"உலகச் சந்தையில் அதிகமாய் போனால் 5 கம்யூட்டர்களை விற்கலாம்"
- IBM-ன் சேர்மேன் தாமஸ் வாட்சன் 1943-ல்.
"640K யாருக்கும் போதுமானது"
- 1981-ல் பில்கேட்ஸ்
"பார்க்கப்போனால் எல்லா கணிணியிலும் மனிதன் தான் இன்னும் ஓர் அசாத்திய கணிணி"
- ஜான் எப் கென்னடி
"எதற்காக தனி ஒருவருக்கு அவர் வீட்டில் கணிணி தேவைப்படும் என புரியவில்லை"
- 1977-ல் Digital Equipment Corp தலைவர் கென்னெத் எச் ஆல்சன்
"எதிற்கால கணிணிகளின் எடையானது குறைந்தது ஒன்றரை டன்னாவது இருக்கும்"
-1949 -ல் Popular Mechanics-ன் கணிப்பு
"உண்மை மனிதர் எவரும் பேக்அப் செய்யமாட்டார்.ஒரு பொது ftp server-யில் அப்லோட் செய்து வைப்பர்.மொத்த உலகமும் அதை இறக்கம் செய்து வைத்துக் கொள்ளும்"
- லினக்ஸ் புகழ் லினஸ் டோர்வால்ட்ஸ்
"இந்த துறையில் மட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை.அந்த கால கடிகாரம் வேகத்தில் தான் இந்த கால கடிகாரங்களும் ஓடுகின்றன"
- போர்டு
"நன்கு புரோகிராம் செய்யப்பட்ட கணிணி மனிதகுணத்தை இழந்து நேர்மையாய் வேலை செய்கின்றது"
- அமெரிக்க அறிவியலாளர் Isaac Asimov
"புதிதாய் மனிதனின் DNA-யில் மாற்றங்கள் செய்யாவிடில் சீக்கிரமே கணிணி ரோபாட்டுகள் உலகை ஆளத் தொடங்கிவிடும்"
- பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானி Stephen Hawking
"பாதுகாக்கப்பட்ட கணிணி என்றால் அதில் மின்சாரம் செருகப்பட்டிருக்க கூடாது,பத்திரமாக பூட்டு வைத்து பூட்டப்பட்டிருக்க வேண்டும்,20 அடி ஆழத்தில் ரகசிய இடம் ஒன்றில் புதைத்து வைக்கப் பட்டிருக்க வேண்டும்.ஆனாலும் அது பாதுகாக்கப்பட்ட கணிணியா? தெரியாது."
-Dennis Hughes, Federal Bureau of Investigation
"புதுப் புது தொழில் நுட்பங்கள் வரலாம்.காலப் போக்கில் அவை வேலை இழப்பை ஏற்ப்படுத்துகின்றன என்பதை விட புது வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன என்தே உண்மை"
-முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சர்
"நான் நாலாபுறமும் அலைந்து திரிந்து சிறந்த அறிஞர்களிடம் நன்கு பேசிப் பார்த்து விட்டேன்.இந்த data processing சமாசாரம் ரொம்ப நாளைக்கு நீடிக்க போவதில்லை"
-The editor in charge of business books for Prentice Hall, 1957
"விலை மலிவான,150 பவுண்ட்டே எடை கொண்ட, எல்லா பயன்பாட்டுக்கும் உதவும், நுட்ப விஷயங்கள் ஏதுமின்றி எளிதில் யாராலும் தயாரிக்க படக் கூடிய ஒரே கணிணி - மனிதன்"
-1965-ல் NASA
"கணிணிதுறை வளர்ந்த அதே வளர்ச்சி வீதத்தில் ஆட்டோமொபைல் துறையும் வளர்ந்திருந்தால் இன்றைக்கு ரோல்ஸ்ராய்ஸ் காரின் விலை $100 ஆகவும்,காலன் பெட்ரோலுக்கு ஒரு மில்லியன் மைல்கள் ஓடக்கூடியதாகவும்,வருடம் தோறும் நொறுங்கி,உள்ளோர் அனைவரையும் கொல்வதாயும் இருந்திருக்கும்"
- ("Robert X. Cringely", Computerworld)
"எதிற்காலத்தில் ஆகாயவிமானங்கள் ஒரு விமானி மற்றும் ஒரு நாய் கொண்டு ஓட்டப்படும்.நாயின் பணியானது விமானி எதாவது விமானத்தின் பட்டன்களை தட்டினால் உடனே கடிக்க கூடியதாய் இருக்கும்"
— Scott Adams (author of Dilbert).
Download this post as PDF
No comments:
Post a Comment