உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in
Showing posts with label QandA. Show all posts
Showing posts with label QandA. Show all posts

Thursday, May 29, 2008

நாளை முதல்...

மெமோரியல் டே விடுமுறைநாட்கள் முடிந்து மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தால் அதிர்ச்சி. ஏகப்பட்ட நண்பர்களின் கேள்விகள் மின்னஞ்சல்களாகவும் பின்னூட்டங்களாகவும் அடுக்கியிருந்தன. சிலரின் கேள்விகள் ஏற்கனவே கேட்கப்பட்டன, சில கேள்விகள் அவ்வளவு தெளிவாய் இல்லை, சில கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க நான் மறுகேள்விகள் கேட்க வேண்டிய சூழல். அப்படியே நான் சில கேள்விகளுக்கு இங்கு பதிலளித்தாலும் பல கேள்விகள் விடையறுக்கப்படாமல் போகும் நிலை. அத்தனை பேருக்கும் பதிலளிக்க முயன்றால் எனது அனைத்து பதிவுகளும் "கேள்வி-பதில்" பதிவுகளாகவே முடியும் கொடுமை.எழுத ஆசைப்பட்டு விடப்பட்டு போன, விடப்பட்டு போய்கொண்டிருக்கும் விஷயங்களை பதிவுகளாக எழுத முடியா இம்சை.

இதற்கெல்லாம் ஒரு தீர்வாகத் தான் இம்முடிவை நான் எடுக்கவேண்டி வந்தது. அதாவது நாளை முதல் நான் என் பதிவுகளில் பதிலளிக்கப்போவதில்லை.உங்கள் கேள்விகளை எனது புதிய முயற்சியான PKP Forum விக்கி மன்றத்தில் விட்டுச் செல்லுங்கள்.நானும் பதிலளிப்பேன். கெட்டிக்கார நண்பர்கள் பலரும் பதிலளிக்கலாம். அடிமட்ட கேள்விகள் முதல் அட்டகாச கேள்விகள் வரை நீங்கள் கேட்கலாம். உங்கள் கேள்விக்கு நான் பதிலளிக்காவிட்டால் எனக்கு பதில் தெரியவில்லை என்று தான் அர்த்தமாகும். உங்களை எனக்கு பிடிக்கவில்லை என்று அர்த்தமில்லை.முதல் ஆளாக நண்பர் ரிஷான் உள்ளே நுழைந்து "உங்கள் புதுமுயற்சியைப் பார்த்தேன்.மிகவும் அருமை.இனி எங்களால் மிக இலகுவாகக் கேள்விகள் கேட்கலாம்.பிடித்தமானவற்றைப் பகிர்ந்து கொள்ளலாம்.பாராட்டுக்கள்.உங்கள் முயற்சிகள் அனைத்தும் இன்பகரமாக ஈடேற வாழ்த்துக்கள் நண்பரே :)" எனக்கூறிய இருக்கின்றார். நன்றிகள் பல.

இதோ அந்த மன்றத்திற்கான சுட்டி.
http://wiki.pkp.in/forum:start

அலைப்பேசியை ஆரோக்கியமாக உபயோகிக்க இடது காதை பயன்படுத்துங்கள் என்ற அப்பல்லோவின் அறிவுரை பற்றிய எனது கடந்த பதிவுக்கு வந்த நண்பர் K-யின் எதிர்வினை இங்கே.

"திரு PKP,
நாம் ஏப்ரல் மாதத்தை தாண்டி மே மாதத்தில் அல்லவா இருக்கிறோம்.யாரோ மிக அழகாக ஒரு பூ கூடையையே தலையில் சூடி இருக்கிறார்கள்.
All cell phones emit EMR (Electro Magnetic Radiation), but the cell phone radiation to injure the brain cells will need more than 10 hours of constant usage. There is definitively no right ear or left ear preference. It is equally damaging.நாம் தினம் தினம் உபயோகிக்கும் micro wave oven கூட ஆபத்து தான். because it too emits radiation.
இந்தியாவில் இதைப்பற்றிய பொது அறிவு கம்மிதான். There are so many antenna on so many buildings in a street. These transmitters are a real health hazard. In UK and USA there are stringent rules regarding setting up of these cell phones repeater stations amidst residential houses. In fact it is banned. There are hand held meters to measure these radiations. You can literally see a haze of radiations being emitted by these antennas.
In the apartment complex in which i live in chennai, the association readied a proposal to permit construction of one such antenna on the roof of our apartments for a rent of Rs 10000/-PM. I stringently opposed this and showed the people evidence of the ill effects of EMR emitted by these antennas, and luckily sanity prevailed. The proposal was dropped and the antenna moved about 10 buildings away.
I discreetly enquired about this with those people, and they say when the peak load of these antennas were higher during day times, there were higher incidences of headaches, nausea and restlessness among susceptible individuals in that apartment complex. EMR does not affect everyone in the same way it affects one person. There are person to person differences. Must write to the Govt one day to prevent these antennas being haphazardly constructed in our cities ."


நண்பர் VAIRA VARIGAL கேட்டிருந்தார்
நண்பர் பி கே பி அவர்களுக்கு அன்பு வணக்கம் ...விண்டோஸ் xபியில் டாஸ் மோடில் பாஸ்வேட் தயாரிப்பது எப்படி? தயவு செய்து கூறவும்

net user -கட்டளையை பயன்படுத்தலாம்.
எ.கா
cd\
cd windows\system32
net user pkp p@ssw0rd

இங்கே pkp பயனர் பெயர்.
பக்கத்தில் யாரோ நின்றுகொண்டிருக்கிறார்கள்,அவர்கள் உங்கள் கடவு சொல்லை தெரிந்து கொள்ளக்கூடாது வெனில்..
net user *

எ.கா
net user pkp *
> Type a password for the user:
> Confirm the password:

நண்பர் schumaker கேட்டிருந்தார்
Dear Mr.PKP,... Can you please clear my doubt. Can we download a flash file from a website? can we seperate it as Audio and video? I tried to download from Realplayer 11.Its downloaded as .swf file. But i couldn't play that file. Please help me.

flash அல்லது swf கோப்புகளை ரியல்பிளயர் கொண்டு இறக்கம் செய்யலாம். ஆனால் அதை ஓட விட எதாவதொரு பிரவுசரைத் தான் பயன்படுத்த வேண்டும்.Open with... பயன்படுத்தி அதை திறக்கலாம். ரியல்பிளயரால் அதை ஓட விட முடியாது.நீங்கள் பிளாஷ்பிளயர் இங்கேஇருந்து இறக்கம் செய்து கொள்ளலாம்.
பிளாஷ் கோப்பிலிருந்து ஆடியோவை mp3 ஆக பிரித்தெடுக்க எனது அபிமான இலவச சூப்பர் மென்பொருளை பயன்படுத்துங்கள்.

நண்பர் வால்பையன் கேட்டிருந்தார்.
அன்பர் பி.கே.பிக்கு.exe பைல்களை மெயிலில் ஏற்றி அனுப்பமுடியவில்லை வேறெதுவும் வழியிருகிறதா

உங்களிடமிருக்கும் .exe கோப்பை சும்மாவாச்சும் .doc என தற்காலிக பெயர்மாற்றம் செய்து மின்னஞ்சல் செய்யுங்கள்.தவறாமல் மறுமுனை நண்பரை மீண்டும் .exe ஆக அதை பெயர்மாற்றம் செய்ய சொல்லிவிடுங்கள்.அவ்வளவுதான்.

நண்பர் இளைய கவி கேட்டிருந்தார்
மதிபிற்குரிய பிகேபி அவர்களே,Related Posts by Categories Gadget ஐ எவ்வாறு நிறுவுவது என சொல்ல முடியுமா ?

கீழ்கண்ட சுட்டி உங்களுக்கு உதவும்.
Related posts gadget on blogger blogspot

நண்பர் venkat கேட்டிருந்தார்
Dear Mr.PKP I forgot my excel file password and how to get it opened? if there is any software kindly let me know.

எனது பழைய "எக்ஸெல் பாஸ்வேர்ட் மறந்து போச்சா?" பதிவு இதற்கு விடையளிக்கிறது.

Let your goal be "Day by Day I am on my way" say it over and over again and you will succeed.


இராதாகிருஷ்ணனின் "நுனிப்புல்" இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Radhakrishnan Nunipul in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Monday, May 19, 2008

காற்றின் முகவரி

சீனப்பெரும் தலைவர் மாவோ சொன்னதாகச் சொல்வார்கள் "மரம் சும்மா இருந்தாலும் காற்று அதை சும்மா இருக்கவிடுவதில்லை"என்று.என் கதையும் இப்போது அப்படித்தான்.PKP என்றாலே அதன் விரிவாக்கம் "பல கேள்விப் பதில்கள்" என்றாகிவிட்டது.என்னப் பண்ணுவது? அடுத்தடுத்தாய் கேள்விகள்.காற்று விடவில்லையே.

நண்பர் சங்கர் அடிக்கடி என்னிடம் கேட்பதுண்டு.நீங்கள் யார் உங்களை பற்றிய விவரம் தேவை என்று.இண்டர்நெட் உலகில் நான் வெற்றிகரமாக முகமூடி போட்டுக் கொண்டிருக்கின்றேன். என்னை யாரும் கண்டே பிடிக்கமுடியாதுவென நான் கூறுவேனாயின் என்னைப்போல் முட்டாள் யாரும் இங்கு இருக்கவே முடியாது. என்னை வாசித்து வருபவர்கள் பலருக்கும் நான் யார், என்ன படித்திருக்கின்றேன்,உத்தேசமாக எங்கிருக்கின்றேன், என்ன பணியில் இருக்கின்றேன்,ஏன் சிலரிடம் என் ஒளிப்படம் கூட இருக்கலாம்.Im not trying to hide myself.But I dont like to give importance to that.அவ்வளவே.

Whois-களஞ்சியத்தில் வெப்சைட் பெயர் டைப் செய்தாலே போதும். அந்த வெப்சைட்டுக்கு சொந்தக்காரர் யார், அவர் பெயர் மற்றும் வீட்டு முகவரி வரைக்கும் அது கொடுத்துவிடும்.(அதையும் மறைக்க பிரைவசி வசதிகள் உண்டு என்பது வேறு விஷயம்) ஆனால் அதிலிருக்கும் தகவல் உண்மையா பொய்யா என்பது ஆண்டவனுக்குத்தான் தெரியும்.

நண்பர் எம்.ரிஷான் செரீப்-ன் பதில் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது
"நம்முடைய நல்லதொரு நண்பராக புனைப்பெயரில் வலம் வந்துகொண்டிருக்கும் அவரைப் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் எதற்கு நண்பரே ?
காற்றின் முகவரி பார்த்தா சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்?
அவர் சேவை தொடரட்டும்.தேவைப்படும் பட்சத்தில் அவர் பற்றிய தகவல்களை அவரே தருவார். :)"


அட இங்கும் அதே காற்று!!! Thanks Sankar!! Thanks Rishan Sherif! You two are great. :)

சரி விஷயத்துக்கு வருவோம்.

நண்பர் K கேட்டிருந்தார்
திரு PKP, நானும் blog எழுதப்போறேன் என்று உங்கள் நண்பர் சொன்னதும், மனதுக்குள் சிரித்தேன். It is a damn difficult job to write a blog. I am a physician in chennai with 25 years of experience..... Started a blog about diabetes, but couldn't carry it on for more than two weeks or so. it is tough.
I am somewhat a self trained computer junkie. I have the latest asus P5k mobo, xfx 9800 GTX card, 4 GB ram, 2 HDD in raid 1, vista ultimate, bios junkie, a seagate 500GB ext HDD.
I had a problemn in mbr and called up microsoft call center, those people cannot even identify their right hand from left. Such poor standards,was transferred to a tech man and he said sir, i am well versed in xp only sorry i cannot help you in vista. பாவம் மக்கள்!!! கேள்விகேட்போரும், பதிலளிப்பவரும் தான்.
I have lots of spare time, medical related activities what to do, other than coding, transcription and blogging. கேணத்தனமான கெள்வி ,எனக்கே புரிகிறது, இருந்தாலும் பதில் சொல்லுங்கள் நண்பரே!!!

கடந்த பல வருடங்களாக மைக்ரோசாப்டின் மென்பொருள்கள் பலவற்றையும் கையாளும் வாய்ப்புகள் கிட்டியவன் என்கின்ற முறையில் நான் படித்து மிகவும் ரசித்த மிகப் பழைய நகைச்சுவை கதை ஒன்று இங்கே.

குட்டிவிமானம் ஒன்று சில முக்கிய அலுவலக பிரநிதிகளை ஏற்றிக்கொண்டு மைக்ரோசாப்டின் தலைமையகம் உள்ள சியாட்டிலின் மீது பறந்து கொண்டிருந்ததாம்.பயங்கர பனிமூட்டம் காரணமாக விமானியால் தரையை பார்க்க இயலவில்லை.

ஆனால் பத்திரமாக விமானத்தை தரை இறக்கியாக வேண்டும். விமானம் இப்போது எவ்விடத்தில் பறந்து கொண்டிருக்கின்றதுவெனக் கூட விமானிக்கு தெரியவில்லை.தாழ பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து விமானி உரக்க கத்தினார் "நான் இப்போது எங்கே இருக்கின்றேன்?"

கீழே தரையிலிருந்து ஒருவன் உரக்க பதிலளித்தான் "நீர் குட்டி விமானத்தில் பறந்து கொண்டிருக்கின்றீர்" என்று.

குஷி பற்றிக்கொண்டது விமானிக்கு. 275 டிகிரி அப்படியே திரும்பி 5 மைல்தூரம் போய் குருட்டுத்தனமாய் ஆனால் சரியாய் விமானத்தை தரையிறக்கினார் அந்த விமானி.

பயணிகள் அத்தனை பேருக்கும் அத்தனை ஆச்சரியம்.கேட்டார்கள் "அதெப்படி சரியாய் தரையிறக்கினீர்கள்?".

விமானி பதிலளித்தார்.
"Quite easy, I asked the guy in that building a simple question. The answer he gave me was 100 percent correct but absolutely useless, therefore, that must be Microsoft's support office and from there the airport is just five miles due East."

இந்த நகைச்சுவையை நான் அப்படி ரசிக்கக் காரணம் அதிலுள்ள நிதர்சனமான உண்மை. மைக்ரோசாப்டின் காற்றுபட்டு காற்றுபட்டு கடைசியில் நான் கூட என்னிடம் கேள்விகள் கேட்பவர்களுக்கு இதுமாதிரியான "சரியான அதேவேளையில் பயனற்ற" பதில்களையே அளிக்கும் நிலைமைக்கு ஆகிவிட்டேன்.எல்லாம் ஒரு புரொபசனல் சம்மாளிபிக்கேஷன்ஸ் தான். முடியாதுவென்பதை அப்படி ஒரு சாதுர்யமாய் சொல்லுவார்கள். அதுவும் ஒரு திறமை தான். அந்த வகையில் மைக்ரோசாப்டிடமிருந்து உங்களுக்கு கிடைத்தது ஒரு மோசமான அனுபவமே. :)

நீங்கள் கேட்ட "உபயோகமான பொழுதுபோக்கை" பொறுத்தவரையில் வலைப்பதிவதையே தொடர்ந்திருக்கலாமென்பேன். துரதிஷ்டமாக அதனால் பலன் உடனே கிடைப்பதில்லை. ரொம்ப நாள் பிடிக்கும். இன்னொன்று Freelance writer-ஆக எழுதுதல். நிறைய படித்தால் நிறைய எழுதலாம். நான் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. ஒன்றிரண்டு சூப்பர் ஹிட் மெடிக்கல் ஆர்டிக்கிள்கள் படைத்தால் போதும். அது உங்கள் வலைப்பூவிற்கு பிரமாண்டமான டிராபிக்குகளை உருவாக்கிக்கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. தொடர்ந்து எழுதலாம்.
முக்கியமாய் அமெரிக்க லைசென்ஸ் தேர்வுகளுக்காக தங்களை தயார்படுத்தும் இளம்மருத்துவர்கள், செவிலிகளுக்கு உதவும் வகையான கட்டுரைகள், வீடியோக்கள் தயார் செய்து வெளியிடலாம். போட்டிகள் இருக்கும் தான். ஆனால் தனிநபர் கவனிப்பு இருக்கும் போது உதவி கேட்டு அதிகம் பேர் வருவார்கள் என நம்புகின்றேன். இவை இந்தியாவிலும் இப்போது பெருத்துவிட்டனவென போலும்.
இந்த வகையில் தான் ஆன்லைன் டியூசன் வகையும். இன்றைக்கு இருக்கும் அகலப்பட்டை இணைப்பில் வீடியோ ஆடியோ கான்ஃபெரன்சிங் போட்டு அயல்நாட்டு மாணவர்களுக்கு மெடிக்கல் பாடங்களில் பாடம் எடுக்கலாம். சந்தேகங்கள் தீர்த்துவைக்கலாம். மாதிரி தேர்வுகள் நடத்தலாம். இப்படி வானமே எல்லை. ஆனாலும் என்னப்பண்ணுவது அதற்கு வியர்வை அல்லவா விலை. நான் சொல்லியவற்றில் தவறுகள் இருக்கலாம்.என்னுடைய குறுகிய மூளைக்கு எட்டிய சிலவற்றை சொன்னேன்.சிகரங்களை எட்டிப்பிடிக்க வாழ்த்துக்கள்.

நண்பர் Nimalan கேட்டிருந்தார்
நண்பா windows XPயில் password மறந்து போய் விட்டால் C: உள்ளவற்றை எப்படி எடுப்பது password உடைப்பது சாத்தியமா? அப்படியானால் அதன் வழி என்ன என்பதை கூறுவீர்ளா? என் நண்பர் ஒருவர் password மறந்து விட்டு தவிக்கிறார் நண்பர் ஒரு துன்பம் என்றால் அது எமக்கும்தானே என நண்பா

எனது பழையதொரு பதிவான "அட்மின் பாஸ்வேர்ட் மறந்துபோனால்"-ஐ படித்து பாருங்களேன்.It works!!

நண்பர் Samuel கேட்டிருந்தார்
Dear PKP,
I run a small non profit organisation in Singapore to help migrant workers. A fax machine is out of question, so I seek your assistance in guiding me to send and receive faxes over the internet. I have a 512 kpbs broadband internet connection and a windows pc. Your help is much appreciated.Thanks


நண்பரே இங்கு ஒரு சுட்டியைக் கொடுத்துள்ளேன்.அதை சொடுக்கி ஒரு நோட்டமிட்டு பாருங்கள்.உங்களுக்கு பொருந்துமாயின் உபயோகித்துப்பாருங்கள்.நீங்கள் சிங்கப்பூரிலுள்ளதால் தான் இச்சுட்டி.
http://www.pfingo.com
இதுவே நீங்கள் அமெரிக்காவிலிருந்திருந்தால் கீழ்கண்ட சுட்டியை கொடுத்திருப்பேன்.
http://drop.io/fax

நண்பர் அமான் கேட்டிருந்தார்.
அன்பு நண்பர் பிகேபிக்கு Yahoo Messengerல் View Proile இருப்பது போல Gmail Google talkல் இல்லையே ஏன்?

அமான்! Google talk-ல் அது ஒரு குறை தான். நீங்கள் கூகிள் டாக்கில் இருக்கும் போது உங்கள் நண்பர் மேல் "சுட்டெலியை" வைத்தால் அது அந்த நண்பர் பற்றிய சில விவரங்களை மட்டுமே சொல்லும்.இதை Profile cards என்பார்கள். ஒரு வேளை அந்நபர் orkut-காரர் எனில் "View orkut profile"என்று ஒரு சுட்டி வரும்.அச்சுட்டியை கிள்ளி இன்னும் தெளிவாய் அவர் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இதைச் சொல்லும்போது இங்கு இன்னொரு விஷயமும் சொன்னால் தேவலாம் போல் தோன்றுகிறது.திருமதி சோனியா காந்தி பற்றி விவகாரமாய் ஆர்குட்டில் எழுதிய வட இந்திய கம்ப்யூட்டர் வல்லுனர் ஒருவரை பிடித்து நம் போலீசார் நேற்று உள்ளே தள்ளியிருக்கின்றார்கள்.இனிமேல் தட்டச்சும்போதும் கொஞ்சம் கூடுதல் கவனமாயிருக்க வேண்டுமாக்கும்.More detail here.

நண்பர் Thanga கேட்டிருந்தார்
அன்பு நண்பரே,
மீன்டும் உதவி கோரித்தான். என்னுடைய பழைய டாக்குமென்ட்ஸ் எல்லாம் லோட்டஸ் 123 யில் உள்ளது. அதை எக்ஸலில் மாற்ற இலவச ஸாப்டுவேர் உள்ளதா? நான் டவுன்லோட் செய்த ஸாப்டுவேர் சில வரிகளை மட்டுமே மாற்றித் தருகிறது.ஏதும் வழி இருந்தால் சொல்லுங்களேன். நன்றி அன்புடன்


உங்கள் கோப்புகளெல்லாம் .123 extension வடிவில் இருக்கின்றனவென நினைக்கின்றேன்.
உங்கள் கோப்புகளை Lotus 1-2-3 வழியாக *.wk4-ஆக Save as செய்தாலே போதும்.
எக்செலால் .wk4 கோப்புகளை படிக்க இயலுமல்லவா?

ஆண் பெண் குழந்தைகளின் செல்லப்பெயர்கள் தமிழில் இங்கே சிறு மென் பொருளாக. Tamil Baby Boy Girl Names software Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Wednesday, May 14, 2008

உங்கள் கேள்விக்கு

நண்பர் அதிரை அபூபக்கர் கேட்டிருந்தார்.
வணக்கம் Pkp சார், நான் உங்களது வலைத்தளத்தை நாள்தோறும் படித்து வருகிறேன்.. ரொம்ப அருமை, பயனுள்ளது.../ ஒரு கேள்வி. gmail ல் yahoo mail யை போன்று Folder நிறுவ முடியுமா ? /

Gmail-ல் எனக்கு பிடிக்காத இரண்டு விஷயங்கள். ஒன்று அந்த எரிச்சலூட்டும் Conversation mode. இன்னொன்று நீங்கள் கேட்கும் இந்த ஃபோல்டர் வசதியின்மை. கான்வெர்சேசன் மோடை தவிர்க்க வழியே இல்லை. சகித்துத்தான் ஆகவேண்டும். ஃபோல்டருக்கு பதிலாக Label என்று ஒரு வசதியிருக்கின்றது. இதன் மூலம் உங்கள் மின்னஞ்சலை பின்ஒருநாள் பார்வையிட வசதியாய் (ஒரு ஃபோல்டரில் போடுவதற்கு பதிலாக) அழகாய் லேபல் பண்ணி வைத்துக்கொள்ளலாமாம். முயன்று பாருங்கள்.

நண்பர் பாபு கேட்டிருந்தார்.
அன்பு நன்பர் பி கே பி அவர்களுக்கு,
முதலில் ஒரு உதவி: எனக்கு ஜெர்மனியில் இரண்டு வருடம் பணிபுரிய வேண்டியிருக்கிறது. வழக்கம்போல் மொழிப் பிரச்சனை முன்னிற்கிறது.தங்களுக்குத் தெரிந்து ஏதாவது "ஆங்கில வழி ஜெர்மனி மொழி"(English to German) or (Tamil to German)மென் புத்தகம் கிடைத்தால் அளிக்கவும்.மிகவும் உதவியாக இருக்கும்.


உங்களுக்குப் புதுமையான முற்றிலும் மாறுபட்ட ஒரு சுற்றுச்சூழலில் பணிபுரியச் செல்கின்றீர்கள். வாழ்த்துக்கள் பாபு. இதோ நீங்கள் கேட்டது.(Right click and save)

நண்பர் Purushothaman M S கேட்டிருந்தார்.
I am using AIRTEL GPRS in my mobile. any possible to browse website in my laptop by using AIRTEL GPRS Connection. I can connect my mobile with Bluetooth. But
I can't connect internet.


உங்களுக்கு உதவுமென இந்த சுட்டியை கொடுத்துள்ளேன்.
Internet Connection using AirTel GPRS

நண்பர் Nimalan கேட்டிருந்தார்
வணக்கம் pkp நண்பரே நான் கோபி நீங்கள் கூறுவது எமது web side சம்பாதிப்பது பற்றிய தகவல்கள் நான் கேட்பது games முலமாக நாம் விளையாடி win பண்ணி அதன் முலமாக எமது address cheque or credit cad பணம் வறும் என்பதை போல கேள்விப்பட்டேன

நீங்கள் சொல்வது உண்மைதான் கோபி.www.bet365.com போன்ற தளங்கள் இதற்கு பிரபலம்.Gambling என்கின்றார்களே அந்த மாதிரியான சூதாட்டங்கள் தான் அவை. அதுமாதிரியான ஆட்டம் போட துணிவிருந்தால் புகுந்து பார்க்கலாம்.காசினோ, போக்கர் போன்ற விளையாட்டுக்கள் மட்டுமின்றி பெட்டிங்-ல கூட பணம் பண்ணுகின்றார்கள். அடுத்த கிரிக்கெட் ஆட்டத்தில் யார் ஜெயிப்பார்கள் என உங்களுக்கு கணிக்கத் தெரிந்திருந்தால் நன்றாக பணம் பண்ணலாம். பேபால்வழி உங்கள் இந்திய வங்கி கணக்குக்கு பணம் வந்து விடுமாம். விட்டதை பிடிக்கபோகின்றேன் விட்டதை பிடிக்கப்போகின்றேனென விட்டத்தை பிடித்தவர்கள் தான் அதிகம். தமிழில் சரியாய் தான் சூதாட்டம் என்கின்றார்கள், பெயரிலே சூது இருக்கின்றதே. அட்லாண்டிக் சிட்டி போனால் போன கடமைக்கு 10 டாலருக்கு விளையாடுவதோடு என் சூதாட்டம் முடிந்துவிடும். வயசான கிழம்கள் உக்காந்து ஆடும் ஆட்டம் தான் வியப்பைத் தரும்.

நண்பர் Prakash K கேட்டிருந்தார்.
Hi PKP, Could you please from where we can do online jobs... like website designing or some thing like that.. what to know for part time... looks i waste so much of time on inteenet simply... give some tips for earning plz....

நான் முதன் முதலாக இங்கு பரிந்துரைப்பது கிரெய்க்லிஸ்ட் தளம். அதன் சென்னை தளமோ அல்லது பெங்களூர் தளமோ போய் வேலைவாய்ப்புப் பகுதியை பாருங்கள்.நம்மவர்களையாப் பார்த்து தேடுவார்கள்.பெரிய ஃபார்மாலிட்டி இன்றி உடனடியாய் மாட்டும்.
கீழே கிளிக்கி வேட்டையாடலாம்.
http://chennai.craigslist.co.in/web/
http://bangalore.craigslist.co.in/web/

இது தவிர eLance.com, guru.com போன்றவைகளும் Freelancers-களுக்கு வரப்பிரசாதம்.

நண்பர் myilvannan கேட்டிருந்தார்
உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டுள்ளேன், நன்றி. Can u please let me know about the online free diploma courses in film technology...


இலவசமாய் டிப்ளமோவா? இந்த காலத்திலயா?.... கமான்...மயில்வாணன்!! :)

நண்பர் நிஜாம்கான் கேட்டிருந்தார்.
பிகேபி சார் நீண்ட நாட்களுக்கு பிறகு நிஜாம். நான் நெட்வொர்க்கிங் துறையில் இருக்கிறேன்.எனக்கு Windows 2003 ல் Softeware Deployment,Raid concept ஆகியவற்றில் குழப்பம் இருக்கிறது.நீங்கள் ஏற்கனவே வெளியிட்ட windows 2003 ரேபிட்சேர் முறையில் என்னால் டவுன்லோடு செய்ய முடியவில்லை.எனவே அதை PDF முறையில் மறுவெளியீடு செய்யுமாறு வேண்டுகிறேன்.

இதோ இந்த சுடியை சொடுக்குங்கள்.முழுவதும் இறக்கமாக கொஞ்ச நேரம் பிடிக்கும்.(MCSE) - Mastering Windows Server 2003.pdf

நண்பர் மகேஷ் கேட்டிருந்தார்
hi PKP, thanks for giving us valuvable information all fields..
can u please tell me how to download from megaupload as most of the download slot is full or not available from chennai!!
thank u..


இப்போதைக்கு leechz.com மின் MegaUpload Premium Link Generator பயன்படுத்துங்கள்.நல்லா வேலை செய்யுதாம்.(Update: It works great but beware of annoying advertisements. Farouk says "avast! antivirus" signal a virus alert. I dont know why.Waiting for siteadvisor.com report)

நண்பர் Natrajan கேட்டிருந்தார்
Hi PKP
Pl. advise. I have a DVD playing one hour. I can not upload on you tube. I tried yesterday - it took more than TEN hours saying ' uploading' and after TEN HOURS the connection disconnected. Can you advise me.


இதுமாதிரி பெரிய வீடியோக்களுக்கு கூகிள் வீடியோவே என் தெரிவு. Desktop Uploader பயன்படுத்தல் நல்லது.
https://www.google.com/video/upload/UploadInfo

சுஜாதாவின் விக்ரம் நாவல் இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Sujatha Vikram Novel in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Monday, May 05, 2008

தொட்டணைத்தூறும் மணற்கேணி

நாம் ஏற்கனவே இங்கு பேசிய Lyricsplugin சில தமிழ் MP3 பாட்டுகளுக்கும் வேலை செய்கின்றது என நண்பர்
கிருஷ்ணமூர்தியும், நண்பர் படகோட்டியும் உறுதிபடுத்தியுள்ளார்கள். ஆனால் அவை தமிங்கிலீஷில் வருவதாக சொன்னார்கள். "பாட்டை ஓட விட்டவுடன் அது இன்டெர்நெட்டிற்குப் போய்த் தேடுகிறது. அதே சமயம் நீங்களும் பாடல் வரிகளைத் தரலாம். அது இணையத் தளத்தில் போய் சேமித்துவிடும். பிறர் அதே Plug-in ஐ பயன்படுத்தும் போது, தானாகவே பாடல்வரிகள் வரும். செந்தமி்ழ்ப்பேசும் அழகு ஜூலியட் என்ற பாடலை தமிழில் நான் சேமித்திருக்கிறேன். பாடலைக் கேட்டுப் பாருங்கள்." என்கின்றார் நண்பர் படகோட்டி. நன்றி நண்பர்களே!!

நண்பர் Ram Vibhakar கேட்டிருந்தார்
சார், Blogger templates உருவாக்குவது எப்படி ?? இதற்கு கட்டாயம் HTML அல்லது XML தெரிய வேண்டுமா ?? Adobe Flash பயன்படுத்தி நமது வலைப்பூவை அலங்கரிக்க முடியுமா ??

ஓ கண்டிப்பா.. CSS,HTML,XML-ல்லாம் தெரிஞ்சா Blogger template-புதுசு புதுசா உருவாக்கி புகுந்து விளையாடலாம். ஒண்ணுமே தெரியாவிட்டாலும் கொஞ்சம் காமன்சென்ஸ் இருந்தா இருக்கிற வார்ப்புருவையே தட்டி தட்டி மொத்தமா உங்கள் விருப்பத்துக்கு மாற்றி விடலாம். அப்படிதான் என் டெம்ளேட்டும் உருவானது. Adobe Flash எப்போதுமே வலைத்தளங்களுக்கு அழகுதான்.

நண்பர் மதுவதனன் மௌ கேட்டிருந்தார்
பிகேபி சார்,ஒரு உதவி..உங்கள் வலைப்பதிவின் வார்ப்புரு(template)வினை நான் எங்கே பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறான எளிமையான வார்ப்புரு எனக்கு வேண்டும். கூறுவீர்களா..நன்றி

நான் பயன்படுத்துவது சாதாரண Blogspot-ல் இருக்கும் Stretch Denim Light வார்புருதான்.
மேலே நான் சொன்னது போல் தட்டி தட்டி ரொம்ப தட்டி இப்படி ரொம்ப எளிமையா ஆயிட்டுது. :)

நண்பர் Jag கேட்டிருந்தார்
Sir Vanakkam... I am from Tamilnadu, Erode Dt.
I am a regular reader your blog and i am learning useful tips and articles from
your blog..
I need a help from you..
Actually iwish to start a blog for Business Updates, Equity mkts..
I need SENSEX chart and NIFTY chart in my blog which should be automatically
updated by every minute... Kindly give me the link or source for the same so
that i can use it in my blog sir... It will be useful to the readers at the
time reading my contents sir.....
Please help me sir...........


இங்கு நீங்கள் Google Gadgets பயன்படுத்தலாம்.
கீழ்கண்ட சுட்டிக்கு செல்லுங்கள்.
http://www.google.com/ig/directory?synd=open
அப்புறம் "Search Google Gadgets"-ல் Sensex அல்லது BSE அல்லது Nifty என தட்டி தேடுங்கள்.
கிடைக்கும் கேட்ஜெட்களில் விருப்பமானதை தெரிவுசெய்து
"Add to your webpage"-யை தெரிவு செய்யுங்கள்.
பின் விருப்ப நிறம் மற்றும் அளவுகளை சொல்லுங்கள்.
கடைசியில் "Get the code" சொடுக்கி உங்கள் வலைப்பதிவின் side bar-ல் போட்டு கலக்கலாம்.

நண்பர் CK கேட்டிருந்தார்
Hi PKP,
I am a soft skills trainer and I use a Sony handycam (DVD 653E) to shoot
segments of presentations by my trainees and play them to give feedback for
their performance. I also want post some of the clips on youtube so many more
can view it.
However, my problem is, how do I edit the clippings or cut the clippings ? if I
shoot a 30 minute DVD containing 6 speeches of 5minutes each, how do I cut each
segment and upload separately ?
Is there a DVD cutter/editing software that I can get from teh net ?
i hope you can help me out.


VCD-க்களில் .dat-வகை கோப்புகள் இருப்பது போல DVD-க்களில் .vob-வகை கோப்புகள் இருக்கும்.இவற்றை துண்டு துண்டாக பிரிக்க இதோ ஒரு இலவச மென்பொருள்.DVD Knife .உதாரணமாய் இதை வைத்து ஒரு சினிமா டிவிடி-யிலிருந்து பாடல் சீன்களை தனியாய் வெட்டி எடுக்கலாம். வெட்டி கிடைக்கும் துண்டுகளும் .vob வடிவிலேயே
கிடைக்கும். அதை எனது அபிமான சூப்பர் மென்பொருள் பயன்படுத்தி உங்கள் விருப்ப mpeg அல்லது avi வடிவாக்கலாம்.
http://www.vcsoftwares.com/dk.html

நண்பர் வால்பையன் கேட்டிருந்தார்
நண்பர் P.K.P. அவர்களுக்கு DVD பார்மேட் பைல்களை MPEG-aaka மாற்ற எதாவது வழியிருந்தால் சொல்லுங்களேன்.

மேலே சொன்ன எனது அபிமான சூப்பர் மென்பொருள் பயன் படுத்தி உங்கள் டிவிடி-யை உங்கள் விருப்ப mpeg வடிவாக்கலாம்.

நண்பர் வால்பையன் கேட்டிருந்தார்
id=c92ac21897d8b56e61cfa85930dd89a1&url=http%3A%2F%2FBLOGNAME.blogspot.com&num=10"
இதை இணைக்கசொல்லி இருந்தது.
இதில் எந்த இடத்தில் என் பிளாக் அட்ரஸ் இணைக்கவேண்டும்,
முழுவதும் ஆங்கிலத்தில் இருந்ததால் குழப்பமாக இருக்கிறது
(அந்த கோடை இணைந்து அனுப்ப முடியவில்லை)


அந்த கோடில் BLOGNAME-ன்னு இருக்குது பாருங்கள். அதற்கு பதில் உங்கள் வலைப்பெயரின் பெயரை தட்டுங்கள். அவ்வளவே :)


நண்பர் Saran கேட்டிருந்தார்.
Hello PKP,
I am a regular visitor for your page and I only came to know about your site
from S.Ramakrishnan's web page. You seems to be a knowledge tank and best thing
is the effort you are taking to spread the knowledge to the rest of the
community. My heartiest thanks to you.
And I need one more detail. Is there any software which can index the name of
the files of any folder i have. Lets take, I have MP3 or pdf files in a folder.
I need all the names of the folder(index ot content) as a text fils so that i
can get to know what are the files i have in a particular folder. Please let me
know.


"knowledge tank"-ங்கா? அப்படில்லாம் இல்லங்க.
ஊர்புற மைதானங்களில் தெண்டுல்கரை விட பலமடங்கு விளாசும் பசங்க இருக்காங்க. ஆனா நமக்கு என்னமோ தெண்டுல்கரத்தான் தெரியும். அதுதான் உலகம். மேலே நான் போட்டுள்ள படத்தை கூர்ந்து கவனித்தால் தெரியும் Teach-ம் Learn-ம் எப்படி சேர்ந்து வருதுனு. அதனால் தான் தலைப்பிட்டேன் தொட்டணைத்தூறும் மணற்கேணி என்று :)

இப்போ உங்களுக்கான தீர்வு.
"Command prompt"-ஓட விட்டு அந்த குறிப்பிட்ட ஃபோல்டர் போய் (cd-கட்டளை பயன்படுத்தலாம்)
கீழ் கண்ட கட்டளை பயன்படுத்துங்கள்.

dir/b >index.txt

புதிதாய் index.txt என்று ஒரு கோப்பு உருவாகி அதில் நீங்கள் கேட்ட அட்டவணை அப்படியே உருவாகி இருக்கும்.

சொக்கன் அவர்கள் தொகுத்த "பாரதியின் சக்திப் பாடல்கள்" இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Sokkan Bharathiyin Sakthi Paadalkal in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Thursday, May 01, 2008

சில பதில்கள்

பக்கத்திலுள்ள படத்தை பார்த்ததும் ஏதோ சீன மொழில் எழுதியிருக்கின்றது என்று தானே நினைக்கின்றீர்கள். அது தான் இல்லை. சீனாக்காரர்களின் கண் போலவே உங்கள் விழிகளையும் 95 சதவீதம் மூடிக்கொண்டு கூச்சக்கண்ணில் இப்படத்தைப் பாருங்கள். வாவ்....படித்திருப்பீர்களென நினைக்கின்றேன்.

சரி விஷயத்துக்கு வருவொம்.

கடந்த பதிவொன்றில் மீடியா பிளயரில் பாட்டு கேட்பதோடு அதன் வரிகளையும் பார்க்ககூடிய வசதி உள்ளது பற்றி சொல்லியிருந்தேன். நண்பர் Kumaraguruparan "Dear PKP, Media player lyrics was awesome.தமிழ் பாட்டோட லிரிக்ஸ் பாக்குறது நல்லா இருக்கு :-)njoying it.." அப்படின்னு சொல்லியிருந்தார்.எனக்கு ஆச்சரியமாய் போயிற்று.
வாட்!! தமிழ் பாட்டோட லிரிக்ஸீம் தெரியுதா குருபர ஸார்?? சற்று விளக்குங்களேன்.நன்றி.

நண்பர் ரா.கி கேட்டிருந்தார்.
சில தினங்களுக்கு முன், எனது internet service provider, dns number ஐ மாற்றி விட்டார்கள். இதற்கு பின், எந்த பிளாக்ஸ்பாட் பதிவுகளும் பார்க்க முடிவதில்லை. it shows " page cannot be displayed". உங்கள் வலைப்பதிவை கூட கூகுள் ரீடரில்தான் படித்து வருகிறேன். my isp is not intrested to solve this problem? can u help?

அட ISP-யின் DNS-ஐ விடுங்க சார்.OpenDNS-ஐ பயன் படுத்துங்கள் எல்லாம் சரியாப்போகும். அதற்கான வழி முறைகள் இங்கே.
How to Enable OpenDNS?

நண்பர் Thameem கேட்டிருந்தார்.
Iam your fan of your blog, i never miss to read your article. I saw many blogs there is margin but i found that there is no margin on your blog, how is it? Can you please explain me.Thanks

நான் நினைக்கிறேன் நீங்கள் அந்த nav bar பற்றி கேட்கின்றீர்கள் என்று.இது பற்றி நான் ஏற்கனவே கீழ்கண்ட பதிவில் விளக்கியுள்ளேன்.மேலும் கேள்வியிருப்பின் தெரிவியுங்கள்.
How did you remove the nav bar of blogspot?

நண்பர் தமிழ்நெஞ்சம் கேட்டிருந்தார்.
Aha..How did you do that? "PinnoottaPPuyalgal".

எனது வலைப்பதிவில் அதிகமாக பின்னூட்டமிட்டவர்களின் பெயர்களை மேலிருந்து கீழாய் பின்னூட்டங்களின் எண்ணிக்கையோடு "பின்னூட்டப்புயல்கள்" என வரிசைப்படுத்தியுள்ளேன். அதைப்பற்றி தான் நண்பர் இங்கு கேட்டிருக்கின்றார். யாகூ பைப்ஸை ஹேக்கி அதை உருவாக்கியிருக்கின்றார்கள்.அது பற்றி மேலும் விபரங்கள் நீங்கள் கீழ்கண்ட சுட்டியில் தெரிந்துகொள்ளலாம்.
Top Commentators for a Blogger Blog

நண்பர் Sura கேட்டிருந்தார்
Dear PKP கல்கியின் பொன்னியின் செல்வன் not available for download.Pls check and post again Thanks

Sura சார் இப்போது எல்லாம் சரியாகிவிட்டது. கூடவே கல்கியின் சோலைமலை இளவரசி, பார்த்திபன் கனவு, அலை ஓசை ,சிவகாமியின் சபதம் (Right click and Save)ஆகிய நூல்களையையும் நீங்கள் இறக்கம் செய்துகொள்ளலாம்.

நண்பர் ரா.கி கேட்டிருந்தார்
ஆங்கில பாப், ராப் ( like eminem,enrique,robbie williams etc) பாடல்கள் இலவச தரவிறக்கத்துக்கு ஏற்ற தளங்களின் சிறு பட்டியல் கிடைத்தால் நல்லது?

எல்லா பாட்டுகளும் தான் இப்போது esnips.com அல்லது 4shared.com-ல் கிடைக்கின்றவே. :) என்ன கொஞ்சம் தேட வேண்டும்.

ஒரு அனானி நண்பர் கேட்டிருந்தார்
give link to download tamil drama-svesekhar

Here you go.

நண்பர் Nimalan கேட்டிருந்தார்
வணக்கம் pkp நண்பரே எனது பெயர் கோபி நான் சென்னையில் வசிக்கிறேன் நான் உங்கள் நீண்ட நாள் வாசகன் எனது நண்பர்கள் இணையத்தின் முலம் பணம் சம்பதிக்கலாம் என்கிறர்கள் உண்மையா இணையத்தில் முதல் இல்லாமல் பணம் சம்பதிப்பது எப்படி அதற்க்கான வழி முறைகள் என்ன

வணக்கம் கோபி.இணையம் மூலம் பணம் சம்பாதிக்க முடியும்.ஆனால் எளிதாய் அல்ல.இது குறித்து ஏற்கனவே ஒரு பதிவில் எழுதியிருக்கின்றேன்.கீழே அதற்கான சுட்டி. மேலும் குறிப்பாக எதாவது விபரம் தெரிய விரும்பினால் தயவுசெய்து எனக்கு தெரிவியுங்கள்.
http://pkp.blogspot.com/2008/04/in.html


நண்பர் ANANTH கேட்டிருந்தார்.
Dear PKP, First of all very thanks to your service. And I have one question. I want to know how to join MBA dirctly. say for example. My friend only completed DIPLOMA IN COMPUTER SCIENCE. He wants to study the MBA degree. Is it possible or not? He also completed 12 th standard and then he completed DIPLOMA. Pleas help him.
Advance Thanks,


ஆனந்த், வட மாநில பல்கலைக்கழகங்கள் சில பட்டயபடிப்பு முடித்து சில வருட அனுபவம் உள்ளவர்களுக்கு கூட MBA தபால்வழி வழங்குகின்றன. உதாரணத்திற்கு IICT லக்னோ.கீழ்கண்ட சுட்டியைப் பார்க்கவும்.
http://www.iict.in/courses.htm
இதில் எதாவது Catch உண்டாவென எனக்கு தெரியவில்லை.பொதுவாய் AMIE -யோ அல்லது Ignu-வழியாய் ஒரு இளங்கலையோ படித்து முடித்து செலல் நல்ல வழி. நன்கு தீது நன்கு ஆய்ந்து முடிவெடுக்கச் சொல்லுங்கள்.ஆல் தி பெஸ்ட்.

இன்றைக்கு கல்கி அவர்களின் பல மென்புத்தகங்களுக்கு மேலே சுட்டிகள் கொடுத்துள்ளமையால் சற்று வித்தியாசமாக எழுத்தாளர் அகிலன் அவர்களின் சொற்பொழிவு இங்கே MP3 வடிவில். Tamil writer Akilan speech in MP3 format Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Wednesday, March 12, 2008

நமக்குள்

இங்கே பக்கத்தில் நீங்கள் படங்களில் காணும் அபார அனிமேசன் அசைவுகள் GIF கோப்புகளுக்கேயுரியன.
நண்பர் வால்பையன் கேட்டிருந்தார்.
GIF பைலை JPEG ஆக மற்ற முடியுமா?


இது பெரிய காரியமல்லவே.எல்லா கணிணியிலும் இருக்கும் Paint எனும் மென்பொருளால் நீங்கள் குறிப்பிட்ட GIF பைலை திறந்து Save as JPEG-னு கொடுத்தால் முடிஞ்சுபோச். அல்லது நண்பர் Jafar Safamarva சொன்னவழியிலும் முயலலாம்.அவர் தீர்வு இதோ"GIF பைலை JPEG ஆக மாற்றுவதற்கு தங்களிடம் Microsoft office Picture Manager இருப்பின் அதில் file+Export+Export With theis file format என்பதை முயற்சிக்கவும்."
நன்றி Jafar Safamarva.

ஆனால் ஒன்று, மேலே நீங்கள் காணும் கூலான, GIF கோப்புகளுக்கே உரித்தான அனிமேஷன் அசைவுகளை இழக்க நேரிடும். பல படங்களை அடுக்கிவைத்துதானே இம்மாதிரியான GIF கோப்புகளை உருவாக்குகின்றார்கள்.ஒரு JPEG கோப்பால் ஒரு படம் மட்டும் தான் காட்ட முடியும்.அதுவால் Gif கோப்புபோல் பல படம் ஓட்டி மாயாஜாலம் செய்ய முடியாது.

நண்பர் arstudio120 கேட்டிருந்தார்
How to free download e-books in google books website....any illegal software here?...

கூகிளின் புக்ஸ் தளம் http://books.google.com/ லட்சக்கணக்கான ஸ்கேன் செய்யப்பட்ட புத்தகங்களைக் கொண்டது. தினமும் புதிது புதிதாய் ஸ்கான் செய்து இணைஏற்றம் செய்து கொண்டே இருக்கின்றார்கள். அங்கு பெரும்பாலான புத்தகங்களும் பழைய காப்புரிமை காலம் தாண்டியவையே அல்லது யாரும் உரிமைகொண்டாடாத புத்தகங்கள் தாம். இவற்றை நாம் அங்கிருந்து இறக்கமும் செய்துகொள்ளலாம்.முன்பு ஒருமுறை நான் இப்பதிவுகளில் அறிமுகப்படுத்திய P Percival 6000 Tamil Proverbs with English Translation .pdf என்ற பழமையான தமிழ் நூல் இங்கிருந்தே சுடப்பட்டது.மற்றபடி பதிப்புரிமை பெற்ற புத்தகங்கள் சில பக்கங்களே சாம்பிளுக்கு கொடுத்திருப்பார்கள். வாங்கி படிக்க வேண்டுமாக்கும். எனினும் இந்த புராஜெக்ட் கூகிளின் விவாதத்துக்குரிய புராஜெக்ட்களில் ஒன்றே.

நண்பர் மணிவண்ணன் கேட்டிருந்தார்
hi PKP
i want to change old black and white image to color any easy and freeware tools on web? if not how to convert in photoshop.


அதென்னமோ இதுவரைக்கும் கணிணியில் வண்ணப்படங்களை கருப்பு வெள்ளையாக்குதல் மட்டுமே ரொம்ப சுலபமாய் இருந்து வந்திருக்கின்றது. பழைய கருப்பு வெள்ளை போட்டோக்களை கலர் போட்டோக்களாக மாற்ற ஒற்றை சொடுக்கு மென்பொருள்கள் இன்னும் சந்தையில் வரவில்லவே.கொஞ்சம் வியர்வை சிந்த வேண்டி இருக்கின்றது.போட்டோஷாப்பில் மெனக்கெட சமயமிருந்தால் எல்லாமே முடியும்.கீழே அதற்கான வழி வீடியோ டெமோ வாக.

போட்டொஷாப் வாங்க காசில்லையா? விடுங்க இலவசமாய் கிடைக்குது GIMP.(GNU Image Manipulation Program) இதைவைத்தும் சூப்பராய் படங்களில் புகுந்து விளையாடலாம்.
வண்ணமயமான பூமியை பார்க்கும் போது கடவுளும் அதை படைக்க போட்டொஷாப் தான் பயன்படுத்தியிருப்பார் போலிருக்கின்றது.


Photoshop: Black And White To Color




நண்பர் Nijam கேட்டிருந்தார்
தகவல் களஞ்சியம் பி.கே.பி. தளம் என்றால் மிகையாகாது. பி.கே.பி சார் Windows Administrator க்கு உரிய Windows 2003 முழுமையான கைடு(ஆங்கில வடிவில்)மென்புத்தகம் ஏதாவது இருந்தால் வெளியிடுங்கள் சார் .


இதோ (MCSE) - Mastering Windows Server 2003.pdf

நண்பர் MuPa.Nagarajan கேட்டிருந்தார்
Is there any freeware available for converting vcd to dvd...

ஓ இருக்கே,
முதலாவது உங்கள் VCD யிலுள்ள .dat கோப்புகளை Super எனும் மென்பொருளால் .Mpeg-க்கு மாற்றவேண்டும்.

பின் கீழ்கண்ட DVD Flick எனும் இலவச DVD உருவாக்குவோனை பயன்படுத்தி உங்கள் .mpeg-யை டிவிடி-யாக எரிக்கலாம்.ரொம்ப சிம்பிள்.
Download DVD Flick
DVD Flick-கை பயன் படுத்துவது எப்படி என இங்கே ஒரு அருமையான கையேடு படிப்படியாக படத்துடன்.
DVD Flick Guide

ரமணி சந்திரன் நாவல் "தண்ணீர் தணல் போல் தெரியும்" இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Ramani Chandran Thannir Thanal Pol Therium Tamil Novel pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்