உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Sunday, June 15, 2008

வெப் உலக கின்னஸ் சாதனைகள்

பயர்பாக்ஸ் உலாவி மீது கொண்ட காதலால் நான் ஒன்றும் பயர்பாக்ஸ் பயன்படுத்த தொடங்கவில்லை. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மேல் வந்த வெறுப்பே அது என்னை பயர்பாக்ஸ் பயன்படுத்த வைத்தது. இப்போது அதுவே என் பிரதான பிரவுசராகியும் போனது. ஆயினும் பழைய பாசத்தால் சில சமயம் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்த விழைவேன். போன வேகத்தில் மீண்டும் FF-யிடமே வந்துவிடுவேன். அப்பப்போ கிராஷ் ஆகுதல் ,அதன் ஆமை வேகம் IE மீது வெறுப்படிக்க வைத்து விட்டது. நீங்கள் இணைய உலாவரும் போது கூட அசாதாரண வேகமின்மை அல்லது எந்த error-ம் கொடுக்காமல் வெற்று பக்கத்திலேயே அரைமணி நேரமாய் நிற்றல் போன்ற அறிகுறி தெரிந்தால் ஒரு வேளை அது இணைய இணைப்பு பிரச்சனையாய் இல்லாமல் உங்கள் பிரவுசர் பிரச்சனையாய் இருக்கலாம். பயர்பாக்ஸ்க்கு தாவிவிடுங்கள். FF-யின் வேகம், வகை வகையான இலவச Add-on கள் அதன் ப்ளஸ்கள். அலுவலகத்தில் இப்போதெல்லாம் பயர்பாக்ஸ் ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல் போல் ஆகிவிட்டது. IE பயன்படுத்துபவர்களை பாவம் விவரம் அறியாதவர்களென்றும் FF பயன்படுத்துகிறவர்களை damn smart விவரம் அறிந்தவர்களென்றும் மூளை தானாகவே பகுத்துவிடுகின்றது.

துரதிஷ்டவசமாய் தமிழில் இன்னும் சில வலைப்பக்கங்கள் பயர்பாக்ஸில் ஒழுங்காய் தெரிவதில்லை. அவற்றை படிப்பதற்காக வேண்டியே IE-யை திறக்க வேண்டியுள்ளது. நீங்கள் சொந்தமாய் தமிழில் வலைப்பக்கம் வைத்திருந்தால் தயவுசெய்து அது Firefox browser-யிலும் சரியாய் தெரிகிறதாவென சரிபார்க்கவும். நண்பர் Kricons-ன் blogger template யோசனையையே இங்கும் வழங்குகிறேன். "Firefoxல் அனைவரது வலைபதிவும் நன்றாக தெரிய பதிவை எழுதும் போது text-align justify யை பயன் படுதாமல் இருந்தாலே போதும்."

பயர்பாக்ஸ் உலாவியில் நான் சமீபத்தில் அறியவந்த ஒரு அருமையான Add-on பெயர் Piclens. கூகிள் படங்கள் தேடலில் நமீதாவை நீங்கள் தேடுகின்றீர்கள் என வைத்துக்கொள்வோம்.(updated) அது இணையத்தில் நமீதா படங்களாய் தேடி காட்டும். அந்த படங்களை அட்டகாசமாய் 3D தாக்கத்தில் "ஸ்லைடு ஷோ"போல இறக்கம் செய்யாமலே பார்க்க இந்த Add-on உதவுகின்றது.

நிற்க.
நாளை இந்த நம் அபிமான பயர்பாக்ஸ் ஒரு கின்னஸ் உலக சாதனை செய்யவிருக்கின்றது. 24 மணிநேரத்தில் உலகிலேயே அதிக அளவில் இறக்கம் செய்யப்பட்ட மென்பொருள் என்ற சாதனையை அது செய்ய தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இது வரை உலகெங்கும் 1,247,084 பேர் அந்த புது பயர்பாக்ஸ்3-ஐ ஜூன் 17 அன்று இறக்கம் செய்யப் போவதாக தெரிவித்திருக்கின்றார்கள். இந்தியாவிலிருந்து மட்டும் 22000 பேர் அதை இறக்கம் செய்யப் போவதாக தெரிவித்திருக்கின்றார்கள். நீங்களும் இந்த சாதனையில் பங்கு கொள்ளலாம். நாளை அதாவது ஜூன் 17 அன்று பயர்பாக்ஸின் தளம் www.mozilla.com/firefox/ சென்று புதிய FireFox version 3-யை முழுவதுமாய் இறக்கம் செய்து (no upgrade please) உங்கள் கணிணியில் நிறுவி இச்சாதனையில் பங்கு பெறலாம். மேலும் விவரங்களுக்கு.
http://www.spreadfirefox.com/en-US/worldrecord/

இது போல இன்னொரு உலக சாதனையை செய்ய http://www.internetbigbang.com தயாராகிக்கொண்டிருக்கிறது. அதாவது ஒரே நேரத்தில் அதிகமான நபர்கள் ஆன்லைனில் இருந்த தளம் என்ற பெயரை இது எடுக்கப்போகின்றது. இதுவரை 836 639 பேர் ஒரே நேரத்தில் இத்தளம் வர ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ஜூன் 20-ம் தியதி இச்சாதனை நடத்தப்படவிருக்கின்றது.

இனி இதுமாதிரி நிறைய சுவையான உலக சாதனைகள் இணையத்தில் நடத்தப்படலாம். ஜாலி தான்.


ரமணிச்சந்திரனின் "மயங்குகிறாள் மாது" நாவல் இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Ramani Chandran Mayangkukiraal Maathu Novel in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



4 comments:

Tech Shankar said...


விசுவல் செர்ட் எக்ஸாம் ஸூட் (மாயப்பரீட்சை)

வெங்கடசிகாமணி said...

பி. கே. பி சார், நீங்கள் குறிப்பிட்ட Firefox ல் தமிழ் எழுத்துரு பிரச்சனை Firefox 3 ல் தீர்க்கப்பட்டுள்ளது. Firefox 3 ல் தமிழ் fonts தெளிவாகத் தெரிகிறது.

அதிரை தங்க செல்வராஜன் said...

அன்பு பிகேபி,

உங்கள் உதவியால் நானும் உலக
சாதனையில் பங்கெடுத்துவிட்டேன்,
நன்றி.

அன்புடன்
அதிரை தங்க செல்வராஜன்.

Anonymous said...

ரொம்ப நாள் கழித்து தமிழ் எழுத்துரு பிரச்சினையை FireFox 3-ல் சரி செய்து விட்டார்கள். குமுதம்.காம், தமிழ்சினிமா.காம் போன்ற தளங்கள் தற்போது FireFox 3-ல் சரியாக வேலை செய்கின்றன.

http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2008/june/240608b.asp

பி.கு: தமன்னாவையே பார்த்து கொண்டிருக்காமல் அருகில் உள்ள எழுத்துருக்களையும் சரிபார்க்கவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்