பிரேசில்,ரஷ்யா,இந்தியா மற்றும் சீனா நாடுகளின் முதலெழுத்துக்களின் கூட்டே BRIC.இவை பொருளாதார வல்லுனர்களால் BRIC நாடுகள் எனப்படுகின்றன. இவற்றின் தலைஎழுத்துகள் 2050-ல் பெரிதாய் மாறியிருக்கும் என்பது பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பு. உலகின் பாதிக்கு மேற்ப்பட்ட மக்கள்தொகை இந்நாடுகளுக்குள் அடங்கி விடுகின்றன.மக்கள்தொகை பெருக்கம் பற்றி யாரோ கவலைப்பட்டு ஜவகர்லால் நேருவிடம் பேச "ஏன் பிறக்கும் குழந்தைகள் ஒவ்வொன்றும் இரண்டு கைகளோடு தானே பிறக்கின்றன" என பதிலளித்தாராம்.மக்கள் செல்வம் BRIC தேரை இழுத்துசெல்கின்றன.கிடு கிடு வென முன்னேறும் சீனாவின் உற்பத்தி துறை,இந்தியா,பிரேசிலின் சேவைத் துறை,ரஷ்யாவின் எண்ணை வளம் இவை BRIC நாடுகளை பிரகாசமான 2050-க்கு இழுத்து செல்கின்றதாம்.சீனாவின் கடந்த வருட பொருளாதா வளர்ச்சி எண்கள் இவற்றை தெளிவாய் காட்டுகின்றது.
இன்னொரு புறம் இந்திய ருபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கெதிரே பலமாகி கொண்டு வருவது இந்தியாவில் வசிக்கும் சுப்பனையும்.வெளிநாடு வாழ் குப்பனையும் வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கின்றது.அதாவது சில மாதங்களுக்கு முன் வரை திருப்பூரிலிருந்து சுப்பன் 1 டாலர் டி சர்ட்டை ஏற்றுமதி செய்தால் அவனுக்கு 48 ரூபாய் கிடைத்தது.இப்போது 41 ரூபாய்தான் கிடைக்கின்றது.இது கோடிக்கணக்கில் வியாபாரம் செய்யும் பெரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
வெளி நாட்டில் பணிபுரியும் குப்பனின் கதையும் இதுவே.முன் 1 டாலர் சம்பளம் அதாவது 48 ரூபாய் கிடைத்தது.இப்போது 1 டாலர் சம்பளம் அதாவது 41 ரூபாய் தான் சம்பளம் கிடைக்கின்றது. எங்கிருந்தாலும்,எது நடந்தாலும் அடிபடுவது நாம் தான்.இது போன்ற சிக்கலை தடுக்க சீனா தன் கரன்சி மதிப்பை சிக்கென மாற்றாமல் ஒரே மதிப்பாய் வைத்திருக்கின்றார்கள் என யாரோ சொன்னார்கள்.அதை கண்டு அமெரிக்கா போன்ற நாடுகள் குதிக்கின்றனவாம்.ஏதோ என்னவோ 2050 கனவில் BRIC நாடுகள்.நமது இரண்டு பொருளாதார மேதைகளின் கணக்கும் என்னவோ?
Download this post as PDF
No comments:
Post a Comment