இது மாதிரி அமைதியாய் ஒரு மூலையில் உட்கார்ந்து பரிமளா செல்போனில் பேசியதை நான் பார்த்ததேயில்லை. பொதுவாகவே அவள் பேசுவது அத்தனை பேருக்கும் கேட்கும். அடக்கிவாசிப்போமே என்றெல்லாம் இல்லை. யார் யாரெல்லாம் அவள் நண்பர்கள், எங்கெங்கு சேர்ந்து போனார்கள், எந்தெந்த ரெஸ்டாரென்ட்களில் என்ன என்ன சாப்பிட்டார்கள் எல்லாவற்றையும் எங்களிடம் அடுக்கிவிடுவாள். ஆனாலும் மறைக்கவேண்டும் என அவள் நினைத்தால் ஒரு காரியமும் அவளிடமிருந்து அறியமுடியாது.படபடவென கிளம்பி எங்கோ போவாள் மூன்றுமணிநேரம் கழித்து திரும்பிவருவாள். ஒரு பொட்டு விஷயமும் வெளியே தெரிய வராது.
இன்றைக்கும் அப்படித்தான் செல்போனில் யாரோடோ ஏதோ பேசி கிசு கிசுத்துக் கொண்டேயிருந்தாள். அவ்வளவு சந்தோசமாயில்லை. அவ்வப்போது பெருமூச்சு வேறு. எங்களுக்கோ கஷ்டமாயிருந்தது. என்ன பிரச்சனை இவளுக்கு? சரியான லூஸூ. நம்மிடம் சொல்வாளா? சொல்லமாட்டாளா? Iron man இரண்டாவது தடவையாக பார்த்துக் கொண்டிருந்தோம்.
கொஞ்ச நேரத்தில் எழுந்து வந்தாள்.
"யூ guys ஆர் இடியட்ஸ்" என்றாள், இன்னுமொரு பெருமுச்சு இழுத்துவிட்டவாறு.
எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.
பேச ஆரம்பித்தாள், "யூ நோ நேகா.அவள் பிரண்ட் கயல்,சவுத் இண்டியன் பொண்ணு.போன வருசம் தான் மேரேஜ் ஆச்சி. அரேஞ்ச்ட் மேரேஜ். கல்யாணமானதுமே இங்க ஃபில்லுக்கு (Philadelphia) அவள் மாப்பிள்ளை கூட்டியாந்துட்டான். கயல் கொஞ்சம் கருப்பு. ஆனா அழகா இருப்பா. இந்த நாய்க்கு அவளை பிடிக்கலனா அங்க அவன் தாத்தா அடம்பிடிச்சப்பவே சொல்லியிருக்க வேண்டியது தானே. இங்க தெனம் டார்ச்சர். கயல் வீக்கெண்ட் வந்தாலே பயமா இருக்குங்குரா. பார்ட்டி கீர்ட்டினு எல்லா வீக்கெண்டும் யாராவது கூப்புடுறாங்களாம். அங்க வர்றதுங்கல்லாம் செக்க செவேல்னு கொழு கொழுனு இருக்குதுக. இவா கருப்பா இருக்கதுனால....."
எங்களுக்கு விஷயம் புரிய ஆரம்பித்தது.
எந்த மாதிரியெல்லாம் உலகத்தில் பிரச்சனைகள்.
தினமும் சண்டை. வாக்குவாதம். அழுகை. நிம்மதியில்லை. தெரு தெருவாய் அமெரிக்க வீதிகளிலே அழுதுகொண்டே அவள் அலைந்திருக்கின்றாள். இதுமாதிரி சில நண்பிகளிடம் போனில் பேசி தன் சுமையை கொட்டி சிறிது நிம்மதி தேடியிருக்கின்றாள். இத்தனைக்கும் கயல் நன்கு படித்து வேலைக்கு போய் வரும் பெண். அவளின் நிலமையே இப்படி.
பலவருடங்களுக்கு முன்பு படித்த ஹம்சா தன கோபால் அவர்களின் "நீ என் உயிர் தேன்" என்ற புதினத்தில் வரும் நாயகி லதா நினைவுக்கு வந்தாள். மெரினா கடற்கரையில் அவள் தன்னை பிரிய விழையும் காதலனை பார்த்து ஆவேசமாய் கேட்பாள்."நல்ல பையனாப் பாரு, கெட்டப் பையனாப் பாருன்னு சொல்ல நீங்க யாரு நீங்க பெரிய மகானா.., கால்ல வந்து தட்டுப் படறதாலே இந்த கோமேதக கல்லோட அருமை உங்களுக்குத் தெரியலை, தெரியற காலம் வரும் மிஸ்டர் தியாகராசன்" என்பாள் வீராப்பாக.
பரி சொன்னமாதிரியே எனக்கும் சந்தேகம் வந்துவிட்டது "ஆர் வி ரியலி இடியட்ஸ்?""கடவுள் யாருக்குச் சொந்தம்" ஒரு ஆன்மீக மென் புத்தகம். Kadavul yaarukku sontham a religious book in Tamil pdf ebook Download. Right click and Save.Download

1 comment:
பிரிவோம் சந்திப்போம் - சுஜாதா நாவல் மாதிரியில்ல இருக்குது.. என்னாங்க. சரிதான
Post a Comment