உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in
Showing posts with label Tips. Show all posts
Showing posts with label Tips. Show all posts

Monday, September 03, 2012

ஆறு வார்த்தைகளில்



Email PostDownload this post as PDF

Friday, June 29, 2012

பாமர சைக்காலஜி


Email PostDownload this post as PDF

Friday, July 08, 2011

பிளாக்பெர்ரியில் தமிழ்

மொபைல் சந்தையில் பிரபலமாக இருக்கும் பிளாக்பெர்ரி கைப்பேசிகள் சொந்தமாக தமிழ்,இந்தி போன்ற Indic font-களை சப்போர்ட் செய்ய வெகுகாலம் பிடித்திருக்கின்றது. சமீபத்தில் வெளியாகியுள்ள Blackberry 6 OS தமிழை ஆதரிக்கின்றதாம். ஆண்டிராயிடு போன்கள் இன்னும் சொந்தமாக இண்டிக் பாண்டுகளை சப்போர்ட் செய்யத் தொடங்கவில்லை. கெஞ்சிக்கூத்தாட வேண்டியிருக்கின்றது. ஏதோ ஒரு சொதப்பல் மாடியூலை அவர்கள் OS-ல் சேர்க்க அத்தனை யோசனை. ஆப்பிள் ஐபோன்கள், ஐபேடுகள் தமிழை அழகாக காட்டத் தொடங்கி வருடங்களாகிவிட்டது. இதிலிருந்தே அப்பட்டமாக தெரியவில்லையா ஏன் மக்கள் ஐபோன் விரும்பிகளாகி விட்டார்களென. சின்ன சின்ன விசயங்களானாலும் அதில் அதிக அக்கரையெடுத்து எதையும் நேர்த்தியாய் செய்வதால் தான் ஆப்பிள் இன்றைக்கு ஜாம்பவானாய் நிற்கின்றது என்றால் அதில் சந்தேகமே இல்லை.

பிளாக்பெர்ரி ver6 OS போன்கள் இந்தியாவில் வாங்கினால் மட்டுமே Indic font-டோடு வருகின்றதாக கேள்வி. வெளிநாடுகளில் வாழும் நம் ஆட்கள் கீழ் கண்ட cod கோப்பை உங்கள் கணிணியில் நிறுவ வேண்டும்.

சோ இங்கே சம்மரி.

முதலில் உங்கள் பிளாக்பெர்ரி OS வெர்சனை தெரிந்துகொள்ளுங்கள்.
Home screen போய் Settings போய் Options போய் About -ல் தெரிந்துகொள்ளலாம்.

உங்கள் பிளாக்பெர்ரி ver5 எனில் நோ குட் நியூஸ். Opera mini browser நிறுவி அதன் வழி தமிழ் பார்த்து நீங்கள் திருப்திபட்டுக்கொள்ள வேண்டியதுதான்.
வழி இங்கே.
http://wiki.pkp.in/forum/t-159712/reading-tamil-in-blackberry#post-1195625

எல்லா பயன்பாடுகளிலும் தமிழ் தெரிய உங்கள் பிளாக்பெர்ரி OS ver6-ஆக இருக்க வேண்டும். உங்கள் பிளாக்பெர்ரி அலுவலக கைப்பேசி என்றால் கம்பெனி ஐ.ற்றி-காரர்கள் ver5 to ver6 அப்கிரேடு செய்யவேண்டும். எனவே காத்திருக்க வேண்டியிருக்கும். அதுவே பிளாக்பெர்ரி உங்கள் சொந்த போன் என்றால் கீழ்கண்ட சுட்டி போய் அப்கிரேடு செய்யலாம்.
http://us.blackberry.com/update/

BlackBerry 6 OS உள்ளவர்கள் செய்யவேண்டியது.
பிளாக்பெர்ரியை USB கேபிள் வழி கணிணியில் இணைத்ததும் Device manager-ல் உங்கள் பிளாக்பெர்ரி தெரிகின்றதா என பார்க்கவும்.
இல்லையெனில் கீழ்கண்ட சுட்டியிலிருந்து BlackBerry USB and Modem Drivers_ENG.msi என்ற கோப்பை இறக்கி டிவைஸ் டிரைவர் நிறுவிக்கொள்ளவும்.
https://swdownloads.blackberry.com/Downloads/

கீழ்கண்ட net_rim_font_indic.cod என்ற கோப்பை இறக்கம் செய்துவைத்துக்கொள்ளுங்கள்.
Download net_rim_font_indic.cod

BBSAK என்னும் மென்பொருளை கீழ்கண்ட சுட்டியிலிருந்து இறக்கம் செய்து நிறுவிக்கொள்ளவும்
http://www.bbsak.org/download.php
Direct download link
http://bbsak.org/request.php?f=BBSAKv1.9.11_Installer.msi

பிளாக்பெர்ரியை USB கேபிள் வழி கணிணியில் இணைத்து bbsak அப்ளிகேஷனை ஓடவிடுங்கள். பாஸ்வேர்ட் கீயை டைப்செய்து பின் Modify COD-ஐ சொடுக்கி பின் Install COD(s) பொத்தானை சொடுக்கவும்.இங்கே ஏற்கனவே நீங்கள் இறக்கம் செய்துவைத்துள்ள net_rim_font_indic.cod கோப்பை காட்டவும்.(More detail instructions here.http://www.blackberryempire.com/forum/viewtopic.php?f=56&t=307)

அவ்வளவுதான். உங்கள் பிளாக்பெர்ரியில் இந்திய மொழி எழுத்துருக்கள் நிறுவப்பட்டு அது ரீபூட்டாகும். இனி எல்லா பிளாக்பெர்ரி அப்ளிகேஷன்களிலும் தமிழ் தெளிவாக தெரியும். hmm... தமிழ் காண என்ன பாடுபட வேண்டி இருக்கின்றது.
- தகவல் உதவி நம் விக்கியில் விருந்தினராக வந்து சென்ற நண்பர் கோகுல்.


Email PostDownload this post as PDF

Friday, August 07, 2009

தெரிந்த மென்பொருள்கள் தெரியாத பயன்பாடுகள்

அன்றாடம் நாம் பயன்படுத்தும் சில மென்பொருள்களில் ஒளிந்திருக்கும் பயன்பாடுகளை சாமானியர்களுக்காக இங்கே தனித்திட விரும்பினேன்.

1.உங்கள் விண்டோஸ் கணிணியில் ஏற்கனவே உள்ள சாதாரண Windows Media Player மூலம் உங்கள் ஆடியோ சிடியிலுள்ள இசைக்கோடுகளையெல்லாம் MP3-யாக மாற்றி கணிணியில் சேமிக்க முடியும் தெரியுமோ? அதிலுள்ள Rip வசதியை பயன்படுத்தலாம்..


2.Windows Media Player Classic மூலம் ஒரு மூவியின் ScreenCaps-யை கீழ்கண்டது போல் அழகாக ஒரே சொடுக்கில் எடுக்கலாம் தெரியுமோ?

Download Windows Media Player Classic
http://www.free-codecs.com/Media_Player_Classic_download.htm

3.இப்போது இலவசமாக கிடைக்கும் RealPlayer SP BETA மூலம் ஒரு வீடியோ/ஆடியோ ஃபார்மேட்டை இன்னொரு வீடியோ/ஆடியோ ஃபார்மேட்டாக எளிதாக மாற்றலாம் தெரியுமோ?

Download RealPlayer SP BETA
http://www.real.com

How to use RealPlayer's free media converter in 3 short steps:
1) Download your video or audio file to your computer.
2) Click on the "Copy To" link next to the video.
3) Select your device from the list and RealPlayer SPBeta will automatically convert your file to the right format and transfer it to your device

4.Microsoft Office 2007 கோப்புகளை நேரடியாக MS Office-யிலிருந்தே PDF கோப்புகளாக சேமிக்கலாம் தெரியுமோ?. Save as PDF Add-in-ஐ பயன்படுத்துங்கள்

Download
http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyID=f1fc413c-6d89-4f15-991b-63b07ba5f2e5&displaylang=en

5.விண்டோஸ் டெக்ஸ்டாப்பில் பலவகையான கோப்புகளையும் நாம் தாறுமாறாக அப்படியும் இப்படியும் போட்டிருப்போம். Wallpaper எல்லாருக்கும் தெரிந்த விஷயம். அதையே மிக பயனுள்ளதாக பயன்படுத்த இதோ ஒரு எளிய வழி.
சாதாரண விண்டோஸ் வால் பேப்பர் இப்படி இருக்கும்.

அதையே இப்படி பயனுள்ளதாகவும் மாற்றலாம்.

Download
http://antbag.com/desktops


ஏதாவது ஒரு தரப்பில் சேருங்கள்.
நடுநிலைமை வகிப்பது அக்கிரமக்காரனுக்குத்தான் உதவியாக இருக்கும்.
அக்கிரமத்துக்கு உள்ளாகிறவனுக்கு உதவாது.
மௌனம் சாதிப்பது கொடியவனுக்கே ஊக்கம் அளிக்கும்.
கொடுமைக்கு உள்ளாகிறவனுக்கு ஊக்கமளிக்காது

- 1986-ல் சமாதான நோபல் பரிசு பெற்ற ஏலிவீசெல்











சுதேசமித்திரன் அமுதும் நஞ்சும் தமிழ் சினிமா பற்றிய மென்புத்தகம். Suthesamithiran Amuthum Nanchum Tamil cinema pdf ebook Download. Click and Save.
Download


Email PostDownload this post as PDF

Sunday, July 06, 2008

ரேப்பிட் வைரஸ்கள்

விண்டோஸ் எக்ஸ்பியில் அடிப்படையிலேயே பயர்வால் ஒன்று ஓடிக்கொண்டே உள்ளதால் இப்போதெல்லாம் வைரஸ்கள் தானாக வந்து உங்கள் கணிணியை தாக்குவது அபூர்வமே.மாறாக நாமாகப் போய் வலிய வம்பை விலைக்கு வாங்கிக் கொண்டால் தான் உண்டு.ஏடாகூடாமான தளம் எதற்காவது போய் அங்கு தோன்றும் ஒரு பாப் அப் விண்டோவில் "Yes" சொல்லி வைரஸை விலைக்கு வாங்கும் ரகம் பாமர கணிணி பயனர்கள் ரகம் எனில் தேடிப்போய் ஒரு குறிப்பிட்ட ".exe" கோப்பை ரேப்பிட்ஷேரிலிருந்தோ அல்லது இது போன்ற இன்ன பிற கோப்புகிடங்குகளிலிருந்தோ இறக்கம் செய்து அது வழி வைரசை தங்கள் கணிணிக்கு இறக்குமதி செய்யும் ரகம் கீக் (Geek) கணிணி பயனர்கள் ரகம்.

எதாவது ஒரு பயன்பாடு வேண்டுமெனில் உடனே அதற்காக பட்டென ஏதாவது ஒரு ரேப்பிட்சேர் சுட்டியிலிருந்து அதை இறக்கம் செய்வது அத்தனை பாதுகாப்பானதல்ல. முடிந்த வரைக்கும் நம்பகமான தளத்திலிருந்து மட்டுமே "எக்சிகியூட்டபிள்"-களை இறக்கம் செய்வது நல்லது. அல்லது இறக்கம் செய்ததும் நன்றாக ஸ்கேன் செய்ய ஒரு நல்ல வைரஸ் ஸ்கேனராவது உருப்படியாய் வைத்திருத்தல் வேண்டும்.

MP3 கோப்புகள், வீடியோ கோப்புகள், PDF கோப்புகள் ,சில சமயம் CBTகள் இது தவிர பிற வகை கோப்புகளை முக்கியமாய் exe கோப்புகளை இறக்கம் செய்து உங்கள் கணிணியில் ஓட விடுதல் அத்தனை பாதுகாப்பான பழக்கம் அல்லவே. எவர் என்ன நோக்கில் அந்த மென்பொருளை அங்கு சேமித்து வைத்துள்ளாரோ? அதனுள் ஏதாவது வைரசோ அல்லது பிற மர்ம ட்ரோஜன்களோ ஒளிந்திருந்தால் அது நமக்கு சுத்தமாய் தெரிவதில்லை. நம்மில் பலரும் வைரசில் மாட்டிவிடல் இப்படித் தான்.

அது இப்படி இருக்க, இங்கே ஒரு டிப்.

ரேப்பிட்சேரில் 100MB-க்கும் பெரிதான கோப்புகளை சேமிக்க முடியாததாகையால் டிவிடிக்களை நூறு நூறு Meg-காக பல .rar துண்டுகளாக்கி ஒரு குழுவாக இணைஏற்றம் செய்து வைத்திருப்பார்கள். பத்து .rar கோப்புகளில் ஒன்பதை பல மணிநேரமாய் இறக்கம் செய்த பின் 10வது இறக்கமாக மறுக்கும். அனைத்தையும் இறக்கம் செய்யாமல் Winrar-ம் அவ்வீடியோவை Extract செய்யவிடாது. ஒரே டென்சனாகிப் போகும். குறைந்தது இறக்கம் செய்துள்ள அந்த ஒன்பது .rar கோப்புகளில் உள்ள வீடியோவையாவது பார்க்க வழியுள்ளதா?
ஆம் உள்ளது.

அந்த .rar கோப்புக் குழுவை விரிவாக்கம் செய்யும் முன் மறக்காமல் "Keep broken files" -ஐ Winrar-ல் டிக் செய்துகொள்ளுங்கள்.(படம்)

பத்தாவதை பார்க்க இயலாவிட்டாலும் மற்ற ஒன்பதையாவது பார்க்கலாம்.

பாமாவின் கருக்கு மற்றும் சங்கதி ஆகிய இரு நூல்களின் தொகுப்பு "தழும்புகள் காயங்களாகி" நூல் இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Baama Karukku Sangathi Books as Thalumbugal Kayangalaagi in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Tuesday, July 01, 2008

சில கணிணி சட்டாம்பி டிப்ஸ்

கணிணி சட்டாம்பிகளை பார்த்திருப்பீர்களானால் அவர்களின் விரல்கள் தட்டச்சுப்பலகையின் மேல் மின்னல்வேகத்தில் சுழன்றடிக்கும் அதேவேளையில் திரையில் காரியம் முடிந்திருக்கும். வியப்பாய் நாம் பார்த்துக்கொண்டு நிற்போம். மூன்று நிமிடத்தில் நாம் செய்வதை அவர் மூன்றே நொடியில் செய்து முடிப்பார். எல்லாம் தட்டச்சு குறுக்கு வழிகளின் உபயம் தான். நீங்கள் இந்த சிற்சில கீபோர்டு குறுக்குவழிகளை தெரிந்து வைத்திருந்து அதை அவ்வப்போது பழக்கப்படுத்தி வந்தால் ஒருநாள் நீங்களும் கணிணி சட்டாம்பி தான்.










ஏதாவது .com என முடியும் தளம் போகவேண்டுமா? like www.yahoo.com , just type yahoo in address bar and hit ctrl + enter

ஏதாவது .net என முடியும் தளம் போகவேண்டுமா? like www.yahoo.net , just type yahoo in address bar and hit Shift + Enter

ஏதாவது .org என முடியும் தளம் போகவேண்டுமா? like www.yahoo.org , just type yahoo in address bar and hit ctrl + shift + Enter

Ctrl-லை அழுத்தியவாறே + அழுத்தினால் எழுத்துரு பெரிதாகிக்கொண்டேவரும்.தெரியுமா?
Ctrl-லை அழுத்தியவாறே - அழுத்தினால் எழுத்துரு சிறிதாகிக்கொண்டேவரும்.தெரியுமோ?

Ctrl-லை அழுத்தியவாறே a அழுத்தினால் அது அனைத்தையும் தெரிவு செய்யும்
Ctrl-லை அழுத்தியவாறே c அழுத்தினால் அது தெரிவு செய்தவற்றை காப்பி செய்யும்
Ctrl-லை அழுத்தியவாறே x அழுத்தினால் அது தெரிவு செய்தவற்றை கட் செய்யும்
Ctrl-லை அழுத்தியவாறே v அழுத்தினால் அது மேலே நீங்கள் தெரிவு செய்தவற்றை பேஸ்ட் செய்யும்
Ctrl-லை அழுத்தியவாறே ESC அழுத்தினால் Start menu திறக்கப்படும்.

Alt-ஐ அழுத்தியவாறே F4 அழுத்தினால் உங்கள் முன்னால் உள்ள விண்டோ மூடப்படும்.
WINDOWS KEY -ஐ அழுத்தியவாறே D அழுத்தினால் உங்கள் முன்னால் உள்ள எல்லா விண்டோஸ்களும் மினிமைஸ் செய்யப்பட்டு டெஸ்க் டாப் மட்டுமே தெரியும்.
WINDOWS KEY -ஐ அழுத்தியவாறே F அழுத்தினால் Find files திறக்கும்.
F3 அழுத்தினால் Find திறக்கும்.
F5 அழுத்தினால் refresh ஆகும்.
Alt-ஐ அழுத்தியவாறே tab அழுத்தினால் திறக்கப்பட்டிருக்கும் அப்ளிகேசன் விண்டோஸ்களிடையே உலாவரலாம்.

shift-ஐ அழுத்திக்கொண்டு down or up key அழுத்தினால் அது குறிப்பிட்ட வரிகளை மட்டும் தெரிவு செய்யும்.
shift-ஐ அழுத்திக்கொண்டு page down or page up அழுத்தினால் அது குறிப்பிட்ட முழு பக்கங்களையும் தெரிவு செய்யும்.

Tab-ஐ தட்டுவது 8 spaces தட்டுவதற்கு சமானமாகும்.

Start->run -ல்
... (மூன்று புள்ளிகள் டைப்பினால்) My Computer திறக்கப்படும்
.. (இரண்டு புள்ளிகள் டைப்பினால்) Documents and settings folder திறக்கப்படும்
. (ஒரு புள்ளி டைப்பினால்)User Profile திறக்கப்படும்

WINDOWS KEY -ஐ தட்டி அப்புறம் L-வை தட்டினால் உங்கள் கணிணி லாக் ஆகிவிடும்.
WINDOWS KEY -ஐ தட்டி அப்புறம் U-வை தட்டினால் உங்கள் கணிணி ஷட்டவுன் செய்யவாவென கேட்கும்.

இப்படி ஒவ்வொன்றாய் முயன்றுபாருங்கள் எல்லாமே சாத்தியம். சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் நாப்பழக்கம்.

உபயோகமான சில Pdf-கள்
Computer Shortcuts Quick Reference Guide
Windows XP Keyboard Shortcuts

சட்டம் போடும் பிள்ளை தான் சட்டாம் பிள்ளையாகி பின் சட்டாம்பியாகி விட்டதாக கோபால் சொன்னான்.

ஆத்ம ஞான இரகசியங்கள் இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Aathma Jana Ragasiyankal - Secrets of the Undiscovered Self in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Sunday, May 11, 2008

மிஸ்டர் ஜேபிஜி

டிஜிட்டல் கேமெரா வந்தாலும் வந்தது இப்போதெல்லாம் ஃபிலிம் செலவில்லை கழுவ செலவில்லை. இஷ்டத்துக்கும் படங்களை சுட்டுத்தள்ளலாம். உங்கள் குழந்தை வளர்வதை வாராவாரமாக மாதாமாதமாக வரிசையாக படம் பிடித்துவைக்கலாம். சில வருடங்களுக்கு முன் கொடைக்கானல் போனது, தஞ்சாவூர் போனது, கும்பக்கோணம் கல்யாணம், துபாய் அஞ்சப்பரில் சாப்பிட்டது, அபுதாபி அடுக்குமாடிகளை வியந்தது, சார்ஜா கிரிக்கெட் மைதானம் போனது இப்படி ஏகப்பட்ட நினைவுகள் இன்று டிஜிட்டல் இமேஜ்களாகி உங்கள் கணிணியில் இருக்கும்.

பல சமயங்களில் இந்த மாதிரி நடப்பதுண்டு. நீங்கள் "இது பாப்பா 3 மாசமா இருக்கும் போது எடுத்த படம்" என சொல்ல மனைவி "இல்லை இது 6 மாசத்தில் எடுத்த படம் ஆர் யூ கிரேசி" என்பாள். துபாய் போனது 2003-ல் என நீங்கள் அடித்து சொல்ல இல்லை அது 2004-ல் என அவள் தகராறு செய்வாள்.இது போன்ற சமயங்களில் உங்களுக்கு உதவுபவர் தான் மிஸ்டர் ஜேபிஜி.

நீங்கள் நினைப்பது போல உங்கள் ஒளிப்படக்கருவி படம் பிடிக்கும் போது உருவாகும் .jpg கோப்பானது வெறும் படத்தை மட்டும் கொண்டிருப்பதில்லை. அந்த .jpg கோப்பானது இன்னபிற தகவல்களையும் தன்னகத்தே மறைவாய்க் கொண்டுள்ளதாம். உதாரணமாய் இந்த படம் எப்போது எடுக்கப்பட்டது (நாள்,சமயம் எல்லாம் துல்லியமாய்),அப்போது பிளாஷ் உபயோகப் படுத்தப்பட்டதா இல்லையா போன்ற பல தகவல்கள். இத்தகவல்களை Exif அல்லது மெட்டாடேட்டா என்கின்றார்கள்.(EXIF stands for Exchangeable Image File - Examples of stored information are shutter speed, date and time, focal length, exposure compensation, metering pattern and if a flash was used etc)

ஆமாம்.இப்போது நீங்கள் உங்கள் மனைவியிடம் பந்தயம் கூட வைத்துக்கொள்ளலாம். கீழ்கண்ட Exif ரீடரை பயன்படுத்தி அந்த குறிப்பிட்ட உங்கள் பாப்பாவின் போட்டோ சரியாக எந்த ஆண்டு, எந்த நாள், எந்த நிமிடம் எடுக்கப்பட்டது என அறிந்துகொள்ளலாம். துபாய் போனது எந்த ஆண்டுவெனவும் தெரிந்துகொள்ளலாம். நீங்கள் சொன்னது தான் சரியென்றால் "Something wrong with your computer"-ன்னு உங்கள் மனைவி சொல்வாள் என்பது வேறு விஷயம். ஆச்சர்யபடவேண்டாம்.
Download Exif Reader

இந்த முக்கியமான Exif தகவல்களை நீங்கள் போட்டோ எடிட்டிங் செய்யும்போது இழக்க நேரிடலாம். ஆதலால் போட்டோ எடிட்டிங் செய்யும் முன் அசலை அப்படியே பத்திரமாக வைத்துவிட்டு நகலை மட்டும் எடிட்டிங் செய்தல் நல்லது.
அல்லது
கீழ்கண்ட இன்னொரு மென்பொருளால் இந்த Exif தகவல்களை பேக்கப்செய்து பத்திரப் படுத்திவிட்டு உங்கள் திருவிளையாடல்களை தொடரலாம். முடிந்ததும் மீண்டும் அந்த Exif தகவல்களை எடிட்செய்யப்பட்ட படத்தின் மீது மீட்டுக் கொள்ளலாம்.Backup exif before editing it , and then after editing restore it back using Exifer.
Download Exifer

நீங்கள் எடுத்த டிஜிட்டல் ஒளிப்படங்களெல்லாம் ஒரு ஃபோல்டரில் IMG_001.JPG, IMG_002.JPG, IMG_003.JPG.... என img-க்களாகவோ அல்லது DSC001.JPG, DSC002.JPG, DSC003.JPG...என dsc-க்களாகவோ தானாகவே பெயரிடப்பட்டு இருக்கும். இப்படி கண்டபடி சம்பந்தமேயில்லாமல் போட்டோக்களுக்கு பெயர்கொடுக்காமல் அந்த போட்டோ எடுக்கப்பட்ட நாள்,நேரத்தையே அதற்கு பெயராக கொடுத்தால் எப்படி இருக்கும்? (மேலே படம்) இதன் மூலம் பல்வேறு உங்கள் போட்டோக்களை காலகிரமபடி வரிசைப்படுத்துவதோடு அதை பார்வையிடும் போதும் ஒரு தொடர்வாய் பார்வையிடலாம் அல்லவா? அதற்கு உதவுவது தான் கீழ்கண்ட மென்பொருள். இது உங்கள் டிஜிட்டல் போட்டோக்களின் Exif தகவல்களை தானாகவே படித்து அதிலுள்ள நாள்படி உங்கள் போட்டோக்களை அழகாய் கிரமமாய் பெயர்மாற்றம் செய்யுமாம்.(Eg.2007-08-15 18.05.27.jpg)
Namexif-automatically rename photos with the date they were shot.
Download Namexif

நண்பர் muralidharan கேட்டிருந்தார்
Dear PKP sir, I am a professsional still photographer. Please send me some interested digital photographic software equal to photoshop, (freeware)

போட்டோஷாப்புக்கு இணையான செயல்பாடுகளுடன் கிடைக்கும் ஒரே இலவச ஒளிப்படக் கலவை மென்பொருள் அது GIMP தான் (GNU Image Manipulation Program). முயன்றுபாருங்கள்.கீழே சுட்டி.
http://www.gimp.org

அ.முத்துலிங்கம் "அங்கே இப்ப என்ன நேரம்" தமிழில் கட்டுரைகள் இங்கே சிறு மென் புத்தகமாக. A Muthulingam Ange Ippo enna neram in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Monday, April 21, 2008

இந்தியா .in

cctld world image - click for full size map
இங்கு நீங்கள் பார்க்கும் உலக வரைபடம் சற்று வித்தியாசமானது. அதை சொடுக்கி நீங்கள் பெரிது படுத்திப் பார்த்தால் உலகில் ஒவ்வொரு நாட்டிற்கும் கொடுக்கப்பட்டுள்ள டொமைன் பெயரை அது காட்டும்.(இந்தியாவிற்கு .in போன்று)

சரி விஷயத்துக்கு வருவோம்.

எனது முந்தைய இணையவிலாஸ் பதிவினைத் தொடர்ந்து எழுப்பப்பட்ட சில கேள்விகளுக்கு இங்கு நான் பதிலளிக்கலாம் என்றிருக்கின்றேன்.

நண்பர் Thameem கேட்டிருந்தார்.
How can i get .com or .in website.
Can you post me the details (including the expences).


நண்பர் Shiva கேட்டிருந்தார்.
புதிதாக இனையதளம் ஆரம்பிக்க யாரிடம் பதிவு செய்வது நல்லது.ஆண்டொன்றுக்கு (தோராயமாக) எவ்வளவு கட்டணம் இருக்கும்.

.com போன்ற சர்வதேச டொமைன் பெயர்களை பதிவுசெய்ய www.godaddy.com போன்ற பேர்போன இணையதளங்களை அணுகலாம். டாலரில் காசு செலுத்த வேண்டும். வருடத்திற்கு ஒரு .com பெயருக்கு 10 டாலர்கள் வரை செலவுஆகும்.

.com மட்டுமல்லாது இந்திய டொமைன்பெயர்களான .in மற்றும் .co.in போன்ற பெயர்களையும் பதிவுசெய்ய www.hostindia.net என்ற இணைய தளத்தை அணுகலாம்.
ஒரு .com பெயருக்கு வருடத்திற்கு ரூ 349 செலவாகும்.
ஒரு .in பெயருக்கு வருடத்திற்கு ரூ 699 செலவாகும்.

மொத்தமாய் பல டொமைன் பெயர்களை வாங்கினாலோ அல்லது பலவருடங்களுக்கு ஒரு பெயரை பதிவுசெய்தாலோ அல்லது பிற சேவைகளையும் சேர்த்துவாங்கினாலோ இந்த விலைகளில் தள்ளுபடிகள் கிடைக்கும்.

நண்பர் Shiva கேட்டிருந்தார்.
நமது தளத்துக்கு யாராவது வருகை புரிந்தால் அதில் நமக்கு லாபம் ஏதாவது வருமா?

சிவா, அது முழுக்க முழுக்க உங்கள் தளத்தின் பயன்பாட்டை பொறுத்தது.
Sify Mall போன்ற நேரடியாக வர்த்தக நோக்கில் வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் எதாவது விற்றுக்கொண்டே இருக்க வேண்டும். காசு வரும்.
Tamil Matrimony போன்று மக்களுக்கு சேவைகள்/உதவிகள் செய்தும் காசுகள் சம்பாதிக்கலாம்.
இன்றைய அளவில் வெளிநாடுவாழ் இந்தியர்களையும், இந்திய பெருநகர மக்களையும் கருத்தில் கொண்டு முழுக்க முழுக்க புத்தம் புதிதாய் அவர்க்ளுக்கு எதாவது செய்தால் சூப்பர் ஹிட் ஆகலாம். உட்கார்ந்து யோசிக்கவேண்டும். அதை மென்பொருள் வடிவாக்க வேண்டும். நிறைய வேலை இருக்கிறது. காலப்போக்கில் பட்டி தொட்டிகள் வரைக்கும் இணைய இணைப்புகள் வரும் போது இதன் போக்கு இன்னும் வீரியமாகும்.

விளம்பரங்கள் வழியும் பணம் பண்ணலாம்.
அமித் அகர்வால் போல் முழுநேர வேலையாய் சீரியசாய் உட்கார்ந்து ஆங்கிலத்தில் பலருக்கும் பயனாகும் படி பிலாகினால் கூகிள் ஆட்சென்ஸ் உதவியால் ஹாண்டா சிஆர்வி வாங்கலாம்.

Html-கூட தெரிய வேண்டியதில்லை. அவ்வளவு எளிதாய் வலைபதிய மென்பொருள்கள் வந்துவிட்டன. பிரபலங்களெல்லாம் வலைப்பதிய வந்து விட்டார்கள். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிர்தாப்பாச்சன் கூட வலைபதிக்கிறாராம். குமுதம் அரசு பாணியில் பைத்தியம் என்றுவிடாதீர்கள். ரசிகர்கள் குஷியில் நூற்றுகணக்கில் பின்னூட்டமிட்டு இருக்கின்றார்கள்.bigb.Bigadda.Com
இல்லை xboard.us போன்ற மசாலா தளங்கள் நிறுவி அதில்வரும் விளம்பர வருவாய் மூலமும் லட்சங்கள் குவிக்கலாம்.

தமிழில் வலைப்பதிவி ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்.
நான் ஒரு மணிநேரத்தில் சம்பாதிப்பதை தர எனது வலைப்பதிவு விளம்பரங்கள் ஒரு மாதம் எடுக்கின்றன.

சமீபத்தில் இணையத்தில் படித்த வாசகம் ஒன்று என்னை சுள்ளென உருவக் குத்தியது போல் இருந்தது.

எதை வேண்டுமானாலும் செய். முயலு. முடி.
ஆனால் உனக்கு சோறு போடும் உன் கல்வி மற்றும் வேலையை மட்டும் மறந்து விடாதே.
அதில் முன்னேற ஏதாவது வாய்ப்புகள் உண்டோவென பார்த்துக்கொண்டே இரு.
ஏனெனில் அதனால் தான் நீ இவ்வளவு தூரமும் வந்திருக்கின்றாய்.


எத்தனை அருமை வாசகம்.


நண்பர் வால்பையன் கேட்டிருந்தார்.
தமிழர்களின் நண்பர் PKP அவர்களே!
கணினி மொழி எதுவுமே தெரியாத எனக்கு, நண்பர்களின் உதவியுடன் html கொஞ்சம் செய்து கொண்டிருக்கிறேன், சட்டம் மற்றும் அதற்குள் எழுத்துக்கள் போன்று செய்யவேண்டும்
எளிய தமிழில் html புத்தகம் கிடைக்குமா?

இங்கே "வலை வடிவாக்கம் ஒரு அறிமுகம்" அத்தியாயம் தமிழில் Pdf வடிவில்.Introduction to Web Design Chapter in Tamil pdf Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Wednesday, March 26, 2008

மறைத்து வாழ வேண்டும்

மனிதமென்றாலே அது கடவுளும் சாத்தானும் சேர்ந்த கலவை தானே.அதனால் தானோ என்னவோ தனது "டிஸ்கவரி ஆப் இந்தியா" புத்தகத்தில் நேரு இப்படியாகச் சொன்னார். "இயற்கையின் வலிமையான விளையாட்டுக் கருவியாகவும், இந்தப் பெரிய அண்டங்களில் ஒரு பூமி உருண்டையில் ஒரு தூசை விட அணுவை விட சிறியவனாக இருந்த போதிலும் மனிதன் இயற்கையின் வலிய ஆற்றலை வெற்றிக் கொண்டு அறிவினால் புரட்சிகளினால் அவற்றை அடிமைப்படுத்தினான். அங்கங்கே கடவுள்கள் இருந்தாலும்- இருப்பதாக வைத்துக் கொண்டாலும், மனிதனுக்குள் கடவுளைப்போல ஒன்று இருக்கின்றது. அவனுக்குள்ளே ஒருவகைச் சாத்தானும் இருக்கின்றது" எவ்வளவு சரியான வார்த்தைகள் அவை.

உதாரணத்திற்கு சிவப்பு விளக்கு எரிகிறதென வைத்துக்கொள்வோம். அதிகம் டிராபிக் இல்லாத நேரம். சிவப்பு விளக்கை மீறிச்செல்ல மனம் ஒத்துக்கொள்வதில்லையா?

என்ன...? சிலர் கொஞ்சம் அதிகமாய் கடவுளாகிவிடுகின்றனர். சிலர் கொஞ்சம் அதிகமாய் சாத்தானாகி விடுகின்றோம்.

தினமும் அழுக்காகின்றோம். அதனால் தானே தினமும் குளிக்க வேண்டியிருக்கின்றது.வேறு வழி?.

மறைக்கவேண்டிவற்றை மறைத்து காட்டவேண்டியதை மட்டும் காட்டினால் மனிதன் எப்போதுமே இப்போதும் போல் சமூக மிருகமாகவே இருப்பான்.

இப்போது கணிணியில் நாம் மறைக்க வேண்டியவற்றை பற்றி பார்ப்போம். :)

எதோ ஒரு தளத்திலிருந்து பல அரிய(?) தகவல்களை இறக்கம் செய்து வைத்திருக்கின்றீர்கள் என வைத்துக்கொள்வோம். அதை ஒரு ஃபோல்டரில் போட்டு வைத்துள்ளீர்கள். இப்போது யாரும் அந்த போல்டரை பார்த்து விடுவார்களோ என பயமாய் இருக்கின்றது. பிறருக்கு தெரியாமல் அந்த டைரக்டரியை எப்படி மறைப்பது?

இது தானே உங்கள் கவலை.விடுங்கள் இதோ இருக்கின்றது ஒரு தீர்வு.

இதை தான் நண்பர் மு.பா.நாகராஜனும் முன்பொரு முறை கேட்டிருந்தார்.

அன்புள்ள பிகேபி ஐயா,
Converting VCD to DVD குறித்த தங்கள் தகவலுக்கு நன்றிகள் பல. மேலும் ஓரு தகவல் அறிய ஆவல். நான் XP பயன்படுத்துகிறேன். என் பெயரில் உள்ள Drive or Folder முழுவதையும் Paasword கொண்டு மறைக்க அல்லது மூட ஆசை. ( I dont want to encrypt the files one by one, I just want to secure my drive or folder by the way of giving a passward. This is purely for maintaining privacy. I know there is an option in Tools/Folder optios/View/Do not show hidden files and folders. But this can easily be changed and my drive/folder can easily be viewed by othes who knows this option. Thats why I need password solution.)
முடியுமா...?


Free Hide Folder-எனும் இலவச மென்பொருள் கீழ்கண்ட சுட்டியில் கிடைக்கின்றது.அதை இறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவிக்கொள்ளுங்கள். பின் இம்மென்பொருள் வழி எந்த எந்த Folder-களையெல்லாம் மறைக்க வேண்டுமோ அவற்றையெல்லாம் ஒரு பாஸ்வேர்ட் கொண்டு எளிதாய் மறைத்து விடலாம்.அப்புறமென்ன எஞ்சாய்!!

Download Free Hide Folder
Product Home Page
நண்பர் KVR இப்படியாக கேட்டிருந்தார் Dear pkp, i am regular reader of your site. please more more aval vikatan recipes give me. thanking you.இதோ உங்களுக்காக சில சமையல் குறிப்புகள் தமிழில் சிறு ஈபுத்தகமாக. Samayal Kurippukal in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Wednesday, July 11, 2007

நோட்பேட் கிமிக்ஸ்கள்

சிறுசுகளுக்கு மேஜிக் காட்டி விளையாடலே ஒரு தனி அலாதிதான்.
நோட்பேடை திறவுங்கள்
.LOG என்று டைப்புங்கள்
ஏதாவது ஒரு பெயரில் அந்த கோப்பை சேமியுங்கள்.
நோட்பேடை மூடிவிட்டு மீண்டும் அந்த கோப்பை திறவுங்கள்.
ஊப்ஸ். மே...ஜிக்.
இது போன்ற கிமிக்ஸ்கள் ஆத்திர அவசரத்துக்கு உதவலாம். சிறுசுகளுக்கு மேஜிக் போல் காட்டலாம்.

அதையே இப்படியும் செய்யலாம்.
ஒரு சவாலென சொல்லுங்கள்.ஒரே ஒரு கீ மட்டும் அழுத்தி நோட்பேடில் இப்போதைய நேரம், நாள், மாதம், வருடம் என அனைத்தையும்
டைப்பமுடியுமா? வென கேளுங்கள். விழிப்பார்கள் (?)
விடை: F5-யை அழுத்தினால் அது கீழ்கண்டது போன்ற வெளியீடை கொடுக்கும்.
2:31 PM 7/11/2007

இன்றைய சிறுசுகள் பழம் தின்னு கொட்டைபோட்டவைகளென நீங்கள் முனங்குவது கேட்கின்றது.

Notepad tricks


Email PostDownload this post as PDF

Thursday, June 28, 2007

கட் அண்ட் பேஸ்ட் அபாயம்

கட் அண்ட் பேஸ்ட், காப்பி அண்ட் பேஸ்ட் (Cut&Paste,Copy&Paste) இல்லாத கணிணி ஒன்றை நினைத்து கூட பார்க்க இயலவில்லை. அப்படி நம்மோடு மிக ஒன்றிப்போன வசதிகள் அவை.
இதனால் அபாயமா?..ஆமாம் என்கின்றார்கள்.எப்படி?. நீங்கள் சமீபத்தில் உங்கள் வசதிக்காக காப்பி செய்த கிரெடிட் கார்டு எண் அல்லது பாஸ்வேர்ட் போன்றவை எளிதாக லபக் செய்யப்படலாமாம்.
அதுதான் எப்படி? .நீங்கள் ஒவ்வொரு முறையும் ஒரு குறிப்பிட்ட வரிகளை கட்டோ அல்லது காப்பியோ செய்யும் போது இத்தகவல்கள் கிளிப்போர்டு (Clipboard) எனும் தற்காலிக பிரதேசத்தில் தற்காலிகமாக சேமித்து வைக்கப்படுகின்றது. So அந்த தற்காலிக பிரதேசத்தை நீங்கள் அடையமுடிந்தால் ஆப்பரேசன் சக்ஸஸ். அதைத்தான் செய்கின்றார்கள்.

ஒரு சிறு சோதனை செய்து பார்க்கலாம்.
ஒரு வரியை தெரிவுசெய்து காப்பி செய்யுங்கள்.
ஆச்சுதா?
பின் கீழ்கண்ட சுட்டியை தட்டுங்கள்.

http://www.sourcecodesworld.com/special/clipboard.asp

என்ன ஆச்சர்யம்?.இந்த தளம் நீங்கள் காப்பி செய்த வரியை அப்படியே புட்டு வைத்து விடுகின்றது.(மஞ்சள் பிரதேசத்தில் பார்க்க).

இப்படி சேகரிக்கும் தகவல்களை அப்படியே ஒரு டேட்டாபேஸில் சேமித்தல் எவ்வளவு கடினம்??. அவர்களே இதை தடுப்பதற்கும் வழி சொல்கிறார்கள். முதலில் செய்யுங்கள் அதை.

அது போல் சில கீலாகர்களும் (Key Loggers) இந்த வேலையை தெளிவாய் சத்தமின்றிசெய்கின்றன. உதாரணத்துக்கு கீழ்கண்ட இந்த மென்பொருளை முயன்று பாருங்கள். நீங்கள் கட் அண்ட் பேஸ்ட், காப்பி அண்ட் பேஸ்ட் செய்யும் அனைத்து வரிகளும் அந்தரங்கமாய் நோட்டமிடப்பட்டு நோட்பண்ணப்படும்.

Download Clipboard Logger here.
http://www.niftytoolworks.com/download/InstCNPLoggerv1.exe

ரொம்ப உஷாரா இருக்கணும்பா.ஆமா.

எனது கீலாக்கரை பற்றிய இன்னொரு பதிவு இங்கே.
பெற்றோர்களுக்கு ஒரு hacking டிப்


Email PostDownload this post as PDF

Wednesday, June 27, 2007

போர்ட்டபிள்களை படைக்கலாம்.

போர்ட்டபிள் அப்ளிகேஸன்கள் எனப்படும் கையக மென்பொருள் பயன்பாடுகள் இப்போது மிக பிரபலம். இது பற்றிய எனது அறிமுக பதிவினை இங்கே ( போர்ட்டபிள் அப்ளிகேஷன்களின் சகா) பார்க்கலாம்.. அதாவது FireFox, Office போன்ற மொத்த மென்பொருளையும் உங்கள் கணிணியில் நிறுவாமலே USB டிரைவிலிருந்து ஓட்டலாம்.

இது போன்ற மென்பொருள்கள் பல இணைய தளங்களில் இறக்கத்துக்கு அநேகம் இருந்தாலும் தேடும் போது உங்களுக்கு தேவையான மென்பொருள் போர்ட்டபிள் அப்ளிகேஸன்களாக இறக்கத்துக்கு இல்லாமல் போகலாம். இது போன்ற வேளைகளில் நீங்களே உங்கள் அபிமான சாதாரண அப்ளிகேஷன்களை போர்ட்டபிள் அப்ளிகேஸன்களாக மாற்ற ஒரு வழியுள்ளது.
அதற்கு உதவுவது தான் Innounp (Inno Setup Unpacker). என்ன கொஞ்சம் மெனக்கெட வேண்டும்.

Innounp Home Page

Download Innounp from here

Inno Setup Home Page

Download Inno Setup from here

How to make portable applications?


Email PostDownload this post as PDF

Monday, June 25, 2007

அடோபி தலைவலி

அடோபியின் "அடோபி ரீடரை" (Adobe Reader) இதுநாள் வரை பயன்படுத்திவந்தேன். பிடிஎப் எனப்படும் (PDF-Portable Document Format ) புத்தக வகை கோப்புகளை இது வழி திறந்து படிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகின்றது. 22.3 MB அளவில் வரும் இந்த ரீடர் அவசரகாரர்களுக்கு ஒத்து வராதுவென நினைக்கின்றேன்.

துரிதமாய் PDF கோப்புகளை மின்னல் வேகத்தில் திறந்து படிக்க பாக்ஸிட்டின் FoxitReader-யை முயன்று பாருங்கள். பட் பட்டென தன் வேலையை மட்டும் செய்து அருமையாய் அசத்துகின்றது. இது வெறும் 1.67 MB அளவுதான்.

Download Adobe Reader
http://ardownload.adobe.com/pub/adobe/reader/win/8.x/8.1/enu/AdbeRdr810_en_US.exe

Download Foxit Reader
http://us01.foxitsoftware.com/foxitreader/foxitreader_setup.exe

Download Foxit Reader Portable Edition
http://us01.foxitsoftware.com/foxitreader/foxitreader.zip


Email PostDownload this post as PDF

Friday, June 22, 2007

ஒரு குலுக்கல்

அவசரமாய் நியூயார்க் வரை போயாக வேண்டிய கட்டாயத்தால் இந்த பக்கம் அவ்வளவாய் எட்டிப் பார்க்க நேரம் கிடைக்கவில்லை. இவ்வலைப்பதிவில் எழுதுவதால் எட்டிப்பார்க்கும் நண்பர்கள் எவ்வளவாய் பயன்பெறுகின்றார்கள் என
தெரியவில்லை.நான் நிறையவே பயன்பெறுகின்றேன். புதுசு புதுசாய் தெரிந்து கொள்கின்றேன். உந்தி தள்ளப்படுகின்றேன். பொழுது போக்குக்காகவே எழுதினாலும் நல்லதாய் பொழுது போகின்றதால் தொடர்ந்து எழுத ஆர்வம். பார்க்கலாம்.

நியூயார்க் போன நேரமோ என்னமோ இங்கே குலுக்கல் பற்றிய ஒரு சேதி

javascript:function Shw(n) {if (self.moveBy) {for (i = 35; i > 0; i--) {for (j = n; j > 0; j--) {self.moveBy(1,i);self.moveBy(i,0);self.moveBy(0,-i);self.moveBy(-i,0); } } }} Shw(6)

மேல் கண்ட வரிகளை அப்படியே வெட்டி உங்கள் பிரவுசரின் விலாசப்பகுதியில் ஒட்டி ஓட்டினால் என்னவாகின்றதென்று பாருங்கள்.
இதெல்லாம் ஜுஜுபினு ஜாவாக்காரர்கள் முனுமுனுப்பார்கள். எங்களைப் போன்றோர்க்கு இது பெரிசு அய்யா!!
(உங்கள் மானிட்டர் ஸ்கிரீன் குலுங்கும்.படத்துக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தமில்லை)


Email PostDownload this post as PDF

Monday, May 14, 2007

ஜிமெயில் டிரைவ்



கூகிளின் இலவச ஈமெயில் சேவையான ஜிமெயில் இந்த பெப்ரவரியிலிருந்து "அனைவருக்குமென" திறந்து விடப்பட சூடுபிடித்துக் கொண்டது போட்டி. "இங்கே வா அளவற்ற ஸ்டோரேஜ் வச்சுக்கோ" என யாகூவின் இலவச ஈமெயில் சேவையான யாகூமெயில் கூவி கூவி விற்க, சமீபத்தில் மைக்ரோசாப்டின் இலவச ஈமெயில் சேவையான பழைய காட்மெயில் பளாபளாவென முற்றிலும் புதுப்பிக்கப்பட்டு விண்டோஸ் லைவ் மெயிலென்ற பெயரில் புதிதாய் அரங்கேற்றம் பெற்றிருக்கின்றது.

இப்போதைக்கு மார்க்கெட் ஷேரில் முந்தியிருப்பது யாகூமெயிலே. அதாவது அது ஜிமெயில் போல் 13 மடங்கு பெரிதாம்.அடுத்து வருவது காட்மெயில்.அது ஜிமெயில் போல் 6 மடங்கு பெரிதாம்.அடுத்த ஒரு வருடத்தில் இந்த எண்களில் பெரும் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் மூநிறுவனங்களும் கங்கணம் கட்டிக்கொண்டு களத்திலிருக்கின்றார்கள்.

விஷயத்துக்கு வருவோம்.

உங்கள் ஜிமெயில் கணக்கில் இருக்கும் 2 Gig இடத்தையும் அப்படியே ஒரு டிரைவாக உங்கள் கணிணியில் மேப் செய்து வைத்துகொள்ளலாம்.அதற்கு உதவுவது தான் இந்த GMail Drive shell extension. அடிக்கடி பயன்படுத்தும் file-களை அல்லது folder-களை Drag and Drop அல்லது Copy and Paste செய்து அந்த ஜிமெயில் டிரைவில் வைத்து கொள்ளலாம்.
Upload செய்யப்படும் ஒவ்வொரு கோப்புகளும் அட்டாச்மென்ட் கொண்ட மெயிலாக உங்கள் Inbox-ல் காட்சி அளிக்குமாதலால் தனியே ஒரு Folder-ஐ உருவாக்கி, உள் வரும் மெயில்களின் Subject-ல் GMAILFS என்ற வார்த்தைகொண்ட மெயில்களை அந்த புது Folder-க்கு போய்விடஒரு filter வைத்து கொள்ளல் நலம்.

Product Home Page

http://www.viksoe.dk/code/gmail.htm

Download Link
http://www.filehippo.com/download/075b76ecf9f161544c51013aa3d02df2/download/

Gmail பயன்படுத்துவோர் மற்ற மெயில் சேவைகளை பயன்படுத்து வோர்களைவிட மிக இளமை துடிப்பாகவும், அதிக வருமானம் உள்ளவர் களாகவும், புதுப் புது தொழில் நுட்பங்களை உடனே பயன்படுத்தி பார்ப்பவர்களாகவும் இருக்கிறார்கள் என புதுசாய் ஒரு சர்வே எடுத்திருக்கிறார்கள். வர வர இதுபோன்ற கருத்துகணிப்புகள்
விவாதத்துக்குரியதாய் அமைந்து மார்க்கெட்டிங்குக்காய் பயன்படுத்தபடுவதோடு தலைகளையும் உருளவைக்கும் என நம்மூர் நிரூபித்திருக்கின்றது. :)


Email PostDownload this post as PDF

Wednesday, May 02, 2007

பக்காவாய் அழித்தல்

பொதுவாக நாம் கணிணியிலிருந்து அழிக்கும் கோப்புகள் தற்காலிகமாக ரீசைக்கிள்பின் போய் தங்கியிருக்கும். எப்போது வேண்டுமானாலும் அந்த கோப்புகளை நாம் அங்கிருந்து மீட்டுக்கொள்ளலாம். ஆனால் ரீசைக்கிள் பின்னிலிருந்தும் அழிக்கப்பட்டு போய்விட்டால் என்ன பண்ணுவது? இந்த இக்கடான சூழலில் இங்கே பாருங்கள் எனது பழைய பதிவு ஒன்று உதவும்.அதன் பொருள் என்னவென்றால் கோப்புகளை அழித்ததால் அக்கோப்புகள் காணாமல் போய்விட்டன...யாரும் மீட்க முடியாது என மெத்தனமாய் நினைக்க வேண்டாம்.உண்மையில் அவை எங்கோ உங்கள் டிஸ்கில் ஒளிந்து இருக்கின்றன.சரியான மென்பொருள்களை பயன்படுத்தினால் அதை மீட்டுக்கொள்ளலாம். இதை தடுக்க அதாவது உங்கள் சென்சிடிவ் கோப்புகளை பக்காவாய் முழுதுமாய் அழிக்க யாரும் மீட்டெடுக்க முடியாத படி செய்ய கீழ்க்கண்ட மென்பொருள்களை பயன்படுத்தலாம்.இவை முற்றிலும் உங்கள் கோப்புகளை டிஸ்கிலிருந்து அழித்துவிடும்.பைனான்ஸ் போன்ற முக்கிய தகவல்களை கையாளும் நிறுவனங்கள் தங்கள் பழைய டிஸ்களை அழிக்க எடுக்கும் பிரணயத்தன முயற்சிகள் ஆச்சர்யத்தை தரும். அத்தனை கடினமாம்.

http://www.download.com/AbsoluteShield-File-Shredder/3000-2092_4-10164976.html?tag=lst-0-1

http://www.tucows.com/preview/394108


Email PostDownload this post as PDF

Monday, April 30, 2007

வின்மெர்ஜ் வரப்பிரசாதம்

வரி வரியாய் கோடெழுதி பிழைக்கும் நம் போன்ற மென்பொருள் டெவலப்பர்களுக்கு யூனிக்ஸ் சார்ந்த செயலிகளில் இருக்கும் வசதிவாய்ப்புகள் வின்டோஸில் இருப்பதில்லை.அப்படியாய் ஒரு வசதி தான் இரு கோப்புகளை அல்லது இரு folder-களை பொருத்தி பார்த்து, வேறுபடுத்தி பார்த்து வித்தியாசங்களை கண்டறிதல் அதாவது compare folders and compare files.அது போல் இரு வேறு பதிப்பு file,folder-களை இணைத்தலும் வின்டோஸில் மிஸ்ஸிங். அதாவது merge folders and merge files.இது போன்ற மாயங்களை விண்டோஸ் உலகில் செய்ய இதோ ஒரு இலவச எளிய மென்பொருள்.

Screen Shot


Direct Download Link
http://prdownloads.sourceforge.net/winmerge/WinMerge-2.6.6-Setup.exe

Product Page
http://winmerge.org/


Email PostDownload this post as PDF

Monday, April 23, 2007

மொபைல் உலகம்

செல்போன் எனும் மொபைல் போன்களின் ஆதிக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகின்றனவென புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.இந்த ஆண்டு மார்ச் கணக்கீடுபடி மொத்தம் 166 மில்லியன் இந்தியர்கள் மொபைல் போன் வைத்துள்ளனராம். இது கடந்த வருடத்தை விட 68 சதவீதம் அதிகம். இந்த எண்கள் ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டேயுள்ளன. மொபைல் போன்கள் இப்போதெல்லாம் வெறும் பேசுவதற்காக மட்டுமல்லாது பிற பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளதால் இந்த ஜூரம் இன்னும் ஏறும்.

சமீபத்தில் ரிலையன்ஸ் "R World"-டோடு சன்டிவி சேர்ந்து மொபைல் போனில் சன் டிவி பார்க்கும் சூழல் உருவாகியுள்ளனர். ஏறத்தாழ சில கணங்களே தாமதமாய் லைவாய் சன் டிவி பார்க்கலாமாம்.5 நிமிடம் பார்க்க 15 ரூபாய்னு சொல்லியிருக்கிறார்கள்.இந்தியா முழுதுமாய் 30 மில்லியன் பேரும் தமிழகத்தில் மட்டும் 26 லட்சம் பேரும் ரிலையன்ஸ் சந்தாதாரர்கள். இவர்களில் 50 சதவீதம் பேர் சன்டிவி பார்க்கும் வசதியுள்ள செல்போன்கள் வைத்துள்ளார்களாம். மேலும் நிகழ்சிகளை இறக்கம் செய்து பார்க்கவும் வசதி செய்து தருகின்றார்களாம்.ஒரு இறக்கத்துக்கு 7 ரூபாய். :)

.com போல் .mobi எனும் ஒரு தனி டொமைன் பெயரே மொபைல் போன் பயன்பாட்டு வெப் சைட்டுகளுக்கென அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். நோக்கியாவின் .மொபி வெப்தளத்தை இங்கே காணலாம்.
http://nokia.mobi/

செல்போன் வழி இணையம் மேய்தலும் அதிகரித்து வருகின்றது.அதற்கு வசதியாக மைக்ரோசாப்ட் "டீப் பிஷ்" DeepFish என்று ஒரு புதுவகையான பிரவுசரோடு வந்திருக்கிறார்கள். இருக்கும் இணைய பக்கங்களை அப்படியே மினிபடுத்தி மொபைல் பதிப்பாக இது காட்டுமாம்.
http://labs.live.com/deepfish/

மைக்ரோசாப்ட் இப்போதெல்லாம் அழகாக பெயர் வைக்க கற்றிருக்கிறார்கள்.
SilverLight என்று இன்னொரு படைப்பும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இவர்களின் இந்த படைப்பு அடோபியின் பிளாஷுக்கு போட்டியாய் அமையுமோ என்று தோன்றுகிறது. புதுவகையான பிரவுசர் plugin ஆம் அது. http://www.microsoft.com/silverlight/asp/downloads.aspx


இங்கே ஒரு தளம் இந்தியாவில் செல்போனிலிருந்து யாராவது உங்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் அந்த நம்பர் எவ்விடமிருந்து வந்தது எனக் காட்டுகின்றது.முதல் 5 நம்பர்களையும் உள்ளீடு செய்து தட்டி பாருங்கள்.
Got missed call? Find out who called and from where?
http://www.informationmadness.com/cms/index.php?option=com_content&task=view&id=40&Itemid=53

அப்படியே இருக்கிற வீடியோ துண்டுகளை 3gp எனப்படும் வகையாய் மாற்றி உங்கள் மொபைலில் கொண்டு திரிய இங்கே ஒரு Super மென்பொருள்.இறக்கம் செய்து முயன்று பார்க்கலாம்.
http://www.megaupload.com/?d=HOB6VOBO

பேச,SMS அனுப்ப,படம்,வீடியோ எடுக்க மற்றும் பறிமாற,FM,MP3 கேட்க,இணையம் மேய,டிவி பார்க்கவென போய்க்கொண்டேயிருக்கும் இது எங்கு போய் முடியுமோ?


Email PostDownload this post as PDF

Tuesday, April 17, 2007

பெரிது பெரிதாய்

SAN,DSL போன்ற தாராள தொழில் நுட்பங்களின் பெருக்கத்தால் இப்போதெல்லாம் ஸ்டோரேஜ் இடம் (Storage Space),பாண்ட்வித்தெல்லாம் (Bandwidth) ரொம்ப மலிவாகிவிட்டன.அந்த காலத்தில் 2 MB, 5MB என கஞ்சம் பண்ணிக்கொண்டிருந்த Yahoo Mail,Hotmail-கள், 3 வருடத்திற்கு முன்பு Gmail வந்து அனைவருக்கும் 1Gig கொடுத்து புரட்சி பண்ணியதால் மற்றோரெல்லாரும் போட்டியில் குதிக்க வேண்டியதாயிற்று.இன்று அதிகமாய் எனக்கு தெரிந்து http://www.30gigs.com/ பெயர் போலவே மிக அதிகமாய் 30 Gig இலவச ஸ்டோரேஜ் இடம் மெயிலுக்கு கொடுக்கிறார்கள்.யாகூ மெயில் தனது 10வது வருட பிறந்த நாளை முன்னிட்டு இவ்வருடம் மே மாதம் முதல் கணக்கற்ற அளவு (Unlimited) மெயில் இடம் கொடுக்க போகிறார்களாம்.

இது போக உங்கள் கோப்புகளை அழகாக ஒழுங்காக ஆன்லைனின் சேமித்து வைக்க http://www.mediamax.com/ பெரிதும் உதவலாம்.இலவசமாக இவர்கள் 25 Gig ஸ்டோரேஜ் இடம் இலவசமாய் தருகிறார்கள். வீடியொக்கள், ஆடியோக்கள், படங்கள், ஈ புத்தகங்கள் என அதிகமாய் சேமித்து வைக்க இப்போதைக்கு இது ஒரு நல்ல சேவை.

மீம்பெரும் கோப்புகளை எளிதாய் பரிமாறிக்கொள்ள இப்போதைக்கு தலைவலி இல்லாத சேவை அளிப்பது http://www.transferbigfiles.com.
1Gig கோப்புவரை இலவசமாய பரிமாறலாம்.பதிவுசெய்தல்,அக்கவுண்ட் வைத்தல,பாஸ்வேர்ட் தொல்லையெல்லாம் இல்லை.


Email PostDownload this post as PDF

Friday, April 06, 2007

ஈஸ்டர் முட்டைகள்

ஆப்பரேட்டிங் சிஸ்டம்கள், மென்விளையாட்டுக்கள் இன்னும் பிற மென் பொருள்களில் வழக்கத்துக்கு மாறாக எங்குமே எழுதப்பட்டிருக்காத சில செயல் நுட்பங்கள் ஒளிந்து ரகசியமாய் காணப்படும்.இவை ஈஸ்டர் எக்குகள் (EasterEggs) எனப்படுகின்றன.சில கீகளை தட்டினால் அந்த ரகசிய செயல் இயக்கப்படும். முட்டாள்கள் ஏமாற்றப்படுவர். ஈஸ்டர் எக் தெரிந்த அந்த துவக்கப்பள்ளி விளையாட்டு சுட்டிகள் நம்மிடம் விளையாடி ஜெயிப்பர். இன்றும் அநேக மென்பொருள்களில் இவை ஒரு சுவாரசியமாய் ஒளிந்து காணப்படும்.அவற்றைக் கண்டறிந்து கலக்குவதே ஒரு அலாதிதான்.

மைக்ரோசாப்ட் போன்ற பெரும் புள்ளிகள் இது போன்ற ஈஸ்டர் முட்டைகள் வெளியிடுவதை இப்போதெல்லாம் தவிர்க்கின்றனர்.காரணம் அரசாங்க கெடுபிடிகள் மற்றும் பாதுகாப்பு காரணங்கள் தான்."எழுதப்பட்டிருக்காத எந்த செயல்களும் மென்பொருள்களில் இருக்ககூடாது" என்பது அரசின் கண்டிப்பு.விலை போவதற்காக ஈஸ்டர் முட்டைகள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன.

எனினும் சில சுவாரஸிய ஈஸ்டர் முட்டைகள் கீழே...இவை மென்பொருள்பழுக்களாகக்(Bug) கூட இருக்கலாம்.

Try it out on Windows XP

Notepad-ல் புதுசாய் ஒரு கோப்பு திறந்து அதில் Bush hid the facts -னு டைப்பி சேமித்து விட்டு மீண்டும் திறந்து பாருங்கள்...ooops :)

கீழ்கண்ட பெயர்களில் நீங்கள் file-லோ அல்லது folder-ஓ திறக்க முடியாது
CON AUX NUL PRN COM1 COM2


Solitaire-விளையாட்டில் எளிதாய் ஜெயிக்க simply press Alt + Shift + 2.

Internet Explorer-ல் கீழுள்ள இரண்டு வரிகளில் எதாவது ஒரு வரியை தட்டுங்கள்.நீலத்திரைவரும்
res://mshtml.dll/about.moz
about:mozilla


Internet Explorer-ல் கீழுள்ள வரியை தட்டுங்கள்.எச்சரிக்கை வரும்
about:PostNotCached


Email PostDownload this post as PDF
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்