உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Tuesday, June 10, 2008

உலகின் முதல் இணையதளம்

செவ்வாய் கிரகத்தில் தெரியாது.ஆனால் பூமியில் டிசம்பர் 1990 கணக்குப்படி ஒரே ஒரு இணையதளம் தான் இருந்தது. அதன் விலாசம் info.cern.ch அதற்கு சொந்தக்காரர் www-வை அதாவது html-ஐ கண்டு பிடித்த Tim Berners-Lee ஆவார். இன்றைக்கு வெப் 2.0 வெப் 3.0 வென போய்கொண்டிருக்கின்றோம். ஆனாலும் அன்றைக்கு அவர் முதன்முதலாய் நெய்த அந்த வலைப்பக்கத்தை இன்றைக்கும் பத்திரமாய் வைத்திருக்கின்றார்கள். நீங்கள் கீழ்கண்ட சுட்டி போய் அதை பார்க்கலாம்.
http://www.w3.org/History/19921103-hypertext/hypertext/WWW/TheProject.html
1990-ல் இவ்வெளிய பக்கத்தை உருவாக்க உங்களுக்குத் தெரிந்திருந்தால் நீங்கள் தான் பூமிப்பந்தை இணைய வலையில் சிக்கவைத்த ஜீனியஸ் சிலந்தியாய் இருந்திருப்பீர்கள்.

இந்த மே மாத கணக்குப்படி இணைய உருண்டையின் மொத்த இணையதளங்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா? 168,408,112 அபாரமானமான வளர்ச்சிதான். இத்தனை வெப்தளங்கள் உருவாக பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் ஒரு முக்கிய காரணமாய் அமைந்தது கூகிளின் அட்சென்ஸ் (Google Adsense) என்றால் மிகையாகாது.

தங்கள் இணையதளங்களில் ஓடும் விளம்பரங்களை கிளிக்கினால் மாதம் தோறும் காசோலை வீடு தேடி வரும் என்றதும் மெக்கானிக்கல், சிவில் மாணவன் கூட இணையதளம் தொடக்கினான். பல வெப்வித்தைகளை காட்டி சட்டம் சட்டமாய் விளம்பரங்களைப் போட்டு. இப்படி ஆடை அணிகலன்களோடும் நிர்வாணமாயும் ஆயிரம் ஆயிரம் தளங்கள்.

இத்தனை வெற்றிகரமான கூகிளின் ஆட்சென்ஸ் புராஜெக்ட்டை முன்னின்று நடத்தியவர் ஒரு இந்தியர் என்பது நமக்கெல்லாம் பெருமை. அவர் பெயர் கோகுல் ராஜாராம் (Gokul Rajaram). 2003-ல் கூகிளின் இந்த நுட்பம் வெளிவந்த பின்பு தான் கூகிளுக்கு காசு கொட்டோ கொட்டென கொட்டத் தொடங்கியது.அப்புறம் இணைய காட்டுக்கு இன்றுவரை கூகிள் தான் ராஜா.

ராஜாராம் கான்பூர் IIT யில் B.Tech முடித்து பின் MIT Sloan School of Management-ல் M.B.A-யும் M.S. in Computer Science-ம் முடித்தவர். ராஜாராம் பழைய நினைவுகளை சொலலும்போது “When we started adsense, it was just me and four engineers,” “The night before we launched, Sergey spent five hours with me testing the system and pointing out bugs.” என்கின்றார் மறக்க இயலாத நினைவுகளாக. இணையத்தின் போக்கையே மாற்றிய நாளல்லவா அது. இங்கு அவர் கூறும் "செர்ஜி" கூகிளை நிறுவிய நிறுவனர்களில் ஒருவர் ஆவார்.

ஆனாலும் கோகுல் ராஜாராம் இன்றைக்கு Xoogler ஆகிவிட்டார். அதாவது x-googler. மில்லியன்களை சம்பாதித்து விட்டு இனி தானே தனக்காக உழைக்கப்போவதாக chailabs.com தொடங்கியிருக்கிறார். அதன் விவரங்களெல்லாம் இப்போதைக்கு ரகசியமே. எதாவது வியப்பாய் சீக்கிரமாய் கொண்டு வருவார் என எல்லோரும் எதிர்பார்க்கின்றார்கள்.

இன்றைக்கு Google Adsense-ன் நிலமை அவ்வளவு பிரகாசமாய் இல்லை. மைஸ்பேஸ் சிறுவர்கள் கும்பலை நம்பி மில்லியன்களை கூகிள் செலவழித்து கையை தானே சுட்டுக் கொண்டிருக்கிறது. வருமானமும் கம்மி. கொஞ்ச காலமாய் இன்னோவேசனே இல்லை. இப்படி அநேக கம்ப்ளெயின்ட்கள். பல முக்கிய googler-கள் வேறு xoogler-கள் ஆகிக் கொண்டிருக்கின்றனர். இப்படி தொடர்ச்சியாய் மாற்றங்கள், உலகில் அது மட்டும்தானே மாறாதது.

கந்தசஷ்டிகவசம் தமிழிலும் ஆங்கிலத்திலும் Kanda Shasti Kavasam pdf in Tamil and English ebook Download. Right click and Save.Tamil Download and English Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories2 comments:

Anonymous said...

அய்யா, நீர் ஒரு தகவல் கலங்ஜியம்

VJ Stores said...

Useful information, and very good site. And, i have also started a blog, address : http://newgad.blogspot.com

pls chk and give your feedback.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்