உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Sunday, April 27, 2008

ரொம்ப வருத்தம்

இப்படி ஒரு அடல்ட்ஸ் ஒன்லி பதிவை நான் வெளியிடுவேனென்று என்றுமே நான் நினைத்ததில்லை. சொல்லவேண்டிய சில காரியங்களை சொல்லியே ஆக வேண்டிய கட்டாயத்தால் இங்கு சொல்கின்றேன். அப்படி நான் ஒன்றும் புண்ணியவான் இல்லை. நமீதா 200ரூவா ஆபாசம் விசிடி பற்றி பதிவுகளில் கேள்விபட்ட உடனே அதிஷ்டமோ என்னமோ அதற்கான சுட்டியும் நம்மிடம் மாட்டிவிடுகின்றது.எல்லாம் 8 நிமிட கப்சா வீடியோக்கள்.

ஆனால் நிஜ கணவன்கள், நிஜ மனைவிகளின் ரகசிய விடியோக்கள் ரேப்பிட்ஷேர் சுட்டிகளாக வரும் போது தான் ரொம்ப வருத்தமாய் இருக்கின்றது. அதுவும் இந்திய தம்பதிகளின் அந்தரங்க விளையாட்டுக்கள். பெரும்பாலான வீடியோக்களில் அந்த மனைவியோ அல்லது அந்த பெண் நண்பியோ கேமராவை அணைக்க சண்டைபோடுவாள். அதையும் மீறி அவன் திமிராய் கேமராவை ஸ்டெடியாய் செட் செய்து வைத்திருப்பான். அல்லது அந்த ஒளிப்பட பெட்டியை மறைத்து வைத்திருப்பான். ஆண்கள் மேல் வெறுப்பையே வரவைக்கும் வக்கிர நாய்கள் அவன்கள். மற்றும் சில பெண்கள் அப்பாவியாய் விடயம் தெரியாது இருப்பர். அந்த ஆண் நாய் முடிந்த வரை தன் முகத்தை மறைக்க முயன்றுகொண்டே இருப்பான். தன் கூத்துக்களை வீடியோவில் பார்க்கும் சில நிமிட அற்ப சுகத்துக்காக ஆண் மிருகம் செய்யும் அந்த ஆபாச ரெக்கார்டிங் இணையத்தில் ஒரு முறை வந்து விட்டால். பன்னிக்குட்டி மாதிரி. தடுக்கவே முடியாது.சரமாரியாய் பரவிக்கொண்டே இருக்கும். இந்த இளம் தம்பதிகள் சுதந்திரமாய் வெளிஉலகம் வருவது எப்படி?.

ஏதோ ஒன்றோ இரண்டோ முறை ஞானி போல் இண்டர்நெட் சாட்டில் தன்னிடம் பேசிய , சில ஆறுதல் வார்த்தைகள் பேசிய அந்த தொலைதூர ஆணை நம்பி தன்னை முழுசாய் வெப்கேமில் காண்பிக்க அவள் மனம் வருகின்றது. உஷாராய் இவன் ரெக்கார்ட் செய்து அந்த காணொளொயை இணையேற்றம் செய்து விடுகின்றான் அவள் நம்பிக்கையில் மண்ணை வாரி போட்டு விட்டு. இவள் மானமும் இணையக் கப்பல் ஏறிவிடுகின்றது.

எந்த குடும்ப பெண்ணும் அதுவும் நம் நாட்டு குடும்ப பெண்கள் கணவன் அல்லது தனது பாய்பிரண்டு மகிழ்ச்சியாய் இருக்க எது வேண்டுமானாலும் செய்வாள், எதைவேண்டுமானாலும் அனுமதிப்பாள்- ஆனால் தன் உடம்பு இணையத்தில் காட்டிபொருளாய் இருக்க ஆசைப்படுவாளா என்பது சந்தேகமே.

ஸோ... இந்த நவீன உலகில் சில படுக்கையறை ஒழுக்கங்களை உங்கள் நலனுக்காக வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. வெப்கேம், கேமெரா, கேமரா உள்ள செல்போன் இதையெல்லாம் படுக்கையறைக்கு வெளியே மட்டும் கண்டிஷனாய் வைத்திருங்கள்.

மீறி வெப்கேமோ, கேமரா உள்ள செல்போனோ, அல்லது வேறெதாவதொரு கேமராவோ படுக்கையறைக்கு கொண்டுவரும் கணவன் எவனானாலும் அவனை செருப்பால் அடியுங்கள். அப்படியொரு ரசனை அவனுக்கு தேவையில்லை.

நம் பெண்கள் இதற்கெல்லாம் சளைத்தவர்களில்லை என்ற நம்பிக்கை இருக்கின்றது. செய்திகள் வரலாம்.

ஸாரி...நண்பர்களே! இப்படி ஒரு dirty பதிவு! :)

இராஜன் முருகவேல் அவர்களின் தமிழ் நாவல் "ஐஸ்கிரீம் சிலையே நீதானோ?" இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Rajan Murugavel "Ice Cream Silaiye Neethano" Novel in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories11 comments:

Nimalan said...

வணக்கம் pkp நண்பரே எனது பெயர் கோபி நான் சென்னையில் வசிக்கிறேன் நான் உங்கள் நீண்ட நாள் வாசகன்
எனது நண்பர்கள் இணையத்தின் முலம் பணம் சம்பதிக்கலாம் என்கிறர்கள் உண்மையா
இணையத்தில் முதல் இல்லாமல் பணம் சம்பதிப்பது எப்படி அதற்க்கான வழி முறைகள் என்ன

Thanga said...

அன்பு நண்பரே,
நியாயமான அறிவுரை. இதை தவிர்ப்பது ஆண், பெண்
இருவருக்கும் பங்கு உண்டு. மிக முக்கியம் பெற்றோர் பருவ வயது குழந்தைகளிடம் தெளிவாகவும், அன்பாகவும் இதை குறித்து எச்சரிக்க வேண்டும்.
என்றும் அன்புடன்
அதிரை தங்க செல்வராஜன்.

Karthikeyan said...

Thiru PKP avarkalukku, This is Dr.NK from chennai. Been an avid reader of your blog for the past year or so. Padithu sirithukonde poividuven. Your blog today has made me realise that you are a kindred soul. seruppal adiyungal enru sonneerkal. nootrukku nooru unmai. Intha kaliyuga nachu kalaankalai(mushrooms)ipadithan kalaiyavendum.
Nanri

God of Kings said...

நன்றி நண்பரே!
நிச்சயமாக பல வாசகர்கள் இதைப் பற்றி எடுத்துக் கூறுவார்கள். திருமணமாகாத இளம்பெண்கள் இண்டர்நெட்டில் தங்கள் படங்களை வைப்பதை முடிந்தவரை தவிர்த்தால் நன்றாக இருக்கும். கல்லூரி மாணவிகளிடம் தான் இந்த போக்கு அதிகமாக உள்ளது. தங்கள் காதலருடன் நெருக்கமாக இருக்கும் போது படங்கள் எடுக்க அனுமதிப்பது. இதற்கு திருமணத்திற்கு நெருக்கமாக இருப்பதை தவிர்த்தால் பிரச்சனை ஏற்படாமல் தவிர்க்கலாம். இப்போது உலகில் தலைவிரித்தாடும் விபச்சாரம் பற்றி என்னுடைய விபச்சாரம் ஓர் உலகப்பார்வை பதிவில் குறிப்பிட்டுள்ளேன். உங்களுக்கு நேரம் இருந்தால் அதைப் பார்க்கவும்.

Jafar Safamarva said...

ஆஹா அருமையான அறிவுரை! மிக்க சந்தோசமாக இருக்கிறது தங்களை நினைத்து!! இதுபோன்ற சமூக அக்கரை ஒவ்வொரு மனிதனிடமும் இருந்து விட்டால் ஏன் இந்த அவல நிலை?

thiruthiru said...

அன்புள்ள பிகேபி,
எதற்காக வருத்தம்? சொல்ல வேண்டிய விஷயம் தானே? சீரழிகின்றவர்களை அவர்கள் நிலையுணரச் செய்ய எல்லா ரும் ஒரு சிறு காரியமாவது செய்யத் தானே வேண்டும்? சமூகப் பொறுப்போடு எழுதியதற்காகப் பெருமைப் படுங்கள்.

சுகந்தன் said...

வணக்கம் நண்பரே
என்ன இது இப்படிக் கூறிவிட்டீர்களே..
அறிவுரைகளும் அனுபவமும் பகிர்தல் பிறருக்கு நன்மை பயக்கும் அல்லவா?
பிறகு ஏன் இந்த மனக்குழப்பம்..உன்மைகள் சில நேரம் கசக்கத்தான் செய்கின்றன
என்ன செய்ய..
இது ஒன்றும் பேசாப்பொருள் அல்லவே. நடப்பதை கூறுகின்றீர்கள்.
நன்றி....

பி.கு. நீண்டநாள் வாசகன் நான். உங்களது மனவருத்தம் தான் என்னை எழுதத் தூண்டியது.
அன்புடன்
சுகந்தன்

தமிழ்நெஞ்சம் said...

This is not a dirty post. This is an essential post for us.

Aha..

How did you do that? "PinnoottaPPuyalgal".

I tried to change my blog's template. But that advt. is not properly displaying in that. So, I revert back to classic template.

Ok. leave it.

Your posts are awesome. You are thinking as fast as LIGHT SPEED.

Aha..

seeman said...

வணக்கம் வாழ்த்துகள் ... எனது பெயர் gani ....உண்மை பல சமயம் கசக்கும், சில சமயம் மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது...... நண்பரே,
நியாயமான அறிவுரை...

இராஜன் முருகவேல் said...

'ஐஸ்கிறீம் சிலையே நீதானோ?' மின்னூலை தங்கள் தளம் மூலமாக அறிவித்தமைக்கு மிகவும் நன்றி.

ஜாபர் said...

நண்பரே!
"மீறி வெப்கேமோ, கேமரா உள்ள செல்போனோ, அல்லது வேறெதாவதொரு கேமராவோ படுக்கையறைக்கு கொண்டுவரும் கணவன் எவனானாலும் அவனை செருப்பால் அடியுங்கள். அப்படியொரு ரசனை அவனுக்கு தேவையில்லை."..... என்று தங்கள் கருத்தை பதிவு செய்திருக்கிறீர்கள். இதில் 'செருப்பால் அடியுங்கள்' என்ற வரியை நான் ஆட்சேபிக்கிறேன். "பெண்ணே! நீ விதவையானாலும் பரவாயில்லை அவன் கதையை முடித்துவிடு" என்று தாங்கள் சொல்லியிருந்தால் நான் தங்களை பாராட்டி இருப்பேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்