உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, June 28, 2007

கட் அண்ட் பேஸ்ட் அபாயம்

கட் அண்ட் பேஸ்ட், காப்பி அண்ட் பேஸ்ட் (Cut&Paste,Copy&Paste) இல்லாத கணிணி ஒன்றை நினைத்து கூட பார்க்க இயலவில்லை. அப்படி நம்மோடு மிக ஒன்றிப்போன வசதிகள் அவை.
இதனால் அபாயமா?..ஆமாம் என்கின்றார்கள்.எப்படி?. நீங்கள் சமீபத்தில் உங்கள் வசதிக்காக காப்பி செய்த கிரெடிட் கார்டு எண் அல்லது பாஸ்வேர்ட் போன்றவை எளிதாக லபக் செய்யப்படலாமாம்.
அதுதான் எப்படி? .நீங்கள் ஒவ்வொரு முறையும் ஒரு குறிப்பிட்ட வரிகளை கட்டோ அல்லது காப்பியோ செய்யும் போது இத்தகவல்கள் கிளிப்போர்டு (Clipboard) எனும் தற்காலிக பிரதேசத்தில் தற்காலிகமாக சேமித்து வைக்கப்படுகின்றது. So அந்த தற்காலிக பிரதேசத்தை நீங்கள் அடையமுடிந்தால் ஆப்பரேசன் சக்ஸஸ். அதைத்தான் செய்கின்றார்கள்.

ஒரு சிறு சோதனை செய்து பார்க்கலாம்.
ஒரு வரியை தெரிவுசெய்து காப்பி செய்யுங்கள்.
ஆச்சுதா?
பின் கீழ்கண்ட சுட்டியை தட்டுங்கள்.

http://www.sourcecodesworld.com/special/clipboard.asp

என்ன ஆச்சர்யம்?.இந்த தளம் நீங்கள் காப்பி செய்த வரியை அப்படியே புட்டு வைத்து விடுகின்றது.(மஞ்சள் பிரதேசத்தில் பார்க்க).

இப்படி சேகரிக்கும் தகவல்களை அப்படியே ஒரு டேட்டாபேஸில் சேமித்தல் எவ்வளவு கடினம்??. அவர்களே இதை தடுப்பதற்கும் வழி சொல்கிறார்கள். முதலில் செய்யுங்கள் அதை.

அது போல் சில கீலாகர்களும் (Key Loggers) இந்த வேலையை தெளிவாய் சத்தமின்றிசெய்கின்றன. உதாரணத்துக்கு கீழ்கண்ட இந்த மென்பொருளை முயன்று பாருங்கள். நீங்கள் கட் அண்ட் பேஸ்ட், காப்பி அண்ட் பேஸ்ட் செய்யும் அனைத்து வரிகளும் அந்தரங்கமாய் நோட்டமிடப்பட்டு நோட்பண்ணப்படும்.

Download Clipboard Logger here.
http://www.niftytoolworks.com/download/InstCNPLoggerv1.exe

ரொம்ப உஷாரா இருக்கணும்பா.ஆமா.

எனது கீலாக்கரை பற்றிய இன்னொரு பதிவு இங்கே.
பெற்றோர்களுக்கு ஒரு hacking டிப்


Email PostDownload this post as PDF

Related Posts by Categories4 comments:

யோசிப்பவர் said...

இது மிகவும் எளிதான விஷயம்தான். இதற்குதான் இப்பொழுது வரும் பெரும்பாலான பாஸ்வேர்ட் டெக்ஸ்ட் பாக்ஸ்கள் காப்பி செய்யவே விடுவதில்லை.

Ram Vibhakar said...

இன்த சோதனை எனது FireFoxஇல் வேலை செய்யவில்லை.இதை வைத்தே ஒரு Browserஇன் தரத்தை சோதனை செய்யலாம் என்று நினைகின்றேன்.Internet Explorer மிக மோசம். அதனால் Internet Explorerஐ நம்புவதை விட இலவசமாக கிடைகும் FireFoxஐ நம்பலாம்.

PKP said...

ram and yosi!!
you are absolutely right.
thanks for your aditional inputs.

Thinking on webMethods said...

u can avoid in internet explorer also.
1.Goto Internet Options, Security, Click on the Internet Icon

2. Click Custom Level, and Change the settings under the active scripting options disable the option allow paste operations via script.
(in IE7 disable allow programmtic clipboard access)

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்