இதுவரை Windows Longhorn என்று பட்டபெயரிட்டு அழைக்கப்பட்டு வந்த வரவிருக்கும் மைக்ரோசாப்டின் புதிய செர்வர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு இப்போது Windows Server 2008 என்று பெயரிட்டிருக்கிறார்கள். இது முந்தைய வெளியீடான Windows Server 2003-ன் வாரிசாக அமையும். ஏற்கனவே மைக்ரோசாப்டின் பயனர் முனை செயலியான Windows XP-யின் வாரிசாய் Windows Vista சமீபத்தில் வெளியிடப்பட்டது நினைவிருக்கலாம். குறுகிய காலத்திலேயே 40 மில்லியன் பிரதிகள் விற்று அது புதிய சாதனை படைத்தது. பெரிசு பில் அமைதியாய் உட்கார்ந்து காசுகளை மேலும் மேலும் குவித்துக்கொண்டிருக்கின்றார்.
Windows Server 2003 Product Home Page
http://www.microsoft.com/technet/windowsserver/2008/default.mspx
அப்படியே தான் கட்டிய உச்சடெக் மாளிகையின் விலைமதிப்பை அறிய பில்கேட்ஸ்-க்கு ஆசை.Zillow.com எனும் புகழ் பெற்ற வலைபக்கம் போய் தன் வீட்டு விலாசத்தை கொடுத்து அதன் விலையை கணக்கிட்டு பார்த்தாராம். 135 மில்லியன் டாலர்கள் என அது காட்ட பில்லுக்கு ஏமாற்றம்.இந்த விலைக்கெல்லாம் விற்க இப்போது அவர் தயாரில்லையாம்.Zillow இன்னும் அறிவுப்பூர்வமாய் விலை கணக்கிட கற்க வேண்டும்னு சொல்லிட்டு ஆள் ஒரே ஜூட்.
நீங்களும் இங்கே கிளிக்கி அவர் வீட்டு விலை மதிப்பை பார்க்கலாம்.
http://www.zillow.com/HomeDetails.htm?zprop=49118839
பில்கேட்ஸின் மெடினா மான்சன் (Medina mansion) எனப்படும் 50,000 சதுர அடி மாளிகையின் படங்கள் கீழே
Download this post as PDF
No comments:
Post a Comment