பாதுகாப்பான பிரதேசம் என்று ஒன்று எங்குமே இல்லை போலும். இதற்கு இணையமும் விதிவிலக்கல்ல. கடந்த வருடம் மட்டும் இணையத்தில் ஏமாற்றப்பட்டு இழக்கப்பட்ட பணம் 198 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.இது கணக்குக்கு வந்த மட்டும்.கணக்கில் வராமல் எத்தனை மில்லியன்களோ?.இதில் 45 சதவீதம் Internet auction fraud எனப்படும் ஆன்லைன் ஏலத்தில் ஏப்பமிடப்பட்டவையாம். மீதம் 19 சதவீதம் ஆன்லைனில் மக்கள் ஆர்டர் செய்து சரக்கு வந்துசேராமல் ஏமாற்றப்பட்டோர் பணம். இது தவிர செக், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பிராடுகள் அடுத்து அடுத்து வருகின்றன.இன்னும் புகழ்பெற்ற நைஜீரியா ஈமெயிலுக்கு ஏமாறுவோர் ஏராளம் இருக்கின்றார்களாம்.
McAfee-ன் SiteAdvisor சில சுவாரஸ்ய தகவல்களை சமீபத்தில் வெளியிட்டிருக்கின்றார்கள்.
இப்போதைக்கு .info தளங்கள் மிக அபாயகரமானவையாம்..info தளங்களில் 8 சதவீத டொமைன்கள் அபாயகரமானவை என்கிறார்கள்.
நாடுகள் பெயரிலுள்ள தளாங்களில் (eg:India .in) கீழ் கண்ட டொமைன் பெயர்கள் கொண்ட தளங்கள் அதிகம் ரிஸ்க் கொண்டவை என்கின்றார்கள்.
Romania (.ro) with 5.6 percent risky sites
Russia (.ru) with 4.5 percent risky sites.
Sao Tome/Principe (.st) 19 percent risky sites.
Tokelau (.tk) 10 percent risky sites.
Turks and Caicos (.tc) 10 percent risky sites.
South Georgia/South Sandwich Islands (.gs) 9 percent risky sites.
பின்லாந்து,நார்வே,ஸ்வீடன், ஐஸ்லாந்து மற்றும் அயர்லாந்து தளங்களை பாதுகாப்பான தளங்கள் என நம்பி புகலாம் என்கின்றார்கள்.
மற்றபடி அமெரிக்க அரசின் டொமைன் .gov டொமைன்களில் மட்டும் தான் எந்த அபாயமும் இதுவரை கண்டறியபட்டதில்லையாம்
Samoa (.ws), .biz, Bulgaria (.bg) போன்ற டொமைன்களிலிருந்து மென்பொருள் இறக்கம் செய்யும் 10 ல் ஒருவர் அபாயத்தில் மாட்டிக்கொள்கின்றனராம்.கவனம் தேவைதாம்.
.info ( 73.2 percent),Russia (22 percent),South Korea (20 percent) தளங்களில் தவறியும் உங்கள் மெயில் ஐடி கொடுத்துவிடாதீர்.ஸ்பாம் எனப்படும் குப்பை மின்னஞ்சல்கள் உங்கள் அஞ்சல் பெட்டியை நிரப்புமாம்.
ஆக .ws சைட்களில் டவுன்லோட் செய்வோரும் .info சைட்களில் மெயில் ஐடி கொடுப்போரும் சிக்கலில் மாட்டுவார் என்பது சத்தியமாம்.
Download this post as PDF
No comments:
Post a Comment