இந்த காலத்து சுட்டிகளை பார்க்கும் போது இறை நம்பிக்கையே போய்விடும் போலிருக்கின்றது. பொடிசுகளாய் இருந்து கொண்டு அதுகள் பண்ற கூத்துகளை பார்த்து "அட குழந்தைதானே விட்டுத் தள்ளு"னு சொல்ல மனசு வருவதில்லை.ஒரு வயசே ஆன வாண்டு ஒன்று அப்படியே கையை வீசி அடிக்கின்ற அடி குட்டி ரவுடி போலிருக்கும். தனக்கு முக்கியத்துவம் தராமல், தன்னை யாரும் சட்டைபண்ணாதிருந்தால் ஏங்கி ஏங்கி அது அழுகின்றது.நம்மன போராட்டங்களை ஆறுமாத குழந்தையும் புரிந்துகொள்கின்றதே அது எப்படி?.ஆசையாய் அள்ளினாலும் அதற்கு புரிகின்றது, எரிச்சலில் அதட்டினாலும் அதற்கு புரிகின்றது.ஆன்மாக்கள் பேசிக்கொள்கின்றனவோ? அவை நம் மரமண்டைகளுக்கு புரிகின்றதில்லையோ?
ஒன்று மட்டும் புரிகின்றது வயிற்றில் உதைக்கும் போதே அக்குழந்தைக்கும் மனித குணம் வந்துவிடுகின்றது."Out of the box" குழந்தையும் டிப்பிக்கல் மனிதனே. தன்னை பதப்படுத்திப் பின் கடவுளுக்கு இணையாகின்றான்.
குடுமிபிடி சண்டை போட்டுக்கொண்டாலும் வெட்டென மறந்து ஒட்டிக்கொள்கின்ற அந்த அபூர்வப்பண்பு இருக்கின்றதே-அங்கு தான் குழந்தைகள் நிற்கின்றார்கள்.
பிரபலங்கள் பலரும் இப்படி சுட்டியாய் இருக்கும் போது எப்படி இருந்தார்கள் எனப்பார்க்க இங்கே செல்லுங்கள்.
Well known`s Childhood Pictures
மதுரை மீனாட்சி மிசன் மருத்துவமனை நண்பர் நாசர் சொல்லும் போது பிறக்கும் குழந்தைகள் கூட இருதய பிரச்சனையோடு பிறப்பதுண்டு என்கின்றார்.இந்தியாவில் மட்டும் வருடத்திற்கு 3,00,000 குழந்தைகள் இதயக்கோளாறோடு பிறக்கின்றனவாம்.ஆரம்பத்திலியே அதை கண்டறிந்தால் அதை சரியாக்குவதற்கான வசதிகள் இக்காலங்களில் இருக்கின்றனவாம்.அது பற்றிய விழிப்புணர்வையூட்ட அவர் உருவாகிய ஒரு யூடியூப் வீடியோ படம் இங்கே.
http://www.youtube.com/user/meenakshimission
உங்கள் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள் நாசர்!!
தாகூரின் வரிகள் நினைவுக்கு வருகின்றது."ஒவ்வொரு குழந்தையும் இறைவனிடமிருந்து ஒரு செய்தியைக் கொண்டு வருகிறது.மனிதனைக் கண்டு கடவுள் இன்னும் வெறுப்படையவில்லை அதைரியப்படவில்லை என்பதே"
இனிப்பான ஒரு செய்தி. கூகிள் நிறுவனம் தமிழில் ஜிமெயிலை அறிமுகப்படுத்தி இருக்கின்றார்கள். அதாவது இப்போது உங்கள் ஜிமெயில் கணக்கை முழுக்க முழுக்க தமிழ் மயமாக்கலாம்.அஞ்சல் எழுது (Compose mail),ஆவணங்கள் (Documents),நட்சத்திரமிட்டது (Starred),அனுப்பிய அஞ்சல் (Sent mail),குப்பை (Trash) இப்படி எல்லாமே தமிழ் மயமாகியிருந்தாலும் சில ஆங்கில வார்த்தைகள் மட்டும் அப்படியே தமிழில் மொழிமாற்றம் செய்யப்படாமல் தமிங்கிலீஷில் வழங்கப்படுகின்றன. உதாரணம் இன்பாக்ஸ், ஸ்பேம், லேபிள்கள். இவற்றிற்கான சரியான தமிழ் வார்த்தைகள் அவர்களுக்கு கிட்டவில்லை போலும். உங்களுக்குத் தெரிந்தால் கூகிளுக்கு தெரிவியுங்கள். :)
இதுவரையாவது வந்ததற்கு கூகிளை பாராட்டலாம். உங்கள் ஜிமெயிலில் Settings போய் அங்கு Gmail display language-ல் Tamil-ஐ தெரிவு செய்தால் படத்தில் நீங்கள் பார்ப்பது போல் உங்கள் ஜிமெயில்திரை முழுக்க முழுக்க தமிழ் மயமாகும்.
இதற்கு முன்பு ஒரு முறை மைக்ரோசாப்டின் Download Center சென்றபோது அது "தகவலிறக்க மையமாக" தமிழிலும் இருப்பதை காண நேரிட்டது
மனசுக்கு குளிர்ச்சியாய் இருந்தது.
படிக்கின்ற காலத்தில் குட்டிக்குட்டித் தாள்களில் குறிப்பெடுத்து படித்த நியாபகம் இருக்கலாம், மொத்தப் பாடத்தையும் ஒரு துண்டுக்காகிதத்தில் அழகாய் எழுதிவந்து மின்னணுவியல் வாத்தியார் ராஜன் பாடமெடுப்பார். அதுவே தூண்டுதலாகி இன்றுவரையும் எதாவது படிக்க உட்கார்ந்தால் Cramsession அல்லது Quick reference card அல்லது Cheet Sheet-னு தேடிக்கொண்டிருக்கின்றேன். இல்லையெனில் படித்து முடித்திருக்கும் போது நானே ஒரு Cheet Sheet உருவாக்கியிருப்பேன்.பல்வேறு தகவல்தொழில் நுட்பங்களின் ஒன்று அல்லது இரண்டு பக்க Quick reference card pdf -கள் இங்கே உங்களுக்காக சேமித்திருக்கிறேன். உங்கள் சம்பந்தப்பட்டதை அப்படியே அச்செடுத்து கியூபில் மாட்டிவைத்துக்கொள்ளுங்கள்.
Hello world in 66 programming languages.pdf
C Reference Card (ANSI).pdf
Core C# and .NET Quick Reference.pdf
VB.NET Quick Reference.pdf
ASP dot NET 2 0 Page life cycle.png
Cheat ASPdotNET Basics.pdf
Basic Java Cheat Sheet.pdf
Java J2SE “Regular Expressions” Cheat Sheet.pdf
Java ReferenceSheet.pdf
JAVA Quick Reference.pdf
Java Cheat Sheet.pdf
Java Script Quick Reference Card.pdf
JSP Quick Reference Card.pdf
PHP 4 Reference Card.pdf
Coldfusion Reference Sheet.pdf
Python Quick Reference.pdf
Perl Quick Reference Card.pdf
Perl Regular Expression QuickReference.pdf
Perl Testing Reference Card.pdf
Ruby Language QuickRef.pdf
Microsoft SQL Server Cheat Sheet.pdf
Oracle Server Architecture.pdf
MySQL Cheat Sheet.pdf
My SQL Reference Sheet.pdf
Computer Shortcuts Quick Reference Guide.pdf
Windows XP Keyboard Shortcuts.pdf
Powerpoint quick reference.pdf
Google Cheat Sheet.pdf
Firefox Cheat Sheet.pdf
Office 2000 Word Cheat Sheet.pdf
Microsoft Excel Card.pdf
Photoshop Quick Reference Card.pdf
Flash Quick Reference Card.pdf
HTML XHTML Quick Reference.pdf
CSS Quick Reference.pdf
UML Quick Reference Card.pdf
XML Syntax Quick Reference.pdf
RSS Cheat Sheet.pdf
The Web Developer’s SEO Cheat Sheet.pdf
Unix Linux Command Reference.pdf
Unix Linux Reference Card.pdf
The One Page Linux Manual.pdf
LINUX Administrator’s Quick Reference Card.pdf
Linux Security Quick Reference Guide.pdf
Vi Reference Card.pdf
VIM Quick Reference Card.pdf
Apache Quick Reference Card.pdf
OpenSSH Quick Reference.pdf
OSI Layers and Protocols.pdf
Important Windows Files Folders and Tools.pdf
Vmware ESX VI3 Ref Card.pdf
Download Link
"முயல் ராஜா" சிறுவர்களுக்கான அனிமேசன் வீடியோ கதை தமிழில். Muyal Raja animated video story for kids in Tamil Download. Right click and Save.Download
Download this post as PDF
5 comments:
அப்பாடி இப்படி மொத்தமாக கொடுத்ததற்கு மிக்க நன்றி,எங்க திரும்ப ரேபிட் ஷேர் போகச்சொல்லுவீங்களோ என்று பயந்துவிட்டேன்.
Wow.. Thank u PKP for providing the PDF download links, very useful.. Keep going..
by
Muruhanantham. C
PERL சம்பந்தமான மூன்று சுட்டிகளும் "Forbidden - You dont have permission to access .........." என்று காட்டுகின்றன. சரி செய்தால் உதவியாக இருக்கும்.
நன்றி.
அருமையான தொகுப்புகளை அள்ளி அள்ளிக் கொடுத்திட்ட அருமை நண்பருக்கு நன்றிகள். (வேறென்ன நான் சொல்ல?)
The download links are not working for me. When I right click and save the target, I get index.html file. If straightaway click the link, it shows the below message
Error in count on line 217.
./mydrive/Tamil Audio Books/Arthamulla Hindu Matham/ARTHAMULLA_HINDU_MADHAM.6.mp3 is already defined.
Can you please help?
Regards
Murugesh
Post a Comment