உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, April 03, 2008

கணிணி மொழிகளின் நிலவரம்

தற்செயலாக இணையத்தில் நீங்கள் பக்கத்தில் காணும் வரைபடத்தை காண நேரிட்டது. இன்று மார்க்கெட்டில் சூடான கணிணி பாஷை எது? எந்த கணிணி புரோகிராமிங் மொழி முந்தி செல்கின்றது? எது பிந்துகின்றது என்பவற்றை இது அழகாய் காட்டுகின்றது. ஜாவா கொஞ்ச நாட்களாகவே சூப்பர்ஸ்டார் தான்.2005-ல் அதற்கு "பாபா" நேரம் போலும். அவ்வருடம் சி அதை முந்தி டாப்பிலிருந்தது. எனினும் பீனிக்சாய் எழும்பி அசைக்கமுடியா கணிணி மொழியாய் ஜாவா இன்று நிற்கின்றதாம். கடந்த வருடம் மூன்றாவது
இடத்திலிருந்த சி++-ஐ ஒரே அடியாய் அடித்து தள்ளிவிட்டு விசுவல்பேசிக் இந்த வருடம் மூன்றாம் இடத்திற்கு வந்துவிட்டது.

ஒரு வரிகூட எழுத தெரியாவிட்டாலும் என்னமோ எனது அபிமான கணிணிமொழியான பிஎச்பி-க்கு நாலாவது இடம் தான்.அது ரொம்ப ஏறுவதும் இல்லை.ரொம்ப இறங்குவதும் இல்லை.ஸ்டெடி பார்டி.அதற்கு அப்புறம் தான் பெர்ல், பைதான் -லாம் வருகின்றது. நோட்டம் விட்டதில் 100-க்கும் மேல் இது மாதிரி கணிணி மொழிகள் உள்ளனவாம்.உங்களுக்கும்
தெரியட்டுமேன்னு இங்கே பட்டியலிட்டேன்.

அநியாயம் என்னன்னா எனக்கு நன்னா தெரிந்த கணிணிமொழியான அதன் தாய்மொழியாம் பைனரியை இப்பட்டியலில் காணோம். ஜூட்.

மேலும் அறிய
TIOBE Programming Community index for March 2008

Java,C,(Visual) Basic, PHP,C++,Perl, Python,C#,Delphi,Ruby, JavaScript,D, PL/SQL,SAS, COBOL,Pascal, Ada,Lisp/Scheme,FoxPro/xBase,Lua,ActionScript,ColdFusion, Logo,Fortran, RPG , MATLAB,Prolog,Awk,ABAP,Transact-SQL, LabView,Groovy,PL/I, Smalltalk,Haskell, Bash, CL (OS/400),Euphoria,Ch ,Tcl/Tk,ML,Forth,Natural,Lingo,R,Objective-C,REXX, Factor, Erlang,VBScript ,ABC, Algol, Alpha, APL, Applescript, AspectJ, Beta, Boo, Caml, cg, Clean, Csh, cT, Curl, DC, Dylan, Eiffel, Felix, Focus, Fortress, Icon, IDL, Inform, Io, J#, MAD, Magic, Maple, Mathematica, Modula-2, MOO, MUMPS, Oberon, Occam, Oz, PILOT, Postscript, Powerbuilder, PowerShell, Progress, Q, REALbasic, Rebol, S-lang, Scala, SIGNAL, SPSS, Verilog, VHDL, XSLT

அதென்னங்க C,C++ மொழிகளையும் தாண்டி D மொழி வந்த பிறகும் C தான் இன்னும் நம்பர் ஒன்.ஏன்? ஒன்னுமே புரியலீங்க. :)

நண்பர் Sen22 கேட்டிருந்தார்.Hi PKP,I Just joined the BCA direct 2nd year.. i need detail C++ book in tamil..Senthil Kumar Bangalore
Here you go.

"C++ தமிழில்" தமிழில் ஒரு தொழில் நுட்ப பாடநூல் மென்புத்தகம் "C++ in Tamil" A Technical Guide in Tamil e-book Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



4 comments:

ராஜசேகரன் said...

அன்பு நண்பர் PKP அவர்களே என்னிடம் தற்போது கொடுக்கப்பட்டுள்ள கணிணியில் (விண்டோஸ் விஸ்டா ) ஆபீஸ் 2007 ஹிந்தியில் உள்ளது. அதை ஆங்கிலத்தில் மாற்ற முடியவில்லை. இதற்கு தீர்வு உள்ளதா?

Rajasekaran

வால்பையன் said...

தமிழர்களின் நண்பர் PKP அவர்களே!

கணினி மொழி எதுவுமே தெரியாத எனக்கு, நண்பர்களின் உதவியுடன் html கொஞ்சம் செய்து கொண்டிருக்கிறேன், சட்டம் மற்றும் அதற்குள் எழுத்துக்கள் போன்று செய்யவேண்டும்

எளிய தமிழில் html புத்தகம் கிடைக்குமா?

வால்பையன்

Anonymous said...

Cool java is till number one....
'C' is indeed mother most of the highlevel language...

Anonymous said...

hi PKP,

The link for C ++ file is throwing some error. Please correct to enable us to download the said file.

Thanking you for the good activities.

Sridhar

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்