என்னால் 14 kHz-யை தாண்டமுடியவில்லை. வயசாகிவிட்டது.

மீண்டும் சந்திப்போம்.


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



14 comments:

ILA (a) இளா said...

வயசாகாத மாதிரி ஒரு Mp3 அனுப்புங்களேன்

ஜிஎஸ்ஆர் said...

புதுமையான தகவல் பிகேபி

பிகேபி நலம்தானே முன்பு போல இப்போது அதிகம் எழுதுவதில்லையே என்னாயிற்று வேலைப்பளுவாக இருக்குமென்றே நினைக்கின்றேன்.

வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்

வால்பையன் said...

எனக்கு கேட்டுச்சு, அதுனால வயசு 25 க்கு உள்ளன்னே சொல்லிக்கலாமா!?

திவாண்ணா said...

14 தாண்டலை.ஹும்! வயசாயிடுத்து! 56.

நண்பன் said...

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்திங்க தம்பி

Aba said...

Wonderful post. Very interesting

பிரகாசம் said...

உங்களுக்கு வயசாகிவிட்டது 14 kHZ வரைதான் கேட்கிறது என்று தெரிவித்துள்ளீர்கள். எனக்கு 8 kHZ மட்டும்தான் கேட்கிறது!!!(எனக்கு வயது 50 ஆகிறது)

movithan said...

Audiologistஐ வீட்டுக்கே கூட்டிவந்துவிட்டீர்கள்.

நன்றி.

Disciple of Nithyananda said...

very interesting...

sivakumar said...

Interesting information...i can feel/sense after 15KHZ but unable to here very clearly...looks like, mee too getting old or my parts getting weak.:(

ஜிஎஸ்ஆர் said...

டியர் பிகேபி இன்று 13.06.10 தங்கள் தளத்தை திறக்கும் போது இப்படியாக ஒரு எச்சரிக்கை செய்தி வருகிறது

http://i45.tinypic.com/15wcakm.jpg

வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்

Sriram Srinivasan said...

இன்று வீட்டிற்கு போய் இதை முயற்சி பண்ணனும்.
நல்ல பதிவு
-ஸ்ரீராம்

Anonymous said...

I am 32. but able to hear that annoying eeeeiiiiihhhh sound. any problem in my ear?? :(

Anonymous said...

I am 28.I Can able to hear 15 KHZ

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்