1974-ஆம் ஆண்டு டிசம்பர் மாத ஒரு குளிர்கால பொழுது. "ஆலன்" தன் நண்பன் "பில்"லை பார்க்க போய்க் கொண்டிருக்கின்றான். போகும் வழியில்
பத்திரிகையில் ஒரு செய்தி."World's First Microcomputer Kit to Rival Commercial Models." அதாவது வழக்கமான அக்கால விலைமிக்க கணிணிக்களுக்கு மாற்றாக புதிதாக Altair 8080 -னு ஒரு கணிணி வருகிறதென்று.எங்கோ எதுவோ கிளிக்காகின்றது ஆலனுக்கு. ஆவலுடன் ஆர்வமாய் விரைகின்றான் நண்பன் பில்லின் அறைக்கு.இருவருக்கும் ஒன்று மட்டும் புலனாகின்றது. "கணிணிக்கள் வீட்டுத் தெருகோடி வரை வரப்போகின்றன. அவற்றை ஓட்டத் தேவையான மென்பொருள்களுக்கு கிராக்கி வரப்போகின்றது" என்று.
சில நாள் சீரியஸ் சிந்தனைகளுக்கு பிறகு பில் MITS-க்கு ஒரு போன் போடுகின்றான் .(MITS-தான் அந்த Altair 8080-யை உருவாக்கிய நிறுவனம்). தன்னிடம் Altair 8080-ய் ஓட விடக்கூடிய ஒரு மென்பொருள் பெயர் "BASIC" இருக்கிறது என பொய் சொல்கின்றான்.வியந்து போன MITS நிறுவனம் சோதனை ஓட்டம் காட்ட பில்லிடம் கேட்கின்றனர்.இத்தனைக்கும் பில்லோ,ஆலனோ ஒரு வரி கூட அந்த மென் பொருள் எழுதியிருக்கவில்லை. ஜீரம் பிடித்து கொண்டது. சொன்ன சொல்லை காப்பாற்ற மும்முரமாய் கோடு எழுதும் பணியில் குதித்தனர் நண்பர்கள் இருவரும். பெரும்பாலான கோடுகளை பில் எழுத ஆலன் அதை Altair 8080-ல் ஓட்டினால் எப்படி இருக்கும் என PDP-10-ல் (இன்னொரு பழைய கணிணி மாடல்) சோதனை செய்து கொண்டிருந்தான். எட்டு வாரங்கள் கழிந்தன.நாளும் வந்தது.MITS நிறுவனத்துக்கு சோதனை ஓட்டம் காட்டியாக வேண்டும்.இன்றுவரை ஆலன் ஒரு Altair 8080-யை கூட தொட்டுப் பார்த்ததில்லை. ஆனால் எழுதப்பட்ட புரோகிராம்கள் மிக வெற்றிகரமாக Altair 8080-ல் ஓடியது. நண்பர்களுக்கு மகிழ்ச்சி தாழவில்லை.மென்பொருள்களுக்கான சந்தை ஒன்று புதிதாக உலகில் உருவாவது பில்லுக்கு தெளிவாக தெரிந்தது. Harvard பல்கலைகழகத்துக்கு கல்தா.மைக்ரோசாப்டும் பிறந்தது. (அன்று அந்த சோதனை ஓட்டம் தோல்லியுற்றிருந்தால் Microsoft உருவாகாமலே போயிருந்திருக்கும்)
இன்று பில் கேட்ஸ் 56 பில்லியனுக்கு சொந்தகாரர்.தொடர்ந்து 13 ஆண்டுகளாக உலகின் முதல் பணக்காரர்.
பால் ஆலன் 18 பில்லியனுக்கு சொந்தகாரர்.
இருவருமே காலேஜ் dropout-கள்.
அட்டையை வைத்து புத்தகத்தை எடை போடக்கூடாதென சும்மாவா சொன்னார்கள்
படத்தில் கீழ்வரிசையில் இடதுஓரம் பில்கேட்ஸ் வலதுஓரம் பால் ஆலன்
(MITS-Micro Instrumentation and Telemetry Systems)
Download this post as PDF
No comments:
Post a Comment