உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Tuesday, June 03, 2008

போலி வெப்கேமும் சில சுட்டிகளும்

ஏதாவது ஒரு மெசெஞ்சரில் சாட்டிங்கில் இருக்கின்றீர்கள்.உங்களிடம் வெப்கேமே இல்லை.எனினும் மறுமுனையில் இருப்பவரிடம் உங்களிடம் வெப்கேம் இருப்பது போல் பாவ்லா காட்ட ஆசையா?.அவர் போன்றோர்க்கு உதவுவது தான் இந்த போலி வெப்கேம். Fakewebcam இந்த மென்பொருளை நிறுவிவிட்டு பின் அதில் ஒரு போலி வெப்கேம் வீடியோவை ஓட விட்டு விட்டால் மறுமுனை மனசு அதை உண்மையென்றே நம்பிவிடுமாம். டைப்புவதில் மட்டும் அல்ல வெப்கேமில் தோன்றுபவரிலும் பொய் இருக்கலாம்.உசாராயிருங்கள் அவதார்களே.

கூகிளில் inurl:view/index:shtml அல்லது inurl:viewerframe?mode= எனத் தேடினால் ஆயிரக்கணக்கான திறந்த கேமராக்கள் உங்கள் பார்வைக்கு வரும்.அதெல்லாம் அங்காங்கே ரோடுகளிலும் ஓட்டல்களிலும் பார்க்குகளிலும் ஒழுங்காக பாதுகாக்கப்படாத CCTV security கேமராக்கள்.சிலவற்றை கிளிக்கினால் இன்டரஸ்டிங் காட்சிகள் கூட உங்களுக்கு கிட்டலாம். இதை பார்வையிட Axis Live View அல்லது live applet அல்லது webview livescope இதிலெதாவது ஒரு ஆக்டிவெக்ஸ் கன்ட்ரோல் நீங்கள் நிறுவ அனுமதிக்க வேண்டிவரும். அவ்வளவுதான்.முழுக் கேமராவும் உங்கள் கைபிடிக்குள் வந்து விடும். இஷ்டப்படி கேமராவை மேலே கீழே இடது வலது வென நகர்த்தலாம்.கேமரா தானாகவே நகர்வதை பார்த்து அங்கிருந்து நோக்கும் அன்னியர்கள் சற்று கிலியிலேயே கேமராவை பார்ப்பர்.

உதாரணத்துக்கு கீழ்கண்ட சுட்டியைப் பாருங்கள்.எங்கோ ஒரு ரெஸ்டாரன்டின் பாதுகாப்பு கேமரா பாதுகாப்பேயின்றி.
http://yamucha.miemasu.net:81/ViewerFrame?Mode=Motion&Language=1

இது இன்னொன்று.உலகின் எங்கோ ஒரு தெருமுனை.
நான் பார்த்ததிலேயே மிக வேகமாக ஸ்டிரீம் செய்யும் கேமரா.லைவ்வாய் உலகை காட்டுகின்றது.
http://213.196.182.244/view/index.shtml

கீழ்க்கண்ட இணையதளத்தில் இதுமாதிரி ஏகப்பட்ட அனாதை கேமராக்களை கண்டுபிடித்து உங்களுக்காக கண்காட்சி போல் அடுக்கிவைத்திருக்கின்றார்கள்.
http://www.opentopia.com/hiddencam.php

இந்தியாவிலும் ஏன் சென்னையிலும் இது போல் கேமராக்கள் சாலைகளிலுள்ளதுவென கீழ் கண்ட சுட்டியில் சொல்கின்றார்கள்.எதுவும் வேலை செய்வதாய் தெரியவில்லை.
http://www.webcamgalore.com/EN/India/countrycam-0.html

நியூஜெர்ஸி டர்ன்பைக்கில் டிராபிக் எப்படி இருக்குதுவென கேமரா வழி பார்க்க நாங்கள் அடிக்கடி பயன்படுத்தும் சுட்டி இது.
http://www.state.nj.us/transportation/traffic/cameras/

"கணிணி மொழி சி ஒரு அறிமுகம்" தமிழில் பிடிஎப் பக்கங்கள் Introduction to C in Tamil pdf pages download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories2 comments:

Tech Shankar said...


நகைச்சுவைப் பாட்காஸ்ட்கள்


அழகி
அன்பே அன்பே
பகவதி
சின்னவாத்தியார்
கோயமுத்தூர் மாப்பிள்ளை
தேவன்
திவான்
எனக்கு 20 உனக்கு 18
என்னம்மா கண்ணு
ஜூட்
காதல் மன்னன்
காதல் சடுகுடு
காதல் வைரஸ்
காதல் கிறுக்கன்
கந்தா கடம்பா கதிர்வேலா
கண்ணெதிரே தோன்றினாள்
கார்மேகம்
கோவில்
குஷி
லேசா லேசா
லவ் மேனேஜர்
மகளிர்க்காக
மலபார் போலீஸ்
முகவரி
நாகேசுவரி
நரசிம்மா
நீ வருவாய் என
நினைவே ஒரு சங்கீதம்
நினைவிருக்கும் வரை
பாளையத்து அம்மன்
பரசுராம்
பிரியமானவளே
சமுத்திரம்
சாமி
சீமான்
சீனு
செந்தமிழ்ப் பாட்டு
தமிழன்
தவசி
தென்னவன்
திருடா திருடி
திருமலை

திரைப்படங்களில் இடம்பெற்ற நகைச்சுவைத் துணுக்குகளின் ஒலிவடிவ எம்பி3களை இங்கே இணையிறக்கிக் கேட்டு மகிழுங்கள்.

தமிழ் முஸ்லிம் முன்னேற்றக் கழகம்-குவைத் said...

அன்பு நண்பருக்கு, தாங்கள் அறிமுகப்படுத்திய Fake Webcam ஐ வைத்து நான் பல நல்ல விசயங்களை எனது யாஹு மெஸஞ்சரில் ஆன்லைனில் வருபவர்களுக்கு காட்டி செய்திகளை அறிவிக்கின்றேன். மிக்க நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்