உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Tuesday, March 13, 2007

கண்ணுக்குள் "சினிமா"EZGEAR - EZVISION VIDEO EYEWEAR VIDEO IPOD/PHOTO IPOD


கிராமபுர சினிமா கொட்டகைகள்..., அப்புறமாய் நகர்புர உச்ச நுட்ப தியேட்டர்கள்..., இன்று வீட்டுக்கு வீடு ஹோம் தியேட்டர்கள்..., அதையும் தாண்டி இப்போது புதிதாய் கண்ணுக்குள் "சினிமா" அதாவது Video Eyewear or iWear எனப்படும் Personal Virtual Theater-கள்.கண்ணில் மூக்கு கண்ணாடி போடுவது போல் இந்த கையடக்க கருவியை கண்ணில் அணிந்து விட்டால் அக்கம் பக்கம் யாரையும் தொல்லைபண்ணாமல் பெரும் ஸ்கிரீனில் படம் பார்ப்பது போல் படம் பார்க்கலாம்,பாட்டு பார்க்கலாம்,கேட்கலாம், அட வீடியோ கேம் கூட ஆடலாம்.இந்த video goggle-வுடன் ஒரு ஹெட் போனும் ஒரு Video Player-ம் (like DVD player or Video iPod) தேவை.Icuiti, ezVision, myvu போன்ற பிராண்டுகள் மார்கெட்டில் கிடக்கின்றன.இனிமேல் இந்த மாதிரி video glasse -களை அணிந்து பயணிக்கும் பயணிகளை ஆங்காங்கே பார்க்கலாம்.கற்பனைக் குதிரையை மனம் போல ஓட விட்டால் சிந்தையில் தோன்றும் சில பொய் கருவிகள் கூட பெரும்பாலும் நிஜத்தில் சந்தையில் இருப்பது ஆச்சயத்திலும் ஆச்சர்யம்.

EZGEAR - EZVISION VIDEO EYEWEAR VIDEO IPOD/PHOTO IPOD


Email PostDownload this post as PDF

Related Posts by CategoriesNo comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்