உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Monday, January 24, 2011

வாமுக‌ : ஸ்மார்ட் போன்கள்


"வாங்கும் முன் க‌வ‌னிக்க‌" வ‌ரிசையில் இன்று ஸ்மார்ட் போன்கள் என‌ப்ப‌டும் கணிப்பேசிகள் பற்றி பார்க்கலாம். முன்பைப்போல கைப்பேசிக‌ளின் ப‌ய‌ன்பாடு வெறும் பேச‌வும், டெக்ஸ்ட் செய்ய‌வும் என்றில்லாது இன்றைக்கு அதை இணைய‌த்தோடு இணைய‌ச்செய்து, அதற்கு ப‌ல்வேறு புத்திக‌ளையும் கொடுத்து அதை நாம் அநேக‌ம் செய்ய‌ வைத்திருக்கின்றோம். சீக்கிரத்தில் ஒரு ஸ்மார்ட் போன் வாங்க‌ உத்தேச‌த்திலிருப்போர்க்கு கீழ்க‌ண்ட குறிப்புக‌ள் உதவலாம்.

1.ஆப்பரேட்டிங் சிஸ்டம் : ஸ்மார்ட் போன்க‌ள்,க‌ணிணிகளைப் போல‌வே ஏதாவ‌து ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு வ‌ரும். எகா: கூகிளின் ஆன்ட்ராய்ட், ஆப்பிளின் iOS4, பிளாக்பெர்ரியின் BlackBerry OS ,மைக்ரோசாப்டின் Windows Mobile, நோக்கியாவின் Symbian அல்லது MeeGo. இந்த‌ OS-‍க‌ளில் எந்த‌ OS உங்க‌ளுக்கு மிக‌வும் பிடித்த‌மான‌து ச‌வுக‌ரிய‌மான‌து என‌ முடிவு செய்து கொள்ளுங்க‌ள். ஒவ்வொன்றும் அத‌ற்கென‌ "பய‌ன்பாடு ச‌ந்தை"க‌ளை கொண்டுள்ள‌ன.‌ ஐமீன் AppStore or Application Marketplace.எப்ப‌டியும் உங்க‌ள் ஸ்மார்ட்போன் மேற்சொன்ன‌வைக‌ளில் எதாவ‌து ஒரு OS-ஐ கொண்டிருப்ப‌தாக‌ பார்த்துக்கொள்ளுங்க‌ள். என‌து ப‌ரிந்துரை Android. முடியுமெனில் iOS4.

2. இணைய இணைப்பு வசதிகள் : உங்க‌ள் ஸ்மார்ட்போனில் கண்டிப்பாக Wi-Fi இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். கூடவே உங்கள் இடம், சூழலுக்கேற்ப 4G, UMTS/HSDPA அதாவது 3G,GPRS, EDGE போன்ற இணைய இணையும் வசதிகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

3.தொடுதிரை : சிலருக்கு எல்லாமே டச் ஸ்கீரினால் செய்ய முடியும். சிலருக்கு டச் ஸ்கீரின் என்றாலே அலர்ஜி. உங்கள் ஸ்மார்ட் போன் எது கொண்டிருக்க வேண்டுமென நீங்க‌ளே முடிவுசெய்து கொள்ளுங்க‌ள். சில‌ கணிப்பேசிக‌ள் இர‌ண்டுமே கொண்டு வ‌ருகின்ற‌ன‌. ட‌ச் ஸ்கிரீனெனில் Capacitive Touchscreen ந‌ல்ல‌ தொடு உண‌ர்வை தரும். எதற்கும் வாங்கும்முன் ஒரு முறை தொடுதிரையை தொட்டு பார்த்து அது உங்களுக்கு லாயக்காவென தெரிந்துகொள்ளுத‌ல் ந‌ல்ல‌து.பிற்பாடு விர‌ல்க‌ளால் மொத்து மொத்தென திரையை மொத்துவ‌தை த‌விர்க்க‌லாம்.யூடியூப் வீடியோ பார்வைக‌ளுக்கு ந‌ல்ல‌ Display Resolution இருப்பது ந‌ல்ல‌து.விரல்கள் விளையாட வசதியான அளவு Display Size வேண்டும்.

4.நினைவகம் : ப‌ய‌ன்பாடுக‌ளை நிறுவ‌ அதிக‌ Internal Memory தேவைப்ப‌டும்.GB க‌ண‌க்கில் இருப்ப‌து ந‌ல்ல‌து.

5.பேட்டரி : கடைசியாக ஆனால் மிக முக்கியமாக battery life.

கிறிஸ்த‌வ‌ர்க‌ளின் வேதாக‌ம‌ புத்தகம் த‌மிழில் ஒரு ஐபோன்/ஐபேட் ப‌ய‌ன்பாடாக‌ ஆப்பிள் AppStore-ல் வ‌ந்துள்ள‌து. தேவையுள்ள‌வ‌ர்க‌ள் இல‌வ‌ச‌மாக‌ இற‌க்க‌ம் செய்து நிறுவிக் கொள்ள‌லாம்.
AppStore link to Tamil Bible - Reference iPhone iPad App by Joy Solutions


Email PostDownload this post as PDF

Friday, January 21, 2011

சத்தமில்லாமல் ஒரு யுத்தம்

கால‌த்துக்கு கால‌ம் வாக்கும் வ‌ழ‌க்கமும் மாறிக் கொண்டிருக்கின்றது. ப‌ழைய‌ ப‌ட‌ங்க‌ளின் ஊடாய் ந‌ம் ப‌ண்டைய‌ த‌மிழ‌க‌த்தைப் பார்க்க‌ப்போகின்றேன் என‌ச் சொல்லி ப‌ழைய‌ ப‌ட‌ங்க‌ளை ஒரு வேக‌ப்பார்வைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் கோபால். "பாச‌ம‌ல‌ர்" ஓடிக் கொண்டிருந்த‌து. "எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும், வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே" என்ற‌ பாட்டில் என்னா ஒரு உற்சாகம், உத்வேக‌ம். "நெஞ்சில் ஒரு களங்கமில்லை சொல்லில் ஒரு பொய்யுமில்லை, வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை" என என்னே உறுதியோடு அந்த‌ வ‌ரிக‌ள் இருந்தன. இதெல்லாம் இன்றைக்கு சாத்திய‌மாவென‌ தோன்றிய‌து. வாக்கினில் ம‌ட்டுமல்ல வ‌ழ‌க்க‌த்திலும் எவ்வ‌ள‌வு மாற்ற‌ங்க‌ள். முன்பெல்லாம் முப்ப‌டைக‌ளும் வைத்துக்கொண்டிருக்க‌ வேண்டும் குறுநில ம‌ன்ன‌வ‌ன். இர‌த்த‌ம் சிந்தாம‌ல் அவ‌னுக்கு வெற்றிக‌ள் கிட்டுவ‌தில்லை. இன்றைக்கு ஈரானின் நியூக்கிளிய‌ர் எழுச்சியை காண‌ப் பொறுக்காத‌ சில‌ நாடுக‌ள் அத‌னுட‌ன் ச‌ண்டையிட்டு அத‌ன் எழுச்சியை தடுத்து நிறுத்தவில்லை மாறாக க‌த்தியின்றி இர‌த்த‌மின்றி ஒரு யுத்த‌மே ந‌ட‌ந்து முடிந்திருக்கின்றது. ஸ்ட‌க்ஸ்நெட் (Stuxnet)என்ற‌ ஒரு க‌ணிணி வார்ம் வைர‌சே அங்கு ஆயுத‌மான‌து.இது பொதுவாக பிளாஷ் டிரைவ் மூலம் பரவவைக்கப் படுகின்ற ஒரு வைரஸ். ஏவுக‌ணைத்தாக்குத‌ல் ந‌ட‌த்தியிருந்தால் கூட‌ ஈரானியர்களால் சீக்கிர‌மாய் மீண்டிருக்க‌ முடியும். இந்த‌ க‌ணினி வைர‌சிட‌மிருந்து மீண்டுவ‌ர‌ இன்னும் அதிக‌ நாட்கள் வருடங்கள் பிடிக்கும் என்கின்ற‌ன‌ர். பாருங்க‌ள், நாம் பிடிக்க‌ வேண்டிய‌ ஆயுத‌மும் கூடகாலப்போக்கில் மாறியிருக்கின்ற‌து. டிவியில் "படித்தால் மட்டும் போதுமா" படம் ஓடிக்கொண்டிருக்கின்றது.

ட்பு வட்டம் எப்படி உடைகின்றதுவென ஒரு ஆராய்ச்சி.
ஆரம்பத்தில் நண்பர்கள் இருவரும் மற்றவன் பிசியாக இருப்பானோவென நினைத்துக்கொள்கின்றனர்.
இதனால் அவனை ஏன் நாம் தொந்தரவு செய்ய வேண்டுமென தொடர்புகொள்ளாமலே இருப்பர்.
கொஞ்சம் காலம் சென்றதும்
மற்றவன் தன்னை முதலில் தொடர்பு கொள்ளட்டுமேவென இருப்பான்.
பின்னர் நான் முதலில் அவனை ஏன் தொடர்புகொள்ள வேண்டும் என நினைப்பான்.
அந்த நினைப்பே பின் வெறுப்பாக மாறி கடைசியில் ஒருவரையொருவர் மறந்தே போகின்றனர்.
மின்னஞ்சலில் வந்தது. நிஜமாகப்பட்டது.

ணித,விஞ்ஞான மூளைகளுக்கென மைக்ரோசாப்டிலிருந்து Microsoft Mathematics 4.0 என ஒரு இலவச மென்பொருளை வெளியிட்டிருக்கின்றார்கள். http://www.wolframalpha.com தளத்தை உங்களால் உபயோகப்படுத்த முடிந்தால் இதையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
Download Microsoft Mathematics 4.0

இந்திய முழு நீளத்திரைப்படங்களைப் பார்க்க இங்கே ஒரு தளம். அழகாக அட்டவணைப்படுத்தி இருக்கிறார்கள்.
http://bharatmovies.com/tamil/watch/movies.htm

நல்ல துணையாக, தோழமையுடன் இருப்பதில்தான் உண்மையான மன நிறைவு இருக்கிறது.


Email PostDownload this post as PDF

Tuesday, January 18, 2011

வாமுக‌ : போர்ட்ட‌பிள் டிரைவ்க‌ள்

"வாங்கும் முன் க‌வ‌னிக்க‌" வ‌ரிசையில் இன்று போர்ட்ட‌பிள் டிரைவ் என‌ப்ப‌டும் எக்ஸ்டெர்ன‌ல் யூஎஸ்பி ஹார்ட் டிரைவுக‌ள் பற்றி பார்க்கலாம்.

த‌ங்க‌ளிட‌முள்ள‌ டேட்டாக்க‌ளையெல்லாம் த‌ன் ம‌டிக்க‌ணிணியில் ம‌ட்டுமே சேமித்து வைத்திருந்து, பின் ஒர் ந‌ன்னாளில் அத‌ன் ஹார்ட்டிரைவ் கிராஷ்ஷாக‌ அவை முழுவ‌தையும் இழ‌ந்து த‌விக்கும் ந‌ண்ப‌ர்க‌ளை பார்த்திருக்கின்றேன். இப்ப‌டி தாங்க‌ள் நெடுநாளாக சேகரித்து
வைத்திருந்த டிஜிட்ட‌ல் போட்டோ ஆல்ப‌ங்க‌ளை ஒரே நொடியில் இழ‌ந்தோர் அதிக‌ம். 3-2-1 Backup Strategy ப‌ற்றி கேள்வி ப‌ட்டிருக்கின்றீர்க‌ளா? முத‌லாவ‌தாக உங்க‌ள் க‌ணிணியிலுள்ள‌ ஒரிஜினல் காப்பி, பின் இர‌ண்டாவ‌தாக ஒரு போர்ட்ட‌பிள் டிரைவ்வில் அத‌ன் பேக்‍அப் காப்பி, மூன்றாவ‌து கிள‌வுடில் ஒரு பேக்கப் காப்பி (எ.கா பிக்காசா அல்லது Carbonite) என‌ மூன்று காப்பிக‌ளை வைத்துக்கொள்வ‌து எப்போதும் ந‌ல்ல‌து.எந்த‌ ச‌ம‌ய‌த்திலும் உங்க‌ள் மேலான‌ டேட்டாக்க‌ளை இழ‌க்க‌மாட்டீர்க‌ள்.

இப்போது இர‌ண்டாவ‌தாக நாம் சொன்ன போர்ட்ட‌பிள் டிரைவ்வில் ஒரு காப்பி வைத்துக்கொள்ள,‌ அந்த போர்ட்ட‌பிள் டிரைவ் வாங்குவ‌தைப் ப‌ற்றி க‌வ‌னிப்போம்.

1.கொள்ள‌ள‌வு: 320GB,500GB,750GB,1TB என‌ ப‌ல்வேறு அள‌வுக‌ளில் இது கிடைக்கின்ற‌து. 320GB-யில் ம‌ட்டும் 91,400 போட்டோக்க‌ளை நாம் சேமித்து வைக்கலாமாம் அல்ல‌து 80,000 MP3 பாட‌ல்க‌ள் அது கொள்ளும். அப்ப‌டியென்றால் 1TB ப‌ற்றி நீங்க‌ளே க‌ண‌க்கிட்டுக் கொள்ளுங்க‌ள். விர‌லுக்கேற்ற‌ மோதிர‌ம் வாங்கிக்கொள்ள‌வும்.

2.பரிம‌அள‌வு: 4"X3" அள‌வில் அல்லது 2.5" form factor அளவில் கிடைக்கும் டிரைவுகள் ரொம்ப கியூட். பாஸ்போர்ட் போல‌ ச‌ட்டைப்பையில் வைத்துக் கொண்டு நீங்கள் செல்லலாம்.

3.No Power Cord please: த‌னியாக‌ பெரிய‌ ப‌வ‌ர் கார்டெல்லாம் கொடுக்காம‌ல், USB கேபிளே ப‌வ‌ர் ம‌ற்றும் டேடாக்கு ப‌ய‌ன் ப‌டுமாறு இருத்த‌ல் அதை இன்னும் போர்ட்ட‌பிள்ளாக‌ வைத்துக்கொள்ள‌ உத‌வும். அப்ப‌டியே டிரைவில் ஒரு LED லைட்டும் இருந்தால் ந‌ல்ல‌து. டிரைவ் மூச்சு விடுகிறதா இல்லையாவென‌ தெரிஞ்சுக்க‌லாமே.

4. go USB3: அதிவேக‌மாக‌ டேட்டாக்க‌ளை ப‌ரிமாற உங்க‌ள் போர்ட்ட‌பிள் டிரைவ் USB 3 ஆக‌ இருப்ப‌து ந‌ல்ல‌து. உங்க‌ள் க‌ணிணியும் அதுபோல USB 3.0 போர்ட் கொண்டிருக்க‌ வேண்டும். பழைய USB 2.0-ஆனது 25GB டேட்டாவை காப்பி செய்ய‌ 14 நிமிட‌மெடுக்கின்றதுவென்றால் புதிய SuperSpeed USB 3.0 வெறும் 70 நொடிக‌ளே எடுக்கின்ற‌துவென்றால் வேகத்தை பார்த்துக் கொள்ளுங்க்கள். உங்கள் பழைய மடிக்கணிணியில் USB 3.0 போர்ட் இல்லையென்றால் 2PORT USB 3.0 Expresscard Superspeed Card உதவலாம்.

5.RPM: அது போல‌ போர்ட்ட‌பிள் டிரைவ் சுழ‌லும் வேக‌மும் முக்கிய‌ம்.7200RPM என்றால் மிக‌வும் ந‌ல்ல‌து. 5400RPM மோச‌ம‌ல்ல‌.

இப்போதைக்கு எனது அபிமான பிராண்ட் Western Digital My Passport Essential External Portable Hard Drive

சேவை செய்யும் க‌ர‌ங்க‌ள் பிரார்த்த‌னை செய்யும் உத‌டுக‌ளை விட‌ மேலான‌து. - ‍ம‌காத்மா காந்தி


”உபுண்டு உட‌ன் ஒரு ப‌ய‌ண‌ம் த‌மிழ் மென்னூல் ”Getting Started with Ubuntu 10.04 manual in Tamil


Email PostDownload this post as PDF

Friday, January 07, 2011

ஸ்மார்ட் உப‌க‌ர‌ணங்க‌ள்

கைப்பேசிக‌ள் கொஞ்ச‌ம் ஸ்மார்ட் ஆன‌தும் ஆன‌து, இன்றைக்கு இந்த‌ ஸ்மார்ட்போன்க‌ளைக் கொண்டு நாம் கையா‌டும் கிரியாக்க‌ள் க‌ட்டுக்க‌ட‌ங்கா போய்க் கொண்டிருக்கின்றது. ஒருவ‌ர் ஐபோனை வைத்து ஊத்து ஊதிக் கொண்டிருக்கின்றார். இன்னொருவ‌ர் அதை மைக்காக‌ ப‌ய‌ன்ப‌டுத்தி ஒலிபெருக்கியில் பேசிக்கொண்டிருக்கின்றார். இன்னொருவ‌ரோ த‌ன‌து கிடாரின் இழைக‌ளை ஒரு ஐபோன் ஆப் கொண்டு எளிதாக‌ டியூன் செய்து கொண்டிருக்கின்றார். நாங்க‌ளும் விட்டோமா பார் என்று ஒரு ம‌ருத்துவ‌க்குழு இப்போது ஐஹெல்த்தென‌ வ‌ந்து இர‌த்த‌ அழுத்த‌த்தையும் உங்க‌ள் ஸ்மார்ட் போன் கொண்டு சோதிக்க‌லாம் என்கின்ற‌து. இவ‌ர்க‌ள் கொடுக்கும் வன்பொருள் கிட்டை உங்க‌ள் ஸ்மார்ட் போனில் செருகிக்கொண்டு ஸ்டாட் மியூசிக் கென‌ க‌ட்ட‌ளை கொடுத்தால் உங்க‌ள் இர‌த்த‌ அழுத்த‌ம் ஐபோன் திரையில் அள‌ந்து காட்ட‌ப்ப‌டும். கூட‌வே இர‌த்த‌ அழுத்த‌ம் எடுக்க‌ப்ப‌ட்ட‌ நாள், நேர‌ம் போன்ற‌ த‌க‌வ‌ல்க‌ளும் அதில் சேமித்து வைக்க‌ப்ப‌டுவ‌தால் ம‌ருத்துவ‌ரிட‌ம் போகும் போது அவ‌ரால் எளிதாக‌ உங்க‌ள் இர‌த்த‌ அழுத்த‌மானது ஏறி இற‌ங்கும் பேற்ற‌னை க‌ணிக்க‌ முடியும் என்கின்ற‌ன‌ர். இது போல‌ இனி சுக‌ர் செக் ப‌ண்ண‌, கொல‌ஸ்ட்ரால் செக் ப‌ண்ண டெம்ப‌ரேச்ச‌ர் எடுக்க‌வென‌ புதுப்புது வ‌ன்பொருள் வால்க‌ள் ஸ்மார்ட் போன்க‌ளுக்கென‌ ச‌ந்தையில் வ‌ருவ‌து த‌டுக்க‌ முடியாத‌தாகிவிடும். பொதுவாக‌வே இது போன்ற‌ ம‌ருத்துவ‌ தேவைக‌ளுக்கு எல‌க்ட்ரானிக் க‌ருவிகளின் ந‌ம்ப‌க‌த்த‌ன்மையை விட‌‌, கைகொண்டு செய்யும் முறைக‌ளே அதிக‌ துல்லிய‌ம் என‌ நேகா ஒருமுறை சொல்லியிருக்கின்றாள். இதுவும் அவளைப் பொறுத்தவரை அந்த‌ ர‌க‌த்தில் சேர்ந்து விடும்.


கைப்பேசிக‌ள் ம‌ட்டும் தானா என்ன? அடுப்பு முத‌ல் வீட்டிலிருக்கும் அத்தனை உபக‌ர‌ண‌ங்க‌ளையும் நாங்க‌ள் ஸ்மார்ட் ஆக்கி காட்டுகிறோமென‌ LG நிறுவன‌மான‌து THINQ Technology-யோடு வ‌ந்திருக்கின்றார்கள். இத‌ன்ப‌டி வீட்டு உப‌க‌ர‌ண‌ங்க‌ள் உங்கள் வீட்டு வை-பையோடு இணைக்க‌ப்ப‌ட்டிருக்கும். இதனால் வாசிங்மெசின் துவைத்து முடிந்த‌தும் உங்க‌ள் போனுக்கு அதனால் டெக்ஸ்ட் அனுப்ப முடியும்.கூடிய சீக்கிரத்தில் டிவீட்டும் செய்யலாம். அது smart washer. அலுவ‌ல‌க‌த்திலிருந்தே உங்க‌ள் ஐபேட் வ‌ழி கண்காணித்து, வீட்டிலுள்ள‌ robotic vacuum cleaner-யை இயக்கி வீட்டை சுத்த‌ம் செய்ய‌லாம். ஷாப்பிங் செய்யும் போது உங்கள் கைப்பேசியில், வீட்டு ஸ்மார்ட் ஃபிரிட்ஜானது அதில் என்ன‌வெல்லாம் இருக்கின்றது, எது எது எப்போது காலாவாதியாகின்ற‌து வென‌ ஒரு லிஸ்ட் போட்டு இன்வென்ட‌ரியே கொடுத்து விடும். ஜிம்மில் ட்ரெட்மில்லில் ஓடிக் கொண்டிருக்கொண்டிருக்கும் போதே இர‌வுக்கு த‌யாராக‌ கைப்பேசி வ‌ழி ஐஸ்மேக்க‌ரை ஆன் ப‌ண்ணிவிட‌லாமாம். எதாவது உபகரணம் மக்கர் பண்ணினால் அதுவே கஸ்டமர் சர்வீசுக்கு மெசேஜ்ம் அனுப்பி விடும்.இதெல்லாம் இன்னும் ஐந்து வ‌ருட‌ம் க‌ழித்து ந‌ட‌க்க‌ப்போகின்ற‌ ச‌ங்க‌திக‌ளில்லை‌. இன்னும் சில‌ மாத‌ங்க‌ளில் ந‌ம்மிடையே புழ‌ங்க‌ விருக்கும் த‌ட்டு முட்டுக‌ள். வாலட்டை மட்டும் தயார்படுத்திக் கொள்ளவும்.

புதுவ‌ருட‌மான‌தும் என்ன‌வோ சில‌ரின் கைப்பேசி அலார‌ங்க‌ள் ஒழுங்காக‌ வேலைச் செய்ய‌வில்லையாம். இத‌னால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌தில் ந‌ம் ந‌ண்ப‌னும் ஒருவ‌ன். ஸ்னூஸ் ப‌ட்டனே இல்லாத‌ அலார‌க்க‌டிகார‌ம் ஒன்றை ப‌ரிச‌ளிக்க‌லாமென்றிருந்தேன். கோபால் ப‌ரிந்துரைத்த‌து Flying Digital Alarm Clock 6 ம‌ணிக்கு அலார‌ம் அடித்த‌ கையோடு இந்த‌ க‌டிகார‌ம் ரூமில் ஒரு ஹெலிகாப்ட‌ரையும் ப‌ற‌க்க‌ விடுமாம். அதை நீங்க‌ள் எழும்பிப் போய் பிடித்து அக் க‌டிகார‌ பேஸில் வைக்கும் வ‌ரை கொடூர‌ அலார‌ ஒலி நிற்ப‌தில்லையாம். ந‌ல்ல‌ப் ப‌ரிந்துரை. இன்னொன்று Laser Target Alarm Clockகொடுக்க‌ப்ப‌ட்ட‌ விளையாட்டு துப்பாக்கியால் தூக்க‌ க‌ல‌க்க‌த்தில் க‌டிகார‌த்தில் வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ டார்கெட்டை ச‌ரியாக‌ சுட்டால் தான் அந்த‌ அலார‌ ஒலி நிற்குமாம். ந‌ல்லாவே யோசிக்கிறாங்க‌ போங்க‌.

1958 மார்ச் 1‍ஆம் திய‌தி அன்று திரு.எம்.ஜி.ராம‌ச்சந்திர‌ன் அவ‌ர்க‌ள் இல‌ங்கை வானொலிக்கு வ‌ழ‌ங்கிய‌ பேட்டி இங்கே MP3 வ‌டிவில்.
http://www.archive.org/details/MgrInterviewInCeylonRadio1-3-1958.mp3


உங்க‌ள் ச‌ந்தேக‌ங்க‌ளை ச‌ந்தேக‌ப்ப‌டுங்க‌ள் உங்க‌ள் ந‌ம்பிக்கைக‌ளை ந‌ம்புங்க‌ள்.


தண்டறை சுப்பராய ஆசாரியார் ”அக‌ம்புற ஆராய்ச்சி விள‌க்க‌ம்” Tamil AgamPura Aaraaychi Vilakkam


Email PostDownload this post as PDF

Monday, January 03, 2011

டிஜிட்ட‌ல் கேம‌ரா ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍"வாங்கும் முன் க‌வ‌னிக்க‌-5"

‌ண்ப‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் 2011 புத்தாண்டு வாழ்த்துக்க‌ள்.


ந்த‌ "வாங்கும் முன் க‌வ‌னிக்க‌-5" சீரீஸ் ப‌திவுக‌ள் முழுக்க‌ முழுக்க‌ சாதார‌ண‌ ந‌(ண்)ப‌ர்க‌ளை க‌ருத்தில் கொண்டு எழுத‌ப்ப‌டுவ‌ன‌. கோபால் போன்ற‌ மேல‌திக‌ ஞான‌மும் ஆர்வ‌மும் கொண்டவ‌ர்க‌ளைக் க‌ருத்தில் கொண்டு எழுத‌ப்ப‌டுவ‌ன அல்ல‌. ஆனால் அத்த‌கையோர் இங்கு பின்னூட்ட‌ப் ப‌குதியில் மேலும் ப‌ல‌ த‌க‌வ‌ல்க‌ளை ந‌ம் ந‌ண்ப‌ர்க‌ளின் ந‌ல‌ம் க‌ருதி ந‌ம்மிடையே ப‌கிர்ந்து கொள்ள‌லாம்.

‍‍‍‍இந்த‌ "வாமுக‌-5" குறும்ப‌திவுக‌ள் தொட‌ரில் முத‌லாவ‌தாக‌ நாம் பார்ப்ப‌து டிஜிட்ட‌ல் கேம‌ரா. உங்க‌ளுக்கென‌வோ அல்ல‌து ந‌ண்ப‌ர்க‌ளுக்கு ப‌ரிச‌ளிக்க‌வென‌வோ டிஜிட்ட‌ல் கேம‌ரா வாங்க‌ நீங்க‌ள் உத்தேசித்துக் கொண்டிருந்தால் கீழ்க‌ண்ட‌ ஐந்து விட‌ய‌ங்க‌ளை க‌ருத்தில் கொள்ள‌வும்.

1. எந்த‌ கேம‌ரா வாங்க வேண்டும்? SLR or Compact Point and Shoot?
லென்சுக‌ளை தேவைக்கேற்ப்ப‌ க‌ழ‌ற்றி மாட்டி, அவ‌ற்றை சுழ‌ற்றி சுழ‌ற்றி சூம் செய்து மிக‌க்க‌றாறாக‌ போட்டோ எடுக்கும் ப‌ர‌ம்ப‌ரை நீங்க‌ள் என்றால் SLR (Single-Lens Reflex) என‌ப்ப‌டும் கேம‌ரா உங்க‌ளுக்குத் த‌கும். க‌லியாண‌ வீடுக‌ளில் ஏற்கன‌வே உங்க‌ளுக்கு அறிமுக‌மாகியிருக்கும் எட்டிப்பார்க்கும் பிளாஷ் லைட்டுக‌ளோடு கூட‌ வ‌ரும் மிக‌ப்பெரிய‌ சைசு கேம‌ராக்க‌ள் தான் இந்த‌ SLR கேம‌ராக்க‌ள். கோபால் போல‌ ஐநூறு, ஆயிர‌ம் டால‌ர்க‌ளென‌ போட்டோ எடுக்கும் ஒரு கேம‌ராவுக்கு நீங்க‌ள் செல‌விட‌த் தயாரெனில் SLR-க‌ள் ஓகே. என் போன்ற‌ எடுத்தான் க‌வுத்தான்க‌ளுக்கு நூறுடால‌ர் அளவில் கிடைக்கும் பாயிண்ட் அன்ட் சூட்டுக‌ள் எவ்வ‌ள‌வோ மேல்.

2.பேட்ட‌ரி வ‌கை
டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர்க‌ளில் கிடைக்கும் AA போன்ற‌ அல்க‌லைன் பேட்ட‌ரிக‌ள் பய‌ன்ப‌டுத்தும் கேமாராக்க‌ள் எப்போதுமே என‌க்கு பிடித்த‌தில்லை. லித்திய‌ம் அயான் என‌ப்ப‌டும் ரீசார்ஞ் செய்ய‌க்கூடிய‌ பேட்ட‌ரிக‌ள்
கொண்ட‌வை என‌து பிடித்த‌ம். இஷ்ட‌த்துக்கும் பேட்ட‌ரிக‌ள் ப‌ற்றிய‌ ப‌ட்ஜெட் ப‌ய‌மின்றி ப‌ட‌ம் சுட்டுத்த‌ள்ள‌லாம். மின் இணைப்பே இல்லாத இட‌ங்க‌ளுக்கு சாகச‌ப் ப‌ய‌ணம் சென்று "நிஜ‌ம்" பிடிப்போருக்கு அல்க‌லைன்க‌ள் உத‌வ‌லாம்.

3. அந்த‌ MP க‌ணக்கு
5 MP‍யே டூம‌ச்சாம். அதனால் 12.1 megapixel, 14 megapixelப‌ற்றி யெல்லாம் நீங்க‌ள் ரொம்ப‌ க‌வ‌லைப்ப‌ட‌த் தேவையில்லை.உங்க‌ள் ப‌ட்ஜெட்டுக்கு எது செட்டாகுதோ அது ந‌ல்ல‌து.ஆனால் வாழ்வின் அற்புத‌மான‌ த‌ருண‌ங்க‌ளை resolution மிக‌க் குறைந்த‌ செல்போன் கேம‌ராக்க‌ளில் எடுத்து வீணாக்கி விடாதீர்க‌ள். 4x6 பிரிண்ட் போட‌ குறைந்த‌து 540x360 pixels வேண்டும். 8 x 10 பிரிண்ட் போட‌ குறைந்த‌து 900x720 pixels வேண்டும். அதுபோல‌ உண்மையிலேயே டெல‌ஸ்கோப்பு போல‌ நீண்டு நீண்டு சூம் செய்யும் ஆப்டிக்க‌ல் சூம் அதிக‌ம் இருப்ப‌து ந‌ம‌க்கு கேம‌ராவில் தேவையான‌ விச‌ய‌ம் தான். ஆனால் வெறும் ப‌ட‌த்தை ம‌ட்டும் சூம் செய்து போக‌ப்போக‌ மோச‌மான‌ த‌ர‌ம் த‌ரும் டிஜிட்ட‌ல் சூம் ப‌ற்றி ரொம்ப‌ க‌வ‌னிக்க‌ தேவையில்லை.

4. கூட‌வே ஒட்டி வ‌ருவ‌ன‌
எடுக்கும் போட்டோக்க‌ளை சேமித்து வைக்க‌ குறைந்த‌து 2GB அல்ல‌து 4GB மெம‌ரி கார்டாவ‌து இருப்ப‌து அவ‌சிய‌ம். கேம‌ராவோடு எவ்வ‌ள‌வு மெமெரி வ‌ருகிற‌துவென‌ விசாரியுங்க‌ள். அப்ப‌டியே உங்க‌ள் கேம‌ராவை பாதுகாக்க‌ ஒரு கேசும் இல‌வ‌ச‌மாக‌ வ‌ந்தால் இன்னும் அருமை. HD video ரெக்கார்டிங், HDMI output இதெல்லாம் கேம‌ராவின் விலையை கூட்டும் ச‌மாசார‌ங்க‌ள்.

5.க‌ண்டு ர‌சிக்க‌
எடுக்க‌ப்ப‌ட்ட‌ ப‌ட‌ங்க‌ளை பெரிய‌ திரையில் பார்வையிட‌ உங்க‌ளிட‌மோ அல்ல‌து நீங்க‌ள் ப‌ரிச‌ளிக்க‌விருக்கும் ந‌ண்ப‌ரிட‌மோ ஒரு மேஜைக்க‌ணிணியோ அல்ல‌து ம‌டிக்க‌ணிணியோ இருப்ப‌து அவசிய‌ம். அல்ல‌து ஒரு டிஜிட்ட‌ல் போட்டோ பிரேமாவ‌து இருப்ப‌து அவ‌சிய‌ம். வீடுக‌ளில் கணிணி/போட்டோ பிரேம் இல்லாதோர் கூட‌ தாங்க‌ள் எடுத்த‌ டிஜிட்ட‌ல் போட்டோக்களை அச்சிட்டு வ‌ழ‌ங்க‌‌ சென்னையில் http://www.konicacolorlab.com போன்ற‌ த‌ள‌ங்க‌ள் உள்ள்ன‌ . பெங்க‌ளூர்கார‌ர்க‌ள் http://www.picsquare.com முய‌ன்று பார்க்கலாம்

எனது டிஜிட்ட‌ல் கேம‌ரா அபிமான‌ பிராண்டுக‌ள்: க‌னான் (Canon) ம‌ற்றும் நிக்கான் (Nikon)

K.Muralitharan "Trigonamalai Varalaaru" in Tamil கி முரளிதரன் "திருக்கோணமலை வரலாறு"


Email PostDownload this post as PDF
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்