முன்பு வலைப்பூக்கள் எனப்பட்டு இப்போது வலைப்பதிவுகள் எனப்படும் தமிழ் பிளாகுகள் (Tamil Blogs) பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இங்கே பார்க்கலாம்.
உலகின் முதல் தமிழ் வலைப்பதிவு "நவன்"னோடது.அவர் முதல் தமிழ் பதிவு பதித்த நாள் 16 ஜனவரி வியாழன் 2003.ஆக முதல் தமிழ் வலைப்பதிவாளார் நவன்.இவரின் முதல் பதிவு 29 டிசம்பர் ஞாயிறு 2002.இது தான் அதன் அடக்கம் "Hello world !At last set up blogging."
முதல் தமிழ் வலைபதிவு பின்னூட்டமிட்டவர் (comment) இராசன்.இவர் பின்னூட்டமிட்ட நாள் ஜூன் 5th, 2003 at 6:36 am பின்னூட்டமிட்ட வார்த்தை "வணக்கம்"
முதல் பெண் தமிழ் வலைப்பதிவாளர்-துளசி கோபால் செப்டம்பர் 2004 முதல் வலைபதித்துள்ளார். (போட்டிக்கு யாராவது இருந்தால் தயவு செய்து பின்னூட்டமிடவும் :) )
http://www.blogger.com/profile/4714811
(UPDATED :முதல் பெண் தமிழ் வலை பதிவர் யார் என்ற போட்டியில் முந்துவது மதி கந்தசாமி On Blogger Since May 2003- அப்புறமாய் சந்திரவதனா On Blogger Since July 2003)
முதல் தமிழ்பதிவுகள் திரட்டி
தமிழ்மணம் 05-Jan-2004
நிறுவியவர் காசிலிங்கம் http://kasilingam.com/about.php
அதிக இடுகைகள் கொண்ட வலைபதிவு
pkp.blogspot.com 240 :)
(யாரென்று தெரியவில்லை.எனது பதிவுகளின் எண்ணிக்கை 240.இதைவிட அதிகம் கொண்ட பதிவாளர் இங்கே என்னை நீக்கம் செய்யலாம்.தயவு செய்து பின்னூட்டமிடவும்.உங்கள் இடுகைகளின் எண்ணிகையோடு)
நீளமான பெயர் வலைபதிவு
dhinamum-ennai-kavani.blogspot.com (போட்டிக்கு யாராவது இருந்தால் தயவு செய்து பின்னூட்டமிடவும் :) )
குறுகிய பெயர் வலைபதிவு
pkp.blogspot.com (போட்டிக்கு யாராவது இருந்தால் தயவு செய்து பின்னூட்டமிடவும் :) )
இளவயது தமிழ் வலைபதிவாளர்
நிச்சயமாய் நான் இல்லை இளையோர் யாராயிருந்தாலும் இவ்விடத்தை நிரப்பலாம்.தயவு செய்து பின்னூட்டமிடவும்
மூத்தவயது தமிழ் வலைபதிவாளர்
டோண்டு-சாராக இருக்கலாம் வயது 60 என்கிறது அவர் profile
இவரை விட மூத்தோர் யாராயிருந்தாலும் இவ்விடத்தை நிரப்பலாம்.தயவு செய்து பின்னூட்டமிடவும்.
(UPDATED:மூத்தவயது தமிழ் வலை பதிவர் யார் என்ற போட்டி வரிசையில் சிவஞானம் மற்றும் பெருசு உள்ளனர்.யார் முந்துவது என உறுதிசெய்ய இயலவில்லை)
தமிழ்மணம் கணக்குபடி மொத்த தமிழ் வலை பதிவுகள்: 1491
கடந்த ஒரு மாதத்தில் எழுதப்பட்ட இடுகைகள்: 3395
கடந்த ஒரு வாரத்தில் எழுதப்பட்ட இடுகைகள்: 822
கடந்த 24 மணி நேரத்தில் எழுதப்பட்ட இடுகைகள்: 153
ஒரு நாளில் சராசரியாக எழுதப்படும் இடுகைகள்: 113 அதாவது ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒரு இடுகை
ஒரு நாளில் சராசரியாக இடப்படும் பின்னூட்டங்கள்: 1004 அதாவது ஒவ்வொரு இரண்டு நிமிடமும் மூன்று பின்னூட்டங்கள் இடப்படுகின்றன
தேன்கூடு கணக்குபடி அதிக தமிழ் வலைப்பதிவாளர்கள் வாழுமிடங்கள்
1.இந்தியா 487
2.அமெரிக்கா 68
3.சிங்கப்பூர் 23
4.கனடா 18
(படம் காசி மற்றும் நவன்)
Please have a look of updated version of this log here.
Interesting facts about Worlds First Tamil blogs and Tamil bloggers
Download this post as PDF
14 comments:
//மூத்தவயது தமிழ் வலைபதிவாளர்
டோண்டு-சாராக இருக்கலாம் வயது 60 என்கிறது அவர் profile
இவரை விட மூத்தோர் யாராயிருந்தாலும் இவ்விடத்தை நிரப்பலாம்.தயவு செய்து பின்னூட்டமிடவும்.//
அது பெருசு ஆகிய நான் மட்டுமே என்று தறபெருமை இல்லாமல்
கர்வத்துடன் கூடிய தன்னடக்கத்துடன் கூறிக் கொள்கிறேன்.
புள்ளி விவரங்களுக்குப் பாராட்டுக்கள்
தமிழுக்குத் தமிழ் மனம் திரட்டியாகச் செயல் படுவதுபோல ஆங்கிலத்தில் எழுதப்படும் பிளாக்குகளுக்குப் பிரபலமான வலைத்திரட்டி எது என்றும், மற்றுமுள்ள வலைத்திரட்டிகளின் விவரததையும் எங்காவது தேடிப்பிடித்துக் கொடுத்தீர்களென்றால் பயனுள்ளதாக இருக்கும்
அன்புடன்
SP.VR.Subbiah
சுவாரசியமான தகவல்கள்தான்.
மூத்த வலைஞர்: சிவஞானம்ஜி ( எனக்குத் தெரிஞ்சவரையிலும்)
அதிக இடுகைகள் : சரிவரத்தெரியவில்லை.
ஆனால்...
துளசி கோபால்: 474 இன்றுவரை
இடுகைகள்னா பதிவுகள் தானே?
ரொம்ப பேர் 300 பதிவுக்கும் மேல போட்டவங்க இருக்காங்க.
என்னுடைய mayavarathaan.blogspot.com இப்போ 394-ல் இருக்கிறது.
வயதில் குறைந்தவர்; அஞ்சலி (7) என்று நோர்வேயில் இருந்து,எழுதுபவராக இருக்கலாம்.
சுவையான தகவல்கள் தான்!!
யோகன் பாரிஸ்
PKP,
when you have enough time do drop in at
http://tamilblogs.blogspot.com - started it sometime in june first or second week 2003.
i started blogging in may 23, 2003 -
movietalk:
http://mathyk.blogspot.com (moved to movietalk.yarl.net and finally to http://mathy.kandasamy.net/movietalk)
musings:
may 28, 2003
http://mathykandasamy.blogspot.com
(musings.weblogs.us/tamil.weblogs.us) to finally http://mathy.kandasamy.net/musings
started valaippoo july 27, 2003 (the predecessor to thamizmanam natchaththiram) @
http://valaippoo.blogspot.com -> valaippoo.yarl.net
and just for your information, i happen to be a female too.(thulasiyakkaa.. forget me. you seem to have forgotten chandravathana too. hmmm...!)
pkp: i had written about the first tamil bloggers sometime back. maybe at the end of 2003. i forgot. [Navan, Badri, Ramanitharan are all that blog post]
oldest tamil blogger: சிவஞானம்
youngest tamil bloggers
anjali (7 or 8 yrs) and mazhalai (4 or 5 years).
வயதில் குறைந்தவரில் ஒருவர்: தும்பி
சுட்டி இதோ: http://thumpee.blogspot.com/
ஒரே வலைப்பதிவர் அதிக வலைப்பூக்கள் வைத்திருப்பது நம்ம குமரன் தானே?! இல்லை அவரையும் விட அதிகம் வைத்திருக்கும் ஆட்களும் இருக்கிறார்களா?
'மழலை' என்ற ஒருவரும் வலைப் பதிவு வைத்து இருப்பது தெரியும். அவர் அஞ்சலியைவிட வயது குறைந்தவராக இருக்கிறார் என நினைக்கிறேன். அவரது வலைப்பதிவை எப்படி தேடுவதென்று தெரியவில்லை.
(ஒருவேளை முதலில் வலைப் பதிவு தொடங்கிய இளவயது வலைப் பதிவர் அஞ்சலியாக இருக்கலாம்).
வருகை தந்து பின்னூட்டமிட்ட அனத்து நண்பர்களுக்கும் நன்றி.
கிடைக்க பெற்ற தகவல்கள் அடிப்படையில் புதுபதிவு ஒன்று போடுவதாக உத்தேசம்.
மிக்க நன்றி.
PKP,
I am not competing with Navan :-)
though just for the data consider this too.
http://karthikramas.blogdrive.com/archive/cm-01_cy-2003_m-01_d-01_y-2003_o-0.html
karthikramas
Karthikramas,
That is interesting.
Actually I got that detail from ta.wikipedia.org.Probably that information is wrong.
Thanks for your information.
I love the way you go and
I am glad you are from my land.
Dear Sir,
I want help from You.
I want to know, How TAMIL
fonts are use in Blogspot?
Kindly send mail.
Regards,
N.Thiyagarajan
thiyaagu@oneindia.in
ezhisai@gmail.com
suthanthira-ilavasa-menporul.blogspot.com இதை விட பெரிய பெயர் எந்த தமிழ் வலைப்பூவிற்கு இருக்கிறது.
Post a Comment