உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Sunday, April 06, 2008

இப்படியும் ஒரு தமிழ் சேவை

பலரும் பலவிதமான வழிகளில் சமுதாயத்திற்கு பல சேவைகளையும், தேவையுள்ளவர்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகின்றார்கள். சேவைகளிலே சிறந்த சேவை எது என மகாகவி பாரதியாரை கேட்டால் அவர் சொல்லுவார் "அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கியொளிர நிறுத்தல் அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" என்று.

மாறிவரும் உலகச் சூழலில் நம் வாழ்க்கை முறைகளும் வெகுவாய் மாறிவிட்டன. முன்பெல்லாம் வேலைக்காக வயக்காட்டுகளுக்கும், பண்ணை தோப்புகளுக்கும் போனார்கள். அதன் பின்னர் வேலைகளுக்காக மில்லுகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் போனார்கள். இப்போதெல்லாம் வேலைக்காக அடுக்குமாடி கட்டடங்களுக்கு விரைகின்றார்கள். உலகின் உற்பத்தி துறையை சீனா மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக்கொண்டாலும் சேவை மற்றும் கணிணி மென்பொருள் உருவாக்குவதில் நம்மவர்கள் உஷாராய் இருந்து பல லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை நம் ஊர் கொண்டுவந்தார்கள். இந்த கணிணி யுக பூம்மினால் நம்போன்ற நடுத்தர வர்க்கத்தினரால் கொஞ்சம் தலை நிமிர முடிந்தது.

இந்த வாய்ப்பில் எங்கோ சத்திரப்பட்டிகளிலும் ஆண்டிப்பட்டிகளிலும் அரசுபள்ளிகளில் தமிழில் படிக்கும் மாணவர்களும் பங்குபெறவேண்டும், ஜப்பானியர் போல் நாமும் தாய் மொழியில் படித்தால் இன்னும் அதிகம் சாதிக்க முடியும் என்ற நோக்கில் கணிணி தொழில் நுட்ப பாடங்களை எளிய தமிழில் மொழிமாற்றி அவற்றை இலவசமாக ஏழை மாணாக்கர்களுக்கு வழங்கும் அரியதொரு பணியை செய்து வருகின்றார் ஒரு மனிதர். அவர் பெயர் பாக்கியநாதன்.

இவர் ஏற்கனவே போட்டோஷாப், கோரல்டிரா, பேஜ்மேக்கர், எளிய தமிழில் VC++, எளிய தமிழில் ஜாவா, எளிய தமிழில் யூனிக்ஸ், எளிய தமிழில் ஆரக்கிள், ஆரக்கிள் கட்டளை குறிப்புகள், Ms-Word கேள்விப்பதில்,C Function quick Reference முதலான நூல்களை தமிழில் எழுதியுள்ளார். விரைவில் PHP5 & MySQL, Tally,E-Publishing,Excel-2007 Tips முதலான நூல்களும் தமிழில் வரவிருக்கின்றனவாம்.

திரு அப்துல் கலாம் ஐயா போல் அரசு பள்ளியிலேயே முழு படிப்பையும் தமிழிலேயே படித்து முன்னுக்கு வந்து இன்றைக்கு முன்ணணி நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொருவரும் சில டாலர்கள் இவருக்கு கொடையாக வழங்கினாலே இப்பணியை இவர் மென்மேலும் சிறப்பாக செய்ய அது நிச்சயம் உதவியாய் இருக்கும்.

நான் பயணித்து வந்த அந்த கடினமான பாதையை கொஞ்சம் திருப்பிப்பார்த்தேன். சொல்லவேண்டுமென தோன்றிற்று. சொல்லிவிட்டேன். :)

மேலும் விவரங்களுக்கு அவரது இணையதளம் பார்க்கவும்
http://www.tamilsoftwarebooks.org

அவரது விலாசம்
Bakkia Nathan
Bakkiam Consultancy Services
Old No: 60, New No: 127,
Angappa Naicken Street,
Parrys, Chennai-600 001.
Phone: 044-43517072
Mobile: 9840324409
email: author@tamilsoftwarebooks.org

வளர்தமிழ் மன்றம் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை -யின் படைப்பு "கணிப்பொறி கலைச்சொல் அகராதி்" தமிழில் மென்புத்தகம் ValarTamil Mantram Anna University Chennai "English-Tamil Computer Technology Dictionary" in Tamil e-book Download. Right click and Save. Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



10 comments:

வடுவூர் குமார் said...

இதற்கு முன் உங்கள் பதிவில் கொடுத்த ஜாவாவில் 20 பக்கங்கள் தான் படித்துள்ளேன்.அழகாக இருந்தாலும் நான் ஏற்கனவே பல மொழிகளை படித்திருந்ததால் இலுகுவாக காணப்பட்டது.முதல் முதலில் படிப்பவர்களுக்கு நிச்சயம் கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரி தான் இருக்கும்(கணினி மொழிகள்).நம் மொழியில் சொல்லும் போது சில விஷயங்கள் இலகுவாக புரிகிறது.
கொஞ்ச பக்கங்களை படித்தவுடன் அவரை தொலைப்பேசியில் கூப்பிட்டு பாராட்டவேண்டும் என்று நினைத்தேன்.முழுவதுமாக படித்தால் ஒரு புதியவனுக்கு தேவையானவற்றை சொல்லலாம் என்று தள்ளிப்போட்டுள்ளேன்.
இவரை வெளிச்சம் போட்டு காட்டியதற்கு மிக்க நன்றி.

manjoorraja said...

நல்லதொரு சிறந்த சேவை. தொடரட்டும்.

சேவையின் முக்கியத்துவம் கருதி முத்தமிழ் கூகிள் குழுமத்தில் இந்த பதிவு மீள் பதிவு செய்யப்படுகிறது.

நன்றி.

http://groups.google.com/group/muththamiz/topics

Anonymous said...

திரு பிகேபி அவர்களே, உங்கள் பதிவுகள் பலருக்கு உபயோகமாய் இருக்கும். நான் கடலூரில் வெளியிடும் ஒரு விளம்பர இதழில் தங்களின் FREE HIDE FOLDER குறித்து செய்தி (பக்கம் 2ல்) வெளியிட்டுள்ளேன். கவனிக்கவும்

நன்றி

சிவா

http://tamilnadu-freead.blogspot.com
http://shiva-telecom.blogspot.com/

Sen22 said...

Thank you very much Mr.PKP...
I am downloading the c++ in tamil book... it's very useful for me...
Thanks a lot...

Senthil Kumar
Bangalore

veeramani said...

Dear Sir,
Excellent work.Thanks for continious help.Plse allow us to download the link about "C-function reference" in tamil.It would be great.

Thanks
Veeramani

Anonymous said...

நல்ல சேவை. தமிழ் வாழ்க

Tech Shankar said...


More Ramani chandran Novles are here

Tech Shankar said...



More Sujatha's E-Books in Tamil

Tech Shankar said...


Very very OLD MS-DOS based Game (DAVE).


For me, My system is not supporting this old game DAVE.
The screen is splitted.. and graphics is not supporting for my machine.

What to do?

How can I play this MS-DOS based old DAVE game in my machine?

Can you please tell me the idea to get rid of this problem.

Thanks

by
TamilNenjam

ANANTH said...

Dear PKP,

First of all very thanks to your service. And I have one question. I want to know how to join MBA dirctly. say for example. My friend only completed DIPLOMA IN COMPUTER SCIENCE. He wants to study the MBA degree. Is it possible or not? He also completed 12 th standard and then he completed DIPLOMA. Pleas help him.

Advance Thanks,

ANANTH

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்