உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Friday, March 09, 2007

மூன்று ஆண்டுகள்அப்படி இப்படியாய் இந்த வலைப்பதிவை (http://pkp.blogspot.com) துவக்கி இன்று மூன்று ஆண்டுகள் ஆயாயிற்று.பெரிதும் மகிழ்ச்சி.

"தமிழ் கலாசுகிறது" என்கிற தலைப்பில் எனது முதல் பதிவை மார்ச் 09 2004 -ல் எழுத துவக்கியிருந்தேன்.அந்த பதிவில் "ஆரோக்கியமான இந்த போக்கு கடைசிவரை தொடரவேண்டும் என கடவுளை பிரார்தித்து கொள்வோம்.(குடுமிபிடி சண்டை போட யாராவது வந்துவிடபோகிறார்கள்)" என்று முடித்திருந்தேன்.தமிழ் வலைப்பதிவு உலகில் வாழ்ந்தோருக்கு தெரியும். அநேக ஏற்ற இறக்கங்கள்.வந்தோர் போனோர்கள்.உற்சாகமும் நம்பிக்கையும் வித்திடப்பட்ட அதே வேளையில் விடமும் அழுக்கும் ஆங்காங்கே.பல்வகை முகங்கள்.எங்கு சென்றிடினும் அதானே உலகு.அதுதான் அழகுமோ?

"ப்ரியமுடன் கேபி" வலைப்பதிவை பொறுத்தவரை கடந்த சில காலமாக ஓரளவு ரெகுலராக வலைப்பதியமுடிந்தது.தட்டி கொடுத்த நண்பர்கள் சிலர்.
சத்தமின்றி தள்ளி நின்று பார்த்து விட்டு செல்வோர் அநேகர்.இருசாராரும் பெரிதாய் உற்சாகமூட்டுகின்றனர்,ஊக்கமளிக்கின்றனர்.

கடந்த வருடத்தில் நாளிதழ் தினமலர் தன்னால் முடிந்த அளவு தமிழ் வலைப்பூக்கள் பொது மக்களை சென்றடைய முயற்சி எடுத்தது.சன் டிவி ஒரு சிறப்பு பார்வை இட்டது.மற்ற படி தமிழ் வலைப்பூக்கள் பொது மக்களை சென்றடைய யார் யார் முயன்றார்கள் தெரியவில்லை.அதுவும் சரி தான்.சரக்கிருந்தால் எவர் உதவியும் தேவை இல்லையோ?.

தமிழ் வலைப்பூக்கள் பற்றிய சில சுவாரசிய தகவல்கள் இங்கே.
http://pkp.blogspot.com/2006/11/blog-post_21.html


இன்னும் ரொம்ப தூரம் போக வேண்டும்.


Email PostDownload this post as PDF

Related Posts by Categories7 comments:

புதுப்பாலம் said...

மூன்றாமாண்டு நிறைவு காணும் தங்கள் வலைத்தலத்திற்கு (பிரியமுடன் கேபி-க்கு) வாழ்த்துக்கள். தொடர்ந்து பல பயனுள்ள தகவல்களை தங்கள் தலத்தில் அள்ளி வழங்குவீர்களென ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்.

அன்புடன்
இஸ்மாயில் கனி

nagoreismail said...

தங்களின் சேவையால் பலமுறை நேரிடையாக பலனடைந்துள்ளேன், தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள், குடுமி பிடி சண்டை போட யாரும் வரவேண்டாம் என்று நானும் பிரார்த்திக்கிறேன் - நாகூர் இஸ்மாயில்

Murthi said...

Dear P.K.P

i am one of the regular visitor to your blog. My congratulations for the compleaion of 3 years in the blog work. Keep it up !!!

Murthi

இரமேஷ் இராமலிங்கம் said...

Dear P.K.P,
Congratulations. I am also a regular visitor to your blog. Its very nice to see your blog. Keep it up.
Anpudan
Ramesh Ramaligam

PKP said...

வந்து வாழ்த்துக்களை மனமாற அள்ளித் தெளித்த அன்பு நெஞ்சங்கள் இஸ்மாயில் கனி,நாகூர் இஸ்மாயில்,மூர்த்தி,இரமேஷ் இராமலிங்கம் அவர்களுக்கு மிக்க நன்றி.

Lets hope the best..

வடுவூர் குமார் said...

மூன்றாம் ஆண்டு நிறைவு- வாழ்த்துக்கள்.

Anonymous said...

பல அரிய தகவல்களை தங்களிடம் காணக்கூடியதாக உள்ளது. வாழ்த்துக்கள். தொடருங்கள் நான் புதிய பதிவர். எங்கிருந்து நல்ல இரிய தகவல்களை பெறுகிறீர்கள்? என்னுடைய தளம் பார்த்தீர்களா? குறைகள் இருந்தால் தாராளமாக கூறுங்கள்.
http://biz-manju.blogspot.com/

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்