உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Sunday, June 01, 2008

வெப்கேம் ஹேக்கிங் பகுதி 1

வெப்கேம் ஹேக்கிங் பற்றி சமீபகாலமாக அநேக கேள்விகள் கேட்கப்படுகின்றன."அன்பு பிகேபிக்கு! எனது நண்பர்கள் கூறிய கதை கதையா உண்மையா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.வேறொருவர் வெப்கேமை அவரது அனுமதியில்லாமல் மற்றொருவர் பார்க்க முடியும் அவர்கள் webcam hackers என அழைக்கப்படுவார்கள். பிகேபி இதற்கு தங்களின் பதில்.is it possible?" இது தென்றல் சங்கர்."Can any one see the webcam broadcasting (in yahoo messenger) without getting permission from the broadcaster? please reply in detail." இது இன்னொருவர்.

இதற்கு பதில் "நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை" என்பது தான்.

மூன்று வழிகளை என்னால் ஊகிக்க முடிகின்றது.

முதல் வழி நீங்கள் பயன் படுத்தும் யாகூ அல்லது MSN மெசஞ்சர் மென்பொருளிலுள்ள தவறுகளை (Bugs) ஆதாயமாக எடுத்துக் கொண்டு நம்ம பசங்க புகுந்து விளையாடுதல். இவ்வகையான தாக்குதல்கள் மிக மிக அபூர்வம் ஏனெனில் இது போன்ற Bugs இருப்பது தெரிய வந்ததுமே சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உடனடியாக உஷாராகி Bug Fix அல்லது அப்டேட் வெளியிடுவது வழக்கம்.ஆக முதல் முக்கியமான விஷயம் Keep your softwares up to date.

இரண்டாவதாக எனக்கு தோன்றுவது மெசெஞ்சரில் யாரோ ஒரு முகம் தெரியா நபர் தோன்றி கவர்ச்சியாய் பேசி ஒரு சுட்டியை சொல்லி அதை கிளிக்கச் சொன்னால் கிளிக்காதீர்கள்.அதிலும் முக்கியமாய் Active x control இறக்கவா வேண்டாவாவென உங்கள் கணிணி கேட்டால் வேண்டவே வேண்டாமென சொல்லுங்கள். இந்த ஆக்டிவெக்ஸ் கண்ட்ராவிகளுக்குள் மறைந்திருக்கும் மர்மங்கள் நமக்கு வெளியே தெரிவதில்லை.அது மிகப் பெரிய ஆபத்தாக முடிய வாய்ப்புகள் உண்டு.அது வழியும் வெப்கேம்கள் ஹேக்கிங் செய்யப்படலாம்.

மூன்றாவது முறை மிகப் பயங்கரமானது.மிக எளிதானது. இது வழியாய் தான் அநேக வெப்கேம்கள் ஹேக்கிங் செய்யப்படுகின்றன.

இந்த சனிக்கிழமை மனோஜ் தனது பெசன்ட் நகர் வீட்டில் பார்ட்டி வைத்திருந்தான்.10 மணிக்கெல்லாம் திபு திபுவென இளஞ்ஞிகளும் இளைஞர்களும் ஒரே கும்பலாய் பானங்களில் மூழ்கிகிடந்தனர். உச்சஸ்தாயில் "தீப்பிடிக்க தீப்பிடிக்க" பாட்டு வேறு.மனோஜின் கணிணி மட்டும் ஒரு மூலையில் அமைதியாய் யார் கவனிப்புமின்றி அனாதையாய் இருந்தது.
"மனோஜ்! கேன் யூ டூ மீ எ பேவர்.ஐ வான் டு செக் மை மெயில். டு யூ மைன்ட்? ப்ளீஸ்" இது கில்லாடி ரவி.
பேதை மனோஜூம் "ஓ ஸ்யூர்" என பார்ட்டி ஆத்திர அவசரத்தில் கணிணியை அவனுக்கு திறந்து விட்டான்.
RAT அதாவது Remote administration tool-களில் கொட்டை போட்ட ரவி தான் கையோடு கொண்டு வந்திருந்த பேனாடிரைவிலிருந்து அந்த சிறு RAT மென்பொருளை கண் இமைக்கும் நேரத்தில் அவன் கணிணியில் நிறுவினான். பின் நல்ல பிள்ளை போல கழன்றுவிட்டான்.
இப்போது இந்த கணிணி மனோஜ்க்கு சொந்தமானது தான் ஆனால் ரவிக்கு இது அடிமை.

ரவி எங்கிருந்து வேண்டுமானாலும் இனிமேல் இந்த கணிணியின்மேல் ஆளுகை செய்யலாம். அடுத்த முறை மனோஜ் கணிணியிலிருக்கும் போது அவனுக்கே தெரியாமல் ரவியால் அந்த வெப் கேமை இணையம் வழி ஆன் செய்ய முடியும்.அதை பார்வையிட முடியும்.இன்னும் எல்லா அநியாயங்களும் செய்ய முடியும்.

ProRAT http://www.prorat.net
Poisonivy http://www.poisonivy-rat.com
Turkojan http://www.turkojan.com
போன்ற ட்ரோஜன் மென்பொருள்கள் இவற்றிற்கு பிரபலம்.பெரும்பாலும் இவை இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன.

கலியுலகில் யார் ரவி யார் அப்பாவி என கண்டுபிடிப்பது கடினமல்லவா? அப்போ இந்த மாதிரியான ஹேக்கிங்கை தடுப்பது எப்படி? உங்கள் கணிணியில் ஏற்கனவே இது மாதிரியான மென்பொருள்கள் நிறுவப்பட்டு உள்ளனவாவென எப்படி கண்டுபிடிப்பது?
இதற்கான பதிலை நமது அடுத்தப் பதிவில் பார்க்கலாம்.

ஒரு முக்கிய விஷயம்.

இங்கு சொல்லப்படும் தகவல்கள் எல்லாம் Educational purpose only.யாரையும் ரவி போல தவறான பாதையில் போக தூண்டிவிடும் நோக்கத்தில் அல்ல.
அதையும் மீறி ஹேக்கிங் செய்ய நினைப்போர் ஒரு முறை கீழ்கண்ட சுட்டி போய் Indian Information Technology Act, 2000 -யை படிப்பது நல்லது.
http://www.vakilno1.com/bareacts/informationtechnologyact/informationtechnologyact.htm

கவியரசு வைரமுத்துவின் கவிதை வரிகள் அவர் சொந்த குரலில்.Kaviarasu Vairamuthu Kavithai Varikal In his own voice in Tamil mp3 audio format Download.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



4 comments:

Anonymous said...

hi pkp,
the following error shown when we try to download the today's attachment.
Error in count on line 517.
./mydrive/Tamil Audio Books/Ilayaraja - How to name it/Do anything.mp3 is already defined.

HK Arun said...

அன்புடன் PKP உங்கள் ஆக்கங்களை மின்னஞ்சலூடாக பெற்று வாசித்து வருகின்றேன்.

உங்கள் ஆக்கங்கள் எளிமையாக அதே வேலை பயன்மிக்கதாக பலருக்கும் உதவும் வகையில் வந்துக் கொண்டிருக்கின்றது.

உங்கள் தொடர் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

நன்றி

தென்றல்sankar said...

மிக்க நன்றி பிகேபி
இப்போது புரிந்துவிட்டது இது கதையல்ல உண்மைதான் என்று.உங்களுடைய யாஹோ ஐடி எனக்கு கொடுங்க உங்களுடைய வெப்கேம நான் ஹேக் பன்னுறேன்.அய்யா எப்ப‌ வ‌ருவீக,நான் ரெடி நீங்க ரெடியா?.(;)
(just for laugh)

areef said...

Hi
PKP,
we can't download this link!Please relist the vairamuthu mp3.Thanks!
-areef.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்