உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Sunday, July 06, 2008

ரேப்பிட் வைரஸ்கள்

விண்டோஸ் எக்ஸ்பியில் அடிப்படையிலேயே பயர்வால் ஒன்று ஓடிக்கொண்டே உள்ளதால் இப்போதெல்லாம் வைரஸ்கள் தானாக வந்து உங்கள் கணிணியை தாக்குவது அபூர்வமே.மாறாக நாமாகப் போய் வலிய வம்பை விலைக்கு வாங்கிக் கொண்டால் தான் உண்டு.ஏடாகூடாமான தளம் எதற்காவது போய் அங்கு தோன்றும் ஒரு பாப் அப் விண்டோவில் "Yes" சொல்லி வைரஸை விலைக்கு வாங்கும் ரகம் பாமர கணிணி பயனர்கள் ரகம் எனில் தேடிப்போய் ஒரு குறிப்பிட்ட ".exe" கோப்பை ரேப்பிட்ஷேரிலிருந்தோ அல்லது இது போன்ற இன்ன பிற கோப்புகிடங்குகளிலிருந்தோ இறக்கம் செய்து அது வழி வைரசை தங்கள் கணிணிக்கு இறக்குமதி செய்யும் ரகம் கீக் (Geek) கணிணி பயனர்கள் ரகம்.

எதாவது ஒரு பயன்பாடு வேண்டுமெனில் உடனே அதற்காக பட்டென ஏதாவது ஒரு ரேப்பிட்சேர் சுட்டியிலிருந்து அதை இறக்கம் செய்வது அத்தனை பாதுகாப்பானதல்ல. முடிந்த வரைக்கும் நம்பகமான தளத்திலிருந்து மட்டுமே "எக்சிகியூட்டபிள்"-களை இறக்கம் செய்வது நல்லது. அல்லது இறக்கம் செய்ததும் நன்றாக ஸ்கேன் செய்ய ஒரு நல்ல வைரஸ் ஸ்கேனராவது உருப்படியாய் வைத்திருத்தல் வேண்டும்.

MP3 கோப்புகள், வீடியோ கோப்புகள், PDF கோப்புகள் ,சில சமயம் CBTகள் இது தவிர பிற வகை கோப்புகளை முக்கியமாய் exe கோப்புகளை இறக்கம் செய்து உங்கள் கணிணியில் ஓட விடுதல் அத்தனை பாதுகாப்பான பழக்கம் அல்லவே. எவர் என்ன நோக்கில் அந்த மென்பொருளை அங்கு சேமித்து வைத்துள்ளாரோ? அதனுள் ஏதாவது வைரசோ அல்லது பிற மர்ம ட்ரோஜன்களோ ஒளிந்திருந்தால் அது நமக்கு சுத்தமாய் தெரிவதில்லை. நம்மில் பலரும் வைரசில் மாட்டிவிடல் இப்படித் தான்.

அது இப்படி இருக்க, இங்கே ஒரு டிப்.

ரேப்பிட்சேரில் 100MB-க்கும் பெரிதான கோப்புகளை சேமிக்க முடியாததாகையால் டிவிடிக்களை நூறு நூறு Meg-காக பல .rar துண்டுகளாக்கி ஒரு குழுவாக இணைஏற்றம் செய்து வைத்திருப்பார்கள். பத்து .rar கோப்புகளில் ஒன்பதை பல மணிநேரமாய் இறக்கம் செய்த பின் 10வது இறக்கமாக மறுக்கும். அனைத்தையும் இறக்கம் செய்யாமல் Winrar-ம் அவ்வீடியோவை Extract செய்யவிடாது. ஒரே டென்சனாகிப் போகும். குறைந்தது இறக்கம் செய்துள்ள அந்த ஒன்பது .rar கோப்புகளில் உள்ள வீடியோவையாவது பார்க்க வழியுள்ளதா?
ஆம் உள்ளது.

அந்த .rar கோப்புக் குழுவை விரிவாக்கம் செய்யும் முன் மறக்காமல் "Keep broken files" -ஐ Winrar-ல் டிக் செய்துகொள்ளுங்கள்.(படம்)

பத்தாவதை பார்க்க இயலாவிட்டாலும் மற்ற ஒன்பதையாவது பார்க்கலாம்.

பாமாவின் கருக்கு மற்றும் சங்கதி ஆகிய இரு நூல்களின் தொகுப்பு "தழும்புகள் காயங்களாகி" நூல் இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Baama Karukku Sangathi Books as Thalumbugal Kayangalaagi in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories2 comments:

Bee'morgan said...

பிகேபி, எனக்குத் தெரிந்து மற்றொரு வழியும் இதற்குண்டு. winrar ல் extract கொடுத்தவுடனேயே குறிப்பிட்ட video file icon உங்கள் folder ல் வந்து உட்கார்ந்து கொள்ளும். ஆனாலும் தொடந்து extract process run ஆகிக்கொண்டிருக்கும். முதல் ஒன்பது பாகங்களை முடித்தபின்தான் அது பத்தாவது file location ஐ கேட்கும். அதற்கு முன்னதாகவே, மேற்குறிப்பிட்ட video file ஐ vlc player மூலமாக ஓபன் செய்து பார்க்க முடியும். இந்த குறுக்கு வழியின், மிக முக்கிய பயன்பாடு, முதல் பாகத்தை தரவிறக்கம் செய்வுடனேயே, print எப்படி இருக்கிறது என்று பார்த்துக்கொள்ளலாம். பத்து பாகங்களையும் வேலை மெனக்கெட்டு இறக்கம் செய்த பிறது பார்ப்பதற்கு இது சாலச் சிறந்தது.

Unknown said...

thanks very helpful information sir.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்