சமீபத்தில் கடலூர் நண்பர் சிவாவிடமிருந்து ஒரு பின்குறிப்பு.
"திரு பிகேபி அவர்களே, உங்கள் பதிவுகள் பலருக்கு உபயோகமாய் இருக்கும். நான் கடலூரில் வெளியிடும் ஒரு விளம்பர இதழில் தங்களின் FREE HIDE FOLDER குறித்து செய்தி (பக்கம் 2ல்) வெளியிட்டுள்ளேன். கவனிக்கவும் -நன்றி, சிவா
http://tamilnadu-freead.blogspot.com
http://shiva-telecom.blogspot.com"
மகிழ்ச்சியாய் இருந்தது. எங்கோ ஒரு மூலையிலிருந்து எழுதப்படும் ஏதோ ஒரு விஷயம் எங்கெல்லாம் எதிரொலிக்கின்றதென பாருங்கள். அவரது "கடலூர் பார்வை" எனும் அந்த விளம்பர இதழை சிறிது நோட்டமிட்டபோது சில தகவல்களை எல்லாருக்கும் பொத்தாம் பொதுவாய் சொல்லலாம் போல் தோன்றியது.
அதில் முக்கியமானது Internet Presence-ஐ பற்றியது.அதாவது அவரவர் இணைய விலாசம். பிரபல தமிழிலக்கிய எழுத்தாளர்கள் முதல் சாதாரண தியாகராய நகர் நகைக்கடை வரை தங்கள் இணைய விலாசத்தை பிரசித்திப்படுத்திக் கொண்டு வரும் நேரம் இது.
இந்த நேரத்தில் நண்பர் இத்தனை சிரமெமெடுத்து வெளியிடும் தனது காகித இதழில் ஒரு blogspot.com முகவரியை தனது இணைய விலாசமாக அறிவித்திருப்பது கஷ்டமாயிருந்தது. நண்பரே உடனே ஒரு .com-மோ அல்லது .in பெயரோ இணையத்தில் பதிவு செய்யுங்கள். நீங்கள் நினைப்பது போல் ரொம்ப செலவெல்லாம் ஆகாது. ஆனால் It will pay you back in long run.
தயவுசெய்து பெயர் பதிவு செய்யும் போது நண்பர் தமிழ்நெஞ்சம் செய்தது போல் பெயர் தெரிவு செய்யவேண்டாம். அவரது முகவரி Tamil2000-ஆ Thamiz2000-ஆ Tamiz2000-ஆ அல்லது Thamil2000-ஆ என்று இன்றுவரை எனக்கு தெரியாது. ரொம்ப குழப்பம். ரொம்ப தேட வேண்டிவரும். எழுத்து பிழை உங்கள் தளம் தேடிவருவோரை வேறெங்காவது இழுத்துச் செல்லும்.எளிதாக ஒரு பெயர் வைங்க. Shivatelecom.com-இன்னும் பதிவுசெய்ய இருக்கே. யாராவது அப்பெயரை எடுத்துவிடும் முன் முந்திக்கொள்ளுங்கள்.
நண்பர் தமிழ் நெஞ்சம் மன்னிச்சுக்கோங்க.உங்கள் பெயரை இங்கு இழுக்கவேண்டி வந்தது. :)
அதுபோல் உங்கள் தளமுகவரியில் இப்போது உள்ள குறியான - (அதாங்க ஹைபன்)-ஐ தயவுசெய்து தவிர்க்கவும். பின் ஒருகாலத்தில் உங்கள் முகவரியை பிறருக்கு வாய்மொழியாய் சொல்லும் போது ரொம்ப கஷ்டமாயிருக்கும்.
நன்கு வளர்ந்த நிறுவனங்கள், பிரபலங்கள் கூட இன்னும் Yahoo mail, Gmail, Rediff mail பயன்படுத்துவது சோகமான விஷயம்.
suntvarattaiarangam@yahoo.com -இப்படி ஒரு நீண்ட முகவரி வைத்தால் ஸ்பெல்லிங் தவறில்லாமல் இந்த மின்னஞ்சல் முகவரியை எப்படி தட்டமுடியும்?
சன்டிவி நீங்கள் கேட்ட பாடல் nkp@sunnetwork.in- That is cute. அப்படி ஒரு நிகழ்ச்சி இப்போ இருக்குதா என்ன?
உதாரணத்திற்கு எனது முகவரியான admin@pkp.in-ஐ Gmail வழி பயன்படுத்தவும் வழி இருக்கின்றது. அதுதான் Gmail for Organizations. இதனால் பயன்:எனது மின்முகவரியோ எனது தளம்பெயர்சொல்லும், ஆனால் அதேவேளை நான் பயன்படுத்துவதோ என் அபிமான ஜிமெயில் மென்பொருளாய் இருக்கும்.
என்னைபோல் விளையாட்டாய் இணையத்தில் புகுவோர் ரொம்ப சிரத்தை எடுக்க தேவையில்லை.
ஆனால் உங்களைப்போல் வியாபாரரீதியில் இணையத்தில் புகும் போது இதெல்லாம் (Branding) ரொம்ப முக்கியம்.
எல்லாம் நண்பர் சிவாவுக்காக எழுதினேன். புதிதாக சாதிக்க கிளம்பியிருக்கிறாரே. பட்டையை கிளப்புங்க சிவா.
வைகோவின் "தமிழ் இசைத்தேன்" இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Vaiko Tamil Isai Thean in Tamil pdf ebook Download. Right click and Save.Download
Download this post as PDF
4 comments:
Thanks for this message and it is very useful for me. One morething,
According to your message you told
"ஒரு blogspot.com முகவரியை தனது இணைய விலாசமாக அறிவித்திருப்பது கஷ்டமாயிருந்தது. நண்பரே உடனே ஒரு .com-மோ அல்லது .in பெயரோ இணையத்தில் பதிவு செய்யுங்கள். நீங்கள் நினைப்பது போல் ரொம்ப செலவெல்லாம் ஆகாது. ஆனால் It will pay you back in long run."
How can i get .com or .in website.
Can you post me the details (including the expences).
Awaiting for your reply
Thameem
நல்ல அறிவுரை. சன் டிவி கூட இவ்வளவு கன்ஞசமாக இருக்கிறது
நீங்கள் சொல்லுவது முற்றிலும் சரியே.. நானே இதன் மறுபக்கத்தை யோசித்துப்பார்க்காமல் அப்போது என்ன பெயர் கிடைத்ததோ அதையே வைத்தேன்.
இப்போது tamil2000, thamil2000,thamizh2000 எனத் தேடிப் பார்த்தால் ஏதேதோ தொடர்பில்லாத தேடுதல் விடைகள் கிடைக்கின்றன. ஆபாசமான தளங்களுக்கும் இட்டுச் செல்கின்றன.
எனக்கு வரும் வாசகர்கள் 'தேன்கூடு', 'தமிழ்மணம்' திரட்டிகளின் வாசகர்கள்தாம்.
ஆனால் எனக்கான 'பிராண்டு நேம்' இன்னமும் வலையுலகில் ஏற்படவில்லை என நம்புகிறேன்.
பிகேபி - என்ற பெயர் எண்ணற்ற வலையுலக அன்பர்களுக்கும், வெளியுலக எழுத்தாளர்களுக்கும் பிரசித்தம். (எஸ். ராமகிருஸ்ணன் போன்றோர்).
அந்தப் பெயர், அதாவது 'பிராண்டு நேம்' எனக்குக் கிடைப்பதற்கு நாட்கள் அதிகம் ஆகும். அதுவரையில் இப்படியே போகிக்கொண்டு இருக்கவேண்டியதுதானா.. என்பதும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.
கூகிள் அனாலிடிக்ஸ் வாயிலாக எனது வலைப்பூவிற்கான வருகைப்பதிவை அலசி ஆராய்ந்தேன். அதில் சில முடிவுகள் ஆச்சர்யமாகவும் இருந்தன.
வழமை போல தமிழ்மணம், தேன்கூடு முதல் இரண்டு இடங்களைத் தக்கவைத்துக் கொண்டன. பிகேபி தளத்திலிருந்து 184 பார்வையாளர்கள் எனது வலைப்பூவைப் பார்வையிடுவதற்காக வந்திருந்தனர்.
கூகிள் தேடுபொறியும் எனக்கான வாசகர்களை வரவழைத்துக் கொடுத்திருந்தது.
மொத்தத்தில் 2800 காண்போரை எனக்கு கூகிள் தேடுபொறி அழைத்து வந்திருந்தது.
உங்களது வலைப்பூவின் முகவரி எளிமையாகவும் அர்த்தம் செரிந்ததாகவும் உள்ளதை
யாரும் மறுக்க இயலாது. தமிழ்2000 என்று கூகிளில் தமிழிலேயே தேடினால் எனது வலைப்பூ முதலில் வருகிறது. அதைக்கொண்டு திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
கண்டென்ட் சர்ச் வாயிலாக வரும் வாசகர்கள் எனக்கு ஒரு வரமே. ஆனால் நேரடியாக [ ] எனக் கூகிளில் சர்ச் செய்து அதன் மூலம் எனது வலைமனைக்கு வந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 8 பேர்கள்தான். அதையும் கூகிள் அனாலிடிக்ஸ் தான் காட்டிக்கொடுத்தது. இப்போதைக்கு இது இப்படியே இருக்கட்டும் என்று நினைக்கிறேன்.
விரைவில் மாற்றங்களுடன், புதிய பொலிவுடன் மக்கள் மனதிலும், தேடுபொறியின் மனதிலும் எளிமையாக இடம்பிடிக்கும் வகையில் புதிய தளத்துடன் வலம் வருவதற்கு இப்போதிருந்தே முயற்சிக்கிறேன். அதற்கு உங்களின் இந்தப் பதிவு ஒரு காரணியாக இருக்கும் என்பதில் மிகையில்லை.
தேங்க்ஸ் பிகேபி. இனையதளம் குறித்து எனக்கு சில சந்தேகங்கள் இருக்கின்றன. உங்களுக்கு தெரிந்ததை சொல்லவும்.
1)புதிதாக இனையதளம் ஆரம்பிக்க யாரிடம் பதிவு செய்வது நல்லது.
2)ஆண்டொன்றுக்கு (தோராயமாக) எவ்வளவு கட்டணம் இருக்கும்.
3)நமது தளத்துக்கு யாராவது வருகை புரிந்தால் அதில் நமக்கு லாபம் ஏதாவது வருமா?
சிவா
Post a Comment