உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Tuesday, May 22, 2007

அரசியல் பாதி! காரியம் பாதி!!

2006-ஆம் ஆண்டுக்கான நியூயார்க் டைம்ஸின் சிறந்த தொழிலதிபர் விருது துபாய் பிரதமர் மக்துமுக்கு (Sheikh Mohammed bin Rashid al-Maktoum) கிடைத்திருக்கின்றது. அரசியல்வாதியான ஒரு ஆட்சியாளருக்கு தொழிலதிபர் விருதா?.மக்துமின் பதில் " I would say I am primarily involved in the politics of business" என்கிறார். கட்டாந்தரை பாலைவனம் பூத்து குலுங்க அசாதாரண தொலைநோக்கு பார்வை நிச்சயம் தேவையே. அதையெல்லாம் நெஞ்சில் நிறுத்திக்கொண்டு இன்று உலகத்தையே திருப்பி பார்க்க வைத்திருக்கின்றது அவரது உத்திகள்.துபாயிலிருந்து வரும் பற்பல ஆச்சர்ய அறிவிப்புகளில் நேற்று வந்த அறிவிப்பு மிக ஆச்சர்யபடுத்துவதாக அமைந்தது.அதாவது சுழலும் கட்டிடம் கட்டபோகின்றார்களாம். இஸ்ரேலிய (கவனிக்க... இஸ்ரேலிய தான்) இத்தாலிய கட்டிட வல்லுர்கள் Dynamic Architecture எனும் தொழில் நுட்ப அடிப்படையில் ஒவ்வொரு மாடியும் தனித்தனியே 360 டிகிரி சுழலும் வகையில் ஒரு அடுக்குமாடி கட்டடம் கட்டப்படுமாம்.(Individually Rotating Floors).அதாவது பெல்லி டான்ஸர் போல ஆடிக்கொண்டேயிருக்குமாம்.68 மாடிகளுடன் $350 மில்லியன் டாலரில் கட்டப்படும் இந்த கட்டிடத்தை உங்கள் குரல் கொண்டே இயக்கலாமாம்.காலையில் சூரியோதயம் பார்க்க கிழக்கில் உங்கள் பிளாட்டை திருப்பிக்கொள்ளலாம்.மாலையில் அஸ்தமனம் பார்க்க உங்கள் அப்பார்ட்மென்டை மேற்க்கில் சுழற்றிகொள்ளலாம். அதற்கான மின்சாரம் காற்றாடிகள் வழி உருவாக்கப்படும் என்கின்றார்கள். இதற்கெல்லாம் மூளை 58 வயது David Fisher என்பவர் தான்.இதுவரை இவர் ஒரு அடுக்குமாடி கூட கட்டியதில்லை.This is the future,One building — endless shapes."என்கிறார் அவர் மிக நம்பிக்கையாக. சிலரோ 'He's nuts' என்கிறார்கள்.

பிற துபாய் மெகா புராஜெக்ட் படங்கள் கீழே
Burj Dubai
Palm Island
Dubai Marina
Dubai Sports City
Dubai Waterfront
Dubailand Ski Dome
Golden Dome
Hydropolis
Madinat Al Arab
Old Town
Space Science World
The World


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



1 comment:

நண்பன் said...

நல்ல மனசுடன் எதை செய்ய நினைத்தாலும் அது நிறைவேறி விடும் .
Do you think it will be fulfilled with a good heart.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்