Download this post as PDF
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Thursday, April 05, 2012
அயல்நாட்டிலிருந்து தமிழ்நாட்டில் படிக்க
Download this post as PDF
Posted by
PKP
at
4/05/2012 08:18:00 PM
2
comments
Tuesday, May 22, 2007
அரசியல் பாதி! காரியம் பாதி!!
2006-ஆம் ஆண்டுக்கான நியூயார்க் டைம்ஸின் சிறந்த தொழிலதிபர் விருது துபாய் பிரதமர் மக்துமுக்கு (Sheikh Mohammed bin Rashid al-Maktoum) கிடைத்திருக்கின்றது. அரசியல்வாதியான ஒரு ஆட்சியாளருக்கு தொழிலதிபர் விருதா?.மக்துமின் பதில் " I would say I am primarily involved in the politics of business" என்கிறார். கட்டாந்தரை பாலைவனம் பூத்து குலுங்க அசாதாரண தொலைநோக்கு பார்வை நிச்சயம் தேவையே. அதையெல்லாம் நெஞ்சில் நிறுத்திக்கொண்டு இன்று உலகத்தையே திருப்பி பார்க்க வைத்திருக்கின்றது அவரது உத்திகள்.துபாயிலிருந்து வரும் பற்பல ஆச்சர்ய அறிவிப்புகளில் நேற்று வந்த அறிவிப்பு மிக ஆச்சர்யபடுத்துவதாக அமைந்தது.
அதாவது சுழலும் கட்டிடம் கட்டபோகின்றார்களாம். இஸ்ரேலிய (கவனிக்க... இஸ்ரேலிய தான்) இத்தாலிய கட்டிட வல்லுர்கள் Dynamic Architecture எனும் தொழில் நுட்ப அடிப்படையில் ஒவ்வொரு மாடியும் தனித்தனியே 360 டிகிரி சுழலும் வகையில் ஒரு அடுக்குமாடி கட்டடம் கட்டப்படுமாம்.(Individually Rotating Floors).அதாவது பெல்லி டான்ஸர் போல ஆடிக்கொண்டேயிருக்குமாம்.68 மாடிகளுடன் $350 மில்லியன் டாலரில் கட்டப்படும் இந்த கட்டிடத்தை உங்கள் குரல் கொண்டே இயக்கலாமாம்.காலையில் சூரியோதயம் பார்க்க கிழக்கில் உங்கள் பிளாட்டை திருப்பிக்கொள்ளலாம்.மாலையில் அஸ்தமனம் பார்க்க உங்கள் அப்பார்ட்மென்டை மேற்க்கில் சுழற்றிகொள்ளலாம். அதற்கான மின்சாரம் காற்றாடிகள் வழி உருவாக்கப்படும் என்கின்றார்கள். இதற்கெல்லாம் மூளை 58 வயது David Fisher என்பவர் தான்.இதுவரை இவர் ஒரு அடுக்குமாடி கூட கட்டியதில்லை.This is the future,One building — endless shapes."என்கிறார் அவர் மிக நம்பிக்கையாக. சிலரோ 'He's nuts' என்கிறார்கள்.
பிற துபாய் மெகா புராஜெக்ட் படங்கள் கீழே
Burj Dubai
Palm Island.jpg)
Dubai Marina.jpg)
Dubai Sports City.jpg)
Dubai Waterfront.jpg)
Dubailand Ski Dome.jpg)
Golden Dome.jpg)
Hydropolis.jpg)
Madinat Al Arab.jpg)
Old Town.jpg)
Space Science World.jpg)
The World.jpg)
Download this post as PDF
Posted by
PKP
at
5/22/2007 03:24:00 PM
1
comments
Tuesday, April 03, 2007
தரையிலும் தண்ணீரிலும் போகும் பேருந்து
மனிதனின் எண்ணங்களுக்கும் ஆற்றல்களுக்கும் அளவில்லாமல் போய்விட்டது. அவை அப்புறம் பயன்பாடுகளாய் வரும்போது நமக்கு ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்றது.உல்லாசப் பயணிகளை மகிழ்விப்பதற்க்காக துபாய் நகர சாலைகளில் ஓடி அப்புறமாய் அந்நகர கிரீக் எனப்படும் நதியிலும் ஓடி அந்நகர அழகை காட்டும்படி நியூயார்க்கிலிருந்து உருவாகி வந்திருக்கிறது இந்த புத்தம் புதிய தரையிலும் தண்ணீரிலும் போகும் பேருந்து (Amphibious Wonder Water Bus Dubai). முற்றிலும் குளிர்சாதன வசதிசெய்யப்பட்ட, பெரிய திரை தொலைக்காட்சிபெட்டியுடன் கூடிய இந்த பஸ்ஸில் ஒரே நேரத்தில் அதிகமாய் 44 பேர் பயணிக்கலாமாம்.டிக்கட் விலை 34 டாலர்கள்.குழந்தைகளுக்கு 23 டாலர்கள். இரு குழந்தைகளுடன் கூடிய குடும்பத்துக்கு 107 டாலர்கள்.பஸ் போகும் பாதையை படத்தில் பார்க்கலாம். துபாய்வாசிகளுக்கு கொண்டாட்டம் தான்.
Saturday to Wednesday Trip
First Trip : 10:00 A.M. - 12:00 Noon Second Trip : 5:30 P.M. - 7:30 P.M.
Thursday and Friday Trip
First Trip : 10:00 A.M - 12:00 Noon Second Trip : 3:00 P.M. - 5:00 P.M.
Last Trip : 5:30 P.M. - 7:30 P.M.
















Download this post as PDF
Posted by
PKP
at
4/03/2007 12:09:00 PM
3
comments
Labels: Gulf
Friday, March 16, 2007
உலகின் மிகப் பெரிய துபாய் ஷாப்பிங் மால்
துபாயில் பிரமாண்டமாய் கட்டப்பட்டுவரும் "The Dubai Mall" Shopping Center அது 2008-ல் கட்டப்பட்டு முடியும் போது உலகின் மாபெரும் ஷாப்பிங் மாலாக அமையும்.560,000 சதுரமீட்டர் பரப்பளவுள்ள இம்மாலில் 360,000 சரதுர மீட்டர்கள் வாடகைக்கு விடப்படுமாம். 1400க்கும் அதிகமான உயர்தர கடைகள் பளாபளாவென அமைக்கப்படும்.கூடவே இம்மால் உலகின் மிகப்பெரிய தங்க கடைகள் சதுக்கம் கொண்டதாகவும் (World's largest gold souk) மற்றும் உலகின் மிகப்பெரிய அக்வேரியம் (World's largest aquarium) கொண்டதாகவும் அமையும்.ஏற்க்கனவே துபாயில் கட்டப்பட்டு வரும் உலகின் மிக உயரமான கட்டிடத்தை இங்கிருந்து அழகாக தெளிவாக பார்க்கலாமாம்.அதற்கான வசதியும் செய்யப்பட்டுவருகின்றது. 16,000 கார்களை பார்க் செய்யும் வசதியுடன் கட்டப்பட்டுவரும் இம்மாலுக்காக ஆகும் செலவு 720 மில்லியன் டாலர்கள்.இந்தியா,பாகிஸ்தான்,இலங்கை, மற்றும் பங்களாதேசிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் கையாள்களுக்கு தினசம்பளம் 180 ரூபாய்கள்.
துபாய் ஷாப்பிங் மால் படங்கள்
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
Download this post as PDF
Posted by
PKP
at
3/16/2007 10:47:00 AM
0
comments
Labels: Gulf
Thursday, February 08, 2007
பிரமாண்டமாய் உருவாகும் புதிய தோஹா விமானநிலையம்
கலக்கிக்கொண்டிருக்கும் UAE-யின், அதாவது துபாயின் Emirates Airline-
க்கு சரி சம போட்டியாய் எழும்பி வருவது தான் வளைகுடா நாடான கத்தாரின் தலைநகர் தோஹா-வை மையமாக கொண்டு இயங்கும் Qatar airways.
இருபத்தோராம் நூற்றாண்டின் போட்டிகளை சம்மாளிக்க ,அரேபிய பகுதியின் மையமாய் திகழ இப்போதே மிகப்பெரிய திட்டத்தோடு மாபெரும் புத்தம் புது விமான நிலைய பணிகளை தொடக்கியிருக்கிறார்கள்.
New Doha International Airport (NDIA) எனப்படும் இந்த மெகா புராஜெக்ட் 2004-ல் துவக்கப்பட்டது.2009-ல் முடிவுறும் என எதிற்பார்க்கப்படுகின்றது.22 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன் உருவாகும் இவ்விமான நிலையம் முடிவுறும்போது ஏறக்குறைய தோஹா நகரின் மூன்றில் இரண்டு பங்கு பெரிதாய் இருக்கும்.2009-ல் 24 மில்லியன் பயணிகளை தாங்கும்
சக்திகொண்டதாயிருக்குமாம்.இவ்வெண்ணிக்கை தோஹா நகரின் மக்கள்தொகையை விட 30 மடங்கு அதிகம்.ஒரு மணிநேரத்தில் 8700 பயணிகளை பறந்து விடலாம்.கடல் அலை வடிவில் அமையும் மிகப்பெரிய புதிய பயணிகள் முனையம் 50 கால்பந்து மைதான அளவாயிருக்குமாம். முதல் கட்டமாக 2.5 பில்லியன் டாலர்களும், அடுத்த இரண்டு கட்ட பணிகளுக்கு 5 பில்லியன் டாலர்களும் பட்ஜெட் போட்டிருக்கிறார்கள்.2015-ல் 50 மில்லியன் பயணிகளையும் 2 மில்லியன் டன் சரக்குகளையும் 320000 விமான வருகைகளையும் இவ்விமான நிலையம் தாங்குமாம்.
விமானத்தில் பறத்தல் இனி பஸ் பயணம் போலாக போகின்றது.மையத்தில் இருக்கும் மதுரை 24 மணிநேரமும் பிஸி.அது போல் மத்திய நாடுகள் அதிக உலகளாவிய விமான பாதைகளை இணைக்கலாம்.விலை மலிவு பெட்ரோல் கூடுதல் சவுகர்யம். எல்லோரும் எதற்கோ தயாராகிறார்கள்.
கீழே சில கண்ணைகவரும் எதிற்கால தோஹா விமானநிலையம் படங்கள்















Download this post as PDF
Posted by
PKP
at
2/08/2007 01:14:00 PM
0
comments
Labels: Gulf






