உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Friday, June 25, 2010

ஒரே ஒரு டிகிரி

இப்போதெல்லாம் ரொம்ப எழுத முடிகிறதில்லை. டூ பிசினு ஒரேயடியாக சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகின்றேன். வாரம் ஒரு இடுகையாவது இட ஆசைப் பட்டாலும் மாதம் ஒன்று தான் இட முடிகின்றது. டிவிட்டர் மாதிரி குறுகத்தரித்த இடுகைகளை இடலாமேவென கோபால் யோசனை சொல்லியிருந்தான். அவன் புதிதாக வாங்கியிருக்கும் ஐபேட் நன்றாக இருக்கின்றது. பார்க்கின்றவர்களெல்லாம் நாமும் ஒன்று வாங்கினால் நன்றாய் இருக்குமே என யோசிக்க வைத்துவிடுகின்றது. இரண்டு நொடிகளுக்கு ஒன்று வீதம் விற்கின்றார்களாம். புதுப்படம் ரிலீசுக்கு நம்மூரில் கட்டவுட் வைத்து பட்டாசு கொளுத்துவார்களே, அது போல ஆப்பிள் தயாரிப்புகள் ரிலீசுக்கு பைத்தியம் பிடித்தவர்கள் போல கடை நடையில் வரிசையில் நிற்பவர்களை பார்க்கும் போது நெருடலாய் இருக்கின்றது. எல்லா ஊர்களிலும் “விசிறி” என்று வந்துவிட்டால் ஒன்று போலத்தான் இருப்பார்கள் போலிருக்கின்றது. இன்னொரு போன் வாங்கினால் அது டிராய்ட் போன் தான் வாங்கப் போவதாக கோபால் கூறினான். எனக்கும் அந்த முடிவு நன்றாக தெரிந்தது. பிளாஷ் சப்போட்டும் அதில் இப்போது வந்திருக்கின்றதாம்.

இவ்வளவு சுதந்திரமாக இணையத்தில் இன்னும் எத்தனை நாளைக்குத் தான் எழுதப்போகின்றோமோ தெரியவில்லை. நான் நாலு வயதாய் இருந்த போது மிதிவண்டிக்குக்கூட லைசென்ஸ் வைத்திருந்தார்கள், ஏன் வானொலி வைத்திருக்க கூட லைசென்ஸ் வைத்திருக்க வேண்டுமாம். இனிமேல் இணையத்தில் எதாவது எழுதவும் தனியாக லைசென்ஸ் வைத்திருக்க வேண்டுமென சட்டம் கொண்டு வந்தாலும் வருவார்கள். இங்கு எல்லாமே சாத்தியம். net neutrality இப்படித்தான் போகும்.

கார்ப்பரேட் கதைகளை நேகா உற்சாகத்தோடு கூறுவதுண்டு. 211 டிகிரியில் தண்ணீர் சூடாக இருக்குமாம். 212 டிகிரியானால் அது ஆவியாகத்தொடங்கிவிடும். அந்த ஒரு டிகிரிக்கு மட்டும் எத்தனை சக்தினு பார். ரயில் வண்டியையே அதனால் இழுத்துச் செல்லமுடியும். அதனால் இன்னும் ஒரே ஒரு டிகிரி மட்டும் ஏறிப்பாரேன்னு உற்சாகத்தோடு கூறுவாள். தூங்கி கிடந்தவனை கிள்ளி எழுப்பி விட்டது போல இருக்கும். நேற்றைக்கு கூட சோனி வையோ லோகோவில் ஒளிந்திருக்கும் அர்த்தத்தை சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது. வையோவின் முதல் இரண்டெழுத்துக்களும் அலைபோல அமைந்து அனலாகை குறிப்பிடுவதாகவும் கடைசி இரண்டு எழுத்துக்களும் 1,0 போல அமைந்து டிஜிட்டலை குறிப்பிடுவதாகவும் குறிப்பிட்டாள். எங்கிருந்து பிடிக்கிறாளோ தெரியாது.

மறந்து போகும் முன்னால் http://desimusicapp.com பற்றி கூறிவிடுகின்றேன். ஐபோன், ஐபேட் வைத்திருப்பவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பாடல்கள் கேட்க நல்ல ஐபோன் ஆப்களை கொடுத்திருக்கின்றார்கள், லேட்டஸ்ட் முதல் பழைய பாடல்கள் வரை அழகாக வரிசைப்படுத்தி கொடுத்திருக்கின்றார்கள். எல்லாப் பாடல்களும் ஒரு தொடு எட்டில். இலவசமாக கிடைக்கும் போதே இறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இன்னொரு முறை சந்திக்கலாம்.


Email PostDownload this post as PDF

Related Posts by Categories4 comments:

Praveenkumar said...

மிகவும் பயனுள்ள கட்டுரை..!
தொடரட்டும் தங்கள் பயனுள்ள இணையத் தகவல்கள் சேவை..!
பகிர்வுக்கு நன்றி..!

மாதவன் said...

why no e-book links provided? I like ur e-book links.

Anonymous said...

SUBJECT: create an archive page as like writer marudhan:


see this link:

http://marudhang.blogspot.com/p/archives.html

see this archive page(பதிவுகள்) of writer marudhan's blog. You have a blog archive in your side bar. It is not good to have very quick look of all post titles. so, create an archive page in your blog. It will enable readers to easily find all of the post titles quickly in a single page.

Follow steps in this site:


http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-archives.html


(NOTE: If you create an archive page by following the instructions in the above site the archive page will not show all post titles immediately. you should wait up to 1 week. Then only the archive page will show all post titles in a single page itself with dates, year and month)

deepa said...

thats the best app ever for music. thanks for the info

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்