பிரபலங்களுக்குள்ள ஆயிரம் பிரச்சனைகளில் இது ஆயிரத்தோராவது பிரச்சனை. நிம்மதியாக எங்கும் போக முடிவதில்லை. எப்போதும் யாரோ தன்னை கேமராவில் கண்காணித்துக் கொண்டிருப்பது போன்றே தோன்றும் துபாய் போனால் ஒழுங்காக தூங்க முடிவதில்லை, தென் ஆப்ரிக்கா போனால் கூட அட சுதந்திரமாக அங்கு குளிக்க முடிவதில்லை, மும்பை போய் ஒரு துணிமணி எடுக்கலாமெனில் ஷாப்பிங் மால்களின் டிரஸ்ஸிங் ரூம்களுக்குள் போகவே பயமாயிருக்கிறது.Pinhole அதாவது குண்டூசி அளவேயான மறைந்திருக்கும் கேமராக்கள் உங்களை படம்பிடித்துக் கொண்டிருக்கலாம்.படுக்கை அறையில் சாதாரண கடிகாரம் தானே இருக்கின்றது என அந்த பிரபலம் நினைக்க ஆனால் அதற்குள் தான் அந்த மர்ம காமரா ஒளிந்திருக்கும்.மேஜையில் புசு புசுவென இருக்கும் டெட்டிபியர் கரடி பொம்மையை எடுத்து கொஞ்சலாம் போல் தோன்றும் ஆனால் அதற்குள்ளே தானே அவருக்கு ஒளிந்திருக்கு ஆப்பு (காமெரா).ஏன் ஜேம்ஸ்பாண்ட் கணக்காலும் சாதாரண சட்டைபொத்தான் வடிவில் கூட ஹிடன் கேமராக்கள் இப்போது வந்துள்ளன.
இவற்றிலிருந்து தப்ப வழி இருக்கின்றதா?
அந்த காலத்தில் இராணுவ அல்லது அரசின் பிரத்தியேக உபயோகத்துக்கென இருந்த பல ரகசிய தொழில் நுட்பங்கள் இன்று சாதாரண குடிமகன்கள் கைக்கு எட்டும் அளவுக்கு வந்துவிட்டன. உதாரணமாய் GPS-ஐ சொல்லலாம்.சில வருடங்களுக்கு முன்பு வரை மிலிட்டரி பயன்பாடுகளுக்கு மட்டுமே அது பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போது கோபால் கூட ஒன்றுக்கு இரண்டு வைத்திருக்கின்றான்.இன்றைய அளவில் இராணுவ அல்லது அரசின் பிரத்தியேக உபயோகத்துக்கென இருக்கும் ரகசிய தொழில் நுட்பங்கள் என்னென்னவோ யாருக்குத் தெரியும். தெரிய வந்தால் நமக்கு அநாவசியமாய் திகில் தான் பிடிக்கும்.
பெரும்பாலும் 2020-யில் அது வெளி உபயோகத்துக்கு வந்து நான், ஒரு ரேடியோ பெட்டியூண்டு அளவிலுள்ள தானியங்கி மினி நானோ-ஹெலிக்காப்டரில் வைத்து நியூயார்க்கிலிருந்து சென்னையிலிருக்கும் என் ஆசானுக்கு பரிசுபொருள் ஒன்றை கூரியர் போல அனுப்புவேன். அந்த கால தூதுபோன புறாபோல சென்னைபோய் திரும்ப என்னிடம் வரும்.கொஞ்சம் ஓவர் கற்பனையோ?
அதுவரை நியூயார்க் தாக்குபிடிக்கவேண்டும்.அணுஆயுத போர் வந்தால் அது தான் முதல் டார்கெட் அப்படி இப்படினு பலரும் பலதாய் பேச அது பற்றி இன்னொரு பதிவில் பார்க்கலாம்.கலிபோர்னியா போகலாமெனில் அங்கு ஒரு மாபெரும் பூமியதிர்ச்சி வர காத்திருக்கின்றதாம்.டிக் டிக்... திக் திக்...
நிற்க
இது போல முன்பு அரசு பயன்பாட்டிலிருந்து இப்போது பொதுவில் வந்துள்ள ஒரு கருவி தான் Spy Finder Hidden Camera Detector/Locator.இது என்னமோ principle of optical augmentation முறைப்படி வேலை செய்கின்றதாம். இந்த கையடக்க கருவி வழி சுற்றும் முற்றும் பார்த்தால் எங்காவது Hidden Camera இருந்தால் அது உடனே உங்களுக்கு காட்டிகொடுத்து விடுமாம்.
கலியுகத்தில் இது ஒரு நல்ல பரிசுபொருளோவென தோன்றுகின்றது. ஏதோ ஒரு இணையபக்கத்தில் அவரை பாவம் அப்பாவி ஏமாந்தவராய் பார்க்கமாட்டோம்.
http://www.brickhousesecurity.com/sf-103.html
லதா "பாம்பு காட்டில் ஒரு தாழை" கவிதைகள் இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக.Latha Paambu kaatil oru thaazhai kavithaikal in Tamil pdf ebook Download. Right click and Save.Download
Download this post as PDF
5 comments:
மாயப்பரீட்சைகளுக்கான வி.சி.இ. கோப்புகள்
பிகேபி சார்,
பூமியதிர்ச்சிக்கு கலிபோர்னியா என்ன சென்னையே டிக் டிக் திக் திக்தான்.
அதிரை தங்க செல்வராஜன்.
//கலிபோர்னியா போகலாமெனில் அங்கு ஒரு மாபெரும் பூமியதிர்ச்சி வர காத்திருக்கின்றதாம்.//
திரு பிகேபி அவர்களே, நீங்கள் கூறியது உண்மைதான். அதுவும் 2007 செப்டம்பர் 26 தேதியிலிருந்து இன்று வரை நாம் வாழும் பூமி என்னும் மண்ணுருண்டையில் நிகழ்ந்த பூமியதிர்ச்சிகளில், ரிக்டர் அளவுகோலில் 6.0 மேல் நிறைய பூமியதிர்ச்சிகள் நிகழ்ந்துள்ளது. நான் அறிந்த வரையில் இவ்வளவு பூமியதிர்ச்சிகளை ஒரு குறுகிய காலத்தில் பார்த்தது கிடையாது. அதில் நிறைய கடலுக்கடியில் நிகழ்ந்ததால் உயிர் சேதம் அதிகமில்லை.
ஆனால் ரிக்டர் அளவுகோலில் 7.5 மேல் பூமியதிர்ச்சியென்று கடலுக்கடியில் நிகழ்ந்தால் அந்த அதிர்வு மையத்திலிருந்து (எபிசென்டர்/
Epicenter) குறைந்த பட்சம் 100 மைல் சுற்றளவிற்கேனும் ஆழிப்பேரலையை (சுனாமி/Tsunami) ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மேலும் இன்றைய தினம் வரை பூமியதிர்ச்சி ஏற்படப்போவதை முன்கூட்டியே கண்டறியும் தொழில்நுட்பம் எதுவும் கிடையாது. ஆனால் கடலுக்கடியில் நிகழும் பெரும் பூமியதிர்ச்சிக்கு பிறகு ஆழிப்பேரலை உருவாவதையும், அதன் வேகத்தையும் கணிக்க முடியும். எங்களின் "ஒருங்கிணைந்த ஆழிப்பேரலை கண்காணிப்பு சேவை" (இண்டகிரேட்டடு சுனாமி வாட்சர் சர்வீஸ்/Integrated Tsunami Watcher Service) அதை தான் செய்து கொண்டிருக்கிறது. இறைவன் நாடினால் அதன் மூலம் உயிர்களை காப்பற்றலாம். http://www.ina.in/itws/ இது தான் அந்த தளத்தின் முகவரி. போய் பார்த்து விட்டு உங்களின் மேலான கருத்தை கூறுங்களேன்.
எனக்கென்னவே மனிதர்கள் இந்த பூமியின் மேல் ஆடும் ஆட்டத்தை பார்த்து பூமிக்கும் ஒரு ஆட்டம் ஆடிப்பார்க்க ஆசை வந்துவிட்டது போலும். வேறன்னத்தை சொல்ல? மேலும் கலியுகத்தின் முடிவில் இப்படிதான் பூமியதிர்ச்சிகள் நிறைய ஏற்படும் என இறைவேதங்கள் முன்னறிவிப்பு செய்கின்றன. இயற்கைக்கு முன் மனிதன் அடங்கி தான் போக வேண்டும் போலும். இல்லையென்றால் அந்த இயற்கை மனித இனத்தையே ஒரேடியாக அடக்கிவிடும்.
அன்புடன்,
Muhammad Ismail .H, PHD,
குறிப்பு: உஸ்ஸ்ஸ்ஸ்,,, அப்பாடா,, ஒரு வழியாக தமிழ்99 முறையில் தட்டச்சு செய்ய கற்றுக்கொண்டேன்.
பிகேபி,
அருமையான பரிசுப் பொருள் இதை ஹணிமூன் கப்பிளுக்கு கட்டாயமா குடுக்கவேணும்.:-))
அருமையான தகவல்களுக்கு நன்றி.
dear pkp,
is there any free software to calculate& maintain my home expenses as i want to control my expenses?pls send me the link..
thanks a lot
Post a Comment