உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, May 29, 2008

நாளை முதல்...

மெமோரியல் டே விடுமுறைநாட்கள் முடிந்து மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தால் அதிர்ச்சி. ஏகப்பட்ட நண்பர்களின் கேள்விகள் மின்னஞ்சல்களாகவும் பின்னூட்டங்களாகவும் அடுக்கியிருந்தன. சிலரின் கேள்விகள் ஏற்கனவே கேட்கப்பட்டன, சில கேள்விகள் அவ்வளவு தெளிவாய் இல்லை, சில கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க நான் மறுகேள்விகள் கேட்க வேண்டிய சூழல். அப்படியே நான் சில கேள்விகளுக்கு இங்கு பதிலளித்தாலும் பல கேள்விகள் விடையறுக்கப்படாமல் போகும் நிலை. அத்தனை பேருக்கும் பதிலளிக்க முயன்றால் எனது அனைத்து பதிவுகளும் "கேள்வி-பதில்" பதிவுகளாகவே முடியும் கொடுமை.எழுத ஆசைப்பட்டு விடப்பட்டு போன, விடப்பட்டு போய்கொண்டிருக்கும் விஷயங்களை பதிவுகளாக எழுத முடியா இம்சை.

இதற்கெல்லாம் ஒரு தீர்வாகத் தான் இம்முடிவை நான் எடுக்கவேண்டி வந்தது. அதாவது நாளை முதல் நான் என் பதிவுகளில் பதிலளிக்கப்போவதில்லை.உங்கள் கேள்விகளை எனது புதிய முயற்சியான PKP Forum விக்கி மன்றத்தில் விட்டுச் செல்லுங்கள்.நானும் பதிலளிப்பேன். கெட்டிக்கார நண்பர்கள் பலரும் பதிலளிக்கலாம். அடிமட்ட கேள்விகள் முதல் அட்டகாச கேள்விகள் வரை நீங்கள் கேட்கலாம். உங்கள் கேள்விக்கு நான் பதிலளிக்காவிட்டால் எனக்கு பதில் தெரியவில்லை என்று தான் அர்த்தமாகும். உங்களை எனக்கு பிடிக்கவில்லை என்று அர்த்தமில்லை.முதல் ஆளாக நண்பர் ரிஷான் உள்ளே நுழைந்து "உங்கள் புதுமுயற்சியைப் பார்த்தேன்.மிகவும் அருமை.இனி எங்களால் மிக இலகுவாகக் கேள்விகள் கேட்கலாம்.பிடித்தமானவற்றைப் பகிர்ந்து கொள்ளலாம்.பாராட்டுக்கள்.உங்கள் முயற்சிகள் அனைத்தும் இன்பகரமாக ஈடேற வாழ்த்துக்கள் நண்பரே :)" எனக்கூறிய இருக்கின்றார். நன்றிகள் பல.

இதோ அந்த மன்றத்திற்கான சுட்டி.
http://wiki.pkp.in/forum:start

அலைப்பேசியை ஆரோக்கியமாக உபயோகிக்க இடது காதை பயன்படுத்துங்கள் என்ற அப்பல்லோவின் அறிவுரை பற்றிய எனது கடந்த பதிவுக்கு வந்த நண்பர் K-யின் எதிர்வினை இங்கே.

"திரு PKP,
நாம் ஏப்ரல் மாதத்தை தாண்டி மே மாதத்தில் அல்லவா இருக்கிறோம்.யாரோ மிக அழகாக ஒரு பூ கூடையையே தலையில் சூடி இருக்கிறார்கள்.
All cell phones emit EMR (Electro Magnetic Radiation), but the cell phone radiation to injure the brain cells will need more than 10 hours of constant usage. There is definitively no right ear or left ear preference. It is equally damaging.நாம் தினம் தினம் உபயோகிக்கும் micro wave oven கூட ஆபத்து தான். because it too emits radiation.
இந்தியாவில் இதைப்பற்றிய பொது அறிவு கம்மிதான். There are so many antenna on so many buildings in a street. These transmitters are a real health hazard. In UK and USA there are stringent rules regarding setting up of these cell phones repeater stations amidst residential houses. In fact it is banned. There are hand held meters to measure these radiations. You can literally see a haze of radiations being emitted by these antennas.
In the apartment complex in which i live in chennai, the association readied a proposal to permit construction of one such antenna on the roof of our apartments for a rent of Rs 10000/-PM. I stringently opposed this and showed the people evidence of the ill effects of EMR emitted by these antennas, and luckily sanity prevailed. The proposal was dropped and the antenna moved about 10 buildings away.
I discreetly enquired about this with those people, and they say when the peak load of these antennas were higher during day times, there were higher incidences of headaches, nausea and restlessness among susceptible individuals in that apartment complex. EMR does not affect everyone in the same way it affects one person. There are person to person differences. Must write to the Govt one day to prevent these antennas being haphazardly constructed in our cities ."


நண்பர் VAIRA VARIGAL கேட்டிருந்தார்
நண்பர் பி கே பி அவர்களுக்கு அன்பு வணக்கம் ...விண்டோஸ் xபியில் டாஸ் மோடில் பாஸ்வேட் தயாரிப்பது எப்படி? தயவு செய்து கூறவும்

net user -கட்டளையை பயன்படுத்தலாம்.
எ.கா
cd\
cd windows\system32
net user pkp p@ssw0rd

இங்கே pkp பயனர் பெயர்.
பக்கத்தில் யாரோ நின்றுகொண்டிருக்கிறார்கள்,அவர்கள் உங்கள் கடவு சொல்லை தெரிந்து கொள்ளக்கூடாது வெனில்..
net user *

எ.கா
net user pkp *
> Type a password for the user:
> Confirm the password:

நண்பர் schumaker கேட்டிருந்தார்
Dear Mr.PKP,... Can you please clear my doubt. Can we download a flash file from a website? can we seperate it as Audio and video? I tried to download from Realplayer 11.Its downloaded as .swf file. But i couldn't play that file. Please help me.

flash அல்லது swf கோப்புகளை ரியல்பிளயர் கொண்டு இறக்கம் செய்யலாம். ஆனால் அதை ஓட விட எதாவதொரு பிரவுசரைத் தான் பயன்படுத்த வேண்டும்.Open with... பயன்படுத்தி அதை திறக்கலாம். ரியல்பிளயரால் அதை ஓட விட முடியாது.நீங்கள் பிளாஷ்பிளயர் இங்கேஇருந்து இறக்கம் செய்து கொள்ளலாம்.
பிளாஷ் கோப்பிலிருந்து ஆடியோவை mp3 ஆக பிரித்தெடுக்க எனது அபிமான இலவச சூப்பர் மென்பொருளை பயன்படுத்துங்கள்.

நண்பர் வால்பையன் கேட்டிருந்தார்.
அன்பர் பி.கே.பிக்கு.exe பைல்களை மெயிலில் ஏற்றி அனுப்பமுடியவில்லை வேறெதுவும் வழியிருகிறதா

உங்களிடமிருக்கும் .exe கோப்பை சும்மாவாச்சும் .doc என தற்காலிக பெயர்மாற்றம் செய்து மின்னஞ்சல் செய்யுங்கள்.தவறாமல் மறுமுனை நண்பரை மீண்டும் .exe ஆக அதை பெயர்மாற்றம் செய்ய சொல்லிவிடுங்கள்.அவ்வளவுதான்.

நண்பர் இளைய கவி கேட்டிருந்தார்
மதிபிற்குரிய பிகேபி அவர்களே,Related Posts by Categories Gadget ஐ எவ்வாறு நிறுவுவது என சொல்ல முடியுமா ?

கீழ்கண்ட சுட்டி உங்களுக்கு உதவும்.
Related posts gadget on blogger blogspot

நண்பர் venkat கேட்டிருந்தார்
Dear Mr.PKP I forgot my excel file password and how to get it opened? if there is any software kindly let me know.

எனது பழைய "எக்ஸெல் பாஸ்வேர்ட் மறந்து போச்சா?" பதிவு இதற்கு விடையளிக்கிறது.

Let your goal be "Day by Day I am on my way" say it over and over again and you will succeed.


இராதாகிருஷ்ணனின் "நுனிப்புல்" இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Radhakrishnan Nunipul in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



2 comments:

கூடுதுறை said...

அன்புடைய pkp அண்ணா!

தங்களின் http://wiki.pkp.in/forum:start ல் எழுத permisson இல்லை என்று கூறுகிறது.

தயவுசெய்து என்ன செய்திடல் வேண்டும் என்று பதிவில் தெரிவித்தால் அனைவருக்கும் மற்றும் எனக்கும் மிக உதவியாக இருக்கும்

நன்றி

இப்படிக்கு
scssundar

எஸ்.கே said...

//
ஆனால் அதை ஓட விட எதாவதொரு பிரவுசரைத் தான் பயன்படுத்த வேண்டும்.
...நீங்கள் பிளாஷ்பிளயர் இங்கேஇருந்து இறக்கம் செய்து கொள்ளலாம்.
//

நீங்கள் கொடுத்துள்ள சுட்டி இட்டுச் செல்லும் வலைப்பக்கத்தில் கிட்டும் கோப்பு ஓரு உலாவியின் அங்கமாகத்தான் (embeded flash movie player in a browser) செயல்படுமேயன்றி தனித்தியங்கி .swf கோப்பை ஒடவிட இயலாது.

Stand alone swf player-ஆக Irfan View என்னும் படம் பார்க்கும் செயலியை பயன்படுத்தலாம். இதைத் தவிர வேறுபல 3rd party Freeware-கள் கூட இருக்கின்றன.

.flv கோப்பாக இருந்தால் FLV Player என்னும் இலவச செயலியை பரிந்துரைக்கலாம்.

அன்புடன்,

எஸ்.கே

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்