கடந்த 30 வருடங்களாக விண்டோஸோடு போட்டி போட்டு பளாபளா மாக்கின்டாஷ்-ஐயே பெருமையாக காட்டி தன்னை ஓட்டி வந்த Apple Computer, Inc-க்கு இப்போதெல்லாம் சோறு போடுவது ஐபாட் (iPod) போன்ற கையடக்க பந்தா கருவிகள் தான். அந்த வரிசையில் இப்போது ஐ-போன் (iPhone) மற்றும் ஆப்பிள்-டிவி (Apple TV) யும் அடக்கம்.எனவே தானோ என்னவோ இந்த ஜனவரியில் தன் பெயரை Apple Computer, Inc -யிலிருந்து Apple, Inc-க்கு மாற்றிவிட்டது.அதாவது கம்யூட்டருக்கு கல்தா. :)
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்-க்கு (Steve Jobs) ஆப்பிள் கனியென்றால் ரொம்ப விருப்பமாம்.கம்பனி தொடங்கிய மூன்று மாதத்தில் பெயர் பதிவு செய்ய அவசரம் வந்தபோது கூட பணிபுரியும் நண்பர்களிடம் ஒரு நல்ல பெயர் சொல்ல ஆலோசனை கேட்டார்.மாலை 5 மணிக்குள் ஒரு நல்ல பெயரை தராவிட்டால் தன் கம்பெனிக்கு தன் விருப்பப் பழமான ஆப்பிளின் பெயரையே வைத்து விடுவேன் என மிரட்டினார்.ஒருவரும் பெயர் தராததால் Apple Computer, Inc உருவானது.அந்த கால கம்யூட்டர் வகைகளான IBM, NEC, DEC, ADPAC, Cincom, Dylakor, IntegralSystems, PSDI, Syncsort,Tesseract போலல்லாது எளிய பெயராய் அப்பெயர் அமைந்தது நல்ல வரவேற்பை பெற்றது.அது இப்போது கம்ப்யூட்டரை விட்டொழித்து ஜஸ்ட் Apple, Inc. ஆயாயிற்று.ஆப்பிள் நிறுவனத்தின் பிரபல "Macintosh" எனும் பெயர் அமெரிக்காவில் மிக பிரபலமான ஒருவகை ஆப்பிள் கனியின் பெயராம்.
இப்போதைக்கு உலக அளவில் டாப் பிராண்டுகளில் இரண்டாவது இடம் ஆப்பிளுக்கு,முதலிடம் கூகிள்.
Download this post as PDF
No comments:
Post a Comment