உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, May 07, 2008

செயல் நினைவூட்டி

ஒருமுறை மறந்து பாருங்கள்.அப்புறம் ஒருகாலமும் உங்கள் மனைவியின் பிறந்தநாளை நீங்கள் மறக்கமாட்டீர்கள். இப்படியெல்லாம் ஜோக்கடிப்பர். நினைவு வைத்துக்கொள்ள இதுமாதிரி பிறந்தநாள் ,திருமணநாள் போன்ற மைல்கல் நாட்கள் மட்டுமல்லாமல், அன்றாடம் அநேக விஷயங்கள் கூட செய்ய நினைப்போம். மறந்துவிடுவோம். முன்மாதிரியல்லாமல் சராசரி மனிதனுக்கு இப்போது ஏகப்பட்ட கடமைகள் தூங்கப்போகுமுன் மறக்காமல் செய்ய வேண்டியிருக்கின்றது.

சமயத்துக்கு கிரெடிட்கார்டு கடனுக்கு காசுகட்டணும். முன்பெல்லாம் இத்தொல்லை கிடையாது.
சமயத்துக்கு கார் கடனுக்கு காசுகட்டணும்.முன்பெல்லாம் இத்தொல்லை கிடையாது.
சமயத்துக்கு போனுக்கு காசுகட்டணும்.முன்பெல்லாம் இத்தொல்லை கிடையாது.
சமயத்துக்கு இண்டர்நெட்டுக்கு காசுகட்டணும்.முன்பெல்லாம் இத்தொல்லை கிடையாது.
சமயத்துக்கு வீட்டு கடனுக்கு காசுகட்டணும்.முன்பெல்லாம் இத்தொல்லை கிடையாது.
இப்படி அநேக புதுத் தொல்லைகள். அவ்வளவு எளிதாய் மறக்க முடியாதவை.
இது போக அலுவலகத்தில் தாறுமாறாய் அநேகப் பணிகள்.அதிமுக்கியம் முதல் சர்வசாதாரணம் வரை.

நண்பர் முருகேஷ் கேட்டிருந்தார்.
Hello Mr. PKP,
I'm searching for a Reminder (for birthdays, to-do list items) software (especially freeware). If you already know about some utility, can you let me know?
Thanks in Advance
Murugesh


அது அதுக்கு சமயத்தை முன்கூட்டியே குறித்து வைத்துவிட்டால் அந்தந்த வேலை அந்தந்த சமயத்தில் சரியாய் நடைபெற்றுவிடும் என்று ஒரு நம்பிக்கை.என்ன அதற்கொரு ரிமைண்டர் வேண்டும், இதுதான் நண்பர் முருகேஷின் எண்ணம்.

எனக்குத் தெரிந்து மென்பொருள்களில் மூன்று வகை நினைவூட்டிகள் உள்ளன.

ஒன்று. இம்மென்பொருளை உங்கள் கணிணியில் நிறுவிவிடவேண்டும்.நீங்கள் கணிணில் நுழைந்ததும் அன்றைய தின அலுவல்களை உங்களுக்கு இது நினைவூட்டிக் கொண்டேயிருக்கும். அதற்கு உதாரணம் கீழ்கண்ட மென்பொருள்.
Rainlendar

இரண்டாவது. நீங்கள் ஃபயர்பாக்ஸ் பயன்படுத்தினால் அதன் Extension-ஆக இந்த நினைவூட்டி மென்பொருளை பயன்படுத்தமுடியும். பிரச்சனை என்னவென்றால் ஃபயர்பாக்ஸ் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். அப்போது தான் இவ்வகை மென்பொருள்களால் உங்களை உஷார் படுத்தமுடியும்.
ReminderFox

மூன்றாவது வகை ஆன்லைன் நினைவூட்டிகள். ஆன்லைனில் நுழைந்து உங்கள் பணிகளை வரிசைப்படுத்திவிட்டால் சமயம் வரும் போது email வழி அல்லது instant messenger வழி அல்லது SMS வழி உங்களுக்கு reminders வந்து கொண்டேயிருக்கும். அதற்கு உதாரணம் கீழே.
http://www.rememberthemilk.com

மூன்றில் உங்களுக்கு உகந்ததை நீங்கள் தான் தெரிவு வேண்டும். எடுத்தாலும் எடுத்தீர்கள் நல்லதொரு முடிவு எடுத்தீர்கள். ஜமாயுங்க முருகேஷ்!!

ரமணிச்சந்திரன் அவர்களின் நாவல் "காற்று வெளியிடை கண்ணம்மா" இங்கே சிறு மென் புத்தகமாக. Ramani Chandran Kaatru Veliyidai kannamma Novel in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories8 comments:

Thameemul Ansari said...

Dear Mr.PKP Sir,
Actually I am thinking to ask you about the reminder, but Mr. Murugesh asked you b4 me. Really this is very very useful and vital software for all, expecially secretaries and project planners. Thank you very much Mr.Pkp and also Mr.Murugesh.
One more request please, is there any advanced ebook to "Learn English" in Tamil?
Thank you....!
Thameem

முருகேஷ் said...

PKP Sir,


I should thank you very much. I have picked Rainlendar. Some of my friends also looking for this utility. I will share your page's link with them.

Many Thanks


Murugesh

Anonymous said...

Hi PKP,

Ur blog is cool... learned a lot from your blog, Need some advice from you for joining gold quest, could you please keep one post for gold quest....?

2) Could you please from where we can do online jobs... like website designing or some thing like that.. what to know for part time... looks i waste so much of time on inteenet simply... give some tips for earning plz....

3) How to make a blog more popular like ur blog....! give some tips.

waiting for ur reply....

அதிரை தங்க செல்வராஜன் said...

அன்பு நண்பரே,
செயல் நினைவூட்டி உபயோகிக்க ஆரம்பித்து விட்டேன், நன்றி.

அதிரை தங்க செல்வராஜன்.

Anonymous said...

You can use google calendar also if you are comfortable.

Anonymous said...

PKP avarkaley,

Seyal ninaivutti payanullathai irukirathu. Mikka nandri. I am looking for a free digital diary. Daily activities store pannuvatharku vasathiyaka... ethavathu irundhal sollungalen. Please - Shanraj

வடுவூர் குமார் said...

மூளையின் ஒரு சிறு பகுதியை இதனிடம் இழந்துவிட்டேன். :-)

Anonymous said...

வணக்கம் Pkp சார், நான் உங்களது வலைத்தளத்தை நாள்தோறும் படித்து வருகிறேன்.. ரொம்ப அருமை, பயனுள்ளது.../ ஒரு கேள்வி. gmail ல் yahoo mail யை போன்று Folder நிறுவ முடியுமா ? /

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்