எனது பழைய பதிவுகளையெல்லாம் எளிதாய் பார்வையிட ஒரு குறுவழி எனச்சொல்லி அனானியாய் வந்த நண்பர் ஒருவர் ஒரு யோசனை சொல்லியிருந்தார். அது நன்றாக படவே ”பிகேபி பதிவுகள் பெட்டகம்” எனும் சுட்டி உருவானது. நீங்கள் மேலே சொடுக்கி உலாவிப் பார்க்கலாம்.
செம்மொழிமாநாடு முடிந்த வேகத்தில் தமிழில் டொமைன் பெயர் சீக்கிரத்தில் வைத்துக்கொள்ள முடியும் என்ற நல்ல செய்தி வந்துள்ளது. இதை Icann சொல்வதாக பிபிசி சொன்னது. அப்போது ”பிகேபி.இன்” என நீங்கள் நேரடியாகவே பிரவுசரில் தமிழில் தட்டி என் வலைத்தளம் வரலாம்.
கட்டாயம் சுவைத்துப் பார் எனச்சொல்லி வந்த அந்த இந்திய வரைபடத்தில் தமிழ்நாட்டில் விசேசமென சொல்லி ஆப்பம், தோசை, இட்டி, சாம்பார், இரசம், செட்டிநாடு கோழி, பொங்கல் என இட்டிருந்தார்கள். மலையாள அவியலும், ஆந்திர பிரியாணியும் மிஸ்ஸாகாதது அந்த வரைபடத்தில் ஒருவித நம்பகத்தை தந்தது. அப்படியே மலேசிய பரோட்டா, சிங்கப்பூர் நூடுல்ஸ், அராபிய சோர்மா, துபாய் பலாபல் என உலக வரைபடம் யாராவது வரைந்து தந்தால் நன்றாயிருக்கும்.
படத்தை சொடுக்கி பெரிதுபடுத்தியும் பார்க்கலாம்.
எவ்வளவு தான் பந்த பாசமானாலும் இடையில் ஒரு வேலி மெலிசா இருந்துகிட்டே இருக்கணும். |


4 comments:
நன்றாயிருக்கிறது பிகேபி
ஹாய் பிகேபி,
ரொம்ப Interesting பதிவு.
- பாண்டி ஆனந்த்
உங்களுடைய பழைய பதிவுகளையும் விரும்பி படிப்பேன். அதற்கு google reader தான் வசதியாக இருந்தது இப்போது நீங்களே பெட்டகமாக கொடுத்துவிட்டீர்கள் நன்றி......
பழைய பதிவுகளை ஒரே இடத்தில் தேடுவதற்கு வசதி ஏற்படுத்தி கொடுத்ததற்கு மிக்க நன்றி. எனக்கு மிகவும் பயன் உள்ளதாக அமைந்துள்ளது.
Post a Comment