இணையதள புராஜெக்ட்கள் இப்போதெல்லாம் சினிமாப்படம் எடுப்பதுபோலாகிவிட்டது. அமர்க்களமாக வெளியாகும் சில இணையதள சேவைகள் பொசுக்கென போய் விடுவதுண்டு. சேது போல கமுக்கமாக வெளியாகும் சில இணையதளங்கள் சூப்பர் ஹிட்டான கதைகளும் உண்டு. எது ஹிட்டாகும் எது ஃபிளாப்பாகும் என கணிப்பது கஷ்டமாகிக் கொண்டிருக்கிறது. ஷங்கர் போல் ஒவ்வொரு படத்துக்கும் புதுசு புதுசா டைரக்டர்களை கண்டுபிடித்து போட்டால் அந்த வேலை எளிதாகும் போலும்.
பள்ளிகளில் வாரத்துக்கு ஒரு வகுப்பு சும்மா இருப்போம். தோட்டங்களில் கொத்திக்கொண்டோ அல்லது வண்ண நூலிழைகளை நெய்து கொண்டோ அல்லது மரப்பெட்டிகளை தட்டிக் கொண்டோ சும்மா இருப்போம். அது போலவே கூகிளில் பணியாற்றுபவர்களுக்கும் வாரத்துக்கு 20% நேரம் வேலையல்லாமல் சும்மா வேறே எதாவது செய்ய அனுமதி கொடுக்கின்றார்கள். அப்படி கூகிளில் யாரோ ஒரு ஐயா சும்மா இருந்த போது தட்டி தட்டி உருபெற்றது தான் இன்றைக்கு சூப்பர் ஹிட்டாக இருக்கும் ஆர்குட்.
இப்போதும் அது போலவே கூகிளிலிருந்து யாரோ ஒரு அம்மா சும்மா இருந்த நேரத்தில் உருவாக்கிய இன்னொரு புராஜெக்ட்டை கூகிள் வெளியிட்டுள்ளது. அதன் பெயர் லைவ்லி.
http://www.lively.comநம் வலைப்பக்கத்தில் நாம் நிறுவியுள்ள வண்ணமயமான விர்சுவல் 3D அறையில் நான் அதாவது என் அவதார் இருந்து டிவி பார்த்துக்கொண்டிருக்க (அதில் யூடியூப் வீடியோக்கள் ஓடிக்கொண்டிருக்கும்) நீங்கள்,அதாவது உங்கள் அவதார் ஹாய் சொல்லிக்கொண்டே உள்ளே நுழைய விர்ச்சுவலாய் காஃபி சாப்பிட்டுக்கொண்டே நாம் ஊர் கதை உலகக் கதை சாட் செய்யலாம். அப்படியே ஆர்வமுள்ள நண்பர்களும் அவர்கள் அவதாராய் உள்ளே நுழைந்து நம்முடன் கதைக்கலாம். கத்தலாம். சண்டைபோடலாம். எல்லாமே விர்சுவலாக. பாதுகாப்பாக.இது தான் லைவ்லியின் சாராம்சம். Secondlife.com க்கு போட்டி என்கின்றார்கள்.
இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான ஒரு கார்டூன் புராஜெக்ட்டை அறிவுஜீவி கூகிள் அறிமுகப்படுத்துவது பலருக்கும் ஆச்சர்யமே.என்ன நோக்கோடு அது இதை அறிமுகப் படுத்தியிருக்கின்றது என்பது மர்மம் தான். அதில் மறைந்திருக்கும் வியாபார யுத்தி யாருக்குத் தெரியும். விர்ச்சுவல் அறையில் இன்றைக்கு இலவசமாய் கிடைக்கும் டிவி, பர்னிச்சர்கள் மற்றும் என் அவதார் அணிந்திருக்கும் பிராண்டட் ரிபோக் ஷூ எதிர்காலத்தில் இலவசமாய் கிடைக்காமல் போகலாம்.அந்த விர்சுவல் உலகில் உலாவரும் யுவதிகளை கவர பைத்திய உலகம் அவைகளை காசு கொடுத்து வாங்கவும் தயங்காது. அப்படியே அந்த விர்சுவல் உலகின் சுவர்களிலும், என் அவதாரின் டீ சர்ட்டிலும் அட்சென்ஸ் விளம்பரம் இருக்கலாம்.இப்படி காசு உண்டாக்க பல யுத்திகள் நம் கூகிளுக்கு அப்போது உருவரும். இப்போதைக்கு அங்கு கூட்டம் சேர்ப்பதுதான் அதன் பிரதானப் பணி.
லைவ்லியில் நான் பார்த்ததில் விர்சுவல் படுக்கையறை கூட உருவாக்கலாமாம். அப்படியே விர்சுவலாக "அது" செய்யவும் அனுமதி தந்தால் கூட்டம் கூடத்தான் செய்யும் பணம் கொட்டத்தான் செய்யும்.
தகவலுக்கு நன்றி Mohamed IQbal
கொசுறு தகவல்:
செய்திகள் நிறைந்த Google News பக்கம் இப்போது தமிழிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கீழ்கண்ட சுட்டியை சொடுக்கி பார்க்கவும்.
http://news.google.com/news?ned=ta_inஇரமணிச்சந்திரன் அவர்களின் "நின்னையே ரதி என்று" எனும் புதினம் இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Ramani Chandran Ninaiye Rathi Endru Tamil Novel pdf ebook Download. Right click and Save.Download

2 comments:
Lively is closed now..
வடை போச்சே
Post a Comment