வழக்கம் போல இந்த முறை "வாங்கும் முன் கவனிக்க" வரிசையில் கணிணி பிரிண்டர்கள் பற்றி பார்க்கலாம்.குட்டீஸ்களுக்கு கலரிங் காகிதங்கள் அச்செடுத்து கொடுத்து அவர்கள் கொட்டத்தை அடக்குவதிலிருந்து, காசை மிச்சப்படுத்த கூப்பன்கள் பிரிண்ட் செய்வதுவரை பிரிண்டர்களின் அவசியம் வீட்டுக்கு வீடு மிக அதிகமாகிவிட்டது. இப்போது வீட்டுத் தேவைக்காக நாம் பிரிண்டர் ஒன்று வாங்கும்போது என்னவெல்லாம் கவனிக்க வேண்டுமென கவனிக்கலாம்.
1.இங்க் ஜெட்டா அல்லது லேசரா?
அதிகம் பயன்படுத்தாமல் அவ்வப்போது எப்போதாவது கலரும், கறுப்பு வெள்ளையுமாக பிரிண்ட் செய்பவர்கள் இங்ஜெட் பிரிண்டர்களை தெரிவு செய்யலாம். விலை மலிவான தெரிவு அது. அதுவே நீங்கள அதிக அளவு பிரிண்ட் செய்பவர்கள் ஆனால் கறுப்பு வெள்ளை மட்டும் போதும் என்றால் மோனோ குரோம் லேசர் பிரிண்டர்களை தெரிவு செய்யலாம். மோனோகுரோம் லேசர் பிரிண்டர்களின் விலைகள் இப்போது ஒரு இங்ஜெட் பிரிண்டரின் விலைக்கு குறைந்து விட்டது.அதிகமாக வேகமாக கலர் கலராக ஹெவிடூட்டி பிரிண்ட் செய்யவேண்டுமென விரும்புபவர்கள் கண்டிப்பாக சேரவேண்டிய இடம் கலர் லேசர் பிரிண்டர்கள்.
2.ஆல்-இன்-ஒன்
பெரும்பாலான இங்ஜெட் பிரிண்டர்கள் பேக்ஸ்/ஜெராக்ஸ்காப்பி/ஸ்கேன் போன்ற அம்சங்களோடு தான் வருகின்றன. ஆனாலும் நீங்கள் உங்களுக்கு தேவையான அம்சங்கள் அக்குறிப்பிட்ட பிரிண்டரில் இருக்கின்றதாவென உறுதிபடுத்திக் கொள்வது மிகவும் அவசியம். கொஞ்சம் கொஞ்சமாக பேக்ஸ் வசதி பிரிண்டர்களிலிருந்து நீக்கப்பட்டு வருகின்றன. ஆல்-இன்-ஒன் லேசர் பிரிண்டர்கள் பெரும்பாலும் வண்ணப் பிரிண்டர்களாதலால் விலை கூரையை எட்டும். சாதாரண வீட்டு தேவைகளுக்கு ஆல்-இன்-ஒன் இங்க்ஜெட் வண்ண பிரிண்டரே ரொம்ப மதி.
3.வைஃபை கண்டிப்பாக வேண்டும்
USB போர்ட்டும் கேபிளும் மட்டும் கொண்டு பிரிண்டர் வந்தால் மிகப்பெரிய தொல்லை. அச்செடுக்க எப்போதும் பிரிண்டர் அண்டையிலேயே ஒட்டிக் கொண்டிருக்க வேண்டி வரும்.வைஃபை எனப்படும் வயர்லெஸ் வசதி இருந்தால் சுதந்திரமாய் உலா வரலாம். எனவே wifi வசதியுள்ள பிரிண்டராய் பார்த்து வாங்குவது மிகவும் அவசியம்.
4.பராமரிப்பு செலவு
பிரிண்டர்கள் பராமரிப்பு செலவுகளோடு வருகின்றன. குறிப்பாக இங்க் கார்ட்ரிட்ஜ்கள். எனவே பிரிண்டர் வாங்கும் போது முன்பே அதற்கான இங்க் கார்ட்ரிட்ஜ்கள் விலை, ஒரு கார்ட்ரிட்ஜ்ஜால் எத்தனை அச்சுகள் எடுக்கலாம், எதாவது குறிப்பிட்ட தர அல்லது அளவு காகிதம் பயன்படுத்த வேண்டுமா? அப்படியெனில் அதன் விலை என்ன போன்றவற்றை நாம் ஆரம்பத்திலேயே கணக்கிட்டுக் கொள்வது நல்லது.
5.பிற வசதிகள்
மொபைல் பிரிண்டிங் - கைப்பேசியிலிருந்து அல்லது ஐபேட் போன்ற டேப்ளட்களிலிருந்து நேரடியாக அச்செடுத்தல்.
டூப்ளக்சிங் - காகித்தின் இருபுறமும் பிரிண்ட் செய்குதல்.
இண்டர்நெட் பிரிண்டிங் - உலகின் எந்த மூலையிலிருந்தும் பிரிண்ட் செய்யும் வசதி.
பிரிண்டர் ஆப்ஸ்- நேரடியாக பிரிண்டர் டச் ஸ்கீரீனை தட்டி சுகோடுகள் /கோலங்கள் /குறுக்கெழுத்து போட்டிகள் /வாழ்த்து அட்டைகள் அச்சிடும் வசதி.
இந்த வசதிகளெல்லாம் உங்களுக்கு வேண்டுமெனில் பிரிண்டர் வாங்கும் போதே நினைவில் கொண்டு தீர விசாரித்து வாங்குவது நல்லது.
Lighter side மேலே படம் : How Babies Are Born These Days??!!
எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். அதே வேளையில் தெரிந்து கொண்டதாக காட்டிக் கொள்ளாமலும் இருங்கள் - அனாய்ஸ்நின் |
செங்கை ஆழியான் ”சித்திரா பவுர்ணமி” Sengai Aliyaan Chithra Pouranami Tamil Novel
Download this post as PDF
1 comment:
http://h30434.www3.hp.com/t5/ePrint-Print-Apps-Mobile/ePrint-and-Print-App-supported-printers/td-p/351574
see the above link
none of the printers support ePrinting !!
Post a Comment