அப்படி ஒன்றும் மைக்ரோசாப்டின் விசிறி அல்ல நான். இங்கு மைஸ்பேஸ் பற்றி சொல்லப்போகின்றேன்.
சன் தொலைகாட்சியில் "அசத்தபோவது யாரு" நிகழ்ச்சியில் தம்பி பட இயக்குனர் சீமான் சொன்ன சில நறுக் வரிகள் தெளி தமிழில் எழுத உசுப்பினாலும் மைக்ரோசாப்ட், மைஸ்பேஸ்-ன்னு ஆங்கிலத்தில் சொல்லித்தான் ஆக வேண்டியுள்ளது. என்னப் பண்ணுவது?.
பதின்மவயது இளசுகள் திரள் திரளாய் வந்து குவியும் MySpace.com-க்கு தினம் 40 பில்லியன் பேர் வருகின்றனராம். அதோடு தினம் தினம் புதிதாய் 230,000 பேர் அதில் இணைகின்றனராம். இத்தனை சுறுசுறு கணிணிகள் இயங்குவது Windows 2003 server - Microsoft .NET Framework-ல்லாம். இதன் பயன்பாடுகள் C# for ASP.NET -ல் எழுதப்பட்டுள்ளனவாம். எதையும் தாங்கும் போல் ASP.net.
ஆரம்பத்தில் friendster.com எனும் இணைய நண்பர்கள் வட்டத்தில் அங்கம் வகித்து திளைத்த Chris Dewolfe-ம் Tom Anderson-ம் 2003-ல் ஏன் நாமே ஒரு இணைய நண்பர் வட்டம் எளிதாக, அதிக வசதிகளுடன் , மிக குறைந்த கட்டுபாடுகளுடன் தொடக்க கூடாது வென எண்ணி தொடக்கியதுதான் MySpace.com. குறுகிய காலத்தில் மீப்பெரும் வளர்ச்சியை அடைந்தது. ஆங்கில தெரிந்த அனைத்து இள வயசு பொடிசுகளும் இதற்கு அடிமைகள் போலாயினர்.
செய்தி நிறுவன முதலை Rupert Murdoch-க்கை இது உறுத்தியது. $580 மில்லியனுக்கு தன் சட்டைப்பையில் வாங்கிபோட்டுக் கொண்டார்.
கழிந்த வருடம் தன் விளம்பரங்கள் மற்றும் தேடல் வசதியை மைஸ்பேசில் உபயோக படுத்த வேண்டும் மென கேட்டு 900 மில்லியன் டாலர்களை கூகிள் நிறுவனம் மைஸ்பேசு-க்கு வழங்கியது. அதாவது இந்த தொகை ரூபர்ட் மர்டோக் மைஸ்பேசை வாங்கிய விலையைவிட அதிகம். தாத்தா இன்னும் இன்னும் பணம் குவித்துகொண்டிருக்கின்றார். கூடவே 106 மில்லியன்கள் 107 மில்லியன்கள் என விசிறிகள் கூட்டம் வேறு MySpace-க்கு பெருகி கொண்டே இருக்கின்றது.
இத்தனைக்கும் மைஸ்பேஸ் நிறுவனத்தில் பணிபுரிவோர் மொத்தம் 300 பேர் தானாம்.
அப்படா தெளிதமிழில் பதிவு போடல் கஷ்டமடோ சாமி!!
Download this post as PDF
No comments:
Post a Comment