உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, November 22, 2006

மீள்பதிவு-தமிழ் வலைப்பதிவுகள்-சுவாரஸ்ய தகவல்கள்

"போட்டிக்கு யாராவது இருந்தால் தயவு செய்து பின்னூட்டமிடவும்" என்ற வேண்டுகோளோடு தமிழ் வலைப்பதிவுகள் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை கடந்த பதிவில் தெரிவித்திந்தேன்.வந்த பின்னூட்டங்களின் அடிப்படையில் இங்கே சில தகவல்கள் மாற்றம் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.

மூத்தவயது தமிழ் வலை பதிவர் யார் என்ற போட்டி வரிசையில் சிவஞானம் மற்றும் பெருசு உள்ளனர்.யார் முந்துவது என உறுதிசெய்ய இயலவில்லை

முதல் பெண் தமிழ் வலை பதிவர் யார் என்ற போட்டியில் முந்துவது மதி கந்தசாமி-On Blogger Since May 2003.அப்புறமாய் சந்திரவதனா-On Blogger Since July 2003.

அதிக இடுகைகள் துளசி கோபால்: 474 இன்றுவரை

இளவயது தமிழ் வலைபதிவர்கள்

அஞ்சலி On Blogger Since July 2005
மழலை On Blogger Since February 2006
ஜோனத்தன் 3 மாத வயது

அதிக தமிழ் வலைப்பூக்கள் சொந்தகாரர் குமரன் (ஏறக்குறைய 20 தமிழ் வலைப்பூக்கள்)

கல்லில் செதுக்கப்பட்டாற்போல் இதுபோன்ற பதிவுகளும் என்றென்றும் நீடித்திருக்குமாதலால் தவறான தகவல்கள் இங்கு பொறிக்கப்படக்கூடாது.
திருத்தம் தேவைப்பட்டால் சுட்டிக் காட்டுங்கள்.மகிழ்ச்சியே!!.


Email PostDownload this post as PDF

Related Posts by Categories6 comments:

Ashley said...

Love the blog,and you are doing a great job. Check mine out sometime and sign my guestbook or leave a comment! Have a good one!

குமரன் (Kumaran) said...

துளசி அக்கா பதிவுகள் எண்ணிக்கையை இட்டு நான் இதுவரை எத்தனை பதிவுகள் இட்டிருக்கிறேன் என்று எண்ண வேண்டும் என்று எண்ண வைத்துவிட்டீர்களே. அப்படி எண்ணிப்பார்த்தால் சொல்கிறேன். :-)

எத்தனை வலைப்பூக்கள் இருக்கின்றன என்று எண்ணிப் பார்த்துவிட்டேன். 21 தமிழ் வலைப்பூக்கள் அடியேன் ப்ரொபைலில் இருக்கிறது.

'கல்லில் செதுக்கியதற்கு' நன்றிகள். :-)

Anonymous said...

மேலோட்டமாக வலையை மேய்ந்து தவறான தகவல்களைக்கொடுப்பதே உங்களின் வாடிக்கையாகிவிட்டதுபோலும்.

சந்திரவதனா 28 வலைப்பதிவுகளை வைத்திருக்கிறார் ஐயா. எல்லாம் பெரும்பாலும் வித்தியாசமான கருத்துள்ள தளங்கள்.

துளசி கோபால் said...

ooops...........

போனபதிவில் சொல்ல நினைச்சு விட்டுப்போனது, அதுலே
மதி சொல்லி இருந்ததுதான்.

பெண் பதிவாளர்கள் எத்தனைபேருன்னு எண்ண வெளிக்கிட்டதில் எழுத
மறந்துட்டேன்(-:

அதிகப்பதிவுகள் கூட இன்னும் வேற யாரோ இருக்காங்க. 500க்கு மேலே
வேற யாரோட பேரையோ பார்த்த நினைவு.

PKP said...

Anonymous பெரியவருக்கு!
தயவு செய்து என்னை மன்னியுங்கள்.தவறிழைத்து கற்குது போலும் இந்த இளம் கன்று.அடுத்தமுறை PKP-யை கண்டால் just skip. :)

PKP said...

நன்றி குமரன்!
நன்றி துளசி!!

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்