உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Tuesday, June 12, 2007

கயின் & ஏபலால் பாஸ்வேர்ட் போச்சு

உங்கள் அலுவலக கணிணிகள் நெட்வொர்க்கிலோ அல்லது காலேஜ் கணிணிகள் நெட்வொர்க்கிலோ அல்லது பள்ளிக்கூட கணிணிகள் நெட்வொர்க்கிலோ அப்பாவியாய் சாதாரணமாய் User name மற்றும் password-டைப்பி தைரியமாய் வெப்பக்கங்களில் நுழைபவர்களா நீங்கள்? ஒரு நிமிடம். உங்கள் பயனர் பெயர் மற்றும் பாஸ்வேட் எளிதாய் களவு போகலாம்.எப்படி?.இந்த கயின் & ஏபல் Hacking மென்பொருளானது (Cain & Abel password recovery tool), நீங்கள் கொடுத்த உங்கள் User name மற்றும் password, நெட்வொர்க்கில் செர்வரை நோக்கி பயணிக்கும் போது அப்படியே லாவகமாக பிடித்து hacker-ரிடம் கொடுத்து விடும்.அதுவும் clear text எனப்படும் encryption செய்யப்படாத முறையில் உங்கள் user name மற்றும் password நெட்வொர்க்கில் செர்வரை நோக்கி பயணித்தால் அதற்கு அது அல்வாதான். எளிதாக திருடிவிடும்.
இதற்காகத்தான் https,NTLM,Kerberos,Chap,EAP-TLS போன்ற முறைகளை பயன்படுத்தி பாஸ்வேர்டை மூடிப்பொதிந்து Cain & Abel போன்ற மென்பொருள்களுக்கு தெரியாமல்/புரியாமல் பத்திரமாய் நெட்வொர்க்கில் அனுப்ப வேண்டியுள்ளது. hotmail-லிலோ அல்லது gmail-லிலோ நீங்கள் புகும் போது நீங்கள் கொடுத்த http விலாசமானது ஒரு நிமிடம் https ஆக மாறுவதின் ரகசியம் இது தான். ஜிமெயிலில் https://www.gmail.com/ இந்த விலாசம் பயன்படுத்தி மெயில் பார்வையிட்டால் உங்கள் User name மற்றும் password மட்டுமல்லாது அனைத்து மெயில் பறிமாற்றங்களும் பாதுகாப்பானதாய் அமையும். அதாவது https முழு பறிமாற்றத்தையும் encrypt செய்துவிடும்.

கயின் & ஏபலை விளையாட்டாய் வீட்டில் முயற்சித்து பாருங்கள். சிக்கலான இடத்தில் இயக்கி சிக்கலில் மாட்டிகொள்ளாதீர்கள். :)

Product Home Page
http://www.oxid.it/cain.html

Download Cain & Abel v2.0 for Windows 9x
http://www.oxid.it/downloads/cain20.exe

Download Cain & Abel v4.9.3 for Windows NT/2000/XP
http://oxid.netsons.org/download/ca_setup.exe

Cain & Abel - User Manual
http://www.oxid.it/ca_um/

எளிய step by step முறை
http://www.pkp.in/2007/06/12/how-to-sniff-and-hack-plain-text-passwords-in-13-steps/


Email PostDownload this post as PDF

Related Posts by CategoriesNo comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்