உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, June 11, 2008

ஆயிரத்தில் ஒருவன்

எங்கிருந்தும் copycat செய்யாமல் நானே யோசித்துபார்த்தேன். வெற்றிகரமான வலைப்பதிவு எழுதுவது எப்படி என்று. எப்படி வாசகர்களை மீண்டும் மீண்டும நம் பக்கம் கொண்டு வரலாம்? வரிசையாக எழுதினேன். அதை உங்களோடு பகிர்ந்துகொள்வதோடு மட்டுமல்லாமல் நானும் அதை பின்பற்றலாமே என முடிவு செய்தேன்.

தினமும் இல்லாவிட்டாலும் குறைந்தது ஒரு குறிப்பிட்ட சுற்றிலாவது அவ்வப்போது பதிவிடல் நல்லது. இப்படி அவ்வப்போது பதிவிடல் நம் வாசகர்களுக்கு மட்டுமல்ல கூகிளுக்கும் ரொம்ப பிடிக்கும். பிறரின் கூகிள் தேடல்களில் நம் பதிவுகளையும் ஆர்வமாய் காண்பிப்பான்.

கவர்ச்சிகரமான தலைப்பிட்டு அழைத்து வந்த வாசகரை நாம் ஒரு முறை ஏமாற்றினால் பின் எப்போதும் எப்படி தலைப்பிட்டாலும் அவர் வரமாட்டார் என்றே தோன்றுகிறது.

காப்பி பேஸ்ட் எதற்கு?. நாலுவரியென்றாலும் நறுக்கென்ற நம் சொந்த வரியாய் அது இருக்கட்டுமே.

நம்பால் விழுந்தோர் வேண்டுமானால் பக்கம் பக்கமாய் படிப்பார்கள். புதிதாய் வருபவர்களை முதல் சில வரிகளிலேயே நம்மை பிடிக்க வைக்க வேண்டும். ஆதலால் என்னைப் பொறுத்தவரை இங்கும் சைஸ் மேட்டர்ஸ்.பெரிசல்ல சிறிசு.

தப்பித்தவறி ஒருமுறை நம் பக்கம் வந்த வாசகருக்கு திருப்தியான தீனி கிடைத்துவிட்டால் மறுமுறை நாம் அழைக்காமலேயே வருவார் என்பது என் நம்பிக்கை. மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்வார். இங்கு தீனி என நான் சொல்வதில் பலவும் அடக்கம். வேறெங்கும் கிடைக்கா வித்தியாசமான சினிமா செய்திகள், நாட்டு நடப்புகள், அரசியல் அலசல்கள், நுட்பங்கள், நகைச்சுவைகள், கட்டுரைகள், சொந்த அனுபவங்கள் முதலான.

ஆனால் முழுக்க முழுக்க நம் படைப்பாய் இருக்க வேண்டும். சினிமா, அரசியல், கிரிக்கெட், வணிகம் சார்ந்த வலைப்பதிவுகளுக்கு பிரகாச எதிர்காலம் இருப்பது போல் தோன்றுகிறது.

வளர்ச்சியை பின்னூட்டங்கள் கொண்டு அளந்தால் சோர்ந்துதான் போவோம். ஒரு முறை வந்தவர் மீண்டும் நம் பதிவை தேடி வந்தால் அதுதான் உண்மையான வளர்ச்சி என்பேன்.

எல்லாரையும் திருப்திபடுத்த முடியாது. எனக்கு தெரிந்ததை, பிடித்ததை மட்டும் எழுத முயலுகிறேன் and ரொம்ப முக்கியமாய் trying to be cool with everybody.

தகவல், கடி, கிசுகிசு, பிடித்ததுவென கண்டதையும் இரு வரி பதிவுகளாய் எழுதிவந்த காலம் அது. தமிழ் வலைப்பதிவின் முன்னோடிகள் தமிழ் வலைப்பதிவுகள் பெருகவேண்டும் என்ற ஒரே நோக்கில் செயல்பட்டார்கள். அந்த காலத்திலேயே அநேக சீரியஸ் பதிவுகள் தமிழில் பல்வேறு துறைகள் பற்றியும் தொழில் நுட்பம் பற்றியும் எழுதப்பட்டன. நானோ ஒன்றுமில்லாதிருந்தேன்.

பாஸ்டன் பாலா அவர்கள் ஒருநாள் "ப்ரியமுடன் பிகேபி நாளை கிசுகிசு சொல்வார்!" என்று முதன்முதலாக தனது வலைப்பதிவு மூலம் என்னை அறிமுகப்படுத்திவைத்தார்.அவருக்கு என் நன்றிகள் எப்போதும் உண்டு.

அப்புறம் வந்த சில பதிவுகளில் முதன் முதலாக ஜே பி இரவிச்சந்திரன் பெங்களூர் அவர்கள் "இந்த லிங்க் என் மகனுக்கு மிக முக்கியமானதாக அமைந்துள்ளது" என பின்னூட்டமிட்டு ஒரு பாஸிட்டிவ் ஜாடை காட்டினார் .இரண்டு நாள் கழித்து முருகபூபதி அவர்கள் "மிகவும் உதவியான சுட்டிகள் நண்பரே. மிக்க நன்றி." என்றார். இவர்கள் இருவரும் இப்போதும் என் பதிவுகளை படிக்கின்றார்களோ இல்லையோ கொஞ்சம் யோசிக்க வைத்துவிட்டவர்கள்.

பயனுள்ள விஷயங்களை சொன்னால், பயனுள்ள விஷயங்களை தந்தால் அது எப்போதுமே தோற்காது என புரிந்தது. முயன்று பார்த்தேன்.

கடந்த இரண்டாம் தியதி I was so.. excited நமது வலைப்பதிவின் feed count முதன் முதலாக 1000 என்ற நான்கிலக்கத்தை எட்டியது.ஆமாம் நீங்கள் அந்த ஆயிரத்தில் ஒருவனாகும். சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு இதேநாள் நமது வலைப்பதிவின் feed count வெறும் 24 தான். இதை நான் எதற்கு சொல்கிறேன் என்றால் மற்ற தமிழ் பதிவர்களுக்கும் இது ஒரு உற்சாக மூட்டலாயிருக்குமே என்றுதான்.

பிராந்திய மொழி வலைப்பதிவுகளின் காலம் தொடங்கிவிட்டது என்றே நினைக்கின்றேன்.

அதுவும் தமிழில் நாம் எக்கசக்கம். போக வேண்டிய தூரம் வெகுதூரமாய் இருந்தாலும் பெருமையாக இருந்தது. இதையெல்லாம் கோபாலிடம் பெருமிதமாக சொல்லிக்கொண்டே வந்தேன். நம்மவர்கள் நடத்தும் "அந்தக்" கடை முன் வண்டியை திடீரென்று நிறுத்தினான். இங்கு பெரும்பாலான "அந்தக்" கடைகளையெல்லாம் நம்மாட்கள் தான் நடத்துகின்றார்கள். பல கேஸ் ஸ்டேஷன்களும், மோட்டல்களும் கூட இந்தியர்களுக்கு சொந்தமானவைதான். பல பாட்டில்களோடும் கேன்பெட்டிகளோடும் கோபால் திரும்ப வந்தான். "என்னடா இது" என்றேன்.
"Knockout" ஆகி ரொம்ப நாளாயிட்டது என்றான்.

கிறிஸ்தவ புத்தகம் "பரலோகமும் பாதாளமும்" இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Paralogamum Paathaalamum Christian book in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



9 comments:

Tech Shankar said...

இஸ்லாமிய புத்தகம் சஹீஹீல் புகாரி (6/09/2008 11:16:00 PM )
கந்தசஷ்டிகவசம் தமிழிலும் ஆங்கிலத்திலும் (6/10/2008 08:59:00 PM)
கிறிஸ்தவ புத்தகம் "பரலோகமும் பாதாளமும்" 6/11/2008 11:31:00 PM )

ஆக 9 , 10, 11 நாட்களில் தலா ஒரு மதத்திற்கு உரிய சிறப்பான மென்னூல்களை
"எம்மதமும் சம்மதமே" கொள்கைப்படி தந்திருக்கிறீர்கள். இதனை வேறெந்த வலைப்பூவிலாவது பார்க்க இயலுமா?

மதம் எந்தக் குற்றமும் செய்யவில்லை. எல்லா மதங்களும் இறைவனை நாடுவதற்கான வழிமுறைகளை மாத்திரமே போதிக்கின்றன. எந்த மதமும் 'குண்டு' வைக்க, 'பிறமதத்தினரைக்' கொலை செய்யத் தூண்டுவதில்லை.

மனிதனுக்கு 'மதம்' பிடித்து அவன் 'கடவுளை' மறந்து, தானே 'கடவுள்' என நினைத்து 'யானைக்கு' மதம் பிடித்ததுபோல் தன்னையே மறந்துபோகி பிறரைத் துன்புருத்துகிறானே ஒழிய எந்த மதமும் அவனைக் கெட்டவனாக ஆகுவதற்கு ஒருபோதும் அனுமதிப்பதில்லை.

உங்களது 'இன்றையச் சிறப்பிறக்கம்' வாயிலாக இவ்வாறு மாக்களாக (விலங்குகளாக)த் திரிந்த மனிதர்களை மக்களாக, சிறந்த பண்பாளர்களாக ஆக்குவதற்கு முயல்கிறீர்கள்.

உங்களது முயற்சியில் வெற்றிமேல் வெற்றி குவிய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்புத் தோழர் திரு. பி.கே.பி. அவர்களே.

Anonymous said...

Hi Iratchaka(pKp),

[Kindly read in tamil]
Ennai Arimugam Seithu Kolkiren, Naan Ungal Valaippathivin Neenda Naal Vaasagan, Kadantha Oru Varuda Kaalamaaga Vaasikkinren. Ungaludaiya Pathivugal Migavum Payanullathaga Irukkintrana, Athilum KELVI-PATHIL Sevai (Hai Madhan, Sujatha) Pola Kaanappadukirathu. Neengal Yaar..., Vayathu, Anupavam, Enna Entru Enakku Theriyathu. Oruvarai Vimarsikkum Mun Avaraip Patri Naam Therinthiruppathu Uthavikaramaga Irukkum, Atharketraar Pola Thaan Vimarsana Karuthukkalai Velippadutha Iyalum Ennaal. Ungalai Nalla Anupavasali Entru Ninaikinren (Idamththirkku Eatraar Pol Karuthavum). Ungal Sevai Thodara En Nenjam Niraintha Vaalthukkal, Jeyam Jeyame, Thani Valiyum Jeyam Jeyame. Naam Meendum Santhippom.

rajaharichanra

செல்லி said...

வாழ்த்துக்கள் பிகேபி.

நிச்சயமா நானும் அந்த ஆயிரத்தில் உள்ளடங்குவேன்:-))

EMLIN said...

திரு.பிகேபி அவர்களே கடந்த சில மாதங்களாக தங்களது வலைபதிவை
பார்த்து, படித்து வருகிறேன். எனக்கு பல அரிய தகவல்கள் மற்றும் புத்தகங்களை பரிசளித்துள்ளீர்கள். நன்றி.

தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.


ஆயிரத்தில் ஒருவனாக இருப்பது மகிழ்ச்சியே.

வடுவூர் குமார் said...

ஆயிரமா?
வாழ்த்துக்கள்.

அதிரை தங்க செல்வராஜன் said...

இனிய பிகேபி,

ஆயிரமென்ன கோடிகள் தூரமில்லை.

தொடரட்டும் பதிவுகள்.

அன்புடன்

அதிரை தங்க செல்வராஜன்.

வந்தவாசி ஜகதீச பாகவதர் said...

ஐயா, அந்த காமென்ட்ஸ் எழுதிய சில மாதங்களுக்கு முன்பிருந்தே தங்களின் ப்ளாக் களை, எனக்கு பயனுள்ளதோ இல்லையோ, படித்துக்கொண்டுதான் இருக்கின்றேன். என் மகன் M.Tech (VLSI) முடித்து ஒரு கம்பெனியில் வேலையில் உள்ளான். அவன் படிப்பில் முன்னேறியதில் தங்களின் பங்கும் இருப்பதில் மகிழ்ச்சியுறுகிறேன்.
தங்கள் ப்ளாக்கை படித்தவர்கள், உங்கள் பக்கத்தை படிக்க தவற மாட்டார்கள்.
ஜே.பி.இரவிச்சந்திரன், பெங்களூர்

Anonymous said...

மதுரையிலிருந்து பாலாஜி
அன்பு நண்பர் pkp அவர்களுக்கு பாலாஜி நன்றி சொல்கிறேன்.
வாழ்த்துக்கள் பிகேபி. தங்களுடைய இணைய தளம் எனக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் எனது நண்பர் மூலம் அறிமுகமானது. தங்களுடைய போஸ்ட் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனக்கு பல அரிய தகவல்கள் மற்றும் புத்தகங்களை கிடைத்தது. நன்றி.........................

தியாகராஜன் said...

சொன்னாலும் சொல்லவிட்டாலும் நீர் ஆயிரத்தில் ஒருவர் தான் ஐயா.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்