துபாயில் பிரமாண்டமாய் கட்டப்பட்டுவரும் "The Dubai Mall" Shopping Center அது 2008-ல் கட்டப்பட்டு முடியும் போது உலகின் மாபெரும் ஷாப்பிங் மாலாக அமையும்.560,000 சதுரமீட்டர் பரப்பளவுள்ள இம்மாலில் 360,000 சரதுர மீட்டர்கள் வாடகைக்கு விடப்படுமாம். 1400க்கும் அதிகமான உயர்தர கடைகள் பளாபளாவென அமைக்கப்படும்.கூடவே இம்மால் உலகின் மிகப்பெரிய தங்க கடைகள் சதுக்கம் கொண்டதாகவும் (World's largest gold souk) மற்றும் உலகின் மிகப்பெரிய அக்வேரியம் (World's largest aquarium) கொண்டதாகவும் அமையும்.ஏற்க்கனவே துபாயில் கட்டப்பட்டு வரும் உலகின் மிக உயரமான கட்டிடத்தை இங்கிருந்து அழகாக தெளிவாக பார்க்கலாமாம்.அதற்கான வசதியும் செய்யப்பட்டுவருகின்றது. 16,000 கார்களை பார்க் செய்யும் வசதியுடன் கட்டப்பட்டுவரும் இம்மாலுக்காக ஆகும் செலவு 720 மில்லியன் டாலர்கள்.இந்தியா,பாகிஸ்தான்,இலங்கை, மற்றும் பங்களாதேசிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் கையாள்களுக்கு தினசம்பளம் 180 ரூபாய்கள்.
துபாய் ஷாப்பிங் மால் படங்கள்
Download this post as PDF
No comments:
Post a Comment