உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in
Showing posts with label Blogs. Show all posts
Showing posts with label Blogs. Show all posts

Sunday, June 15, 2008

வெப் உலக கின்னஸ் சாதனைகள்

பயர்பாக்ஸ் உலாவி மீது கொண்ட காதலால் நான் ஒன்றும் பயர்பாக்ஸ் பயன்படுத்த தொடங்கவில்லை. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மேல் வந்த வெறுப்பே அது என்னை பயர்பாக்ஸ் பயன்படுத்த வைத்தது. இப்போது அதுவே என் பிரதான பிரவுசராகியும் போனது. ஆயினும் பழைய பாசத்தால் சில சமயம் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்த விழைவேன். போன வேகத்தில் மீண்டும் FF-யிடமே வந்துவிடுவேன். அப்பப்போ கிராஷ் ஆகுதல் ,அதன் ஆமை வேகம் IE மீது வெறுப்படிக்க வைத்து விட்டது. நீங்கள் இணைய உலாவரும் போது கூட அசாதாரண வேகமின்மை அல்லது எந்த error-ம் கொடுக்காமல் வெற்று பக்கத்திலேயே அரைமணி நேரமாய் நிற்றல் போன்ற அறிகுறி தெரிந்தால் ஒரு வேளை அது இணைய இணைப்பு பிரச்சனையாய் இல்லாமல் உங்கள் பிரவுசர் பிரச்சனையாய் இருக்கலாம். பயர்பாக்ஸ்க்கு தாவிவிடுங்கள். FF-யின் வேகம், வகை வகையான இலவச Add-on கள் அதன் ப்ளஸ்கள். அலுவலகத்தில் இப்போதெல்லாம் பயர்பாக்ஸ் ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல் போல் ஆகிவிட்டது. IE பயன்படுத்துபவர்களை பாவம் விவரம் அறியாதவர்களென்றும் FF பயன்படுத்துகிறவர்களை damn smart விவரம் அறிந்தவர்களென்றும் மூளை தானாகவே பகுத்துவிடுகின்றது.

துரதிஷ்டவசமாய் தமிழில் இன்னும் சில வலைப்பக்கங்கள் பயர்பாக்ஸில் ஒழுங்காய் தெரிவதில்லை. அவற்றை படிப்பதற்காக வேண்டியே IE-யை திறக்க வேண்டியுள்ளது. நீங்கள் சொந்தமாய் தமிழில் வலைப்பக்கம் வைத்திருந்தால் தயவுசெய்து அது Firefox browser-யிலும் சரியாய் தெரிகிறதாவென சரிபார்க்கவும். நண்பர் Kricons-ன் blogger template யோசனையையே இங்கும் வழங்குகிறேன். "Firefoxல் அனைவரது வலைபதிவும் நன்றாக தெரிய பதிவை எழுதும் போது text-align justify யை பயன் படுதாமல் இருந்தாலே போதும்."

பயர்பாக்ஸ் உலாவியில் நான் சமீபத்தில் அறியவந்த ஒரு அருமையான Add-on பெயர் Piclens. கூகிள் படங்கள் தேடலில் நமீதாவை நீங்கள் தேடுகின்றீர்கள் என வைத்துக்கொள்வோம்.(updated) அது இணையத்தில் நமீதா படங்களாய் தேடி காட்டும். அந்த படங்களை அட்டகாசமாய் 3D தாக்கத்தில் "ஸ்லைடு ஷோ"போல இறக்கம் செய்யாமலே பார்க்க இந்த Add-on உதவுகின்றது.

நிற்க.
நாளை இந்த நம் அபிமான பயர்பாக்ஸ் ஒரு கின்னஸ் உலக சாதனை செய்யவிருக்கின்றது. 24 மணிநேரத்தில் உலகிலேயே அதிக அளவில் இறக்கம் செய்யப்பட்ட மென்பொருள் என்ற சாதனையை அது செய்ய தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இது வரை உலகெங்கும் 1,247,084 பேர் அந்த புது பயர்பாக்ஸ்3-ஐ ஜூன் 17 அன்று இறக்கம் செய்யப் போவதாக தெரிவித்திருக்கின்றார்கள். இந்தியாவிலிருந்து மட்டும் 22000 பேர் அதை இறக்கம் செய்யப் போவதாக தெரிவித்திருக்கின்றார்கள். நீங்களும் இந்த சாதனையில் பங்கு கொள்ளலாம். நாளை அதாவது ஜூன் 17 அன்று பயர்பாக்ஸின் தளம் www.mozilla.com/firefox/ சென்று புதிய FireFox version 3-யை முழுவதுமாய் இறக்கம் செய்து (no upgrade please) உங்கள் கணிணியில் நிறுவி இச்சாதனையில் பங்கு பெறலாம். மேலும் விவரங்களுக்கு.
http://www.spreadfirefox.com/en-US/worldrecord/

இது போல இன்னொரு உலக சாதனையை செய்ய http://www.internetbigbang.com தயாராகிக்கொண்டிருக்கிறது. அதாவது ஒரே நேரத்தில் அதிகமான நபர்கள் ஆன்லைனில் இருந்த தளம் என்ற பெயரை இது எடுக்கப்போகின்றது. இதுவரை 836 639 பேர் ஒரே நேரத்தில் இத்தளம் வர ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ஜூன் 20-ம் தியதி இச்சாதனை நடத்தப்படவிருக்கின்றது.

இனி இதுமாதிரி நிறைய சுவையான உலக சாதனைகள் இணையத்தில் நடத்தப்படலாம். ஜாலி தான்.


ரமணிச்சந்திரனின் "மயங்குகிறாள் மாது" நாவல் இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Ramani Chandran Mayangkukiraal Maathu Novel in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Wednesday, June 11, 2008

ஆயிரத்தில் ஒருவன்

எங்கிருந்தும் copycat செய்யாமல் நானே யோசித்துபார்த்தேன். வெற்றிகரமான வலைப்பதிவு எழுதுவது எப்படி என்று. எப்படி வாசகர்களை மீண்டும் மீண்டும நம் பக்கம் கொண்டு வரலாம்? வரிசையாக எழுதினேன். அதை உங்களோடு பகிர்ந்துகொள்வதோடு மட்டுமல்லாமல் நானும் அதை பின்பற்றலாமே என முடிவு செய்தேன்.

தினமும் இல்லாவிட்டாலும் குறைந்தது ஒரு குறிப்பிட்ட சுற்றிலாவது அவ்வப்போது பதிவிடல் நல்லது. இப்படி அவ்வப்போது பதிவிடல் நம் வாசகர்களுக்கு மட்டுமல்ல கூகிளுக்கும் ரொம்ப பிடிக்கும். பிறரின் கூகிள் தேடல்களில் நம் பதிவுகளையும் ஆர்வமாய் காண்பிப்பான்.

கவர்ச்சிகரமான தலைப்பிட்டு அழைத்து வந்த வாசகரை நாம் ஒரு முறை ஏமாற்றினால் பின் எப்போதும் எப்படி தலைப்பிட்டாலும் அவர் வரமாட்டார் என்றே தோன்றுகிறது.

காப்பி பேஸ்ட் எதற்கு?. நாலுவரியென்றாலும் நறுக்கென்ற நம் சொந்த வரியாய் அது இருக்கட்டுமே.

நம்பால் விழுந்தோர் வேண்டுமானால் பக்கம் பக்கமாய் படிப்பார்கள். புதிதாய் வருபவர்களை முதல் சில வரிகளிலேயே நம்மை பிடிக்க வைக்க வேண்டும். ஆதலால் என்னைப் பொறுத்தவரை இங்கும் சைஸ் மேட்டர்ஸ்.பெரிசல்ல சிறிசு.

தப்பித்தவறி ஒருமுறை நம் பக்கம் வந்த வாசகருக்கு திருப்தியான தீனி கிடைத்துவிட்டால் மறுமுறை நாம் அழைக்காமலேயே வருவார் என்பது என் நம்பிக்கை. மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்வார். இங்கு தீனி என நான் சொல்வதில் பலவும் அடக்கம். வேறெங்கும் கிடைக்கா வித்தியாசமான சினிமா செய்திகள், நாட்டு நடப்புகள், அரசியல் அலசல்கள், நுட்பங்கள், நகைச்சுவைகள், கட்டுரைகள், சொந்த அனுபவங்கள் முதலான.

ஆனால் முழுக்க முழுக்க நம் படைப்பாய் இருக்க வேண்டும். சினிமா, அரசியல், கிரிக்கெட், வணிகம் சார்ந்த வலைப்பதிவுகளுக்கு பிரகாச எதிர்காலம் இருப்பது போல் தோன்றுகிறது.

வளர்ச்சியை பின்னூட்டங்கள் கொண்டு அளந்தால் சோர்ந்துதான் போவோம். ஒரு முறை வந்தவர் மீண்டும் நம் பதிவை தேடி வந்தால் அதுதான் உண்மையான வளர்ச்சி என்பேன்.

எல்லாரையும் திருப்திபடுத்த முடியாது. எனக்கு தெரிந்ததை, பிடித்ததை மட்டும் எழுத முயலுகிறேன் and ரொம்ப முக்கியமாய் trying to be cool with everybody.

தகவல், கடி, கிசுகிசு, பிடித்ததுவென கண்டதையும் இரு வரி பதிவுகளாய் எழுதிவந்த காலம் அது. தமிழ் வலைப்பதிவின் முன்னோடிகள் தமிழ் வலைப்பதிவுகள் பெருகவேண்டும் என்ற ஒரே நோக்கில் செயல்பட்டார்கள். அந்த காலத்திலேயே அநேக சீரியஸ் பதிவுகள் தமிழில் பல்வேறு துறைகள் பற்றியும் தொழில் நுட்பம் பற்றியும் எழுதப்பட்டன. நானோ ஒன்றுமில்லாதிருந்தேன்.

பாஸ்டன் பாலா அவர்கள் ஒருநாள் "ப்ரியமுடன் பிகேபி நாளை கிசுகிசு சொல்வார்!" என்று முதன்முதலாக தனது வலைப்பதிவு மூலம் என்னை அறிமுகப்படுத்திவைத்தார்.அவருக்கு என் நன்றிகள் எப்போதும் உண்டு.

அப்புறம் வந்த சில பதிவுகளில் முதன் முதலாக ஜே பி இரவிச்சந்திரன் பெங்களூர் அவர்கள் "இந்த லிங்க் என் மகனுக்கு மிக முக்கியமானதாக அமைந்துள்ளது" என பின்னூட்டமிட்டு ஒரு பாஸிட்டிவ் ஜாடை காட்டினார் .இரண்டு நாள் கழித்து முருகபூபதி அவர்கள் "மிகவும் உதவியான சுட்டிகள் நண்பரே. மிக்க நன்றி." என்றார். இவர்கள் இருவரும் இப்போதும் என் பதிவுகளை படிக்கின்றார்களோ இல்லையோ கொஞ்சம் யோசிக்க வைத்துவிட்டவர்கள்.

பயனுள்ள விஷயங்களை சொன்னால், பயனுள்ள விஷயங்களை தந்தால் அது எப்போதுமே தோற்காது என புரிந்தது. முயன்று பார்த்தேன்.

கடந்த இரண்டாம் தியதி I was so.. excited நமது வலைப்பதிவின் feed count முதன் முதலாக 1000 என்ற நான்கிலக்கத்தை எட்டியது.ஆமாம் நீங்கள் அந்த ஆயிரத்தில் ஒருவனாகும். சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு இதேநாள் நமது வலைப்பதிவின் feed count வெறும் 24 தான். இதை நான் எதற்கு சொல்கிறேன் என்றால் மற்ற தமிழ் பதிவர்களுக்கும் இது ஒரு உற்சாக மூட்டலாயிருக்குமே என்றுதான்.

பிராந்திய மொழி வலைப்பதிவுகளின் காலம் தொடங்கிவிட்டது என்றே நினைக்கின்றேன்.

அதுவும் தமிழில் நாம் எக்கசக்கம். போக வேண்டிய தூரம் வெகுதூரமாய் இருந்தாலும் பெருமையாக இருந்தது. இதையெல்லாம் கோபாலிடம் பெருமிதமாக சொல்லிக்கொண்டே வந்தேன். நம்மவர்கள் நடத்தும் "அந்தக்" கடை முன் வண்டியை திடீரென்று நிறுத்தினான். இங்கு பெரும்பாலான "அந்தக்" கடைகளையெல்லாம் நம்மாட்கள் தான் நடத்துகின்றார்கள். பல கேஸ் ஸ்டேஷன்களும், மோட்டல்களும் கூட இந்தியர்களுக்கு சொந்தமானவைதான். பல பாட்டில்களோடும் கேன்பெட்டிகளோடும் கோபால் திரும்ப வந்தான். "என்னடா இது" என்றேன்.
"Knockout" ஆகி ரொம்ப நாளாயிட்டது என்றான்.

கிறிஸ்தவ புத்தகம் "பரலோகமும் பாதாளமும்" இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Paralogamum Paathaalamum Christian book in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Friday, March 09, 2007

மூன்று ஆண்டுகள்



அப்படி இப்படியாய் இந்த வலைப்பதிவை (http://pkp.blogspot.com) துவக்கி இன்று மூன்று ஆண்டுகள் ஆயாயிற்று.பெரிதும் மகிழ்ச்சி.

"தமிழ் கலாசுகிறது" என்கிற தலைப்பில் எனது முதல் பதிவை மார்ச் 09 2004 -ல் எழுத துவக்கியிருந்தேன்.அந்த பதிவில் "ஆரோக்கியமான இந்த போக்கு கடைசிவரை தொடரவேண்டும் என கடவுளை பிரார்தித்து கொள்வோம்.(குடுமிபிடி சண்டை போட யாராவது வந்துவிடபோகிறார்கள்)" என்று முடித்திருந்தேன்.தமிழ் வலைப்பதிவு உலகில் வாழ்ந்தோருக்கு தெரியும். அநேக ஏற்ற இறக்கங்கள்.வந்தோர் போனோர்கள்.உற்சாகமும் நம்பிக்கையும் வித்திடப்பட்ட அதே வேளையில் விடமும் அழுக்கும் ஆங்காங்கே.பல்வகை முகங்கள்.எங்கு சென்றிடினும் அதானே உலகு.அதுதான் அழகுமோ?

"ப்ரியமுடன் கேபி" வலைப்பதிவை பொறுத்தவரை கடந்த சில காலமாக ஓரளவு ரெகுலராக வலைப்பதியமுடிந்தது.தட்டி கொடுத்த நண்பர்கள் சிலர்.
சத்தமின்றி தள்ளி நின்று பார்த்து விட்டு செல்வோர் அநேகர்.இருசாராரும் பெரிதாய் உற்சாகமூட்டுகின்றனர்,ஊக்கமளிக்கின்றனர்.

கடந்த வருடத்தில் நாளிதழ் தினமலர் தன்னால் முடிந்த அளவு தமிழ் வலைப்பூக்கள் பொது மக்களை சென்றடைய முயற்சி எடுத்தது.சன் டிவி ஒரு சிறப்பு பார்வை இட்டது.மற்ற படி தமிழ் வலைப்பூக்கள் பொது மக்களை சென்றடைய யார் யார் முயன்றார்கள் தெரியவில்லை.அதுவும் சரி தான்.சரக்கிருந்தால் எவர் உதவியும் தேவை இல்லையோ?.

தமிழ் வலைப்பூக்கள் பற்றிய சில சுவாரசிய தகவல்கள் இங்கே.
http://pkp.blogspot.com/2006/11/blog-post_21.html


இன்னும் ரொம்ப தூரம் போக வேண்டும்.


Email PostDownload this post as PDF

Wednesday, January 10, 2007

ரூ12 லட்சம் மதிப்புள்ள இட்லிவடை வலைப்பூ

ஒவ்வொரு வலைப்பூக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு டாலர்கள் விலை இருக்கிறது என்கிறார்கள்.உள்வரும் இணைய சுட்டிகள் டிராபிக்குகள் இன்னும் பிறவற்றை கணக்கிட்டு ஒவ்வொரு வலைப்பூக்கும் ஒரு விலை மதிப்பு அளிக்கிறார்கள்.அந்தப்படி தமிழின் டாப் இட்லிவடை வலைப்பூவின் மதிப்பை சோதிட்டதில்
$26,533.38 அதாவது ஏறக்குறைய 12 லட்சம் ரூபாய் வருகிறது.(இட்லிவடையார் மன்னிப்பாராக).
ஆர்வமுள்ளோர் கீழ் கொடுக்கப்பட்ட சுட்டியை சொடுக்கி உங்கள் வலைப்பூவின் விலை மதிப்பை கணக்கிட்டு கொள்ளலாம்.இட்லிவடையை முந்துவோர் யாராவது இருந்தால் தகவல் சொல்லுங்கள்.மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள்.

"Whats your blog worth" கீழே சொடுக்குங்கள்
How Much Is My Blog Worth?

அதிகம் தெரிந்து கொள்ள கீழே சொடுக்குங்கள்
More readings


Email PostDownload this post as PDF

Tuesday, December 19, 2006

சூப்பர் ஹிட் வலைப்பூக்கு வந்த சிக்கல்


உலகின் சூப்பர் ஹிட் வலைப்பூக்களில் (Blog) ஒன்று பெரேஸ் கில்டன் வலைப்பூ.மரியோ லாவன்டிரா (Mario Lavandeira),எனும் இந்த 28 வயது இளைஞரின் இணைய வலைப்பூக்கு படிக்க ஒரு நாளில் வருவோரின் எண்ணிக்கை என்ன தெரியுமா?. 30 லட்சம்.உலக புகழ்பெற்ற ஆங்கில திரை உலகமாகிய ஹாலிவுட் பிரபலங்கள் பற்றிய கிசுகிசுக்கள் மற்றும் சர்ச்சைக்கிடையான படங்களை
வெளியிட்டே இந்த பிளாகு சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த வலைப்பூ முழுக்க முழக்க அவராலேயே எழுதப்படுகிறதாம்.தினமும் சராசரியாய் 25 பதிவுகள் வேறு.ஆனால் ஆள் நன்றாக காசு பண்ணிக்கொண்டிருக்கிறார்.150x200 Pixel விளம்பரம் ஒன்று இவர் வலைப்பூவில் ஒரு வாரம் ஓட விட ஏறக்குறைய 4 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும்.சராசரியாய் தினமும் 12 லட்ச ரூபாய் பண்ணுவது போல் தெரிகின்றது.இதுவரை மொத்தம் 7000 பதிவுகள் இட்டுள்ளாராம்.அதில் சுமார் ஐந்து லட்சம் பின்னூட்டங்கள். மூச்சுவாங்குகிறது.இத்தனைக்கும் இவருக்கென்று ஒரு நிரூபர் கூட கிடையாதாம்.
இப்போதோ அவர் இன்னொரு காப்பிரைட் சிக்கலில் மாட்டி இன்னும் பிரபலமாகிக் கொண்டிருக்கிறார்.


Email PostDownload this post as PDF

Monday, December 11, 2006

உங்கள் வலைப்பூவின் ரேங்க் என்ன?



உங்கள் வலைப்பூவின் தற்போதைய ரேங்க் என்ன? மற்ற வலைப்பூக்களை ஒப்பிடும் போது உங்கள் வலைப்பூக்கு எத்தனையாவது இடம் கொடுக்கலாம்? உங்கள் வலைப்பூக்கு வருவோர் போவோரின் எண்ணிக்கை ஏறுமுகமா அல்லது இறங்குமுகமா? இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள உதவுகிறது rankingblogs.com என்னும் தளம்.

உங்கள் வலைப்பூவை rankingblogs.com-ல் பதிவுசெய்து அவர்கள் கொடுக்கும் சிறு code- ஐ உங்கள் blog template-ல் செருகச் செய்ய வேண்டும்.சில மணிதுளிகளிலேயே உங்கள் வலைப்பூவின் ரேங்க் கணித்து காட்டப்படும்.இப்போதைக்கு உள்ள 650 வலைப்பதிவுகளில் எம்வலைப்பூக்கு 98-ஆவது இடம்.பச்சை அம்புகுறி மேல் நோக்கி காட்டுவதால் ஏறுமுகம்.மகிழ்ச்சி.அதுபோல உங்கள் வலைப்பூ வளர்ச்சியை கண்கூடாகக் காண தினமும் கண்காணிக்க இது ஒரு இலவச வாய்ப்பு.

http://www.rankingblogs.com/dir/index.php?start=51


Email PostDownload this post as PDF

Wednesday, November 22, 2006

மீள்பதிவு-தமிழ் வலைப்பதிவுகள்-சுவாரஸ்ய தகவல்கள்

"போட்டிக்கு யாராவது இருந்தால் தயவு செய்து பின்னூட்டமிடவும்" என்ற வேண்டுகோளோடு தமிழ் வலைப்பதிவுகள் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை கடந்த பதிவில் தெரிவித்திந்தேன்.வந்த பின்னூட்டங்களின் அடிப்படையில் இங்கே சில தகவல்கள் மாற்றம் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.

மூத்தவயது தமிழ் வலை பதிவர் யார் என்ற போட்டி வரிசையில் சிவஞானம் மற்றும் பெருசு உள்ளனர்.யார் முந்துவது என உறுதிசெய்ய இயலவில்லை

முதல் பெண் தமிழ் வலை பதிவர் யார் என்ற போட்டியில் முந்துவது மதி கந்தசாமி-On Blogger Since May 2003.அப்புறமாய் சந்திரவதனா-On Blogger Since July 2003.

அதிக இடுகைகள் துளசி கோபால்: 474 இன்றுவரை

இளவயது தமிழ் வலைபதிவர்கள்

அஞ்சலி On Blogger Since July 2005
மழலை On Blogger Since February 2006
ஜோனத்தன் 3 மாத வயது

அதிக தமிழ் வலைப்பூக்கள் சொந்தகாரர் குமரன் (ஏறக்குறைய 20 தமிழ் வலைப்பூக்கள்)

கல்லில் செதுக்கப்பட்டாற்போல் இதுபோன்ற பதிவுகளும் என்றென்றும் நீடித்திருக்குமாதலால் தவறான தகவல்கள் இங்கு பொறிக்கப்படக்கூடாது.
திருத்தம் தேவைப்பட்டால் சுட்டிக் காட்டுங்கள்.மகிழ்ச்சியே!!.


Email PostDownload this post as PDF

Tuesday, November 21, 2006

தமிழ் வலைப்பதிவுகள் - சுவாரஸ்ய தகவல்கள்




முன்பு வலைப்பூக்கள் எனப்பட்டு இப்போது வலைப்பதிவுகள் எனப்படும் தமிழ் பிளாகுகள் (Tamil Blogs) பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இங்கே பார்க்கலாம்.

உலகின் முதல் தமிழ் வலைப்பதிவு "நவன்"னோடது.அவர் முதல் தமிழ் பதிவு பதித்த நாள் 16 ஜனவரி வியாழன் 2003.ஆக முதல் தமிழ் வலைப்பதிவாளார் நவன்.இவரின் முதல் பதிவு 29 டிசம்பர் ஞாயிறு 2002.இது தான் அதன் அடக்கம் "Hello world !At last set up blogging."

முதல் தமிழ் வலைபதிவு பின்னூட்டமிட்டவர் (comment) இராசன்.இவர் பின்னூட்டமிட்ட நாள் ஜூன் 5th, 2003 at 6:36 am பின்னூட்டமிட்ட வார்த்தை "வணக்கம்"

முதல் பெண் தமிழ் வலைப்பதிவாளர்-துளசி கோபால் செப்டம்பர் 2004 முதல் வலைபதித்துள்ளார். (போட்டிக்கு யாராவது இருந்தால் தயவு செய்து பின்னூட்டமிடவும் :) )
http://www.blogger.com/profile/4714811

(UPDATED :முதல் பெண் தமிழ் வலை பதிவர் யார் என்ற போட்டியில் முந்துவது மதி கந்தசாமி On Blogger Since May 2003- அப்புறமாய் சந்திரவதனா On Blogger Since July 2003)

முதல் தமிழ்பதிவுகள் திரட்டி
தமிழ்மணம் 05-Jan-2004
நிறுவியவர் காசிலிங்கம் http://kasilingam.com/about.php

அதிக இடுகைகள் கொண்ட வலைபதிவு
pkp.blogspot.com 240 :)
(யாரென்று தெரியவில்லை.எனது பதிவுகளின் எண்ணிக்கை 240.இதைவிட அதிகம் கொண்ட பதிவாளர் இங்கே என்னை நீக்கம் செய்யலாம்.தயவு செய்து பின்னூட்டமிடவும்.உங்கள் இடுகைகளின் எண்ணிகையோடு)

நீளமான பெயர் வலைபதிவு
dhinamum-ennai-kavani.blogspot.com (போட்டிக்கு யாராவது இருந்தால் தயவு செய்து பின்னூட்டமிடவும் :) )

குறுகிய பெயர் வலைபதிவு
pkp.blogspot.com (போட்டிக்கு யாராவது இருந்தால் தயவு செய்து பின்னூட்டமிடவும் :) )

இளவயது தமிழ் வலைபதிவாளர்
நிச்சயமாய் நான் இல்லை இளையோர் யாராயிருந்தாலும் இவ்விடத்தை நிரப்பலாம்.தயவு செய்து பின்னூட்டமிடவும்

மூத்தவயது தமிழ் வலைபதிவாளர்
டோண்டு-சாராக இருக்கலாம் வயது 60 என்கிறது அவர் profile
இவரை விட மூத்தோர் யாராயிருந்தாலும் இவ்விடத்தை நிரப்பலாம்.தயவு செய்து பின்னூட்டமிடவும்.

(UPDATED:மூத்தவயது தமிழ் வலை பதிவர் யார் என்ற போட்டி வரிசையில் சிவஞானம் மற்றும் பெருசு உள்ளனர்.யார் முந்துவது என உறுதிசெய்ய இயலவில்லை)

தமிழ்மணம் கணக்குபடி மொத்த தமிழ் வலை பதிவுகள்: 1491
கடந்த ஒரு மாதத்தில் எழுதப்பட்ட இடுகைகள்: 3395
கடந்த ஒரு வாரத்தில் எழுதப்பட்ட இடுகைகள்: 822
கடந்த 24 மணி நேரத்தில் எழுதப்பட்ட இடுகைகள்: 153
ஒரு நாளில் சராசரியாக எழுதப்படும் இடுகைகள்: 113 அதாவது ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒரு இடுகை
ஒரு நாளில் சராசரியாக இடப்படும் பின்னூட்டங்கள்: 1004 அதாவது ஒவ்வொரு இரண்டு நிமிடமும் மூன்று பின்னூட்டங்கள் இடப்படுகின்றன

தேன்கூடு கணக்குபடி அதிக தமிழ் வலைப்பதிவாளர்கள் வாழுமிடங்கள்
1.இந்தியா 487
2.அமெரிக்கா 68
3.சிங்கப்பூர் 23
4.கனடா 18

(படம் காசி மற்றும் நவன்)

Please have a look of updated version of this log here.

Interesting facts about Worlds First Tamil blogs and Tamil bloggers


Email PostDownload this post as PDF

Tuesday, November 14, 2006

மீள்வரிசை Top 10 தமிழ் வலைப்பதிவுகள்

"உங்கள் தமிழ் வலைப்பதிவு இந்த டாப் 10-ன் இடையே புகுமானால் தயவுசெய்துபின்னூட்டமிடுங்கள்." என ஏற்கனவே தெரிவித்திருந்தேன்.இதன் படி வந்த பின்னூட்டங்களின் அடிப்படையில் கீழே புதுப்பிக்கப்பட்ட திருத்தப்பட்ட முடிவுகள்.No offence please. :)

நவம்பர் 2006

அலெக்ஸா(Alexa) டிராபிக் தர வரிசைபடி Top 12 தமிழ் வலைப்பதிவுகள்

1.idlyvadai.blogspot.com 422,558
2.thoughtsintamil.blogspot.com 440,022
3.oosi.blogspot.com 477,177
4.vettipaiyal.blogspot.com 605,314
5.madippakkam.blogspot.com 629,244
6.etamil.blogspot.com 702,042
7.gpost.blogspot.com 780,010
8.pkp.blogspot.com 1,027,690
9.holyox.blogspot.com 1,046,210
10.mkarthik.blogspot.com 1,057,265
11.kadalganesan.blogspot.com 1,153,928
12.dharumi.blogspot.com 1,480,622

(Updated On 15th Nov,12thplace dondu.blogspot.com 1,557,295 is replaced by 7th place insert gpost.blogspot.com 780,010)
(Updated On 16th Nov,12thplace valai.blogspirit.com 1,511,625 is replaced by 8th place insert pkp.blogspot.com 1,027,690)


Link Popularity தர வரிசைபடி Top 12 தமிழ் வலைப்பதிவுகள்

1.etamil.blogspot.com 19147
2.thoughtsintamil.blogspot.com 13233
3.gragavan.blogspot.com 4082
4.idlyvadai.blogspot.com 2401
5.dondu.blogspot.com 1267
6.dhinamum-ennai-kavani.blogspot.com 752
7.holyox.blogspot.com 738
8.muthuvintamil.blogspot.com 442
9.valai.blogspirit.com 438
10.pkp.blogspot.com 387
11.vettipaiyal.blogspot.com 321
12.mkarthik.blogspot.com 317


(Updated on Nov 15th, 12th place madippakkam.blogspot.com 210 is replaced by 6th place insert dhinamum-ennai-kavani.blogspot.com 752)
(Updated on Nov 16th, 12th place kadalganesan.blogspot.com 228 is replaced by 10th place insert pkp.blogspot.com 387)


Email PostDownload this post as PDF

Monday, November 13, 2006

போட்டி Top 10 தமிழ் வலைப்பதிவுகள்

சமீபத்தில் இட்லிவடையார் ஒரு தேர்தல் நடத்தி எந்த வித அசம்பாவிதமுமின்றி வெற்றிகரமாக டாப் 5 தமிழ் வலைப்பதிவுகள் - முடிவுகள் தெரிவித்திருந்தார்.முற்றிலும் வலைமக்களால் ஓட்டளிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இட்லிவடையாரின் இந்த டாப் 5 தமிழ் வலைப்பதிவுகள் முடிவுகளை இந்த சுட்டியில் காணலாம் .http://idlyvadai.blogspot.com/2006/11/5.html

கீழே கொடுக்கப்பட்ட Top 10 தமிழ் வலைப்பதிவுகள் நவம்பர் 2006-ல் புகழ்பெற்ற அலெக்ஸா(Alexa) டிராபிக் தர வரிசைபடி தேர்ந்தெடுக்கப்பட்டவை.

1.idlyvadai.blogspot.com 422,558
2.thoughtsintamil.blogspot.com 440,022
3.madippakkam.blogspot.com 629,244
4.etamil.blogspot.com 702,042
5.holyox.blogspot.com 1,046,210
6.kadalganesan.blogspot.com 1,153,928
7.dharumi.blogspot.com 1,480,622
8.dondu.blogspot.com 1,557,295
9.muthuvintamil.blogspot.com 2,083,393
10.gragavan.blogspot.com 2,427,390


கீழே கொடுக்கப்பட்ட Top 10 தமிழ் வலைப்பதிவுகள் நவம்பர் 2006-ல் Link Popularity தர வரிசைபடி தேர்ந்தெடுக்கப்பட்டவை

1.etamil.blogspot.com 19147
2.thoughtsintamil.blogspot.com 13233
3.gragavan.blogspot.com 4082
4.idlyvadai.blogspot.com 2401
5.dondu.blogspot.com 1267
6.holyox.blogspot.com 738
7.muthuvintamil.blogspot.com 442
8.madippakkam.blogspot.com 210
9.kadalganesan.blogspot.com 228
10.dharumi.blogspot.com 190


உங்கள் வலைப்பதிவின் அலெக்ஸா டிராபிக் தரம் காண இங்கே சொடுக்கி Traffic Rankings -ஐ சொடுக்கி உங்கள் வலைப்பதிவின் முகவரி கொடுக்கவும்
http://www.alexa.com/

உங்கள் வலைப்பதிவின் Link Popularity தரம் காண இங்கே சொடுக்கி உங்கள் வலைப்பதிவின் முகவரி கொடுக்கவும்
http://www.submitexpress.com/linkpop/

உங்கள் தமிழ் வலைப்பதிவு இந்த டாப் 10-ன் இடையே புகுமானால் தயவுசெய்து பின்னூட்டமிடுங்கள்.நான் முடிவுகளை மீள் வரிசைபடுத்திக்கொள்வேன்.

அடுத்த காலாண்டில் யார் ஏறுகிறார்கள் யார் இறங்குகிறார்கள் என பார்க்க இப்பதிவு உதவும்.

இந்த தரக்கணக்கீட்டு எண்கள் முற்றிலும் பதிவு தளத்துக்கு வருவோர் போவோர் எண்ணிக்கை மற்றும் அந்தந்த பதிவுதளத்தை சுட்டும் பிற சுட்டிகளின் எண்ணிக்கையை பொறுத்து மென்எந்திரம்
கணக்கிட்டது.மனித தேர்வு அல்ல.


Email PostDownload this post as PDF

Thursday, November 02, 2006

தமிழா? ஹிந்தியா? Google Battle

கூகிள் கரண்டில் (Google current) "தமிழ்" வந்து கலக்கியது யாவரும் அறிந்ததே.கீழ்கண்ட வீடியோவை பார்க்கவும்.உலகளாவிய மொத்த கூகிள் "Tamil" தேடலில் 30% அமெரிக்க நியூஜெர்ஸியிலிருந்து வருகிறது என சொல்லியிருந்தார்கள்.US-ல் அதிகம் தமிழர் வாழ்வது ஜெர்ஸியிலாம்.



இங்கே ஒரு வலை தளம் இரு சொற்களை கூகிள் சண்டையிட வைத்து யார் முந்திகொண்டிருக்கிறார்கள் என காட்டுகிறார்கள். இதில் Higher Google rating-ல் வருவது இப்போதைக்கு என்னவோ தமிழ் தான்.
நம்மாட்கள் வலையில் என்னவெல்லாமோ பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

http://douweosinga.com/projects/googlebattle

Google battle result:
tamil : 438
hindi : 366


Email PostDownload this post as PDF
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்