உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, March 08, 2007

ஒலிக்கொரு போஸ்

சர்வதேச அளவில் வீடு, தியேட்டர், கார் ஸ்பீக்கர் ஆடியோ உபகரணமென்றால் போஸ் (Bose ) என்ற பெயருக்கு எப்போதுமே தனி மரியாதை உண்டு.இன்றும் பெரும்பாலான அமெரிக்கர்களின் விருப்ப ஆடியோ பிராண்ட் போஸ் தான்.அமெரிக்க நாசாவில், ஆங்காங்கே உயர்ந்து நிற்கும் பெரும் சாப்பல்களில், ஜப்பானின் தேசிய தியேட்டரில்,ஒலிம்பிக் விளையாட்டு களத்தில் என எங்கெல்லாம் தரமான ஒலி வேண்டுமோ அங்கெல்லாம் நீக்கமற நிறைந்திருப்பது போஸ் ஸ்பீக்கர்கள்.

இப்படி பெருமைக்குரிய ஒரு பிராண்டுக்கு சொந்தகாரர் அமெரிக்காவில் பிறந்த ஒரு இந்தியர் என்பதில் நமக்கெல்லாம் பெருமை.1964-ல் Bose Corporation-ஐ நிறுவிய அமர் கோபால் போஸ் (Amar Gopal Bose) -ன் குடும்பம் இந்தியாவின் மேற்கு வங்காளத்திலிருந்து அமெரிக்கா குடிபெயர்ந்தவர்கள்.1950-களில் தான் வாங்கிய ஸ்பீக்கர்களிலெல்லாம் அவ்வளவாய் குரல் தரமின்மையை கண்டு, தானே ஆய்வு செய்து பல பெரும் சாதனைகளை புதுமைகளை ஆடியோ உலகில் கண்டு பிடித்து புகுத்திய போஸ், இன்று மீப்பெரும் நிறுவனமாகி 10000 பேர்கள் கொண்ட நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.எத்திக்கு சென்றினும் புகழ் மணக்க வாழ்தல் மனிதருக்கெல்லாம் சிறப்பன்றோ?.

ஒரு வேளை இரகசியம் இதுவாக இருக்கலாம்.போஸ் சொல்கிறார் "No one ever ever won a chess game by betting on each move. Sometimes you have to move backward to get a step forward"


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



2 comments:

Horseman said...

my dear brother PKP
thanks for the write up about bose
it is very kind of you to keep informing about the indians, i thank you deeply,
may you continue your love for this and keep going ahead of every one.
i respect you
cheers
easwaran
india, bangalore
919945493844

PKP said...

Thanks Easwaran.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்