உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, May 31, 2007

மைக்ரோசாப்ட் ராக்ஸ்

சில வருடங்களுக்கு முன் டேப்ளட் பிஸி (Tablet PC) என்று ஒரு கைகணிணியை அறிமுகப்படுத்திய மைக்ரோசாப்ட் இப்போது Microsoft Surface எனும் பெயரில் புதுசாய் ஒரு டேபிள் பிஸியை (Table PC - Surface Computer ) பல பளாபளா சமாசாரங்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. பார்க்க சிறு மேஜை போலுள்ள இக்கணிணியின் மேற்பரப்பிலுள்ள 30 இஞ்ச் வண்ணப் பரப்பில் தான் பயனராகிய நம்மின் மொத்த விளையாட்டுகளும்.No keyboard No mouse. விரல்களாலும் கைகளாலும் இந்த மேற்பரப்பில் நளினமாய் டிஜிட்டல் பொருள்களுடன் உண்மையாய் விளையாடலாம். வண்ணமடிக்கலாம். மேஜைபரப்பிலுள்ள டிஜிட்டல் பொருள்களை கைகளால் நகர்த்தலாம். இன்னும் பலப்பல புரியலாம்.கீழ்காணும் வீடியோவை சொடுக்கி பில்கேட்ஸ் காட்டும் டெமோவைப் பாருங்கள்.ஓரளவு புரியும்.மொத்தமாய் புரிய இந்த வருட முடிவுவரை காத்திருக்க வேண்டும்.அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பொது இடங்கள் பலவற்றில் இவற்றின் ஆக்கிரமிப்பு அதிகமாய் இருக்கும் என்று தோன்றுகின்றது. விர்சுவல் ரியாலிட்டியின் கதவை மெதுமெதுவாய் திறந்து கொண்டிருக்கின்றோம்.மனிதனின் உணர்வுகளை கணிணியின் செயல்பாடுகளோடு இணைக்கும் இந்த அற்புத "மைக்ரோசாப்ட் சர்பேஸ்" புராஜெக்டில் நம்மூர்கார அம்மணி ஒருவரும் ஆராய்சியாளராக இருக்கின்றாராம்.படத்திலுள்ள சென்னையை சேர்ந்த அனுஷா சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை முடித்து விட்டு பின் "அடையார் டைம்ஸில்" வேலைபார்த்தவராம். புதுயுக கணிணி வடிவமைப்பில் நம்மூர் பெண்ணின் ஈடுபாடு நமக்கெல்லாம் பெருமை.

Product Home Page
http://www.microsoft.com/surface/


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்