இங்கு நீங்கள் பார்க்கும் உலக வரைபடம் சற்று வித்தியாசமானது. அதை சொடுக்கி நீங்கள் பெரிது படுத்திப் பார்த்தால் உலகில் ஒவ்வொரு நாட்டிற்கும் கொடுக்கப்பட்டுள்ள டொமைன் பெயரை அது காட்டும்.(இந்தியாவிற்கு .in போன்று)
சரி விஷயத்துக்கு வருவோம்.
எனது முந்தைய இணையவிலாஸ் பதிவினைத் தொடர்ந்து எழுப்பப்பட்ட சில கேள்விகளுக்கு இங்கு நான் பதிலளிக்கலாம் என்றிருக்கின்றேன்.
நண்பர் Thameem கேட்டிருந்தார்.
How can i get .com or .in website.
Can you post me the details (including the expences).
நண்பர் Shiva கேட்டிருந்தார்.
புதிதாக இனையதளம் ஆரம்பிக்க யாரிடம் பதிவு செய்வது நல்லது.ஆண்டொன்றுக்கு (தோராயமாக) எவ்வளவு கட்டணம் இருக்கும்.
.com போன்ற சர்வதேச டொமைன் பெயர்களை பதிவுசெய்ய www.godaddy.com போன்ற பேர்போன இணையதளங்களை அணுகலாம். டாலரில் காசு செலுத்த வேண்டும். வருடத்திற்கு ஒரு .com பெயருக்கு 10 டாலர்கள் வரை செலவுஆகும்.
.com மட்டுமல்லாது இந்திய டொமைன்பெயர்களான .in மற்றும் .co.in போன்ற பெயர்களையும் பதிவுசெய்ய www.hostindia.net என்ற இணைய தளத்தை அணுகலாம்.
ஒரு .com பெயருக்கு வருடத்திற்கு ரூ 349 செலவாகும்.
ஒரு .in பெயருக்கு வருடத்திற்கு ரூ 699 செலவாகும்.
மொத்தமாய் பல டொமைன் பெயர்களை வாங்கினாலோ அல்லது பலவருடங்களுக்கு ஒரு பெயரை பதிவுசெய்தாலோ அல்லது பிற சேவைகளையும் சேர்த்துவாங்கினாலோ இந்த விலைகளில் தள்ளுபடிகள் கிடைக்கும்.
நண்பர் Shiva கேட்டிருந்தார்.
நமது தளத்துக்கு யாராவது வருகை புரிந்தால் அதில் நமக்கு லாபம் ஏதாவது வருமா?
சிவா, அது முழுக்க முழுக்க உங்கள் தளத்தின் பயன்பாட்டை பொறுத்தது.
Sify Mall போன்ற நேரடியாக வர்த்தக நோக்கில் வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் எதாவது விற்றுக்கொண்டே இருக்க வேண்டும். காசு வரும்.
Tamil Matrimony போன்று மக்களுக்கு சேவைகள்/உதவிகள் செய்தும் காசுகள் சம்பாதிக்கலாம்.
இன்றைய அளவில் வெளிநாடுவாழ் இந்தியர்களையும், இந்திய பெருநகர மக்களையும் கருத்தில் கொண்டு முழுக்க முழுக்க புத்தம் புதிதாய் அவர்க்ளுக்கு எதாவது செய்தால் சூப்பர் ஹிட் ஆகலாம். உட்கார்ந்து யோசிக்கவேண்டும். அதை மென்பொருள் வடிவாக்க வேண்டும். நிறைய வேலை இருக்கிறது. காலப்போக்கில் பட்டி தொட்டிகள் வரைக்கும் இணைய இணைப்புகள் வரும் போது இதன் போக்கு இன்னும் வீரியமாகும்.
விளம்பரங்கள் வழியும் பணம் பண்ணலாம்.
அமித் அகர்வால் போல் முழுநேர வேலையாய் சீரியசாய் உட்கார்ந்து ஆங்கிலத்தில் பலருக்கும் பயனாகும் படி பிலாகினால் கூகிள் ஆட்சென்ஸ் உதவியால் ஹாண்டா சிஆர்வி வாங்கலாம்.
Html-கூட தெரிய வேண்டியதில்லை. அவ்வளவு எளிதாய் வலைபதிய மென்பொருள்கள் வந்துவிட்டன. பிரபலங்களெல்லாம் வலைப்பதிய வந்து விட்டார்கள். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிர்தாப்பாச்சன் கூட வலைபதிக்கிறாராம். குமுதம் அரசு பாணியில் பைத்தியம் என்றுவிடாதீர்கள். ரசிகர்கள் குஷியில் நூற்றுகணக்கில் பின்னூட்டமிட்டு இருக்கின்றார்கள்.bigb.Bigadda.Com
இல்லை xboard.us போன்ற மசாலா தளங்கள் நிறுவி அதில்வரும் விளம்பர வருவாய் மூலமும் லட்சங்கள் குவிக்கலாம்.
தமிழில் வலைப்பதிவி ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்.
நான் ஒரு மணிநேரத்தில் சம்பாதிப்பதை தர எனது வலைப்பதிவு விளம்பரங்கள் ஒரு மாதம் எடுக்கின்றன.
சமீபத்தில் இணையத்தில் படித்த வாசகம் ஒன்று என்னை சுள்ளென உருவக் குத்தியது போல் இருந்தது.
எதை வேண்டுமானாலும் செய். முயலு. முடி.
ஆனால் உனக்கு சோறு போடும் உன் கல்வி மற்றும் வேலையை மட்டும் மறந்து விடாதே.
அதில் முன்னேற ஏதாவது வாய்ப்புகள் உண்டோவென பார்த்துக்கொண்டே இரு.
ஏனெனில் அதனால் தான் நீ இவ்வளவு தூரமும் வந்திருக்கின்றாய்.
எத்தனை அருமை வாசகம்.
நண்பர் வால்பையன் கேட்டிருந்தார்.
தமிழர்களின் நண்பர் PKP அவர்களே!
கணினி மொழி எதுவுமே தெரியாத எனக்கு, நண்பர்களின் உதவியுடன் html கொஞ்சம் செய்து கொண்டிருக்கிறேன், சட்டம் மற்றும் அதற்குள் எழுத்துக்கள் போன்று செய்யவேண்டும்
எளிய தமிழில் html புத்தகம் கிடைக்குமா?
இங்கே "வலை வடிவாக்கம் ஒரு அறிமுகம்" அத்தியாயம் தமிழில் Pdf வடிவில்.Introduction to Web Design Chapter in Tamil pdf Download. Right click and Save.Download
Download this post as PDF
2 comments:
எல்லா நாட்டு இணைய தள குறியீடுகளை தந்தமைக்கு ரொம்ப நன்றி... அது போல இந்த வாசகம் ரொம்ப அருமை...
//எதை வேண்டுமானாலும் செய். முயலு. முடி.
ஆனால் உனக்கு சோறு போடும் உன் கல்வி மற்றும் வேலையை மட்டும் மறந்து விடாதே.
அதில் முன்னேற ஏதாவது வாய்ப்புகள் உண்டோவென பார்த்துக்கொண்டே இரு.
ஏனெனில் அதனால் தான் நீ இவ்வளவு தூரமும் வந்திருக்கின்றாய்.//.
உங்களது இந்த பணி தொடர.... வாழ்த்துக்கள்
Thank You Very Much Mr.Pkp it is very very useful for me.Thanks a Lot.
Also, please explain me how ur blog is showing without margin.
Thanks
Thameem
Post a Comment