உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Friday, May 09, 2008

திருட்டுத்தனமாய்..

தவிர்க்கவே இயலாதநிலமைக்கு இணையவழி வர்த்தகங்களும், இணையவழி வங்கிச்சேவைகளும் வந்துவிட்ட போதிலும் அவ்வப்போது நாம் கேள்விப்படும் சில தகவல்கள் இந்த மொத்த வலைக்கட்டுமானத்தையும் சிறிது சந்தேகக்கண்ணோடேயே எப்போதும் பார்க்கவைத்து விடுகின்றது.

எடுத்துக்காட்டாக இரவுபகலாக உழைத்து நான் எழுதிய மின்புத்தகம் ஒன்றை இணையத்தில் விற்பனைக்கு வைத்துள்ளேன் என வைத்துக்கொள்வோம் அல்லது ஏதோ ஒரு குப்பை மென்பொருளை சற்று கவர்ச்சியாக்கி பல மார்க்கெட்டிங் யுத்திகள் பயன்படுத்தி, அதாவது இதை பயன்படுத்தி கலிபோர்னியா ஜாக் மாதம் $3000 சம்பாதிக்கின்றார், ஷாங்காய் டிங்டியூங் மாதம் $5000 சம்பாதிக்கின்றார் என்றெல்லாம் ரீல் விட்டு அந்த மென்பொருளை நான் விற்க்க , அதை ஏதாவது ஒரு ஏமாளி $50 கொடுத்து வாங்க அதன் மூலம் நான் பணம் சம்பாதிக்க இதெல்லாம் சகஜம்.

50 டாலர் கொடுத்து வாங்கிய அவன் கொடுக்கப்பட்ட 200 பக்க மின்புத்தகத்தை அட்டை டூ அட்டை படித்து அதன் படி செயல்பட்டால் தான் ஆரம்பத்தில் வாரத்துக்கு 2 டாலராவது பார்க்க முடியும். அதையும் தாண்டி இன்னும் பல தொழில்நுட்ப கோளாறுகளையும் போராடி வென்று இல்லை இல்லை வெறுத்துப்போவான். அடப் போனா போகுது 50 டாலர்னு நிமிடத்தில் வாங்கிய மென்பொருளையும் மின்புத்தகத்தையும் அழித்துவிட்டு உருப்படியான வேறு வேலை பார்க்க சென்றுவிடுவான்.

காசு சம்பாதிக்க ஆலோசனை தருகின்றேன், Make money using Adsense, Wordpress, ebay, Blogger, Make money using affliates, Websites அப்படி இப்படினு சொல்லி ஈபுக் பேக்கேஜ் விற்க்கிறவன் மட்டும் நல்ல காசு பார்த்துக்கொண்டிருப்பான்.

பாருங்கள், எதையோ சொல்லவந்து எங்கேயோ வந்து விட்டேன்.

ஓகே, இதுமாதிரி ஆன்லைனில் மென்பொருளோ அல்லது மின்புத்தகமோ விற்பவர்களிடம் போய் வாங்கும் போது முதலில் நம் பெயர் விலாசம் போன்ற தகவல்களையெல்லாம் கேட்பர், அடுத்து கிரெடிட்கார்டு அல்லது பேப்பால் வழி காசு கொடுக்கவேண்டும், காசு கொடுத்து முடிந்ததும் அவர்கள் நம்மை ஒரு பாதுகாப்பான பதிவிறக்கப் பக்கத்துக்கு கொண்டு செல்வர். அங்கு அவர்கள் நமக்கு நன்றி சொல்லி விட்டு ஒரு சுட்டி கொடுப்பர் அந்த சுட்டியிலிருந்து அந்த குறிப்பிட்ட மென்பொருளை அல்லது மின்புத்தகத்தை இறக்கம் செய்து கொள்ளலாம். இதை Thankyou page அல்லது Download page என்பர்.

சரி.இருக்கட்டும்.இப்போது இந்த Thankyou Page-க்கு காசு கொடுக்காமலே நேரடியாக போவதற்கு வழி தெரிந்துவிட்டால்.உங்களுக்கு 50$ லாபம். அவர்களுக்கு 50$ நஷ்டம். இல்லையா? ஆமாம். அப்போ அந்த Thank You Page-க்கு நேரடியாக போவது எப்படி?

பொதுவாக இந்த Thank You Page-களை கூகிளில் நீங்கள் தேடினாலே மாட்டும். பெரும்பாலும் கூகிள் இப்பக்கங்களை தேடலில் காட்டமாட்டான். ஆனால் கூகுளும் காண்பிக்க நான் பாத்திருக்கின்றேன். Alexa தேடு எந்திரம் தான் ரொம்ப டேஞ்சர்.

இந்த தேடு எந்திரங்களில் போய் A charge from CLKBANK அப்படினு தேடினால் ஏகப்பட்ட Thankyou page-கள் அகப்படும்.இப்படி நேரடியாக திருட்டுத்தனமாய் "நன்றிப் பக்கம்" போய் பிறரின் டிஜிட்டல் சொத்துக்கள் திருடப்பட வழிகள் இருக்கின்றன. உங்களுக்காக ஒரு எடுத்துக்காட்டு சுட்டி கொடுத்திருப்பேன். ஆனால் யாரோடேயாவது வயிற்றில் கைவைத்தல் பாவம் இல்லையா.

இப்போது சொல்லுங்கள்.எதை நம்பி இந்த இணையத்தில் நாம் கடை விரிக்க.

நண்பர் Prakash K கேட்டிருந்தார்.
Hi PKP,
Ur blog is cool... learned a lot from your blog, Need some advice from you for joining gold quest, could you please keep one post for gold quest....?


பிரகாஷ்! இது பற்றி நண்பர் பொன்வண்டு ரொம்ப விரிவாய் எழுதியிருக்கின்றார்.
எட்டிப்பாருங்கள். குவெஸ்ட் நெட் மோசடி! மென்பொருள்துறையினர் பாதிப்பு!

(தமிழ்மொழி நன்கு அறிந்தோருக்கு ஒரு சிறு கேள்வி: தவிர்க்க, விற்க்க என்ற வார்த்தைகளில் புள்ளிகொண்ட எழுத்துக்கள்(மெய் எழுத்துக்கள்) இரண்டு சேந்து வருகின்றனவே இது தவறா? இரண்டு மெய்யெழுத்துக்கள் சேர்ந்தால் போல் ஒரு வார்த்தையில் வரக்கூடாதுவென பள்ளியில் படித்தது போல் ஒரு நியாபகம்)


சுஜாதா சிறுகதை எப்படியும் வாழலாம் Sujatha Eppadiyum Vaazalaam Short story in Tamil pdf Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories12 comments:

Tech Shankar said...

தவிர்க்க - இது சரியானது.
விற்க்க - இது தவறானது.

'ற' வுக்குப் பக்கத்திலே மெய்யெழுத்து வராது.

Yurekha ! said...

Hi PKP Sir, I'm a regular reader of ur blog. Actually, i know ur blog through ur mydrive only.Its very good job, u r doing.

Tamilil thavirkka, paarkka, saerkka ena erandu otru eluthukal varalam. (virkka enbathu thavaru... 'virka' enbathe sari).

I want the ebook of writer Sujatha 'Pirivom Santhipom- part 1 and Vannathupoochi Vaettai. Can you provide that, pls...?

நிலாக்காலம் said...

வணக்கம் பிகேபி.
உங்கள் வலைப்பூ பலருக்கும் பலனளிக்கும் ஒரு தகவல் களஞ்சியமாக விளங்குகிறது. மிக்க நன்றி.

//(தமிழ்மொழி நன்கு அறிந்தோருக்கு ஒரு சிறு கேள்வி: தவிர்க்க, விற்க்க என்ற வார்த்தைகளில் புள்ளிகொண்ட எழுத்துக்கள்(மெய் எழுத்துக்கள்) இரண்டு சேந்து வருகின்றனவே இது தவறா? இரண்டு மெய்யெழுத்துக்கள் சேர்ந்தால் போல் ஒரு வார்த்தையில் வரக்கூடாதுவென பள்ளியில் படித்தது போல் ஒரு நியாபகம்)/

'தவிர்க்க', 'ஈர்ப்பு', 'உணர்ச்சி' போன்றவை சரியானவையே. 'ர்' உபயோகிக்கும்போது தொடர்ந்து மெய்யெழுத்துகள் வரலாம். ஆனால், 'ற்' உபயோகிக்கும்போது தொடர்ச்சியாக மெய்யெழுத்துகள் வரக்கூடாது. 'முயற்சி' என்பது 'முயற்ச்சி' ஆகிவிடாது.

அதாவது, 'வார்த்தை' என்றால் சரி; 'சொற்க்கள்' என்றால் தவறு.

முக்கிய அறிவிப்பு:
இந்த ஒரு பின்னூட்டத்தால், என்னை 'தமிழ்மொழி நன்கு அறிந்தோர்' பட்டியலில் சேர்க்கக் கூடாது. :-)

Tech Shankar said...

Jadhguru Jaggi VasuDev's E-Book is here

http://www.4shared.com/dir/6458622/31bd852c/Special.html

and some more 'Special' thing

Rajinikanth's voice against Kannadiga also there.

some more special..
http://www.4shared.com/dir/6458622/31bd852c/Special.html

18+ songs (Pop shalini) is also there

Murthi said...

எந்த ஒரு மெய்யெழுத்திற்குப் பின்பும் மற்றொரு மெய்யெழுத்து வரலாம். உதாரணம்: சந்தர்ப்பம்,சமர்ப்பணம்,
ஆனால் ஒரே விதிவிலக்கு - "ற்"-க்கு அடுத்து மற்றொரு மெய்யெழுத்து வராது.

A.J.A. said...

வணக்கம் PKP சார்.
உங்கள் பதிவுகள் நன்றாக இருக்கின்றன. மிக்க நன்றி.

//தமிழ்மொழி நன்கு அறிந்தோருக்கு ஒரு சிறு கேள்வி: தவிர்க்க, விற்க்க என்ற வார்த்தைகளில் புள்ளிகொண்ட எழுத்துக்கள்(மெய் எழுத்துக்கள்) இரண்டு சேந்து வருகின்றனவே இது தவறா? இரண்டு மெய்யெழுத்துக்கள் சேர்ந்தால் போல் ஒரு வார்த்தையில் வரக்கூடாதுவென பள்ளியில் படித்தது போல் ஒரு நியாபகம்)//

எனக்கு அப்படி ஒன்று படித்ததாகவே நினைவில்லை. (ஒருவேளை choiceல் விட்டுவிட்டேன் போலும்).

(உ-ம்)
பா[ர்க்]கவும்
சே[ர்க்]கவும்
தவி[ர்க்]கவும்
வா[ர்த்]தை
வா[ர்ப்]பு
ஈ[ர்ப்]பு
மோ[ர்க்]காரன்
மூ[ர்க்]க குணம்
தூ[ர்க்]கப்பட்ட கிணறு

என் சிற்றறிவி[ற்க்]கு எட்டியவரை தவறொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.

("விற்க்க" என்பது தவறு; "விற்க" என்பதே சரி என்று நினைக்கிறேன்.

அதேபோல் "நியாபகம்" என்பது "ஞாபகம்" என்று இருப்பதே சரியென்று நினைக்கிறேன்.)

நன்றி.

அன்புடன்
A.J.A.

வடுவூர் குமார் said...

ர்க் - வராது
ற்க் - வராது
எனக்கு தெரிந்தவரை
நீங்கள் & நானும் பள்ளியில் படித்தது சரி தான்.

Yogi said...

பிகேபி என் பதிவுக்கு தொடுப்பு கொடுத்ததற்கு நன்றி :)

// தமிழ்மொழி நன்கு அறிந்தோருக்கு ஒரு சிறு கேள்வி: தவிர்க்க, விற்க்க என்ற வார்த்தைகளில் புள்ளிகொண்ட எழுத்துக்கள்(மெய் எழுத்துக்கள்) இரண்டு சேந்து வருகின்றனவே இது தவறா? இரண்டு மெய்யெழுத்துக்கள் சேர்ந்தால் போல் ஒரு வார்த்தையில் வரக்கூடாதுவென பள்ளியில் படித்தது போல் ஒரு நியாபகம் //

'ற்' வந்தால் அதன் பக்கத்தில் வேறெந்த மெய்யெழுத்தும் வராது.
உ-ம்.
'எதற்கு' என்பதே சரி. 'எதற்க்கு' என்பது தவறு

'ர்'க்குப் பக்கத்தில் மெய்யெழுத்து வரலாம்.

Unknown said...

அன்பின் நண்பர் PKP,

உங்கள் பதிவுகள் மிகப்பயனுள்ளதாக உள்ளன.
நன்றிகளும் வாழ்த்துக்களும் நண்பரே ! :)

'தவிர்க்க' என்பது சரியான சொல்.
'விற்க்க' பிழையான சொல்.
விற்க என்பதே சரி.

இலவசக்கொத்தனார் said...

தவிர்க்க சரிதான். விற்க எவ்வளவு அழுத்தம் இருந்தாலும் விற்க்க என மாறாது! :)

இரண்டு மெய்யெழுத்துக்கள் தொடர்ந்து வரக்கூடாது என விதி இல்லை. ஆனால் "ற்" என்ற மெய்யெழுத்தைத் தொடர்ந்து மற்றொரு மெய் வரக்கூடாது. அம்புட்டுதான்.

டிஸ்கி: எனக்குத் தெரிஞ்சதைச் சொன்னேன். அதனால நம்மளைத் தமிழறிஞர் அப்படின்னு நம்பிடக்கூடாது. :)))

Sura said...

PKP Sir,
பழைய முத்து காமிக்ஸ் எல்லாம் ஈ-புத்தக வடிவில் கிடைக்க ஏற்பாடு செய்யுங்களேன்.
(மலரும் நினைவுகள்)
நன்றி

நெய்வேலி சுந்தர்ராஜன்

Natrajan said...

Hi PKP

Pl. advise. I have a DVD playing one hour. I can not upload on you tube. I tried yesterday - it took more than TEN hours saying ' uploading' and after TEN HOURS the connection disconnected. Can you advise me.
Natrajan

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்