அமெரிக்க டாலர் மதிப்பில் பில்லியன் கணக்கில் தன் சட்டைப்பையில் வைத்திருக்கும் நம்மூர் மென்பொருள் பண்ணையார்கள் யாரென்றெல்லாம் என்று பார்த்தபோது வந்த வரிசை இது.
முதலில் வருவது மென்பொருள் நிறுவனம் விப்ரோவின் 61 வயது அசிம் ப்ரீம்ஜி. அடிப்படையில் குஜராத்தை
சேர்ந்தவராயினும் இப்போதைக்கு பெங்களூர்காரராகிவிட்டார். யாரோ சொன்னார்கள் "பெங்களூரின் புலி" என்று.இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த இவரின் சொத்து மதிப்பு ஏறக்குறைய 17 பில்லியன் டாலர்கள்.
அடுத்து வருவது வன்பொருள் நிறுவனம் HCL-Hindustan Computers Limited-ன் 61 வயது சிவ் நாடார்.அடிப்படையில் நம்மூர் திருசெந்தூரை அடுத்த மூலைபொழி கிராமத்தை சேர்ந்தவர்.இவரின் சொத்து மதிப்பு ஏறக்குறைய 3.7 பில்லியன் டாலர்கள்.
அடுத்து வருவது மென்பொருள் நிறுவனம் இன்போஸிஸி-ன் 60 வயது N.R.நாராயண மூர்த்தி. அடிப்படையில் கர்நாடகா மாநில மைசூரை சேர்ந்தவர்.இவரின் சொத்து
மதிப்பு ஏறக்குறைய 1.58 பில்லியன் டாலர்கள்.
அடுத்து வருவது ஆன்லைன் சூதாட்ட நிறுவனம் Partygaming.com-ன் 33 வயது அனுரக் தீட்சித். அடிப்படையில் டில்லியை சேர்ந்தவர்.இவரின் சொத்து மதிப்பு ஏறக்குறைய 1.5 பில்லியன் டாலர்கள்.
அடுத்து வருவது மென்பொருள் நிறுவனம் இன்போஸிஸி-ன் 51 வயது நந்தன் நிலகனி.
அடிப்படையில் கர்நாடகா மாநில பெங்களூரை சேர்ந்தவர்.இவரின் சொத்து மதிப்பு ஏறக்குறைய 1.15 பில்லியன் டாலர்கள்.
அடுத்து வருவது மென்பொருள் நிறுவனம் இன்போஸிஸி-ன் 52 வயது செனபதி கோபாலகிருஷ்ணன்.
இவரின் சொத்து மதிப்பு ஏறக்குறைய 1.1 பில்லியன் டாலர்கள்.
அடுத்து வருவது மென்பொருள் நிறுவனம் இன்போஸிஸி-ன் 52 வயது K.தினேஷ்.
அடிப்படையில் கர்நாடகா மாநில சாகரை சேர்ந்தவர். இவரின் சொத்து மதிப்பு ஏறக்குறைய 780 மில்லியன் டாலர்கள்.
இவ்வரிசை பல உண்மைகளை சொல்லலாம். நீங்களே புரிந்து கொள்ளுங்கள்
Download this post as PDF
No comments:
Post a Comment