உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, May 22, 2008

மின்னுவதெல்லாம்

இணையவாசிகளுக்கு தசவதாரம் ஒன்றும் பெரிய விஷயமில்லை.தமிழில் "தசம அவதாரம்" அல்லது இந்தியில் "தஸ் அவதாரம்" அதாவது பத்து அவதாரமெல்லாம் அவர்களுக்கு இத்துனூண்டு தான்.சாட் ரூம் போனால் ஒரு அவதாரம், Forum போனால் இன்னொரு அவதாரம், வலைப்பூக்கள் போனால் இன்னொன்று என இடத்துக்கு இடம் தளத்துக்கு தளம் வித்தியாசம் வித்தியாசமாய் அவதாரம் எடுத்திருப்பார்கள். அதாங்க "Avatar". இது நம்நாட்டு வட மொழியிலிருந்து இணையத்தில் பிரபலமான இன்னொரு வார்த்தை.உங்கள் புரோபைலில் உஙகள் போட்டோக்கு பதிலாய் கியூட்டாய் இன்னொரு பொம்மைப்படம் போட்டிருப்பீர்களே. அதைத்தான் சொல்கின்றேன்.

இந்த அவதார்களில் சில குறும்புக்காரர்களின் அவதார்கள் அனிமேட்டட் Gif கோப்பாய் பண்ணாத அக்கிரமமெல்லாம் பண்ணி சிரிப்பு மூட்டிக்கொண்டிருக்கும்.

இதுபோன்ற அனிமேட்டட் Gif கோப்புகள் எப்படி உருவாக்கப்படுகின்றன?

நண்பர் K கேட்டிருந்தார்
ஒரு சந்தேகம்,அந்த "thanks friends" மினுமினுக்க செய்கிறீர்களே எப்படி ? Java வில் தானே ? செய்முறை please !! I see lots of animated avatars in various forums, like to create one for me !!

அடடா இதற்கெல்லாம் ஜாவாவை தொந்தரவு செய்யவேண்டாம் சார். இரண்டு மூன்று ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்ட படங்களை (Frames) எடுத்து அவற்றை அடுத்தடுத்து ஓட விட்டால் அது தான் அனிமேட்டட் ஜிப்.நான் மேலே கொடுத்துள்ள உதாரணப்படத்தை பாருங்கள். அந்த ஆறு படங்களையும் தொடர்ச்சியாய் பட்பட்டென ஓட விட்டால் அழாய் அது உயிர்பெற்று கண்மூடி திறக்கும்.எல்லாம் அந்தக்கால திரைப்படச் சுருள் டெக்னிக் தான்.

ஏற்கெனவெ உங்களிடம் இருக்கும் ஒரு Animated Gif கோப்பிலுள்ள அனைத்து ஃப்ரேம்களையும் பிரித்தெடுக்க இந்த இலவச Gif Splitter-ஐ பயன்படுத்துங்கள்.மிகச்சிறிய எளிய மென்பொருள்.என் பேவரைட்.
Extract frames from a Gif file
Homepage
http://www.xoyosoft.com/gs/index.htm
Direct Download Link
http://www.xoyosoft.com/gs/download/gs.zip

இருக்கின்ற சில ஃப்ரேம் படங்களை ஒன்றிணைத்து வித விதமாக Animated Gif நீங்கள் சொந்தமாய் செய்ய ஆசைப்பட்டால் கீழ்கண்ட மென்பொருளை முயன்று பாருங்கள்.
பல வசதிகளுடன் கூடிய இலவச மென்பொருள்.
Create and edit animated gif.
http://www.benetonfilms.com/bmg.zip

அனிமேட்டட் Gif உருவாக்க இன்னொரு குட்டியூண்டு இலவச மென்பொருள்
Homepage
http://www.whitsoftdev.com/unfreez/
Direct Download Link
http://www.whitsoftdev.com/files/unfreez.zip

ஆக மின்னுவதெல்லாம் ஜாவா அல்ல :)

ரமணிச்சந்திரன் அவர்களின் நாவல் "தென்றல் வீசி வரவேண்டும்" இங்கே சிறு மென் புத்தகமாக. Ramani Chandran - Thendral Veesi Vara Vendum Novel in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



3 comments:

Sathis @ sars said...

வணக்கம் திரு. பி.கே.பி அவர்களே,

உங்களுடைய அனைத்து வலைப்பதிவுகளையும் தவறாமல் படித்துவருகின்றேன். உங்களுடைய சமுதாய நற்பணிக்கு எனது வாழ்த்துக்கள்.
என் பெயர் சதிஸ், நான் ஒரு தமிழ் வழிக்கல்வி பாடத்திட்டத்தில் பயின்று இன்று நான் ஒரு கணிப்பொறியாளராக(SAP BW) பணியாற்றி வருகிறேன். இருப்பினும் என்னால் சரி வர ஆங்கிலம் பேச இயலவில்லை. இதனால் பல வாய்ப்புகளை இழந்துள்ளேன். ஆதலால் எளிய வகையில் ஆங்கிலம் பேச பழக வழிவகை (மென்பொருள்) இருந்தால் கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதை செய்தால் எனக்கு மட்டும் அல்ல என்போன்ற மக்களுக்கு இது ஒரு பெரிய உதவியாக இருக்கும்.

நன்றி
சதிஸ்

Now I’m using this ‘UNICODE TAMIL’ Font

வடுவூர் குமார் said...

ஆமாம் இந்த அனிமேஷனை எப்படி வலைப்பூக்கள் பொரொபைலில் போடுவது?
அங்கு படம் மட்டுமே ஏற்றுமாறு இருக்கிறது.
டெம்பிளேட் செட்டிங்கில் மாற்றனுமா? எப்படி?
பல வற்றை படிச்சாலும் மண்டையில் ஏறவில்லை.

ceebezee said...

Mikka nanri, PKP. Minnunuvathellam java alla !! Unarnthen en pizhaiyay. kanini thiraiyil oduvathelam GIF animated than!!

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்